ரொம்ப நாளா யோசிச்சிகினு இருந்த விஷயம் என்ன அப்டினா நம்ம மக்களோட பொறுமை  தாம்பா.
என்ன கொடுத்தாலும் தாங்குறாங்க எப்டின்னு தான் தெரியல. நான் வேலைக்குன்னு ஸ்டார்ட் பண்ணும்போது எனக்கு 2500 ரூவா
 கொடுத்தாங்க. அப்போ எங்கப்பா கிட்ட கொண்டுபோய் கொடுத்தா. இந்தா  பாரு இதான் ஆரம்பம் இனிமே எங்கிட்ட எந்த பண விஷயத்துக்கும் கேக்ககூடாது நீயே இதை வச்சிக்கோ அப்டின்டாறு.
நமக்கு புடிபடல என்னது இது நாம என்னமோ கரைக்டா இருக்கோம இல்லையானு தலைவர் பாக்கறாரு போல அப்படின்னு வுட்டுட்டேன். இப்ப அது மாதிரி பத்து மடங்கு சம்பாதிக்கும் போதும் போதல. என்ன அப்போ நமக்கு ரொம்ப சுற்றம் நட்பு கிடையாது. இப்போ நெறைய இர்க்குது.
சரி மேட்டருக்கு வரேன் ......
நானும் நம்ம பிரெண்ட்சும் பேசிகினு இருக்கும்போது நம்மாளு ஒருத்தரு புத்சா வந்த படத்த  பத்தி எதோ சொல்லிபுட்டாரு. அய்யயோ அப்புறம் பாக்கனுமே கொய்யால மாமன் மச்சானு சொல்லிகினு இருந்தவனுங்க அவர அடிக்க வந்தானுங்க. என்னடா என் தலைவனையா சொல்றேனுட்டு . எனக்கு பேஜாரா புடிச்சு. இதுக்கும் எல்லாரும் கிட்டத்தட்ட 20 வருசத்துக்கும் மேல பிரென்ட்சு. அப்போதான் ஒன்னு புரிஞ்சிது உண்மைய விட பொய்யான விஷயத்தையே எல்லோரும் நம்புறாங்க. சம்பந்தம் இல்லாத ஆளுக்காக நாம ஏன்டா அடிசிகனும்னு கேட்டா  அவரு எங்க தலைவருங்கறாங்க.
இதுல அதுக்கு ஒரு பார்டி கொடுத்து சமாதனம் பேசுற மாதிரி புடுச்சி
பாருங்க மக்களே எப்படி இருக்கோம்முடியல இந்த மாதிரி கண்மூடித்தனமான விஷயங்களிலே மனச செலுதரதுனால நம்ம வாழ்க்கையோட பினைஞ்சிருகுற எவ்ளோ நல்ல விஷயத்த நாம இழந்துடறோம். 

அதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள சமாதானமாக போக ரொம்ப நேரம் ஆச்சி. அப்போ நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு விஷயத்த சொன்னாரு டேய் நாம பரவா இல்லடா எங்க அப்பாக்கு அவரு தலைவர சொன்ன கோவம் வரும் பாரு அப்டினான்.
எங்களுக்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள சொல்லிகொடுத்த அவங்க அப்பாவுக்கும் தலைவரா?! என்னால நம்பவே முடியல. ஆக எல்லா கால கட்டத்திலும் யாரோ ஒருத்தர் நமக்கு மேல வெச்சி பாத்து பழக்கமாயிடுச்சி.

அதுல கூட எந்த தலைவனும் அவங்க மக்களை (அவுரு புள்ளைகள இல்ல) நினச்சி பாக்குறதே இல்ல. அவங்க எப்படி அவங்க சம்பாதியதிளையும், சொத்துளையும், ஜாலியா இருகரதலயும் ஸ்ட்றாங்க இருகுரன்களோ ஏன் நம்மால இருக்க முடியாது
மக்களை நினைப்பவன் தலைவனா? தன் மக்களுக்காக (அவரு புள்ளைங்களுக்கு) மட்டுமே வாழ்பவன் தலைவனா.


இப்போ இருக்குற ஸ்பீடான வாழ்கைல நம்ம துட்டையும் நம்ம வாழ்கையும் யாரோ ஒருத்தருக்கு அடிமையாக்குறது  நல்லா இருக்குதா பாருங்கோநான் சொல்ல வந்தது நம்ம சினி மேட்டரு மட்டும் இல்ல பொதுவாவே நமக்கு இந்த அடிமை பிரச்சின ரொம்ப காலமா இருக்குது.
முடிஞ்ச வரைக்கும் நாமே நமக்கு தல அப்ட்டின்னு நெனைசிகினு தல கனமா இல்லாம இருந்தாலே போதும் அப்டின்றது என்னோட தாழ்மையான கருத்து.

எப்டின்னாலும் ஆறே மாசம் தான் ஆரம்பிக்கபோது அடுத்த ஆட்டம்.
இந்த விஷயத்துல யாரும் கோவபடாமே கருத்து சொல்லுங்க.................உடு ஜூட்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

2 comments :

  1. வாழ்த்துக்கள் கலக்குங்க...

    ReplyDelete
  2. நன்றி புதிய மனிதா அவர்களே

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி