செக்ஸ் !? - 18+ ....இந்தியர்கள் பழமை விரும்பிகளா?

இந்த பகுதியை படிக்க வருபவர்களுக்கு ஒரு நற்செய்திஅது என்னனா ..........இது ஒரு சாதாரண மனிதனுடைய மனபிரதிபளிப்பு மட்டுமே, ஆராச்சி கட்டுரை அல்ல
சமூக காவலர்கள் இந்த பதிவ பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

உண்மையில் செக்ஸ் என்பது எவ்வாறு பாலினத்தை குறிக்கிறதோ. அந்த வார்த்தை சொல்லி முடிக்கும் முன் நம் மக்களுக்கு ஏதோ அருவருப்பான விஷயத்தை சொல்லப்போகிறோம் என்று  நினைத்து விடுகிறார்கள்.உண்மையில் இப்போதுள்ள சமூகத்து பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டியது இது. ஆனால் அவ்வாறு விளக்குவது நம் கலச்சாரத்தை கொச்சைப்படுத்துவதாக எண்ணுகின்றனர் நம் பழமை விரும்பிகள். என்னை கேட்டால் இதற்க்கு காரணம் நம் பிள்ளைகளின் மீது நமக்கு இருக்கும் பாசம் மற்றும் ஒரு வித ego என்று தான் சொல்வேன்

எனக்குள் ஒரு கேள்வி எப்போதுமே எழும் ஆனால் இப்படி கேட்பதால் ஏதோ கிண்டல் செய்கிறேன் என்றோ, வேண்டும் என்றே கேட்கிறான் என்றோ நினைக்க வேண்டாம்


ஒரு பெண் பூபெய்தபின் நம் சமூகத்தில் குழந்தை என்ற பிம்பத்தில் இருந்து பெரிய மனுசி ஆயிட்டா என்று கேட்டிருக்கிறேன்

அதே நேரம் எந்த ஆணையாவது இவன் பெரியமனுசன் ஆயிட்டான் அப்படின்னு சொல்றாங்களா? ஏன்?

இதுக்கு பல மருத்துவர்களின் பதில்கள் இருக்கும். ஆனா நான் கேட்பது விளங்கிகொள்கிராமாதிரி இருக்கணும்!

நான் என்னுடைய 12 வது வகுப்பில்தான் செக்ஸ் எனும் விஷயத்தை பற்றி சிறிதளவாவது புரிந்து கொண்டேன்
(அப்போ தானே +2 science group). 

அப்போ கூட பல விஷயங்கள் எனக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது

யாரும் தப்பா நினைக்கலைன்ன சொல்றேன் ok. >>> அப்பா, அம்மா எப்படி இப்படியா இருந்து இருப்பாங்க என்று நினைக்கும் போது என்னுள் ஒரு வித அருவருப்பு தோன்றியது

 சே இருக்காது இது படிப்பு மட்டும் தானா இல்ல வாழ்கையின் சாரம்சமா. இதனால்தான் அவங்க அப்படி நடந்துகிட்டாங்களா, இவங்க இப்படியா ................

இப்படியாக பல வித குழப்பமான மனநிலை ஏற்பட்டது. அதனில் இருந்து வெளிவர நான் மனரீதியாக ரொம்ப கஷ்டப்பட்டேன்

இந்த நிலைக்கு காரணம் படிப்பு மட்டுமா அல்லது சரியானபடி அந்த வயசுல எடுத்து சொல்ல ஆளில்லாததாலா?


அதனால்தான் என்னைப்பொறுத்தவரை sex கல்வி அவசியமான ஒன்று.

முன்பு போல ஒரு படத்த பாக்க ஒளிஞ்சி ஓடி பாக்கப்போறதிள்ள இப்போ இருக்க generation.  
வீட்டு வரவேட்பரைக்கே வரும் tv நிகழ்ச்சிகள், முடிஞ்சவரை குடும்பத்தோட உக்காந்து tv பத்துடுவீங்களா! நாங்க விட்ருவமா என்ற நிலையில்தான் எல்லா சேனலும் இருக்குது.

அதே நேரம் நாம படிக்கும் போது பாக்காத கம்ப்யுட்டர இப்போ நம்ம பசங்க என்னமோ காமிக்ஸ் புக்க புரட்டர மாதிரி புரட்டுதுங்க. இந்த நிலமையில இவங்களுக்கு எப்படி ஒரு பாதுகாப்பான வாழ்கைய நாம கொடுக்க போறோம்னு தெரியல

இப்போ lattesta வேற லிவிங் together அப்படின்னு ஆரம்பிச்சு இருக்காங்க. இது வெளிநாடுகள்ல வெறும் உடல் சம்மந்த பட்டதாகவே இன்னும் இருக்கு(ஆனா அவனுங்க அத love அப்டின்னு வேற சொல்லிப்பானுங்க - maybe எனக்கு உலகம் சார்ந்த அறிவு கம்மியா இருக்குற பட்சத்தில் ).


இப்போ இருக்க பசங்களுக்கு இந்த உடல் சம்பந்த பட்ட ஈர்ப்பு 8 வது வகுப்பலையே start ஆகிடறதா ஒரு கணிப்பு சொல்லுது(ஆனா அவங்கள மீறி இந்த வயசுல பல விஷயங்கள் அவங்களுக்கு தெரிய வருது). 

அறிவியல் எந்த விஷயத்த வளத்துதோ இல்லையோ ............................


 தொடரனும் ..................Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

10 comments :

 1. நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே.

  ReplyDelete
 2. //குடும்பத்தோட உக்காந்து tv பத்துடுவீங்களா! நாங்க விட்ருவமா என்ற நிலையில்தான் எல்லா சேனலும் இருக்குது.//

  சூப்பர்..

  //அதனால்தான் என்னைப்பொறுத்தவரை sex கல்வி அவசியமான ஒன்று.//
  ரைட்டு..

  ReplyDelete
 3. நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்று. அதற்காக மேற்கத்திய கலாச்சாரமான லிவிங் டுகதரில் எனக்கு உடன்பாடில்லை. நம்மை பொறுத்தவரை அன்பு என்பது அசைக்க முடியாதது. அதன் அடையாளமாகத்தான் தாலி இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் அன்பு என்பது காண்ட்ராக்ட் எடுப்பது போல இருக்கிறது. நன்றி நண்பரே...

  ReplyDelete
 4. செக்ஸ் கல்வி அவசியமானதே .

  ReplyDelete
 5. present sir... nalla pathivu..

  செக்ஸ் கல்வி அவசியமானதே .

  ReplyDelete
 6. << நண்பரே பாலியல் கல்வி என்பது அவசியமான ஒன்று. அதற்காக மேற்கத்திய கலாச்சாரமான லிவிங் டுகதரில் எனக்கு உடன்பாடில்லை. நம்மை பொறுத்தவரை அன்பு என்பது அசைக்க முடியாதது. அதன் அடையாளமாகத்தான் தாலி இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் அன்பு என்பது காண்ட்ராக்ட் எடுப்பது போல இருக்கிறது. நன்றி நண்பரே.. >>

  இதெல்லாம் பொத்தாம் பொதுவான பேச்சு. நம்ம ஊரை விட சுதந்திரம் அதிகமாக இருந்தாலும் திருமண வாழ்க்கை மீது ஒரு நம்பிக்கை வைத்து வாழும் பலர் உண்டு. அதே சுதந்திரம் நம்ம ஊருல வரும்போது நம்ம கலாச்சாரம் காலாவதி ஆவுதா இல்லை கண்டினுயு பன்னுதா தெரியல..

  ReplyDelete
 7. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவது அறிந்து சந்தோசமே.. பாலியல் கல்வி கட்டாயம் தேவை...

  ReplyDelete
 8. பாலியல் கல்வி தேவை தான் ஆனால் நம் இந்தியாவை பற்றி நினைக்கும்போது கவலையாக உள்ளது. சும்மாவே ஒரு சில ஆசிரியர்கள் விளையாடுறாங்க இதுல்ல இத வேற விட்டா கல்வி சொல்லித்தரேன்னு புள்ளைய கொடுத்துருவானுங்க

  ReplyDelete
 9. நான் ஒரு ரெண்டு நாளைக்கு ஆணி புடுங்க லவோசுக்கு போயிட்டு வரதுக்குள்ள என் பதிவோட அர்த்தமே மாறிப்போச்சே.

  அணைத்து பதிவு அதிபர்களுக்கு சொல்லிகொள்கிறேன். நான் சொல்ல வந்தது sex கல்வி வேற, லிவிங் டூகெதர் வேற.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி