தில் இருந்தா ப்ளாக் ஆரம்பி பாக்கலாம்


இப்படி என் வாழ்வின் பாதி(மனைவி) சொல்லி ஒரு வேகத்துல ஆரம்பிச்ச விஷயம் தான் என்னோட ப்ளாக்


அவங்க தனி பதிவாகவும் நான் தனியாகவும் ஆரம்பிச்சி போயிட்டு இருக்கு. நான் நெனச்சது என்னன்னா அவங்களுக்கு நேரம் அதிகம் இருக்கும் பதிவு போடன்னு!


ஆனா நான் ஹனாய்ல இல்லைனா அவங்களுக்கு குட்டிஸ் கூடவே நேரம் செலவாயிடுது. எனக்கு என் மேல நம்பிக்கை வந்து எழுத ஆரம்பிக்க என் மனைவி ஒரு தூண்டுகோளா இருந்தாங்க

ஆனா எனக்கு 7 1/2  ஆரம்பிச்சது நேத்துல இருந்து தான்

பெண்களுக்கு திருமண வயது என்னவாகயிருக்கணும்? –

தெரியாம இந்த பதிவ எழுதிப்புட்டு நான் பட்ட பாடு. ஸ்ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் கண்ண கட்டிடுச்சி. வடிவேலு கதையா போச்சி. வீட்டுலதான் இந்த கதையின்னா மெயில் போட்டு கேக்குறாங்க சம்பந்தப்பட்ட இரட்டை சகோதரிகள்முடியல முடியல ................ சும்மா இருக்குற சங்க ஊதி கெட்டவன் கணக்கா ஆயிடுச்சி என் நிலைமை

நீ யாருய்யா எங்க பெண் சுதந்திரத்துல தலை இடுரதுன்னு சொல்லிட்டாங்க. நாம என்ன விஞ்சானியா சொந்தமா எழுதறதுக்கு. இல்ல எதாவது பெரிய கம்ப்யூட்டர் இஞ்சினியரா கணிப்பொறி பத்தி எழுதறதுக்கு! அப்படி எழுதரவங்கலையே போறவங்க வாரவங்க எல்லாம் கும்மிட்டு போயிடறாங்க!இந்த மாதிரி இன்னொரு முறை எழுதினீங்க சென்னை பக்கமாவே வரமுடியாது பாத்துக்கங்க அப்படின்னுட்டாங்க. என்ன தான் எழுதறது உண்மையா எழுதினா நாலு நாளைக்கு சோறு இல்லன்னு சொல்லிபுடறாங்கஇங்க பாருங்கப்பு எனக்கு சொந்த அறிவு கொஞ்சம் தான் அதுக்காக யாரோட சரக்கையும் சுட்டு எழுதறது இல்ல. பல்லு இருக்கவங்க பகோடா சாப்புடறாங்க. நமக்கு பல்லு அவ்ளோ ஸ்ட்ராங்கு இல்ல

அப்படி ஸ்ட்ராங்கா இருந்தா இந்நேரம் இப்படியா முழிசிகிட்டு இருப்பேன்

ஒன்னும் இல்லீங்க விஷயம். நான் சொன்னது இவ்வளவு படிச்சிருக்கிற பெண்கள் எதாவது சமுதாயத்துக்கு அவங்களால முடிஞ்சத நேரம் இருக்கும் போது செய்யலாமே! இது தான் என்னோட ஆதங்கம்.


இப்படியெல்லாம் எதாவது ஆகும்.......................


நாமளும் பிரபல பதிவராகி ஜர்க்கு உடலாம்னா முடிய மாட்டேங்குது. யாருமே கண்டுக்கலன்னா என்னதான்யா பண்றது

எதாவது ஐடியா குடுங்கப்பா?

இப்படிக்கு யாரு வந்தாலும், வரலைன்னாலும், ஓட்டு போட்டாலும் போடலைன்னாலும் தளம் நடத்துவோர் சங்கம். 


கொசுறு: ஒரு உண்மை சொல்ல வந்து கடைசி வரைக்கும் சொல்ல முடியாம போச்சே (because i am not a famous blogger) 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

4 comments :

 1. நண்பரே பதிவு சூப்பர்....
  முயற்சி செய்யுங்கள் பிரபல பதிவாளர் ஆகுவிர்கள்

  ReplyDelete
 2. :)...
  //இப்படிக்கு யாரு வந்தாலும், வரலைன்னாலும், ஓட்டு போட்டாலும் போடலைன்னாலும் தளம் நடத்துவோர் சங்கம்//
  சங்கத்தின் உறுப்பினர் படிவம் அனுப்பிவைக்கும்படி தாழ்மையாக கேட்டுகொள்கிறேன்..

  ReplyDelete
 3. படம் நிறைய போட்டா பிளாக் ஓபன் ஆக லேட் ஆகுது ..சொந்த அனுபவம் சூப்பரா இருக்கு

  ReplyDelete
 4. //இப்படிக்கு யாரு வந்தாலும், வரலைன்னாலும், ஓட்டு போட்டாலும் போடலைன்னாலும் தளம் நடத்துவோர் சங்கம்//

  எனக்கும் ஒரு சான்ஸ் .. கொ.ப.செ ன்னாலும் பரவாயில்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்...)))

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி