காபரே போனேன்!? - 18++

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்"


நண்பர்களே நான் இங்கு சொல்லும் விஷயங்கள் உண்மைகள் ஆதலால், இந்த தனிமனித ஒழுக்கம் அதிகம் உள்ளவர்கள் மேலும் தொடர்ந்து படித்து விட்டு என்னை திட்ட வேண்டாம்.நான் என் குடும்பத்துடன் இருந்து வந்தேன். திடீரென்று வீட்டில் குழந்தையின் அழுத்தம் காரணமாகவும், இந்தியா போய் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டதாலும் என் மனைவி இந்தியா செல்லவேண்டும் என்று கூறினார்கள். எனக்கு தற்போதைக்கு விடுமுறை கிடைக்காது என்று தெரிந்ததும் தனியாக செல்வதாக கூறியதால், நானும் அவர்களுக்கு ஏற்பாடுகளை முடித்து அனுப்பி வைத்தாயிற்று.

ஒரு வாரம் மிக கடினமாக இருந்தது. ஏனெனில் எனக்கு வேலை முடிந்ததும் வீடு மட்டுமே இருந்ததால்(நம்புக்கப்பா)

இரண்டாவது வாரம் வந்தது. எனக்கு இங்கு வெகு சில நண்பர்களே உண்டு என்பதால் அவர்களுடன் அதிகமாக பேச்சு வழக்கு இருந்தது. திடீரென்று என் மலேசிய நண்பர் என்னை போனில் அழைத்தார்

என்ன தல ப்ரீ போல .........  ஆமாங்க கடுப்பா இருக்கு. முன்னல்லாம் எப்படா சனிகிழமை வரும் குடும்பத்தோட வெளிய சுத்தலாம்னு இருக்கும். இப்போ ரொம்ப தனியா பீலு பண்றேன் ................

வாங்க சரக்கடிப்போம்.......... அழைப்பு கொஞ்சம் கண்டிசனாகவே இருந்தது.


அவர் ஒரு பெரிய 5 நட்சத்திர ஓட்டலின் மேனேஜர் என்பதால் எல்லாமே அவருக்கு சரக்கு மயம்

இல்ல தல வீட்டுல போகும் போதே சொல்லிட்டு போனாங்க.........

என்னன்னு........... ?  ..................  சனிகிழமை ஆனா வீட்டுலையே உங்க பழக்கத்த முடிசிக்கோங்க(சரக்கடிப்பது) வெளியே போகாதிங்க(மனசாட்சி கேட்டது - மனைவிக்கு மரியாதை!?) 

அட என்ன தல வாங்க... எனக்கும் இன்னிக்கு கொஞ்சம் ப்ரீ தான் ............. சரி என்று செல்ல முடிவெடுத்த போது..... அடுத்த கால் - என்ன தலிவா என்ன பண்றே?

அடடா இவனா!.........இல்லப்பா நம்ம ராபர்ட்டு கூப்பிட்டாரு அதான் ......  

என்ன எனக்கு சொல்லவே இல்ல? ................ இல்லப்பா இப்பதான் போன் பேசி வச்சாரு உடனே உன் கால் வந்துரிச்சி!

சரி என்று சொல்லி விட்டு அவன் conference போட்டு அவர கூப்பிட ......... என்னப்பா இதல்லாம் கேக்கனுமா வாங்க என்றார்!

நான் என் மனைவிக்கு போன் போட்டு - நீ என்னை நைட்டு போன்ல கூப்பிடாத......... !

ஏன் என்றாள்?

இல்ல ராபர்ட்டு கூப்பிட்டு இருக்காரு அதான்................ சரி பாத்து நேரத்தோட வந்து தூங்குங்க............ கார எடுத்துட்டு போகாதீங்க... டாக்ஸி புடிச்சி போயிட்டு வாங்க (என்னமா ப்ளான் சொல்றாப்பா நாம வேஸ்டு)

பேச்சு வார்த்தை முடிந்து நான் கிளம்பினேன்.  

இன்னா யா லார்டு லபக்கு இன்னிக்கிதான் முடிஞ்சிதா - என் நண்பர் என்னை வரவேற்றார்.  அப்படியல்லாம் இல்லப்பா !!!

அடுத்த சில நிமிடங்களில் ரமணாவும் வந்து சேர்ந்தார்

என்னப்பா உங்க வீட்டுல ஊருக்கு போயிருக்காங்கலாமே சொல்லவே இல்லை என்றார்!

(அடப்பாவிங்களா அதுக்காக நான் என்ன என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு ஜனகராஜ் மாதிரி தண்டோராவா போட முடியும்!!)

இதல்லாம் ஒரு விஷயமா போங்க என்றேன். 

உள்ளே போன ராபர்ட்டு திரும்பி வந்தார் - சரி வாங்க போகலாம் .................... எங்கேங்க!  அட வாங்க பாஸ் என்றார்.

அங்கிருந்து ஒரு டாக்ஸி மூலம் ஒரு பார் கம் ரெஸ்டாரண்டுக்கு போனோம்

(அந்த இடம் கரோக்கி எனப்படும் பொழுதுபோக்கு இடம்


என்னையா இது லைட்டே இவ்வளவு மங்கலா இருக்கு (அவ்வளவு மங்கலாவா………தெரியுது)

பாருங்கப்பு இந்த இடம் இது வரைக்கும் நீங்க வந்து இருக்க மாட்டிங்க..................


ஒரு பயங்கர இடியோசயுடன் கூடிய இரைச்சலோடு இசை ஆரம்பமானது (டேய் நான் யோக்கியண்டா என்னடா இது இடமே ஒரு மாதிரியா இருக்கு... -- அப்ப நாங்கல்லாம் வில்லன்னுங்களா என்பது மாதிரி அவர் பார்வையில் தெரிந்தது)


தொடரும்................


கொசுறு: இந்த பதிவை என் மனைவியின் பொறுமைக்கு சமர்பிக்கிறேன்(தப்பிசிட்டோம்ல....நாங்கல்லாம் யாரு - Gun னுக்கே கடுக்கா கொடுத்தவங்க). 

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. மிகுந்த சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறீர்கள் ...

  ReplyDelete
 2. நன்றி திரு. கே.ஆர்.பி.செந்தில் அவர்களே, இனி தான் பாக்கபோறிங்க கூத்த!

  ReplyDelete
 3. //ஒரு பயங்கர இடியோசயுடன் கூடிய இரைச்சலோடு இசை ஆரம்பமானது (டேய் நான் யோக்கியண்டா என்னடா இது இடமே ஒரு மாதிரியா இருக்கு... -- அப்ப நாங்கல்லாம் வில்லன்னுங்களா என்பது மாதிரி அவர் பார்வையில் தெரிந்தது)//

  செம்ம கலக்கல்...

  தொடருங்கள்..........

  ReplyDelete
 4. நன்றி திரு. மாணவன் அவர்களே முடிந்தால் சீரியஸ் பதிவான நாங்க என்ன அடியாளுங்களா பார்க்கவும்

  நன்றி

  ReplyDelete
 5. நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே உங்கள் பதிவை கண்டேன். வித்தியாசமாக யோசித்து இருக்கிறீர்கள்.

  நன்றி

  ReplyDelete
 6. நன்றி திரு. ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே,

  அப்படியே கொஞ்சம் சீரியஸ் பதிவையும் கவனியுங்க.

  நாங்க என்ன அடியாளுங்களா பார்க்கவும் - அந்த பதிவுக்கு வாங்க சுட்டு சுட்டு விளையாடுவோம்!


  நன்றி

  ReplyDelete
 7. யோவ்... நல்லா இன்டரஸ்டிங்கா கொண்டு போயிட்டு பாதியில நிறுத்திட்டா எப்படி... இப்போ பாருங்க கோபத்துல யோவ்னு சொல்லிட்டேன்.,..

  ReplyDelete
 8. சீக்கிரம் மெட்டருக்கு வாங்க

  ReplyDelete
 9. நன்றி திரு. philosophy prabhakaran அவர்களே,

  நீங்க சொன்ன வார்த்தையும் வரும் பதிவில் வருகிறது.

  (என்னமோ போ குமாரு உன்ன நீயே புரிஞ்சிக்க முடியல இவங்கல்லாம் எங்க.... )

  ReplyDelete
 10. வருகைக்கு நன்றி திரு. T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே,

  ReplyDelete
 11. வருகைக்கு நன்றி திரு. சி.பி.செந்தில்குமார் அவர்களே,

  வந்திருவோம்!!!

  ReplyDelete
 12. ம்ம்ம்.. என்ஜாய் பண்ணியிருக்கீங்க.. கலக்கங்க..

  ReplyDelete
 13. வருகைக்கு நன்றி திரு. பதிவுலகில் பாபு அவர்களே

  அப்படீன்னும் சொல்ல முடியல!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி