மானிட்டரு மூர்த்தி!? - 20/12/2010


குடிகாரக்குடிலில் நுழைந்தார் மானிட்டர்...............

மானிட்டர்: என்னமா கண்ணு சவுக்கியமா...............குவாட்டர்: சவுக்கியம்தாம்பா நீ எப்டிகிறே!?

மானிட்டர்: நல்லாகிறேன். அப்புறம் என்னா விஷயம்?

குவாட்டர்: ஒன்னும் சொல்றத்துக்கு இல்லபா ஒரே மழையா கீதா அதனாலதான் கடப்பக்கமா வரமுடியல! சரி ஆரம்பிப்போம்... சொல்லு என்னா நியுசு?

மானிட்டர்: நம்ம தளபதி நடிகரு பத்தி தாம்பா பெரிய பேச்சா இருந்துச்சி, நான் கூட இந்தாளு அரசியல்ல இறங்கி நாலு காசு செலவு பண்ணி காமராசரு கணக்கா வருவாருன்னு நெனச்சா!

குவாட்டர்: ஏம்பா இன்னா ஆச்சி!?

மானி: அவரோட அப்பாரு திடீர்ன்னு எம்புள்ள இப்போதைக்கு வராது நாளு கிழம வருசம் பார்த்து தான் வரும்ன்னுட்டாறு.

குவா: ஏம்பா எல்லாத்திலையும் சூப்பர பாலோ பண்ணலாம்னு நினைக்கிறாரோ என்னமோ !


மானி: இது இப்படின்னா... நம்ம பசு நேச நடிகரு பாவம்பா ஆக்சிடெண்டு ஆயி இப்போ ஆசுபிட்டல்ல இருக்காரு. நல்ல வேல அந்தம்மா உதவி பண்ணுறாங்க. பாரு அவரு வெறும் ஆறு மாசம்தான் M.P யா இருந்ததால அவருக்கு அரசாங்க உதவி எதுவும் கிடைக்காம போயிடுச்சி. ஆனா அவரோட தீவிர கட்சி விசுவாசம் அவர இன்னிக்கும் காத்துக்கிட்டு இருக்கு.

குவா: ஆமாம் நம்ம முருங்கைக்கா புகழ் டைரடக்கரு எப்டிகிராறு?

மானி: வாயும், அறிவும் உள்ள புள்ள பொழசிக்கும். அவரு வர்ற தேர்தல்ல ஆளும் கட்சிக்கு ஆதரவா தான் பிரச்சாரம் பண்ணப்போறதா அறிவிச்சு இருக்காரு. ஆனா அதேநேரம் தீவிர அரசியலுக்கு வரமாட்டாராம்.

குவா: இதுல என்னா செய்தி?

மானி: கவனிச்சி பாரு எம்மாம் பெரிய நடிகருங்க படம்லாம் ரீலீசு பண்ண முடியாம இருக்கும் போது, இவரோட படம் ரீலீசு ஆகிருக்கு. அதாவது நான் உங்ககிட்ட எந்த பதவியும் கேக்க மாட்டேன். தேர்தலுக்கு பிரச்சாரம் செய்யும் போது வந்து போற செலவ மட்டும் பாத்துக்கங்கன்னு அர்த்தம்.

குவா: போப்பா ஒரே சினிமா நியுசா சொல்ற!

மானி: மச்சி நம்ம சச்சு குட்டி சும்மா பின்னி எடுத்து 50 ஆவது சதம் போட்டுட்டாரு தெரியுமா.

குவா: ஆமாம்பா எல்லாரும் பேசிகினு இருந்தாங்க. சும்மா சொல்லகூடாது வயசு ஆக ஆக சும்மா பின்றாப்புல. இந்த மொக்க பசங்க அந்த மன்சன சும்மா ரீடைறு ஆகச்சொல்லி இம்ச கொடுக்காம இருந்தா சரி.

மானி: என்னாதான் சொல்லு நம்ம நாடு பெரிய பணக்கார நாடு தாம்பா!

குவா: யாரு சொன்னா?

மானி: நம்ம சாமியில்ல , அதாம்பா இவா அவா!
அவரு சொல்லிகிறாரு... பல பேரு ஊடு, மனைவி மக்களை விட்டுபுட்டு வெளிநாடு போயி எதாவது சம்பாதிச்சி கொண்டு வந்து நம்ம நாட்டுல கடைசி காலதுலாயாவது நிம்மதியா வாழலாம்னு உழச்சினுகிறாங்க.

குவா: அதுக்கு என்னா?!

மானி: அவரோட சைட்டுல சொல்லிகிறாரு... நம்ம தேசிய அன்னை அவங்க சொந்தகாரங்களுக்கு இந்திய பணத்துல இருந்து 18,000 கோடி கொடுத்து இருக்காங்களாம். இதுல இவங்க ஊழல ஒழிக்கப்போறதா சீனு வேற. கண்ண கட்டுதடா சாமி!?

குவா: அப்போ கிளம்பலாமா!?

மானி: கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சின்னா நாம எவ்ளோ ட்ரை பண்ணி இருக்கணும்னு நெனச்சாலும் இருக்கமுடியாது!

கொசுறு: ஜொள்ளுங்கோ
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. என்ன கடிக்கிறீங்களா சார்!

  ReplyDelete
 2. ஹி ஹி ஹி த்ரிஷா ஸ்டில் சூப்பருங்கோ

  ReplyDelete
 3. இருங்க பதிவு படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 4. ஆமாபா மானி இந்த சாமி இருக்காருல அந்த ஆளுக்காகதாம்பா காக்கா உக்கார பனம்பழம் விழுந்த பழமொழி கண்டு புடுச்சாங்க

  ReplyDelete
 5. நடிகர்கள் பற்றி, அரசியல் பற்றி ஒரே பதிவில் அலசிவிட்டீர்கள் . நல்லாயிருக்குங்க..

  ReplyDelete
 6. பாக்யராஜ் மேட்டர் உண்மைதான் நண்பரே, அப்புறம் ராமராஜன் நியூஸ் கூட ஒகே, அதெப்பிடி நம்ம தளபதிய கிண்டல் பண்ணலாம் :-)

  ReplyDelete
 7. ராமராஜன் சீக்கிரமா தேறி வரணும்... அப்போதான் மேதைன்ற ஒரு உலகப்படத்தை பார்க்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்...

  ReplyDelete
 8. @கார்த்திவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.கார்த்தி அவர்களே,

  கடிக்கனும்னா சொல்லுங்க இங்க நெறைய நண்டுகள் இருக்கு (நண்டு தேசமிது), அனுப்பிவைக்கிறேன்.

  ReplyDelete
 9. @நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே,

  இதுல காக்கா யாரு பனம்பழம் யாரு!?

  ReplyDelete
 10. @பாரத்... பாரதி...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.பாரத்... பாரதி...அவர்களே,

  இது ஒரு தொடர் வண்டி தொடர்ந்து வாங்க..

  ReplyDelete
 11. @கே.ஆர்.பி.செந்தில்வருகைக்கும், கருத்துரைக்கும்! நன்றி திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களே.

  ReplyDelete
 12. @எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே.

  என்ன இப்படி சொல்லிபுட்டீங்க அவரு அவர பாலோ பண்ற ரசிகர்களையே கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காரு நீங்க வேற!?

  ReplyDelete
 13. @philosophy prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

  கோசிக்கலன்னா ஒன்னு சொல்லட்டுமா டிங் டாங் -
  நீங்க எடுத்த காந்தி படத்தவிடவா சர்ச்சையில மாட்டுவாருன்னு நெனைக்கிறீங்க!?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி