சமர்ப்பணம்- 50 வது பதிவு


என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 48 பேருக்கும் நன்றி.

இந்த மாதத்தில் தான் நான் நிறைய பதிவுகள் (உட்டாலக்கடி!?) எழுதிஉள்ளேன். இதற்கு முழு முதல் காரணமான என் மனைவிக்கு நன்றி(ஒன்னரை மாதங்களாக இந்தியா சென்று இருந்தார்).

இத்துடன் எனது சிறிய சுயபுராணத்தை (அதாங்க பயோடேட்டா!?) இணைத்துள்ளேன்.

பெயர்: குமார்.

வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects)

உப வேலை : ப்ளாக் எனும் பெயரில் ஊர் வம்பை விலைக்கு வாங்குவது(கொல்றாங்களே ,காப்பாத்துங்க, காப்பாத்துங்க).

தலைவர்கள்: தமிழ் ஆர்வலர்கள்.

உப தலைவர்கள்: மனைவி மற்றும் மகன்.

வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!)

நண்பர்கள்: ப்ளாகில் ஓட்டும் கருத்தும் சொல்பவர்கள்.

பலம் : எதையும் தாங்கும் மனைவி கிடைத்தது.(யப்பா ஐஸ் போதுன்னு நெனைக்கிறேன்)

பலவீனம்: சொந்தங்களை பிரிந்து வேலை(பணம்) காரணமாக வெளிநாட்டில் உழைப்பது.

சமீபத்திய சாதனை: நானும் ஒரு ப்ளாக்கர்.

நீண்ட நாளைய சாதனை: முன்கோபத்தை விட்டது.

பாதித்த விஷயம்: சகோதரி சமீபத்தில் இறந்தபோது வேலை விஷயமாக அணை பார்வையிட சென்றதால் கைப்பேசி இரண்டு நாள் எடுக்காமல் போய் சாவுக்கு கூட இந்தியாவுக்கு போக முடியாமல் போனது.


சாதித்தது:  இதுவரை நண்பர்களைத்தவிர ஒன்றுமில்லை (ஐயோ கல்யாணம் மறந்துட்டனே!)

கொசுறு: வழக்கம்போல ஓட்ட குத்துங்க, கருத்த மறக்காம சொல்லுங்க.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

37 comments :

 1. சகோதரி சமீபத்தில் இறந்தபோது வேலை விஷயமாக அணை பார்வையிட சென்றதால் கைப்பேசி இரண்டு நாள் எடுக்காமல் போய் சாவுக்கு கூட இந்தியாவுக்கு போக முடியாமல் போனது./////


  நம்மைப்போல வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற தருணங்கள் கொடுமையானது நண்பா!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. சில நெருடல் பல வருடல்... மொத்த்தில்.. ரசனை.ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

  ReplyDelete
 4. @வெறும்பயவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. வெறும்பய அவர்களே.

  ReplyDelete
 5. @வைகைவருகைக்கும், கருத்துரைக்கும்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. வைகை அவர்களே.

  பார்க்கணும்னு இருந்தா மட்டுமே பார்க்க முடியும்!திரு. வைகை அவர்களே.

  ReplyDelete
 6. @பதிவுலகில் பாபுவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. பதிவுலகில் பாபு அவர்களே.

  ReplyDelete
 7. @ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. ம.தி.சுதா அவர்களே.

  ஏதாவது தவறாக சொல்லி இருக்கிறேனா!

  ReplyDelete
 8. ஒரு வருத்ததுடன் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறேன் .

  ReplyDelete
 9. சென்டிமென்டா போட்டுடீங்க, 50க்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. சுய விவரங்கள் தந்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 12. வெங்கட் குமார் என்பது யாருடைய பெயர்?

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் நண்பரே....தொடர்ந்து எழுதுங்கள். உங்களோடு நாங்கள் இருக்கிறோம்.

  ReplyDelete
 14. ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 15. இன்னும் பல நூறு பதிவெழுதி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. >>>>இதற்கு முழு முதல் காரணமான என் மனைவிக்கு நன்றி(ஒன்னரை மாதங்களாக இந்தியா சென்று இருந்தார்).

  super knosecut

  ReplyDelete
 17. >>
  வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects)

  like sirippupolice ramesh?

  ReplyDelete
 18. முதலில் வாழ்த்துக்கள்... அப்புறம்...

  // பெயர்: குமார் //
  நான் வெங்கட் என்றுதானே நினைத்திருந்தேன்... அப்படின்னா whos vicky...?

  // வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects) //
  அப்படின்னா நீங்க ராணுவ வீரர் இல்லையா...?

  // வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!) //
  இதுல ஏதும் உள்குத்து இருக்கா...?

  உங்களை பாதித்த விஷயம் எங்களையும் பாதித்தது... கவலையை விட்டுத்தள்ளவும்... காலம் உங்கள் காயங்களை ஆற்றட்டும்...

  நான் சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய உதவி வேண்டி ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்... ஆனால் இதுவரை உங்களிடம் இருந்து பதில் இல்லையே....

  ReplyDelete
 19. @நா.மணிவண்ணன் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

  ReplyDelete
 20. @பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே.

  ReplyDelete
 21. @பாரத்... பாரதி... நன்றி திரு.பாரத்... பாரதி...அவர்களே.

  வெங்கட்(ரொம்ப பெருசு அதனால ஸ்டைலா நான் சுருக்கினது) என்பது எனது தந்தை பெயர்.

  குமார் என்பது எனக்கு என் தந்தை வைத்த பெயர்.

  ReplyDelete
 22. @ரஹீம் கஸாலி நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.

  ReplyDelete
 23. @கே.ஆர்.பி.செந்தில் நன்றி திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களே.

  ReplyDelete
 24. @எப்பூடி.. நன்றி திரு.எப்பூடி..அவர்களே.

  ReplyDelete
 25. @சி.பி.செந்தில்குமார் நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

  "super knosecut"
  -
  அய்யா சாமி நல்லா இருக்குற குடும்பத்துல பாம் போட்டு போயிட்டீங்களே

  - ஒரு தமாசுக்காக!(கண்டு புடிசிருப்பாளோ, ச்சே ச்சே!)

  ReplyDelete
 26. @சி.பி.செந்தில்குமார்


  நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

  இன்ஜினியரிங் சம்பந்தப்பட்டதல்ல

  - ஒன்லி administration.

  நன்றி சி.பி.செந்தில்குமார் அவர்களே.

  இன்ஜினியரிங் சம்பந்தப்பட்டதல்ல

  - ஒன்லி administration.

  "மேஸ்திரி"(மாண்புமிகு அல்ல)

  ReplyDelete
 27. @சி.பி.செந்தில்குமார்>>>>>>>
  "congrats for 50 . pls stop often make 90 in tasmac, ha ha ha"

  "துர இங்கிலிஸ்ல எல்லாம் பேசுது"

  நாம அடிச்சா புல்லு இல்லன்ன கல்லு (இப்போதைக்கு சரக்கு விஷயத்துல ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லைங்க!)

  ReplyDelete
 28. @philosophy prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

  1.// பெயர்: குமார் //
  நான் வெங்கட் என்றுதானே நினைத்திருந்தேன்... அப்படின்னா whos vicky...?

  >>>>>
  வெங்கட்(உண்மையில அவரோட பேரு ரொம்ப பெரிசு அதனால ஸ்டைலா நான் சுருக்கினது) என்பது எனது தந்தை பெயர்.
  குமார் என்பது எனக்கு என் தந்தை வைத்த பெயர்.

  என் மகனின் செல்லப்பெயர் விக்கி.

  2.// வேலை: மேலாளர் (infrastructure & Hydro power projects) //
  அப்படின்னா நீங்க ராணுவ வீரர் இல்லையா...?

  -இப்பொழுது வாழ்வின் இரண்டாம் பாகம்.

  முதல் பாகம் முடிந்து விட்டது(கடந்த காலம்)

  3. // வயது: ப்ளாக் எழுத போதுமான வயது(நாம என்ன ஸ்கூல் பையனா!) //
  இதுல ஏதும் உள்குத்து இருக்கா...?

  >>>>

  இதில் எதுவும் உள்குத்து இல்லை.ஒரு flow ல வந்துடுச்சி.

  4.உங்களை பாதித்த விஷயம் எங்களையும் பாதித்தது... கவலையை விட்டுத்தள்ளவும்... காலம் உங்கள் காயங்களை ஆற்றட்டும்...
  >>>
  நன்றி

  5.நான் சில நாட்களுக்கு முன்பு உங்களுடைய உதவி வேண்டி ஒரு மெயில் அனுப்பி இருந்தேன்... ஆனால் இதுவரை உங்களிடம் இருந்து பதில்
  இல்லையே....

  >>>
  நான் கவனிக்கவில்லை. முடிந்தால் மறுமுறை அனுப்பவும்.

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 30. @ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே.

  ReplyDelete
 31. 50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ...

  ReplyDelete
 32. @பிரஷாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.பிரஷா அவர்களே

  ReplyDelete
 33. 50 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 34. @இரவு வானம்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. இரவு வானம் அவர்களே.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி