எல்லோரும் சூடாவே பதிவு போடுறாங்க. அரசியல்வாதின்னா அவ்வளவு இளக்காரமா சொல்லுங்கப்பு. இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களில் எனக்கு பிடித்த சில விஷயங்களை(சொல்லிப்புட்டேன் இது பொது அல்ல!) இங்கு பதிவிடுகிறேன்.
அ. தானைத்தலைவர் (தனக்கு தானேவா ன்னு எல்லாம் கேக்கப்படாது!)

ரசித்த விஷயம்: எத்தன குடும்பம் இருந்தாலும் அத அரவனச்சு போற நேர்த்தி. எவன் பாடையில போனாலும் அது தன் குடும்பத்தால அப்படி என்னும்போது ஏற்படும் பூரிப்பு(இன்னாப்பூ!) .

பிடித்தது: எவ்வளவு வயசானாலும், உடம்பு ஒத்துழைக்கலன்னாலும் யாராவது பாராட்டு விழான்னு சொன்னதும் ஆட்டோ புடிச்சாவது நாளு பேரோட போற நல்ல(!) பழக்கம்.
இத்தன வயசுலயும் மக்கள் போனாப்போகுதுன்னு விட்டுடாம தினமும் ஒரு கடிதாசி எழுதி அவங்கள பொங்க வெக்கிற திறமை...................(நெறைய சொல்லணும் ஆனா பாருங்க நல்லவங்கள பத்தி ரெண்டு விஷயம் சொன்னாபோதும்ல!)


ஆ. ராணி மகாராணி (தங்க தாரகை - மவனே எடைய மட்டும் எவனாவது கேட்டீங்க!)

ரசித்தது: அண்ணாவுக்கும், புரட்சி தலைவருக்கும் எப்பவும் போடும் நாமம் - ஐயோ நான் சொன்னது அவங்களோட மரியாதயங்க(!).
நாங்கல்லாம் கிங்கு அப்படின்னு சொல்லிட்டு இருந்த கடின உழைப்பாளிகளான
அரசாங்க ஊழியர்களை "நீங்க கிங்குன்னா நான் உங்களுக்கு ஊதுறேன் சங்கு" என்றது.

பிடித்தது: தில்லு (எவனுக்கு இருக்கு!) - இத மத்தவங்க திமிருன்னு சொன்னாலும் கவலைப்படாம போயிட்டு இருக்கறது.
சாணக்கியனுக்கே பெப்பே காட்டுற தெனாவட்டு.....


இ. லாடு லபக்கு தாஸு(ஜாதி சொல்ல விரும்புகிறேன்!)

ரசித்தது: ஆரம்பிச்சவங்கள எல்லாம் அடிச்சி விரட்டிட்டு (கோமணத்தையும் புடுங்கிகிட்டு) தானும் தன் சொந்தமும் சேர்ந்து கட்சிய கட்டுப்பாட்டுல வச்சிருக்கறது. ஆங்கில வழில டாக்குடரு பட்டம் வாங்கிட்டு இருக்குறவங்கள எல்லாம் ஆடு மாடு மேய்க்கசொல்லுறது.

பிடித்தது: ஆரம்பிச்ச தொலைக்காட்சில இன்றும் தமிழ் படங்களை போடாமல் உலக படங்களை போட்டு தமிழை வளர்ப்பது. இன்னிக்கும் நானும் ரவுடிதான்னு உதாரு உட்டுகினு சுத்தி வர்றது.


ஈ. ப்ளாக் டைசன் (கப்பல் தலைவன்)

ரசித்தது: பின்னங்கால்லையே தீவிரவாதிகள அடிச்சி விரட்டினது(படத்துலமட்டுமுங்க!).  
வயசானாலும் பாடியே ஸ்லிம்மா(எது!) மெயின்டைன் பண்றது.

பிடித்தது: யாருக்கிட்ட பெட்டி வாங்குனாலும் அத காட்டிக்காம அவங்களையே போற போக்குல திட்டிகினு போறது.
இன்னிக்கும் முதல்வர் நெனப்புலேயே இருக்கறது (நம்பிக்கைதான் வாழ்கை!)


உ. குரங்கு குட்டிகள்(பண்ணக்கார பயபுள்ளைங்க)

ரசித்தது: எந்த குட்டி யாரோட இருக்குன்னே தெரியாம கத்துறது. எவ்ளோ அடிச்சாலும் நாங்க செண்ட்ரல்ல இருந்து வாங்குற அடிமாதிரி வருமா என்பது.

பிடித்தது: சொம்படிப்பது, ஜிங் ஜக் வேலைக்கு என்று பத்து பேரை பிரியானிப்போட்டு கூடவைத்திருப்பது.

கொசுறு: கலி முத்திடுச்சி!?
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அரசியல்வாதிகள் எல்லோரும் நல்லவர்கள் அவர்களை குறை கூறாதீர்கள்

  ReplyDelete
 3. //யாராவது பாராட்டு விழான்னு சொன்னதும் ஆட்டோ புடிச்சாவது நாளு பேரோட போற நல்ல(!) பழக்கம்.//
  //அண்ணாவுக்கும், புரட்சி தலைவருக்கும் எப்பவும் போடும் நாமம் .//

  Super Brother!

  I like all.., but you Missed பண்ணக்கார பயபுள்ளைங்க Congressman's!
  next time...expecting more from you!

  http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_7155.html

  ReplyDelete
 4. புத்தாண்டு பிறந்ததும் இந்த ரோஜாப்பூ தூவுரத நீக்கிடுங்க... அது உங்க தளத்தின் வேகத்தை குறைக்கிறது...

  ReplyDelete
 5. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா, இந்தாண்டு உங்களை கலைஞர் கிட்ட இருந்தும் மத்திய அரசு கிட்ட இருந்தும் கடவுள்தான் காப்பாத்தணும், கடவுள் நம்பிக்கை இல்லையின்ன இயற்கை காப்பாத்தட்டும் :-)

  ReplyDelete
 6. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 7. @karthikkumarவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.karthikkumar அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. @ஆமினாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. @THOPPITHOPPIவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. @Sai Gokula Krishnaவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Sai Gokula Krishna அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. @கே.ஆர்.பி.செந்தில்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.கே.ஆர்.பி.செந்தில் அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @philosophy prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  "ரோஜாப்பூ தூவுரத நீக்கிடுங்க.."

  >>>>>>
  எடுத்துட்டேனுங்க.

  ReplyDelete
 13. @எப்பூடி..வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. எப்பூடி.. அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  "ஆண்டவனே நம்ம கூட இருக்கான் அப்புறம் என்ன, கவலைய விடுங்க நண்பா"

  "நாம பாக்காத கண்டமா!?"

  ReplyDelete
 14. @வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே,

  உங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 15. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. @யோவ்
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.யோவ் அவர்களே.

  உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி