ததாதிதிது...(புத்தாண்டு(English new year) பிடுங்கல்கள்!?)


முதலில் எல்லோருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நீங்கல்லாம் எல்லா சந்தோசத்தையும் இந்த வருசம் இரட்டிப்பா பெறனும் என்று விரும்புகிறேன்.



எல்லோரும் இந்த வருஷ குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள் என்று சபதமெடுப்பது வழக்கமாகிவிட்டது(நடக்குதோ இல்லையோ அதுவேற!!). நானும் எடுத்துதான் வைப்போமே என்றால்.....................?


அ. வீட்டுல மனைவி இந்தியா போயி திரும்பி வந்து மறுபடியும் பெரிய விக்கட்டு(அதாங்க இன்னொரு பெரியவங்க இயற்கஎய்திட்டாங்க) ஒன்னு விழுந்திடுச்சின்னு போய் இருக்காங்க. இந்த வீட்டு சாப்பாடு பறிபோய் ஏற்கனவே ரெண்டு மாசமாச்சி. அதனால bachelor ஆக இருந்த போது நல்ல சமையல்காரன்னு நண்பர்கள் கிட்ட பேர் வாங்கிய அந்த பழைய கலைய திரும்ப கொண்டு வர்றதா முடிவு பண்ணி இருக்கேன்.

ஆ. இது வரை பதிவுலகத்துல யாரிடமும் எந்த வாக்குவாதமும் நடத்தாம ஏதோ பொழப்பு நல்ல விதமா போயிட்டு இருக்க எனக்கு துணையா இருக்கும் எங்காத்தா மாரியாத்தாவுக்கு பொங்க வைக்கணும்(இந்த வருசம் முடியாது - ரெண்டு பெரிய தல போச்சே)

இ. இந்த வருடம் - ரொம்ப வருசமா விட்டு இருந்த பல நட்புகள் திரும்ப கிடச்சதுல மிகுந்த சந்தோசம். வரும் வருடமும் மீத மிருக்கும் நண்பர்களையும் கண்டு பிடுச்சிடுவேன்னு நம்பிக்கை வந்து இருக்கு.....


ஈ. எப்படியாவது தேர்தல் நேரத்துல லீவு எடுத்து சென்னைக்கு போயி என் ஓட்ட நான் பதிவு பண்ணனும்(ஆண்டாவா அதுவரை யாரும் என்னோட ஓட்ட போடாம பாத்துக்க!?)

உ. உலக பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்து பல பெரிய ஒப்பந்த வேலைகள் அடுத்த வருசம் ஆரம்பமாக இருக்கு. இதன் மூலம் என்னோட கனவு பலிசி நானும் ஒரு நல்ல அரசியல்வாதியா(வியாதியா அல்ல) என் தமிழ் மண்ணுல கால் பதிக்க முடியும்னு நம்புறேன்(எத்தன நாள் தான் அவன் சரியில்ல இவன் சரியில்ல என்பது).


ஊ. இன்னும் நாலு வருஷ கடமை நாளையிலிருந்து ஆரம்பிக்குது. அது முடிஞ்சி என் மக்களுக்கு என்னால் ஆன சேவையை செய்ய கடவுள் எனக்கு துணை இருப்பார் என்று நம்புகிறேன்.


எ. என் பழைய நண்பர்களும் இந்தியாவுக்கு இன்னும் நாலு வருடத்துல திரும்ப இருப்பதால் நல்ல பல விஷயங்கள செய்யறதா முடிவு எடுத்திருக்கோம். அதுவரை எங்க ஊர காப்பாத்து சாமியோவ்!!

கொசுறு: என்ன முடியும் இந்த மக்களால் என்பவரை, எல்லாம் முடியும் இதே மக்களால் என்பதை நிரூபிப்போம்(தும்பிக்கை போன்ற நம்பிக்கையுடன் நாளை நமதே).
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

19 comments :

  1. தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    அழியா வடுக்கள்

    ReplyDelete
  2. @ம.தி.சுதாவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ம.தி.சுதா அவர்களே.

    தங்களுக்கு என் மனம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும் அமைதி தவழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. @வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே.

    நன்றி

    ReplyDelete
  5. //என்ன முடியும் இந்த மக்களால் என்பவரை, எல்லாம் முடியும் இதே மக்களால் என்பதை நிரூபிப்போம்(தும்பிக்கை போன்ற நம்பிக்கையுடன் நாளை நமதே).//

    அருமை நண்பரே சூப்பரா சொல்லிருக்கீங்க பாராட்டுக்கள்.....

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

    வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

    ReplyDelete
  6. @மாணவன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே.

    நன்றி

    உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. // எப்படியாவது தேர்தல் நேரத்துல லீவு எடுத்து சென்னைக்கு போயி என் ஓட்ட நான் பதிவு பண்ணனும் //

    சென்னை வந்தா மறக்காம சொல்லுங்க... மீட் பண்ணலாம்...

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. @நா.மணிவண்ணன்
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @ஜீ...
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @யோவ்
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.யோவ் அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. @philosophy prabhakaran
    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    "சென்னை வந்தா மறக்காம சொல்லுங்க... மீட் பண்ணலாம்.."
    >>>>>

    கண்டிப்பா மீட் பண்ணுவோம் - உங்களைப்போல செயல் வீரர்கள் இந்த நாட்டுக்கு நெறைய தேவைப்படுகிறார்கள்.

    ReplyDelete
  16. பதிவுலகில் நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  17. @THOPPITHOPPIவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.THOPPITHOPPI அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  19. @சிவகுமாரன்வருகைக்கும், கவிதைக்கும் நன்றி திரு.சிவகுமாரன் அவர்களே.

    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி