நண்பர்கள்(friends) - அன்பு,பாசம், நட்பு....!?எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக இல்லை(நம்மள போயி யாரு!). காரணம் எனக்கு எந்தளவுக்கு ஆண் நண்பர்களோ அதற்கு சரி சமமாக பெண் நண்பர்கள் இருந்த காரணத்தால் காதல் என்பது ஏதோ காமடி விஷயமாகவே போய்விட்டது(இப்போது அதுதான் வாழ்க்கையே!). 

நாங்க ஒரு பெரிய க்ரூப் என்று இருந்ததால், எங்க போகரதுன்னாலும் ஒரு படையா போவோம். இந்த படைகிட்ட மாட்டாத மக்களே இல்ல என்று சொல்லும் அளவுக்கு ரொம்ப நல்ல பேரு எங்களுக்கு(இதுக்கு காரணமே எங்க அம்மா என்ற அக்காதான்).


இன்று வரை எங்க கேங்குல இருந்த ஆண் பெண் அங்கத்தினருக்குள்ளே காதல் எனும் விஷயம் எட்டிப்பார்த்ததில்லை. காரணம் நாங்க எல்லாம் நண்பர்கள் மற்றும் சகோதர உணர்வு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

எங்க கேங்குல சிவான்னு ஒரு நல்லவன் இருந்தான். எங்களுக்கு அடிக்கடி வரும் டவுட்டே இவன் எப்படி எங்க கேங்குல சேர்ந்தான் என்பது தான். ஏன்னா இவன் பேசறத்துக்கு நாங்க காசுகுட்டுக்கணும் அந்த அளவுக்கு அமைதியான ஒரு படிப்பாளி. எப்ப பாரு ஏதாவது படிச்சிட்டே இருப்பான். 


கிரிக்கெட் ஆட கூப்பிட்டாலும் அங்க வந்து ஓரமா உட்க்காந்து ஏதோ ஒரு புக்க வீட்டுல இருந்து எடுத்து வந்து படிச்சிட்டு இருப்பான். அந்த அளவுக்கு படிப்பின் மீது இவனுக்கு காதல்.

இந்த கல்லுளி மங்கனையும் ஒரு பொண்ணு லவ்வினா. திடீர்ன்னு ஒரு நாளு வந்து எங்ககிட்ட "டேய் ப்ளீஸ் நீங்கல்லாம் நாளைக்கு என் காலேஜுக்கு வர முடியுமா" அப்படின்னு கேட்டான்.

என்னடாஇது என்னிக்கும் இல்லாம என்று "என்னதான் விஷயம் சொல்லுடா" என்று ரீல் ஆனந்தி கேட்டா...........


"ஒன்னும் இல்ல ஒரு பொண்ணு என்னை லவ் பண்றேன்னு டெய்லி டார்ச்சர் குடுக்குறா கொஞ்சம் வந்து என்னன்னு கேளுங்கப்பான்னு" சொன்னான்.

"என்ன கொடும சாமி இது இவன ஒரு பொண்ணு லவ்வராலா, ஸ் ஸ் ஸ் டேய் எனக்கு மயக்கமே வந்துடும்போல இருக்குடா" என்றாள் ஹாக்கி சித்ரா.

"ஹேய் அவன்தான் சாமியாருன்னு தெரியும்ல வாங்க நாளைக்கு போய் இன்னா விஷயம்ன்னு பார்த்துட்டு வருவோம்" என்றேன்.

"இங்க பாரு அந்த ஏரியா கோடம்பாக்கம் அப்படியே படத்துக்கு எதாவது போயிட்டு வந்துருவோமாடா" என்றாள் zoo லக்ஷ்மி.

"அடிப்பாவிகளா அவன் எவ்ளோ சீரியஸா வந்து சொல்லிட்டு இருக்கான் படம் தான் இப்போ முக்கியமா போச்சா உங்களுக்கு"...........(படம் பார்த்துவிட்டு வந்தது தனிக்கதை)

"சரி யாரு அந்தப்பொண்ணு கிட்ட பேசுறது............பசங்க நாங்க போயி பேசுனா எதாவது பிரசினயாயிடப்போவுது"........ அதனால.............


"ஏய் விடு நான் பேசுறேன்" என்றாள் வித்யா.

அடுத்த நாள் எல்லோரும் அவங்க அவங்க வீட்டுல சிவா காலேஜுல cultural program என்று சொல்லிட்டு கிளம்பி போனோம்.

சிவா அந்தப்பெண்ணை சுட்டி காட்டினான். 

"டேய் போய் கூப்பிட்டு வாடா பேசுவோம்" என்றான் முனி......

இல்லடா நான் வந்து............எப்படி.....போயி................கூப்பிட்டு..............

"டேய் இது ஆவறது இல்ல ரீலு நீ போய் கூட்டு வா" என்றேன் 

கொழுப்புதாண்டா உனக்கு............


சரி சீக்கிரம் முடிங்கப்பா படத்துக்கு நேரமாகுது....என்றாள் zoo 

சிறிது நேரத்தில் அந்தப்பெண்ணுடன் வந்து நின்றாள் ரீல் ஆனந்தி.

எதிரே இருந்த "Mcrennet" உள் நுழைந்தோம்.........

தொடரும்...........

கொசுறு; இந்த உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பு நீங்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்தே தொடரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் என் பார்வையில் சொல்லப்படும் இக்களம்   பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேட்கப்படுகிறது.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

12 comments :

 1. தொடருங்கள் .முடிவு காமெடி யா இருக்குமா ?

  ReplyDelete
 2. அப்புறம் என்னாச்சுங்க... சீக்கிரம் சொல்லுங்க...

  ReplyDelete
 3. நல்லா தானே போயிட்டு இருந்துச்சு....

  ஏன் பாதியிலேயே விட்டீங்க !!! ஆர்வமா இருக்கு ... சீக்கிரம் அடுத்த பாகத்தையும் போடுங்க

  ReplyDelete
 4. உங்களுக்கு தொடருறதே வேலையா போச்சு :-)

  ReplyDelete
 5. நல்லாத்தானே போகுது! தொடருங்க பாஸ்! :-)

  ReplyDelete
 6. // எனக்கு இந்த காதல் விஷயத்துல ஆர்வமோ, அனுபவமோ அதிகமாக இல்லை(நம்மள போயி யாரு!) //

  பொய்தானே... காதலியும் மனைவியும் சந்தித்தால்ன்னு பந்திவு எழுதினீங்களே...

  ReplyDelete
 7. @வெறும்பயவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே

  ரொம்ப சீரியசான முடிவு.............

  ReplyDelete
 8. @ஆமினாவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஆமினா அவர்களே

  ReplyDelete
 9. @எப்பூடி..வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.எப்பூடி.. அவர்களே

  அப்படியில்லை நண்பரே............என் மடிக்கணினில அதிக நேரம் என்னால் டைப் செய்ய இயலாததினால்......

  ReplyDelete
 10. @ஜீ...வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.ஜீ... அவர்களே

  ReplyDelete
 11. @philosophy prabhakaranவருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.philosophy prabhakaran அவர்களே,

  1.நன்றாக கவனிக்கவும்"

  "ஆர்வமோ, அனுபவமோ "அதிகமாக" இல்லை"

  சுத்தமாக இல்லை என்று கூறவில்லை நண்பரே.

  2. பொய்தானே... காதலியும் மனைவியும் சந்தித்தால்ன்னு பதிவு எழுதினீங்களே...

  - "அடுத்து அவள் பற்றிய பதிவுதான்"

  ReplyDelete
 12. @நா.மணிவண்ணன்வருகைக்கும்,
  கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே

  ரொம்ப சீரியசான முடிவு..........

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி