மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-17.1.11

கொஞ்ச நாளா எதுவும்(!?) சரி இல்லததனால மூர்த்தியும். கோயிந்தனும் மீட் பண்ண முடியல. இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு.வா மச்சி என்ன பத்து ரொம்ப நாளாகுது.......கேட்டுக்கொண்டு இருக்கும்போதே குடி...குடிலுக்குள் நுழைந்து கொண்டு இருந்தார் திரு. மானிட்டர் மூர்த்தி அவர்கள்............

இனி :

மானி: ஏம்பா சொல்ல மாட்டே........ஒரு மாசமா நெறய பிரச்சின......ஊட்டுல ரெண்டு பேரு போய் சேர்ந்துட்டாங்க. அதுவுமில்லாம நமக்கு உடம்பு சரியில்லாம போச்சி அதான் கட பக்கம் வர முடியல.............நீ எப்டி இருக்க........


குவா: எனக்கும் தான்பா முடியல.......... சரி வந்தாச்சி சொல்லு எதாவது விஷயம் இருக்கா.....

மானி: நெறய இருக்கு தம்பி...........கேளு............நம்மாளுங்களுக்கு மறதி ஜாஸ்திப்பா!?

குவா: எத வச்சி சொல்றே!

மானி: இந்த ராசா மேட்டர காணோம் பாரு......... அவன் அவன் இப்போ பொங்கல்ல பிசியாயிட்டணுவ ...........அதான்......

குவா: இல்லப்பா.........நாம விட்டாலும் கோர்ட்டு விடாது மாமு..........

மானி: போடா இவனே............இப்பதான் கூட்டணி முறியாம கூட்டுக்களவானிங்க ஒண்ணா சேர்ந்துட்டாங்க தெரியுமில்ல.............ஆனா பாரு.........இந்த ஆளும் கட்சி டிவில பட்டிமன்றத்துல என்னமா பேசுறாங்க........அதுவும் யார் மேல புகார் இருக்கோ அவங்க பேச்சுதான் டாப்பு............எப்படித்தான் கொஞ்சம் கூட.......பேச முடியுதோ தெரிலபா.............

குவா: எல்லா அரசியலு பா.............

மானி: என்னாடா அரசியலு........சரக்கடிக்கிற தலைவரு ஒருத்தரு இன்னும் கூட்டணி முடிவு பண்ணாம திரியிறாரு............இன்னொரு பக்கம் ஏசி ரூம்ல சரக்கடிக்கிரவங்க இன்னும் மலைய விட்டு இறங்குறா மாதிரியே தெரியல............

குவா: ஆமாம்பா சாமிக்கு மாலைப்போட்டு போனவங்க கதி இப்படி ஆயிடுச்சே பா !

மானி: கொடுமையான விஷயம்டா அது...........பின்ன என்ன சொல்றது........ஜீப்பு ஒன்னு சரியா ஸ்டார்ட்டு ஆகாம போக அத கொஞ்சம் பேரு சேர்ந்து தள்ளிவிட .............அந்த நேரத்துல டிரைவரோட கட்டுப்பட்ட மீறி அந்த ஜீப்பு எகிறிப்போய் அங்க இருந்த ஒரு மினி பஸ்சு மேல போத.......அதுல என்ன நடக்குதுன்னு தெரியாம அந்த குறுகிய வழில பக்தர்கள் ஓட.......கொஞ்சம் பேரு அங்கே இருந்த சின்ன கடைங்களுக்குள்ள போக.........அவனுங்க கோவம் வந்து கட்டைங்கள வச்சி மக்களை அடிச்சி விரட்ட....எதிர் எதிரா மக்க மோதி பாதிப்பேரு பக்கத்துல இருந்த தடுப்பு வேலிய புடிக்க அது சரியா இல்லாததுனால பக்கத்துல இருந்த பள்ளத்துல விழுந்துட்டாக.......

குவா: எல்லாம் விதிப்பா..........

மானி: அடப்பாவி...........ஏன்டா 2 லட்சத்துக்கு மேல வந்த கூட்டத்த சரிப்படுத்த 5 போலிச போட்டு வச்சது விதியா.......உயிருக்கு பயந்து கடைங்களுக்குள்ள ஓடுன பக்தர்கள உருட்டுகட்டைகளால அடிச்ச விஷயம் உனக்கு விதியா.............இருக்குற தமிழ் தெய்வங்கள கும்புடுங்கன்னா யாரு கேக்குறா..............

குவா: சோ.... ஏதோ சொல்லிகிறாரு பா..........

மானி: அத ஏன் கேக்குற அவரு எந்தப்பக்கம் பேசுறாருன்னே தெரியலபா......

குவா: ஏம்பா.....உனக்கு புரியலையா............

மானி: பின்ன என்ன .............அந்தம்மாவ ஆண் அப்டிங்கறாரு.......எதிராளிய பெண் அப்டிங்கறாரு..............வோட்டு போட்ட மக்க இது கூட............தெரியாம போட்டுட்டாங்கன்னு...........சொல்லவாறாரா...........தெரியல.............

குவா: சரி பொங்க படங்கள்ல உனக்கு எது புட்சிகிது.........

மானி: நான் இன்னும் எதுவும் பாக்கல.........ஆனா ஒரு நல்லது நடந்துகிது..........அது நம்ம ட்ரைன் புடிச்ச நடிகரு படம் மக்களை கவர்ந்து இருக்கறதா வந்த ரிசல்ட்டு தான்பா அது....

கொசுறு: எப்பொருள் யார் யார் வாய் கேட்பின் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு......அய்யோ அம்மாஆஆ ......
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

14 comments :

 1. @MANO நாஞ்சில் மனோவருகைக்கும், வடை எடுத்ததட்க்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே.

  ReplyDelete
 2. அந்த voter போட்டோ கலக்கல்ங்க மானி . நமக்கு நாமே சூடு வைத்து கொள்கிறோம்

  ReplyDelete
 3. //கொஞ்ச நாளா எதுவும்(!?) சரி இல்லததனால மூர்த்தியும். கோயிந்தனும் மீட் பண்ண முடியல. இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு.//


  உங்களுக்கா மூர்த்திக்கா?

  ReplyDelete
 4. புதுசா தலைப்புல பக்கங்கள்ன்னு சேர்த்திருக்கீங்களே...

  // இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு //

  வாரத்துல மூணு நாளைக்கா... உடம்பு கெட்டுட போகுது....

  ReplyDelete
 5. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. நா.மணிவண்ணன் அவர்களே.

  >>>>>
  "அந்த voter போட்டோ கலக்கல்ங்க மானி . நமக்கு நாமே சூடு வைத்து கொள்கிறோம்"
  >>>>

  எங்க வச்சிக்கிறோம் பாருங்க நெருப்ப, அத அணைக்க எங்க தண்ணி ஊத்திக்கிறோம் பாருங்க.

  ReplyDelete
 6. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. THOPPITHOPPI அவர்களே.


  //கொஞ்ச நாளா எதுவும்(!?) சரி இல்லததனால மூர்த்தியும். கோயிந்தனும் மீட் பண்ண முடியல. இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு.//


  உங்களுக்கா மூர்த்திக்கா?

  >>>>>>

  அது உண்மைதானுங்க!?

  ReplyDelete
 7. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. Philosophy Prabhakaran அவர்களே.

  "புதுசா தலைப்புல பக்கங்கள்ன்னு சேர்த்திருக்கீங்களே...

  // இனி தொடர்ந்து வருவாங்க வாரத்துல மூன்று நாளைக்கு //

  வாரத்துல மூணு நாளைக்கா... உடம்பு கெட்டுட போகுது...."

  >>

  ரொம்ப நாள் கழிச்சி வர்றதால எதாவது வித்தியாசம் வேணுமுங்க!
  .....>>>>>>>

  இந்த ஊருல தினமும் மீட்டிங்கு என்கிற பேர்ல ராவாதான் குடிக்கிரானுங்க ......தினமும் நானும் ஒரு கிளாசுல குளிர் பாணத்த வசிகினு எவ்வளவு நாள் தான் ஒப்பேத்தப்போறேன்னு தெரியல. அதுலயும் அது ஆப்பிள் ஜூஸா இருக்குறதுனால கலர பார்த்து ஏமாந்துடரானுங்க ஹி ஹி

  ReplyDelete
 8. அது யாருங்க.நம்ம ட்ரைன் புடிச்ச நடிகரு ?
  அருமையான அலசல்/அரட்டை.

  ReplyDelete
 9. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே.

  ReplyDelete
 10. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு. கவிதை காதலன் அவர்களே.

  ReplyDelete
 11. வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.சிவகுமாரன் அவர்களே.

  "அது யாருங்க.நம்ம ட்ரைன் புடிச்ச நடிகரு ?"

  >>>>

  நம்ம காவலருங்க!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி