மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்-!?-19.01.11

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே......................

இன்னா மானி வரம்போதே தலிவரு பாட்டோட வர்ரீறு.....
மானி: ஆமாம்பா நம்மால தான் ஒன்னும் மாத்தமுடியல ......இப்படி பாடியாவது மனச தேத்திக்க வேண்டியதுதான்.........

குவா: ஏன் அப்படி சொல்றீங்க......

மானி: நம்ம நாட்டு அமைச்சரு மாதிரி ஆளுங்க இருக்க வரைக்கும் இன்னா பாடுறது.....

குவா: இன்னா விசயம்..........

மானி: அவன் அவன் விலைவாசி ஏறிப்போச்சே........குடும்பத்த எப்படி நடத்தறதுன்னு தலைல கைவச்சி உக்காந்து இருக்கான்.......இந்த பண அமைச்சரு நக்கலு ...........மக்களுக்கு வாங்கற சக்தி அதிகமாயிடுச்சி, அதுனாலதான் விலைவாசி ஏறிப்போச்சின்னு..........பேட்டி கொடுக்காறு......

குவா: இன்னாபா எவ்ளோ வருஷ அனுபவம் அவருக்கு........

மானி: எனக்கு என்னாமோ டவுட்டா கீது.......இந்த மஞ்சத்துண்டும் ...அந்த வெளிநாட்டுல இருந்து வந்த மவராணியும் சேர்ந்து இந்த தேர்தல்ல தமிழ் நாட்டுல பொங்க வைக்க ட்ரை பண்ணுறாங்கன்னு நினைக்கிறேன்.

குவா: கூட்டணி இறுதி ஆயிடுச்சா......

மானி: அத தான் சொன்னாரே தலீவரு.........எவ்ளோ கொடுத்தாலும் தாங்குவாங்க மத்தில இருக்கவங்க ..........அதனால எங்கள யாரும் பிரிக்க முடியாதுன்னு.....

குவா: ஆமா நம்ம பார்லிமெண்டு புலி என்னபன்னப்போறாரு...........

மானி: அவர சீமானு சட்டசபை தேர்தல்ல நிக்க சொல்லி கேட்டுகிட்டாரு...அவரும் கிட்ட தட்ட நிக்கிற மாதிரிதான் தெரியுது........

குவா: ஆனா சீமான் பண்ணது சரியாப்பா........இவ்ளோ நாளு எதிரி போல இருந்த அந்தம்மாவுக்கு ஆதரவு குடுத்துப்புட்டாரே.........

மானி: பின்ன என்னா அவர நம்புனவங்கள கொண்டு போய் போலீசுல வெளுப்பாங்க........யாரு வருவா,,,,,,,,அதே நேரத்துல இது சரியான காய் நகர்த்தலு........என்னோட கருத்து இன்னான்னா..........எதிரிய நம்பலாம் நம்ம நெஞ்சுலையே குத்துவான்.........ஆனா துரோகி இருக்கான் பாரு..........கூட இருந்தே முதுகுல கத்தி சொருகுவான்...........சொருகிட்டான்...........

குவா: சரிப்பா அரசியல விடுத்து ஏதாவது மேட்டரு இருக்கா.........

மானி: நம்ம மணியான டைரடக்கரும்....ராசாவும் சேர்ந்து ஆதவன் கம்பெனிக்கு பெரிய பட்ஜெட் படம் பண்ணப்போறதா வதந்தி..........


குவா: அது உண்மையில்லையா...............

மானி: எனக்கு தெரிஞ்சி...........ராசா ஒருமுறை பிரிஞ்சிட்டாருன்னா மறுபடியும் சேரமாட்டாரு..........ஏன்னா இந்த மணி தான் ராசா மேல இருந்த கோவத்துல ஆஸ்கர் நாயகன, படவுலகத்துல கொண்டு வந்தவரு.............பார்ப்போம்........படிச்சவங்களுக்கு மட்டுமே படமெடுக்குற டைரடக்கரும்.........பாமரன்களோட ரசனையே புரிஞ்சி வச்சிருக்க ராசாவும் சேர்ந்தா கொஞ்சம் வித்தியாசமாதானே இருக்கும்.......

குவா: ஆமா நம்மாளுங்க கிரிக்கெட்டுல கலக்கிபுட்டாங்க பாத்தியா.......

மானி: நாங்கூட பார்த்தேன்..........தோக்கப்போற மேட்ச செயிச்சிபுட்டாங்க சூப்பருபா.......அந்த சிங்கு கலக்கி புட்டாறு.........இந்தியா வந்த உடனே வருமான வரி பிரச்சன பெருசாகக்கூடாதுன்னு கலக்கி இருப்பாரோ கிரிகெட்டுல.........சின்ன டவுட்டு......ஹி ஹி 

குவா: ஆமா எப்படி இருக்கு புதுப்படங்களோட நிலைமே..............

மானி: வந்த படங்கள்ல goat field படம் இப்போதைக்கு மொத இடத்துல இருக்கறதா சேதி வந்துச்சி.......அப்புறம் நம்ம கார்த்தி படம் சிரிச்சி வயறு புன்னாகுற அளவுக்கு இருக்கறதா என் பொஞ்சாதி சொன்னாபா............

குவா: இன்னாபா...........எவ்ளோ தடைங்கள உடைச்சிகிட்டு வந்த படத்த பத்தி சொல்லமாட்டேன்குற..........

மானி: அத ஏன் கேக்குற..........நாம எதாவது சொல்லப்போக.......இந்த குழந்தைங்க நம்ம மேல கல்லு எரிஞ்சிதுங்கன்னா இன்னா பண்றது.......

குவா: இன்னாபா நீ பயப்படறியா.............

மானி: அப்படியில்ல..........படம் ஓரளவுக்கு நல்லா இருக்காப்பலதான் சேதி வந்துது..........முன்னாடி படங்கள பாக்கும்போது.......இந்தப்படம் 200% நல்லா இருக்கறதா பயலுங்க சொன்னாங்க..........ஆனா அதுக்காக எங்காளு எழுந்துட்டாறு .........இதோ வாராரு.......அதோ போறாரு........ஏன்டா கிட்டத்தட்ட 5 படத்துக்கு சம்பாதிச்ச காச கொண்டு போய் கரியாக்கிட்டு உக்காந்த பசங்களுக்கு அந்தாளு இன்னா பண்ணான்.........இத சொன்னா உடனே எனக்கு என்னமோ அந்தாளுமேல காண்டுன்னு சொல்லுவானுங்க........உனக்கு இப்போ சந்தோசமா..........

குவா: பன்ச்சு ஏதாவது சொல்லு........

மானி: நடிகன் நடிச்சா படம் என் பொஞ்சாதி உடைச்சா குடம்.........ஹி ஹி 

கொசுறு: தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்.........எப்போதான் தர்மம் செயுக்கும் அதுக்குள்ளே நாங்கல்லாம் போய் சேர்ந்துடுவோமா...........
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. மானிட்டர் பக்கங்கள் செம்ம கிக்கு....

  சூப்பர்...

  ReplyDelete
 2. // ஆனா சீமான் பண்ணது சரியாப்பா........இவ்ளோ நாளு எதிரி போல இருந்த அந்தம்மாவுக்கு ஆதரவு குடுத்துப்புட்டாரே.... //

  இப்போ எல்லாருடைய ஒரே குறிக்கோளும் அய்யாவை ஆட்சியில் இருந்து இறக்குவது தான்... அதன் காரணமாக பழைய பகைகளை மறந்து, கொள்கைகளை துறந்து ஓரணியில் இணைகின்றனர்...

  ReplyDelete
 3. // வந்த படங்கள்ல goat field படம் இப்போதைக்கு மொத இடத்துல இருக்கறதா சேதி வந்துச்சி.......அப்புறம் நம்ம கார்த்தி படம் சிரிச்சி வயறு புன்னாகுற அளவுக்கு இருக்கறதா என் பொஞ்சாதி சொன்னாபா............ //

  சினிமாவை பத்தியெல்லாம் எழுதக் கூடாதுன்னு யாரோ ஒருத்தர் தடை போட்டிருக்காராம்ல... இனி யாராவது சினிமா பத்தி எழுதுனீங்கன்னா........................... சொல்லிப்புட்டேன் ஆமா...

  ReplyDelete
 4. செம கலக்கல நண்பா, மானிட்டர் சும்மா போதை கிர்ரூஊஊஊஊஊஉன்னு ஏறுதுப்பா

  ReplyDelete
 5. ஆமாங்க மானி நானும் ஆடுகளம் பார்த்தேன் கொஞ்சம் வித்யாசமான படம்தான் .படம் நல்ல வந்திருக்கு .சிறுத்தை இடைவேளை வரைக்கும் பார்த்திருக்கிறேன் . செகண்ட் ஆப் இனிமேதான் பார்க்கணும்

  ReplyDelete
 6. //????: ?????? ??????? ???? ??? ???????? ??????? ?????.........?? ??//?????????......[??????? ?????? ?????? ?????????????? ??????? ?????]

  ReplyDelete
 7. //மானி: நடிகன் நடிச்சா படம் என் பொஞ்சாதி உடைச்சா குடம்.........ஹி ஹி//

  அட்டகாசம்......
  [மறுமொழி பெட்டி தமிழ்ல வச்சிருக்குறது சூப்பர் மக்கா]

  ReplyDelete
 8. இந்த மானிட்டர் மூர்த்தி ரவுசு தாங்க முடியலையே

  விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

  ReplyDelete
 9. @மாணவன்வருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.மாணவன் அவர்களே.

  ReplyDelete
 10. @Philosophy Prabhakaranவருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

  "இப்போ எல்லாருடைய ஒரே குறிக்கோளும் அய்யாவை ஆட்சியில் இருந்து இறக்குவது தான்... அதன் காரணமாக பழைய பகைகளை மறந்து, கொள்கைகளை துறந்து ஓரணியில் இணைகின்றனர்..."

  >>>>>
  அப்படின்னா நீங்க மஞ்சய, பச்சையா - ஹி ஹி

  "சினிமாவை பத்தியெல்லாம் எழுதக் கூடாதுன்னு யாரோ ஒருத்தர் தடை போட்டிருக்காராம்ல... இனி யாராவது சினிமா பத்தி எழுதுனீங்கன்னா........................... சொல்லிப்புட்டேன் ஆமா..."

  ......>>>>>

  எப்படி வாழ முடியும் ஒரு தமிழனால சினிமா இல்லாம......வாங்க கருத்து கணிப்பு வச்சி முடிவு பண்ணுவோம்.....

  - யாரு ஆப்சன்ட்!?

  ReplyDelete
 11. @இரவு வானம்வருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

  >>>>>>


  செம கலக்கல நண்பா, மானிட்டர் சும்மா போதை கிர்ரூஊஊஊஊஊஉன்னு ஏறுதுப்பா

  >>>>>>>

  ப்ளீஸ் ஏதாவது சாப்பிட்டுட்டு அடிக்கறது தானே அப்புறம் வயறு ஒயருல்லாம் அறுந்துடும் ஜாகிறதை - ஹி ஹி

  ReplyDelete
 12. @நா.மணிவண்ணன்வருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.
  >>>>>>>>>>>>

  "செகண்ட் ஆப் இனிமேதான் பார்க்கணும்"
  >>>>>>>>

  எல்லாரும் DVD கட்சில சேர்ந்துட்டீங்களா அடப்பாவமே....

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோவருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.MANO நாஞ்சில் மனோ அவர்களே.

  நன்றி

  ReplyDelete
 14. @கவிதை காதலன்வருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.கவிதை காதலன் அவர்களே.

  >>>>>>
  இந்த மானிட்டர் மூர்த்தி ரவுசு தாங்க முடியலையே
  >>>>>>
  ரவுசுதான் நம்ம பொழப்பே!

  ReplyDelete
 15. @டக்கால்டிவருகைக்கும்,சால்னா நல்லாருக்குன்னு சொன்னதுக்கும் நன்றி திரு.டக்கால்டி அவர்களே.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி