அரசியல் செய்யலாம் வாங்க..!? - 1

என்னடா இது தலைப்பு இப்படி இருக்கேன்னு நெனசீங்கன்னா, ஒன்னுமில்லீங்க உண்மையான விஷயங்களை கொஞ்சம் பகிர்த்து கொள்ளவே இந்தப்பதிவு.
அரசியல் = அறம் + செயல் = அதாவது தருமம், கொடை, கருணை - இப்படி மூன்று பெரும் விஷயங்கள் இந்த ஒரு சொல்லில் அடக்கம்.

அரசன் = அறம் செய்யும் தலைவன் = அதாவது மக்களின் துயரங்களுக்கும், சந்தோசங்களுக்கும் முழுமுதல் பொறுப்பானவன் என்பதே.

ஆனால், அன்று தொட்டு இன்று வரை - இந்தப்பேருக்கு சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அச்சொல்லுக்கு ஏற்றாற்போல நடந்ததில்லை.

அன்று அவரவர் காழ்புணர்ச்சி மற்றும் தானே உயர்ந்தவன் எனும் திமிரில் அடுத்தவன் நாட்டின் மீது படையெடுத்து சென்று வெற்றி பெறுவதை கவ்ரவமாக நினைத்தார்கள்.
- அன்றும் அந்த நாட்டின் மக்களை ஒரு வார்த்தையேனும் கேட்டா போர் புரிந்து இருப்பார்கள்!? - வாய்ப்பே இல்லை!.


இன்று தன் நாட்டு மக்கள் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை என்று அந்நிய நாடு என்னா செய்கிறது என்று பார்த்துக்கொண்டே பல குண்டுகளையும், அதி நவீன படைக்கலங்களையும் சேர்த்துக்கொண்டு இருக்கின்றனர் ஆளும் வர்க்கம்.

அன்று தொட்டு இன்று வரை மக்கள் ஆட்டு மந்தைகளாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.


அன்று தான் தவறான தீர்ப்பிழைத்து தன்னால் ஒருவன் இறந்து விட்டானே என்று எண்ணி தன்னுயிர் நீத்த மன்னனும் வாழ்ந்து மறைந்தான்.

இன்று தன் மக்கள்(பெற்ற!) மனம் கோணக்கூடாது என்று மக்களை சுண்டு விரல் அசைவில் ஆட்டுவிக்கும் மன்னர்களும் இருக்கிறார்கள் இந்தக்காலத்தில்!


என்று தணியும் இந்த ஆட்டு மந்தைகளின் தாகம்.............காத்திருங்கள் ...........காலம் கனியும்..............

நானும் தொடர்வேன்............உங்களின் விழி வழியே என் வழியாக.......

கொசுறு: என்னுடைய குறிக்கோளின் ஆரம்பம் இது....தொடர்வேன். என் மக்களுக்காக என்று பொய் சொல்ல நான் தலைவனல்ல .........என் அடுத்த சந்ததிக்காக என்று மெய் சொல்வேன் ஒரு குடும்ப தலைவனாக...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

11 comments :

 1. வாழ்த்துக்கள் உங்களை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிரேன்

  ReplyDelete
 2. அருமையான பதிவு நண்பா

  ReplyDelete
 3. புகைப்படங்களும் தகுந்த வர்ணனைகளும் சிந்திக்க செய்கிறது அருமை . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. நல்ல பதிவு
  அரசியல் செய்யலாம் வாங்க..!?///////

  எந்த கட்சின்னு சொல்லலையே .........
  கேப்டன் கட்சியா ??????????

  ReplyDelete
 5. //என் மக்களுக்காக என்று பொய் சொல்ல நான் தலைவனல்ல .........என் அடுத்த சந்ததிக்காக என்று மெய் சொல்வேன் ஒரு குடும்ப தலைவனாக...//

  தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க :-)

  ReplyDelete
 6. // என்னுடைய குறிக்கோளின் ஆரம்பம் இது //

  உங்களது இந்த குறிக்கோள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. சொல்ல வந்த விஷயம் எதுவும் முதல் பாகத்தில் இல்லாததால் இரண்டாம் பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 8. படத்தைப் பார்க்கத் தான் ஏதோ செய்கிறது... ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி