சோதனை மேல் சோதனை-30+(ஒன்லி சரக்கர்களுக்கு மட்டும்!?)

முதல்ல மைதிலி மேட்டரத்தான் பதியலாம்னு வந்தேனுங்க,,,,,,,,,,,,,ஆனா கொஞ்சம் என் விஷயத்தையும் இறக்கி வைக்கலாமுன்னு....மைதிலி நாளைக்கு வருவா........சரியா....ஹிஹி(யாரு கேட்டா!!)
ஏதோ ஒரு ஊருக்கு வந்தமா பொழச்சமான்னு இருக்கணும் அத விட்டுட்டு சின்சியறு சிகாமணிக்கனக்கா வேலை செய்யறத பாத்து(ஹிஹி!) என் தல எனக்கு விடுமுறையே கொடுக்கறது இல்ல. இதுலவேற என் மனைவி மட்டும் வருசத்துக்கு ஒரு முறை சென்னைக்கு போயிட்டு வந்து என்ன வெறுப்பேத்துவாங்க. ஆனா இந்த முறை பல பெரிய தலைவர்களை என் குடும்பம் இழந்துவிட்டது...அதனால என் மனைவி வியட்நாம் வந்த சில தினங்களில் மீண்டும் சென்னை திரும்ப வேண்டியதாகியது............இன்னும் வியட்நாம் வர அவங்களுக்கு முடியல................

விஷயத்துக்கு வரேன்..........அய்யோ அய்யோ...........இப்போ பாருங்க 9 நாளு இந்தூரு புது வருசப்பிறப்புக்காக விடுமுறை.........நான் எங்கயும் போக முடியல.............நாளையிலிருந்து ஒரு ஈ காக்கா ரோட்டுல நடமாடாது...............கிட்டத்தட்ட 6 நாளைக்கு மார்கெட்டு கிடையாது.......ஹோட்டல் கிடையாது..........இத நினைக்கும் போதே துக்கம் தொண்டய்ள அடைக்க............என்னா பண்ணலாம் அப்படின்னு யோசிக்கும் போது......

ட்ரிங் ட்ரிங்..............(காலிங் பெல் சத்தம்).............சின் சாவ்(வணக்கம்).....ஆங் வணக்கமுங்க.........

இந்த புரியாத பாஷைல பேசி முடிஞ்சதும்..........பெரிய கிப்ட்டு பேக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க நம்ம வியட்நாமிய நண்பர்கள்......

திறந்து பாத்தா ஒன்னு shivas(scotch no 1) ரெண்டாவது(black label) அடப்பாவிங்களா நான் குடிக்க ரெடின்னு சொல்லும்போது எவனும் வரல...............இப்போ கெட்டபுள்ளயா(அதாங்க சரக்கடிக்க மாட்டாராம்!) ஆன போது இப்படி கொண்டுவந்து கொடுக்கறீங்களே ஞாயமா...........திருப்பிக்கொடுத்தா அவங்க மனசு உடைஞ்சு போயிடுவாங்களே(என்னா ஒரு காரணம்!) அப்படின்னு வாங்கி வச்சிட்டேன்................


5 மணிக்கு .........

ஹலோ குமாரா...........ஆமாங்க சொல்லுங்க..........

என்னங்க எப்படி இருக்கீங்க...........

நல்லா இருக்கேன் மேடம்.............நீங்க................

நாங்க நல்லா இருக்கோம்........இந்தியால இருந்து வந்தாச்சி.............அதான் உங்களுக்கு நேந்துரம் பழம் சிப்ஸ்....அப்புறம் ஸ்நாக்ஸ் கொண்டு வந்து இருக்கோம் எப்போ வந்து வாங்கிக்கிறீங்க............

6 மணிக்கு வரேனுங்க (என்ன கொடும இது.............சரக்கும் வந்துரிச்சி...........சைட் டிஷும் வந்துரிச்சி.................சூப்பரு..........!!!!!!!!!!!!!!!)

இனி இந்த சரக்கு முடியற வரைக்கும்.................பதிவுகளா வந்துட்டு இருக்கும்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் - சியார்ஸ்!!!!!!!!!!!!!

கொசுறு: உண்மையே மட்டுமே சொல்ல நினைக்கும் ஒரு சாதாரண குடி மகன்....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

16 comments :

 1. சியர்ர்ஸ் மீ டூ ...:-)

  ReplyDelete
 2. சீயர்ஸ்..... அடிங்க எஜமான் அடிங்க.. நல்லா அடிங்க.....!

  ReplyDelete
 3. //தானா வந்த சந்தனமே !ஒன்ன தழுவ மனம் சம்மதமே !! //யோவ், சரக்கு வந்தா அடிச்சமா குஷாலா ரெண்டு பதிவ போட்டமா இன்னு இல்லாம அந்த படத்த வேறு போடு வெறுப்பத்தனுமா??

  ReplyDelete
 4. அண்ணே இப்படி one man ஷோ வா சரக்கு அடிக்ககூடாது

  ReplyDelete
 5. இந்த பழரசத்த குடிக்கும்போதுதான் உங்க பலரசங்கள வெளியே சொல்லுவீங்கபோல....ஹிஹி

  ReplyDelete
 6. ச்சியர்ஸ்! தனியா அடிக்கிறது தப்புங்களே! :-)
  ஷிவாஸ்- என்னா டேஸ்டு!
  தாக்குங்க பாஸ்!! :-)

  ReplyDelete
 7. // திறந்து பாத்தா ஒன்னு shivas(scotch no 1) ரெண்டாவது(black label) //

  சென்னையில மட்டும் இருந்தீங்கன்னா எப்படியாவது விலாசம் கண்டுபுடிச்சு ஓடி வந்துடுவேன்....

  ReplyDelete
 8. தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்களிடமிருந்து இடுகையினை எதிர்ப்பார்க்கிறோம்...

  ReplyDelete
 9. @இரவு வானம்வருகைக்கும்,சியர்ஸ் சொன்னதுக்கும் நன்றி திரு.இரவு வானம் அவர்களே.

  ReplyDelete
 10. @பன்னிக்குட்டி ராம்சாமிவருகைக்கும்,சியர்ஸ் சொன்னதுக்கும் நன்றி திரு.பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களே.

  இந்தப்பக்கமா வர்றதா இருந்தா சொல்லுங்க எடுத்து வைக்கிறேன்!

  ReplyDelete
 11. @நா.மணிவண்ணன்வருகைக்கு நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே எனக்கும் அது தப்புன்னு தான் தோணுது அதனால நம்ம மலேசியாகாரரும், சைனாகாரரும் இன்னிக்கி வரேன்னு சொல்லி இருக்காங்க.........அதுவரைக்கும் வச்சிருப்பியான்னு கேட்டு என்னை அவமானப்படுத்திட்டாங்க ஹி ஹி!!

  ReplyDelete
 12. @மாணவன்வருகைக்கு நன்றி திரு.மாணவன் அவர்களே

  "இந்த பழரசத்த குடிக்கும்போதுதான் உங்க பலரசங்கள வெளியே சொல்லுவீங்கபோல....ஹிஹி"

  >>>
  "நாம எப்பவுமே வெளிப்படையான ஆளுங்க"

  "பட்டா அண்ணே" பதிவுல என்னமா சொல்லி இருக்காரு குடியப்பத்தி ஹி ஹி!

  ReplyDelete
 13. @ஜீ...வருகைக்கு நன்றி திரு.ஜீ... அவர்களே.

  >>>>
  "ச்சியர்ஸ்! தனியா அடிக்கிறது தப்புங்களே! :-)
  ஷிவாஸ்- என்னா டேஸ்டு!
  தாக்குங்க பாஸ்!! :-)"

  >>>>
  எனக்கும் அது தப்புன்னு தான் தோணுது அதனால நம்ம மலேசியாகாரரும், சைனாகாரரும் இன்னிக்கி வரேன்னு சொல்லி இருக்காங்க.........அதுவரைக்கும் வச்சிருப்பியான்னு கேட்டு என்னை அவமானப்படுத்திட்டாங்க ஹி ஹி!!

  shivas shivas தாங்க!

  ReplyDelete
 14. @Philosophy Prabhakaranவருகைக்கு நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே

  >>>>>>>>>>

  // திறந்து பாத்தா ஒன்னு shivas(scotch no 1) ரெண்டாவது(black label) //

  சென்னையில மட்டும் இருந்தீங்கன்னா எப்படியாவது விலாசம் கண்டுபுடிச்சு ஓடி வந்துடுவேன்....
  >>>>>>

  கவலைப்படாதீங்க சென்னைக்கு வரும்போது ரெண்டு புடிச்சிட்டு வாரேன் ஹி ஹி

  ReplyDelete
 15. @Philosophy Prabhakaran

  "தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்களிடமிருந்து இடுகையினை எதிர்ப்பார்க்கிறோம்..."

  ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சிறு பதிவு போட்டுட்டேங்க....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி