வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?) - பாகம் 1

வியத்னாம் - வலியவன் எளியவனிடம்(!?)...................இந்த வார்த்தையை நான் முடிக்க விரும்பவில்லை.


ஏன்னெனில் எளியவனுக்கு புல்லும் ஆயுதம்..........அதனை உபயோகப்படுத்த முடியுமானால்.............இது ஒரு அறிஞரின் கருத்து.


எல்லோரும் நினைப்பது போல சாதாரண மக்கள் அல்ல வியத்நாமியர்கள். போராடும் குணம், நாட்டுப்பற்று, உயிரை துச்சமாக மதித்தல், பெண்களின் வீரம் இவைகள் அனைத்தும் சேர்ந்தவர்கள். அதனால் தான் போரிட்டு கிடைத்த வெற்றியை தினமும் சந்தோஷமான நாட்களாக கழித்து கொண்டு இருக்கின்றனர்.


விஷயத்துக்கு வருகிறேன்..........வல்லரசுக்கும் இந்த சின்ன நாட்டு மக்களுக்கும் ஏற்பட்ட போரின் போது...இவர்களுக்கு கிடைத்த வெற்றிக்கு பின்னால் இவர்களுக்கு தலைமை வகித்த திரு. ஹோசிமிங் முதன்மைபெறுகிறார். இவர் தான் இந்த கொரில்லாப்போர் முறையை இம்மக்களுக்கு புகுத்தி வழி நடத்தியிருக்கிறார்.

நீங்கள் நம்புவது சிறிது கடினமே...........ஏன்னெனில் இம்மக்கள் போர்க்காலங்களில் உருவாக்கிய சுரங்கங்கள்(Tunnels) இன்றும் காட்சிபொருளாக வைத்திருக்கிறார்கள்.


சும்மா இல்லங்க........வெறும் 2 க்கு 2 என்று சொல்வோமே அந்த அளவுதான் இந்த சுரங்கங்களோட முக அமைப்பு ஆனா கிட்ட தட்ட 100 கிமி தூரத்துக்கு இப்படி செஞ்சி வச்சி இருந்திருக்காங்க.......இல்லன்னா வலிமையான எதிரிய எப்படி எதிர் கொல்றது.......


வியத்நாமியர்கள் ரொம்ப மெலிய உடல் வாகு கொண்டவர்கள்......ரப்பர் போல உடம்ப வளச்சி இந்த சுரங்கங்கள் மூலமா உள்ள குடும்பமே நடத்தி இருக்காங்க..............இதுக்குள்ள இருந்து கிட்டு சும்மா தண்ணி காட்டி இருக்காங்க வல்லரசுக்கு.................

வல்லரசுக்காரங்க பெரிய திடக்காத்திரமான உடலமைப்பு கொண்டவங்க........இதுக்குள்ள புக முடியாது...........

தொடரும்..............................

கொசுறு: போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

29 comments :

 1. தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 2. @வேடந்தாங்கல் - கருன்

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 3. சதுரகிரியில் சித்தர்கள் குகை இப்படித்தான் நுழைவாயில் இருந்தது....

  ReplyDelete
 4. படங்கள் பிரமிப்பா இருக்கு

  ReplyDelete
 5. அடேங்கப்பா.. உங்களை என்னவோன்னு நினைச்சேன்.போர்க்கட்டுரை எல்லாம் போட்டு அசத்தரீங்களே,.. இந்த படங்கள் எப்படி கிடைச்சுது?

  ReplyDelete
 6. உண்மையில் நான் காத்திருந்து விருப்பத்துடன் படித்த ஒரு பதிவு.

  ReplyDelete
 7. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "சதுரகிரியில் சித்தர்கள் குகை இப்படித்தான் நுழைவாயில் இருந்தது"

  >>>>>>>>>

  இதுல நுழையறது கஷ்டம் தல
  ..............................

  படங்கள் பிரமிப்பா இருக்கு
  >>>>>>>>>>

  நன்றி இன்னும் நெறய மேட்டரு இருக்கு தொடர்ந்து வாங்க

  ReplyDelete
 8. @சி.பி.செந்தில்குமார்

  "அடேங்கப்பா.. உங்களை என்னவோன்னு நினைச்சேன்.போர்க்கட்டுரை எல்லாம் போட்டு அசத்தரீங்களே,.. இந்த படங்கள் எப்படி கிடைச்சுது?"

  >>>>>

  நூறாவது பதிவு செம ஹிட்டு அதனால இனி முடிவு பண்ணிட்டேன் ஹி ஹி!

  நான் தான் சொன்னேனே நெறய உள் பகுதிகளுக்கு செல்வேன்னு அதோட பாதிப்பு தான் ஹி ஹி!

  ReplyDelete
 9. @Jana

  "உண்மையில் நான் காத்திருந்து விருப்பத்துடன் படித்த ஒரு பதிவு"

  >>>>>

  நன்றி இன்னும் நெறய மேட்டரு இருக்கு தொடர்ந்து வாங்க

  ReplyDelete
 10. என்னத்தை சொல்ல மக்கா....

  ReplyDelete
 11. ஹிஹி நம்ம பசங்கலாளையும் உள்ளே போக முடியாது பாஸ்..
  புதிய தகவல்..அசத்துறீங்க..
  ஒட்டு உங்களுக்கு

  ReplyDelete
 12. http://www.blogger.com/comment.g?blogID=2296885044956856259&postID=3137450692337976213&page=1&token=1298418010288&isPopup=true

  ReplyDelete
 13. படங்கள் வியக்க வைத்தது... கொசுறு தகவல் சூப்பர்...

  ReplyDelete
 14. மொத்த டனல் தூரம் 200 கிலோமீட்டருக்கும் மேல் என்று நினைக்கிறேன் :)

  ReplyDelete
 15. @Philosophy Prabhakaran

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 16. @யாசவி

  "மொத்த டனல் தூரம் 200 கிலோமீட்டருக்கும் மேல் என்று நினைக்கிறேன் :)"

  >>>>>

  ஆமாங்கோ சில இடங்களில்

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 17. //போர் மூலமா இப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்த சந்தோஷமா அனுபவிக்கும் மக்களைப்பார்த்து, அஹிம்சை மூலமா சுதந்திரம் வாங்கி இன்றும் அரசியல் வாதிகளிடம் அடிமையாகக்கிடக்கும் ஒரு தமிழனின் பார்வையில் இந்த இடுகை.

  அங்கே விதைக்கப்பட்டது வேர்
  இங்கோ புதைக்கப்பட்டது விறகு

  ReplyDelete
 18. @Speed Master

  "அங்கே விதைக்கப்பட்டது வேர்
  இங்கோ புதைக்கப்பட்டது விறகு"

  >>>>>>>>>
  வருகைக்கு நன்றி

  தொடர்ந்து வாங்க!

  இல்லங்க இந்த ஊருல தலைங்க சரியா இருக்கு அதுதான் வித்தியாசம் ஹி ஹி!

  இது என்னுடைய தாழ்மையான கருத்து

  ReplyDelete
 19. கருத்தாழம் மிக்க பதிவுக்கு மகிழ்வும், வாழ்த்தும் சகோ... 'கொசுரும்' , ஸ்பீட் மாஸ்ட்டர் கருத்தும், அதற்கான தங்கள் மறுமொழியும் ரசிக்கும்படி...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி