மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்(!?)-1.02.2011

கடலுல எழும்புற அலைகள கேளடி ஓ மானே! மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே.......கடல் தண்ணி கரிக்குது காரணம் இருக்குது ஓ மானே..........உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே.....


என்னா வரும்போதே ராசாப்பாட்ட பாடிட்டு வர............மானி: பாட்ட மட்டும் தான் பாட முடியுது அங்க தெனமும் செத்துட்டு இருக்கவங்களுக்கு நம்மளால இன்னா செய்ய முடிஞ்சிது..............

குவா: அதான் நம்ம தானைத்தலைவரு டெல்லி போயிகிறாரே........நல்ல படியா பேசி இனி  இந்த மாதிரி நடக்காம பாத்துப்பாருன்னு நினைக்கிறேன்...

மானி: அட முட்டாப்பயலே..........அங்க போனது கூட்டணில எத்தன நாதாரி சேரப்போகுத்துன்னு சொல்றத்துக்கும், அம்மா தாயே நீ இன்னும் நெறைய சீட்டு கேக்காதன்னு கெஞ்சுரத்துக்கும் தான். இது புரியாம நம்மள மாதிரி மக்கள் இன்னும் ஏமாந்துகிட்டு இருக்காங்க...........

குவா: ஏம்பா நடந்த, நடக்குற விஷயங்கள மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவாங்களா என்னா?


மானி:அவர பொருத்தவரைக்கும் துட்டு போட்டா நாயி மாதிரி நாம ஓட்ட குத்திப்புடுவோம்னு நினைக்கிறாரு...........ஏற்கனவே பக்காவா ப்ளான் போட்டாச்சி பாரு இந்த லபக்கு தாசும் இந்த கூட்டணில இருக்காருன்னு டெல்லில சொல்லிகிறாரு..........

குவா: ஆமாம்பா அந்தாளு தனியா நின்னா100  சீட்டு ஜெயிப்பேன்னு சொன்னாரே!

மானி: அத ஏன் கேக்குற.......ஒரே சிப்பு சிப்பா வருது இந்த காமடிகளுக்கு நடுவுல வடிவேல் காமடி கூட நிக்க முடியாது............இன்னொன்னு பாத்தியா இளங்கோ பயபுள்ள நாங்க(நான்!) மந்திரியா ஆக வேணாமான்னு வேற கேக்குது..................அய்யோ அய்யோ அவன அவன் வெங்காய விலயப்பாத்தே குடும்பம் நடத்தறதா லீசுக்கு விடரதான்னு யோசிச்சிட்டு இருக்கான்.........இவனுங்களுக்கு ஊர அடிச்சி உலையில போட்டு சேத்துவச்ச காச வச்சுக்கிட்டு என்னமா ஆடுறானுங்க.................

குவா: சரி விடு மானி ஏன் டென்சன் ஆவுற........இவனுங்க எப்பவுமே இப்படித்தான்.........இதுல வேற நம்மள குடிகாரப்பசங்கன்னு வேற திட்டுறாங்கப்பா.....

மானி: சொல்ல மாட்டானுங்க பின்ன.......நாமளாவது நம்ம சொந்த உழைப்புல வந்த காசுல குடிக்கிறோம். இவனுங்க பொது மக்களோட சிறு நீரயில்ல குடிக்கிரானுங்க. ஒரு குடிகாரன் என்னாடான்னா வியாபாரம் பேசிக்கினுகிறான் கூட்டணிக்காக...........இதுல வேற அவரு புள்ளி விவரம் சொல்றவன் குடிச்சிட்டு சொல்ல முடியுமான்னு கேள்வி வேற..................

குவா: ஆமாம்பா அவரு அம்மா கூட சேருவாருன்னு நெனைக்கிறியா................

மானி: இன்னா இப்படி கேட்டுப்புட்ட.......அந்தாளு பெரிய அளவுக்கு திட்டம் போடுறாரு...........ஏனா அந்தம்மாவோட வெற்றிக்கும் தோல்விக்கும் இப்போ அந்தாளோட கூட்டணி முடிவ வச்சித்தான் இருக்குன்னு அவருக்கு நல்லா தெரிஞ்சி போச்சி அதான் அதிகமா துட்டு கேக்குறாரு...............

குவா: ஆமா ஏதோ இந்திய மாணவர்கள அவமானப்படுத்துற செயல்ன்னு நியூஸ் வந்து கீது.............

மானி: அதக்கேக்குரியா..........அமெரிக்கால ஒரு பல்கலைக்கழகத்துல இந்திய மாணவர்கள் கால்ல ஒரு கருவிய கட்டி விட்டுட்டு மாடு எங்க மேயுதுன்ற கணக்கா சோதிகராங்கலாம்...........என்னா கொடும பாரு அவனுங்களுக்கும் தெரிஞ்சி போச்சி இவனுங்கள என்னா செஞ்சாலும் தாங்குவாங்கன்றது..............

குவா: மானி இந்த சுவிஸ் பேங்கு மேட்டரு ஏதாவது இருக்கா........

மானி: இல்லையா பின்ன..........70 லட்சம் கோடி அங்க நம்ம உத்தமர்களோட பணம் இருக்காம்..........நேர்மையா வண்டி இழுத்து சம்பாதிச்ச இந்த நல்ல பசங்க(!) அந்தப்பணத்த  என்னமா ப்ளான் பண்ணி இந்தியாவுக்கு கொண்டுவரப்போரானுங்க தெரியுமா.................

குவா: அப்பா நம்ம மக்களோட பிரச்சனஎல்லாம் தீரப்போதா...............

மானி: அடப்பாவி அவனுங்க அந்தப்பணத்த இப்போ தேர்தலுக்காக இந்தியாக்கு கொண்டுவந்து ஆளும் வர்க்கத்துக்கு அன்பளிப்பா சில கோடிகள கொடுத்துபுட்டு மீதிய நம்ம முதவல்வரு மனைவி கணக்கா ட்ரைவரு மற்றும் நம்பிக்கையான எடுப்புங்க பேருல போட்டு வைக்கப்போறதா சேதி வந்து கீது..................

குவா: என்னப்பா நான் என்னுமோ நம்ம பிரச்சன தீர்ந்துடும்ம்னு நெனச்சேன்...............

மானி: ஆமாடா நீ எதுவும் நாட்டுக்கு பண்ணாத ஆனா நாடு மட்டும் உனக்கு செய்யனும்னு எதிர்ப்பாக்குறியே என்னாடா ஞாயம்................

குவா: சரிப்பா எதாவது குஜிலி மேட்டரு.............

மானி: நான் போடுறேன் ஆனா யாராவது திட்டுனா அது உனக்குத்தான் ஹிஹி .................

இன்றைய தத்துவம்:வியட்நாமிய ஜொள்ளு:


இந்திய ஜொள்ளு:


கொசுறு: என்னமோ வாழ்க்க போயிட்டு இருக்கு போகும்வரை போவோம்.............
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

27 comments :

 1. // அங்க போனது கூட்டணில எத்தன நாதாரி சேரப்போகுத்துன்னு சொல்றத்துக்கும், அம்மா தாயே நீ இன்னும் நெறைய சீட்டு கேக்காதன்னு கெஞ்சுரத்துக்கும் தான். இது புரியாம நம்மள மாதிரி மக்கள் இன்னும் ஏமாந்துகிட்டு இருக்காங்க... //

  உண்மைதான் நண்பா... நமக்காகவும் கொஞ்சமாவது பேசுவார்கள் என்றொரு நப்பாசை தான்...

  ReplyDelete
 2. இன்றைய தத்துவம் சான்சே இல்லை... அருமை...

  ReplyDelete
 3. என்ன மானி?! ஒருத்தர விடாம தாக்குறியே....அப்புறம் யாருக்கு ஓட்டு போடலாம்? நம்ம விஜய டி. ஆர் ஓக்கேவா?

  ReplyDelete
 4. ஆஹா...கலக்கிட்டீங்க....நானும் புதிதாக அரசியல் பக்கங்கள் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொல்லுங்க...http://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html

  ReplyDelete
 5. இனி அரசியல் பதிவுகள் பெருகும்

  ReplyDelete
 6. என்னான்னு தெரியல அரசியலு நமக்கும் ஒட்டவே மாட்டேங்குது...

  ReplyDelete
 7. இந்த வாட்டி ரொம்ப சூடா பேசுறீங்களே மானி சரக்கு நல்லா தூக்கி விட்டுடுச்சா

  ReplyDelete
 8. நீங்க ஒரு ஆள்தான் பாக்கி நீங்களும் என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? ம் ம்

  ReplyDelete
 9. >>>....இவனுங்களுக்கு ஊர அடிச்சி உலையில போட்டு சேத்துவச்ச காச வச்சுக்கிட்டு என்னமா ஆடுறானுங்க...........

  idhu சூப்பர்..

  அப்புறம் வியட்நாம் ஃபிகர் அழகு

  ReplyDelete
 10. //..இதுல வேற அவரு புள்ளி விவரம் சொல்றவன் குடிச்சிட்டு சொல்ல முடியுமான்னு கேள்வி வேற..................//


  அது சரி..

  ReplyDelete
 11. விஜயகாந்தையும், ராமதாஸையும் ஊடுகட்டி அடிச்சிருக்கீங்க..

  ReplyDelete
 12. ம்மா தாயே நீ இன்னும் நெறைய சீட்டு கேக்காதன்னு கெஞ்சுரத்துக்கும் தான். இது புரியாம நம்மள மாதிரி மக்கள் இன்னும் ஏமாந்துகிட்டு இருக்காங்க.//yes you are correect

  ReplyDelete
 13. @மாணவன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு. மாணவன் அவர்களே,

  thanks

  ReplyDelete
 14. @Philosophy Prabhakaranவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Philosophy Prabhakaran அவர்களே.

  "உண்மைதான் நண்பா... நமக்காகவும் கொஞ்சமாவது பேசுவார்கள் என்றொரு நப்பாசை தான்..."

  >>>

  இந்த நப்பாச தான் அவரே இன்னும் அங்க தில்லா பேச வச்சுக்கிட்டு இருக்கு!

  >>>>>

  "இன்றைய தத்துவம் சான்சே இல்லை... அருமை.."

  >>>>>>>>>
  நன்றி....
  நிகழ்கால நீரோ ஹிஹி!!

  ReplyDelete
 15. @வைகைவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வைகை அவர்களே.

  "என்ன மானி?! ஒருத்தர விடாம தாக்குறியே....அப்புறம் யாருக்கு ஓட்டு போடலாம்? நம்ம விஜய டி. ஆர் ஓக்கேவா?"

  >>>>>>
  எவ்வளவோ வையிட்டு பண்ணிட்டீங்க கொஞ்சம் வையிட்டு பண்ணுங்க நாங்களும் அரசியல் களத்துல இறங்குரோமுள்ள...

  ReplyDelete
 16. @ரஹீம் கஸாலிவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ரஹீம் கஸாலி அவர்களே.

  "ஆஹா...கலக்கிட்டீங்க....நானும் புதிதாக அரசியல் பக்கங்கள் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொல்லுங்க...http://ragariz.blogspot.com/2011/02/political-pages-from-rahim-gazali.html"

  >>>>

  நன்றி மற்றும் அட்டகாசமா எழுதி இருக்கீங்க

  ReplyDelete
 17. @Speed Masterவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.Speed Master அவர்களே.

  "இனி அரசியல் பதிவுகள் பெருகும்"

  >>>>>>>>

  அரசியல் இல்லாம வாழ்க இல்லைங்க ஹி ஹி !

  ReplyDelete
 18. @வெறும்பயவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.வெறும்பய அவர்களே.

  "என்னான்னு தெரியல அரசியலு நமக்கும் ஒட்டவே மாட்டேங்குது..."

  >>>>>>>

  இப்படி சொல்றவங்க தான் நாட்டுப்பற்று அதிகமா கொண்டு, என்ன நடக்குதுன்னு அதிகமா கவனிச்சிட்டு இருப்பாங்க......
  அரசியல் இல்லாம வாழ்க இல்லைங்க ஹி ஹி !

  ReplyDelete
 19. @நா.மணிவண்ணன்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.நா.மணிவண்ணன் அவர்களே.

  "இந்த வாட்டி ரொம்ப சூடா பேசுறீங்களே மானி சரக்கு நல்லா தூக்கி விட்டுடுச்சா"

  >>>>>>>>>

  நல்லா சொன்னீங்க போங்க.........ரெண்டு நாளாயிடுச்சி.......இந்த சைனீஸ்காரன் தொல்ல தாங்க முடியல.........பாவம் அவன் மனைவியும் குழந்தையும் சமீபத்துல ஒரு விபத்துல இறந்துட்டாங்க அதனால அவரு சைனீஸ் வருஷப்பிறப்புக்கு கூட அவரோட நாட்டுக்கு போகல்ல.........மொத்தம் மூணு பேரு சேந்து என்னை கொலையா கொல்றானுங்க.....

  ReplyDelete
 20. @சி.பி.செந்தில்குமார்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே/


  "நீங்க ஒரு ஆள்தான் பாக்கி நீங்களும் என்னை மிரட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? ம் ம்"

  >>>>>>>>>>

  சூப்பர் ஸ்டார யாராலாவது மிரட்ட முடியுமா இல்ல இந்த ஆட்சியாலருங்க என்னை சும்மா விட்டுடுவாங்களா.....ஹி ஹி!!

  ஆனாலும் மானிட்டர, வாசுவகாட்டி மட்டம் தட்டிட்டீங்களே - அதான் எனக்கு கொஞ்சம் வருத்தம்

  ReplyDelete
 21. @பாரத்... பாரதி...வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.பாரத்... பாரதி..அவர்களே.

  "விஜயகாந்தையும், ராமதாஸையும் ஊடுகட்டி அடிச்சிருக்கீங்க.."

  >>>>>>

  ரெண்டு பேருமே அரசியல் வியாபாரிங்கோ.

  ஒன்னு குடிச்சிட்டு பங்கு பிரிக்கும், இன்னொன்னு பங்கு பிரிச்சிட்டு மக்களுக்கு ஊத்தி கொடுக்கும் ஹி ஹி!!!!
  .

  ReplyDelete
 22. @ஆர்.கே.சதீஷ்குமார்வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி திரு.ஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே.


  நன்றி நன்றி நன்றி

  ReplyDelete
 23. ஆனாலும் மானிட்டர, வாசுவகாட்டி மட்டம் தட்டிட்டீங்களே - அதான் எனக்கு கொஞ்சம் வருத்தம்

  February 1, 2011 10:00 PM

  புரியல.. நான் பொதுவா யாரையும் மட்டம் தட்டறதே இல்லையே.. அப்ப்டி நடந்திருந்தா சாரி..

  ReplyDelete
 24. @சி.பி.செந்தில்குமார்பரவாயில்லைங்க விடுங்க நன்றி

  "புரியல.. நான் பொதுவா யாரையும் மட்டம் தட்டறதே இல்லையே.. அப்ப்டி நடந்திருந்தா சாரி.."

  >>>>>>
  வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி திரு.சி.பி.செந்தில்குமார் அவர்களே நான் ஒரு தளத்தில் கண்டதே சொன்னது விடுங்க இதெல்லாம் சகஜம்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி