வியத்னாம் - (தமிழனின் பாதம்!?) பாகம் 2

எங்க போனாலும் நம்ம மக்கள் இருந்திருக்காங்க.....ஆனா தன் சுயத்த பதிச்சிட்டு வந்துட்டு இருக்கான் தமிழன்.போன பகுதில வரலாற்று பதிவா ஆரம்ப காலத்த பாத்தோம். கொஞ்சம் நடைமுறைக்கும் , மக்களுக்கு பிடிக்கிறா மாதிரியும் பதியறேன். அதனால தவறு இருந்தா சுட்டிக்காட்டவும்.

முதல்ல நான் வியத்னமியர்களிடம் கண்ட விஷயங்கள சொல்லிடறேன்:

ரோட்டுல போகும்போது நாம தவறா குறுக்கால போயிட்டா வண்டி ஓட்டிங்க நம்ம மேல மோதாம தாண்டி நிறுத்திட்டு சொல்லுவாங்க பாருங்க.........

நம்ம ஊரா இருந்த - ஏன்டா சாவுகிராக்கி நீ விழறத்துக்கு என் வண்டி தான் கெடச்சதா..........வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா........#@%*****

இங்க சொல்ற முதல் வார்த்த "அண்ணே பாத்து போங்க, ஜாக்கிரதை.....எதாவது அடிபட்டுட்டா நீங்க ஹாஸ்பிடலுக்கு போகணும்......

சரி இப்போ விஷயத்துக்கு வர்றேன்......

தனாங் - இந்திராபுரா,

பிங் திங் - விஜயா

ங்கா சங் - கவுத்ரா

நிங் துவன் - பாண்டுரங்கா

இவைகள் எல்லாம் இன்றைய வியத்நாமிய நகரங்கள்.

சற்று உற்று நோக்கினீர்கள் என்றால் இதன் முற்கால பெயர்கள் அனைத்தும் இந்திய பெயர்களே..........

சிகப்பு எழுத்துகள் கொண்டவைகள் இந்திய பேருடைய நகரங்கள்.(படம் பார்க்க)


குறிப்பாக 11 வதிலிருந்து 18 வது நூற்றாண்டு வரையான வரலாற்று விஷயத்தில் சீனாவின் கீழ் இருந்ததாக காட்டப்படுகிறது. ஆனால் நான்கு முக்கிய நகரங்களை இந்திய அரசர்கள் ஆண்டு இருக்கிறார்கள். இவை இந்த நாட்டின் வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது போலும்.

இன்று சைகோனில் இருக்கும் 2000 வருசத்துக்கு முந்தய அம்மன் கோவில் இதுக்கு ஒரு உதாரணம். இங்கு தொடர்ந்து போர் ஏற்பட்ட போது இங்கு இருந்த இந்திய வம்சா வழி மக்கள் உயிரை காத்துக்கொள்ள இந்தியா சென்று விட்டனர். முக்கியமாக வணிகத்தமிழர்கள் (ஜாதிப்பேர சொல்லக்கூடாதில்ல!)சமூகம் இங்கு வியாபித்து இருந்துள்ளது.


இன்றும் இந்த கோயில் இருக்கிறதென்றால் அதற்க்கு காரணம்...........போர்க்காலத்தில் எதிரிகள் குண்டு மழை பொழிந்த போது பலர் இங்கு வந்து பதுங்கி இருந்தனராம். சுற்றிலும் விழுந்த குண்டுகள் இந்த இடத்தில் விழாமல் போனதால்.......மக்களுக்கு இது ஒரு அற்புத இடமாகிப்போனது.

பல இடங்களில் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கே புத்த சிலைகள் பதியப்பட்டு உள்ளன. கம்போடியாவிலும் இதே போல் உள்ளது. நாம அலமாரியில் பொருள் மாற்றுவது போல இந்து சிலைகளை அகற்றிவிட்டு சீன மன்னர்களால் புத்த சிலைகள் நிறுவப்பட்டுள்ளன(அவரும் நம்ம கிட்ட இருந்து எடுக்கப்பட்ட தெய்வம் தானே!)


இங்க பாருங்க இவங்க எப்படி ஆண்டவன தொழுராங்கன்னு........இந்த ஊதுவத்தி வச்சி கிட்டு இவங்க கும்பிடற அழகே தனிதாங்க.........

தனாங் - Da Nang - இந்தப்பேருடைய முழுப்பேரு தண்டாயுதபாணி - இங்க ஒரு வாய் வழி கதையும் இருக்கு. அந்தக்காலத்துல இங்க இருந்த ஒரு அரசன் இந்திய அரசனப்பத்தி தவறா பேசியதாகவும்........அதனால் உணர்ச்சி வசப்பட்ட அந்த அரசன் படையெடுத்து வந்து இந்தப்பகுதி அரசனோட தலைய வெட்டி எடுத்துட்டு இந்தப்பகுதிய மக்கள் கிட்ட ஒப்படைச்சிட்டு போனதாகவும் சொல்றாங்க.

கொசுறு: தொடராக எழுதும் இந்த விஷயங்கள் வாரத்தில் இரண்டு நாள் பதியலாம் என்று இருக்கிறேன். commercial விஷயங்களுக்கு ஆதரவளிக்கும் நட்புகள் இப்பதிவுக்கும் தங்கள் அன்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

43 comments :

 1. உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எதாவுது பிரச்சனையா ?ஓட்டே போட முடியவில்லையே

  ReplyDelete
 2. @நா.மணிவண்ணன்

  "உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எதாவுது பிரச்சனையா ?ஓட்டே போட முடியவில்லையே"

  >>>
  அதானுங்க எனக்கும் புரியல

  கிட்ட தட்ட 2 மணி நேரத்துக்கு அப்புறம் தான் தமிழ் மணம் ஓட்டு சேருது

  ReplyDelete
 3. வியத்நாம் பற்றிய பல புதுமையான தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி :)

  தொடர்ந்து எழுதுங்க பாஸ்...

  ReplyDelete
 4. புதிய தகவல் அருமையான செய்தி...

  ReplyDelete
 5. //தனாங் - Da Nang - இந்தப்பேருடைய முழுப்பேரு தண்டாயுதபாணி//

  யோவ் ஏதும் உள் குத்து இல்லியே....

  ReplyDelete
 6. @மாணவன்

  நன்றி தொடர்ந்து வாங்க நண்பரே

  ReplyDelete
 7. @MANO நாஞ்சில் மனோ

  "யோவ் ஏதும் உள் குத்து இல்லியே..."

  >>>>

  வருகைக்கு நன்றி

  குத்தறதா இருந்தா கும்மாங்குத்தே குத்துவோம்ல ஹி ஹி!

  ReplyDelete
 8. இதுவரை வரலாறுகளில் படிக்கப்படாத செய்திகள். தொடருங்கள்.நன்றி.

  ReplyDelete
 9. நன்றி நண்பரே இதுவரை நான் அறிந்திராது ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . பகிர்வுக்கு நன்றி ..
  ஆமா நம்மபக்கம் கொஞ்ச நாளா கானோம்..

  ReplyDelete
 10. நறுக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு.. Tamilmanam ???????

  ReplyDelete
 11. @sakthistudycentre-கருன்

  "நறுக்குனு 2 ஓட்டு போட்டு கிளம்பியாச்சு.. Tamilmanam ???????"

  >>>>
  வருகைக்கு நன்றி

  வந்துட்டேனுங்க உங்க கடைக்கும் ஹி ஹி

  தமிழ மணம் ஓட்டு பட்டையில எதோ பிரச்சனன்னு நெனைக்கிறேன்!

  ReplyDelete
 12. யோவ்,, அட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்போ தமிழ்மணம் கூட வே பிரச்சனையா? எப்படி ஓட்டு போடரது?

  ReplyDelete
 13. போஸ்ட் எல்லாம் ஓக்கே தான் . ஆனா எங்களை மாதிரி யூத்துக்கு பிடிச்ச மாதிரி ஃபிகர் ஸ்டில் போட்டா தேவல.... ஹி ஹி

  ReplyDelete
 14. கொசுறு: தொடராக எழுதும் இந்த விஷயங்கள் வாரத்தில் இரண்டு நாள் பதியலாம் என்று இருக்கிறேன். commercial விஷயங்களுக்கு ஆதரவளிக்கும் நட்புகள் இப்பதிவுக்கும் தங்கள் அன்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ஓகே.... ஆதரவு தர்றோம்! இது கூட நல்லாத்தான் இருக்கு! என் இன்னும் தமிழ்மணத்துல இணைக்கல? நம்ம ஏரியாவுக்கு வர்றது

  ReplyDelete
 15. கஷ்டப்பட்டு இணைச்சிருக்கேன் பார்த்து ஏதாவது போட்டுக்குடுத்தா தேவல.

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில்குமார்

  "யோவ்,, அட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்போ தமிழ்மணம் கூட வே பிரச்சனையா? எப்படி ஓட்டு போடரது?"
  >>>>>>>>>

  தெரியல அங்க ஒன்னும் அரசியலப்பத்தி எழுதலியே but ஆனா why ஏன்?

  ReplyDelete
 17. @சி.பி.செந்தில்குமார்

  "போஸ்ட் எல்லாம் ஓக்கே தான் . ஆனா எங்களை மாதிரி யூத்துக்கு பிடிச்ச மாதிரி ஃபிகர் ஸ்டில் போட்டா தேவல.... ஹி ஹி"
  >>>>>>>>>>>
  யூத்தாமா........என்ன சிபி சார் இப்படியெல்லாம் ஜோக்கடிக்கிறீங்க!

  ReplyDelete
 18. @மாத்தியோசி - கே.ஆர்.றஜீவன்

  "ஓகே.... ஆதரவு தர்றோம்! இது கூட நல்லாத்தான் இருக்கு! என் இன்னும் தமிழ்மணத்துல இணைக்கல? நம்ம ஏரியாவுக்கு வர்றது"

  >>>>>>>>>


  வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

  இப்போ தான் இணைஞ்சிருக்கு அரசியல்வாதி மாதிரி ஹி ஹி!

  நான் காலைலேயே வந்துட்டேனுங்க நீங்க கவனிக்கல பாருங்க ஹி ஹி!!

  ReplyDelete
 19. @சி.பி.செந்தில்குமார்

  "கஷ்டப்பட்டு இணைச்சிருக்கேன் பார்த்து ஏதாவது போட்டுக்குடுத்தா தேவல"

  >>>>>>>>>>
  யாரப்போட்டு என்னா கொடுக்கணும் ஹி ஹி!

  ReplyDelete
 20. நல்லா போகுது. தொடருங்கள். 2000 வருடம் பழமையானது உண்மையா?

  ReplyDelete
 21. @Indian

  "நல்லா போகுது. தொடருங்கள். 2000 வருடம் பழமையானது உண்மையா?"

  >>>>>>>>>

  அப்படித்தாங்க சொல்றாங்க!

  நெறைய விஷயங்க வரலாற்றுல இல்ல........

  ReplyDelete
 22. நான் உள்ளே வந்தேன்..
  படிச்சேன்...
  தகவல் தெரிஞ்சிக்கிட்டேன்..
  ஓட்டுப் போட்டேன்..
  கமாண்ட் போடுறேன்..
  அப்படியே கிளம்புறேன்..

  வளர்க தமிழன்..

  ReplyDelete
 23. இந்தியாவின் வரலாற்றுப்பிண்ணனி பற்றிய விபரங்கள் புதிய தகவல்களாக இருக்கிறது.

  ReplyDelete
 24. //தொடராக எழுதும் இந்த விஷயங்கள் வாரத்தில் இரண்டு நாள் பதியலாம் என்று இருக்கிறேன்.//

  எப்போதும் ஆதரவு உண்டு..

  ReplyDelete
 25. @பாரத்... பாரதி...

  "இந்தியாவின் வரலாற்றுப்பிண்ணனி பற்றிய விபரங்கள் புதிய தகவல்களாக இருக்கிறது"

  >>>>>>>
  இது என்னோட ஆராய்ச்சிங்கோ!

  ReplyDelete
 26. கோபுரத்தைப் பார்த்தால் நம் ஊர் கோவில் மாதிரிதான் இருக்கிறது!தகவல்கள் அருமை!மூன்றிலும் ஓட்டுப் போட்டு விட்டேன்!

  ReplyDelete
 27. @சென்னை பித்தன்

  "கோபுரத்தைப் பார்த்தால் நம் ஊர் கோவில் மாதிரிதான் இருக்கிறது!தகவல்கள் அருமை!மூன்றிலும் ஓட்டுப் போட்டு விட்டேன்!"

  >>>>>>>>
  வருகைக்கு நன்றி சார்

  நம்ம ஊரு அம்மன் தானுங்க இந்த ஊரையும் காத்தது ஹி ஹி!

  ReplyDelete
 28. புதிய பல தகவல்களை அறிந்துகொள்ளமுடிகின்றது. தொடருங்கள்.

  ReplyDelete
 29. தமிழ் பெயர்களில் நகரங்கள்! புதிய தகவல் !

  ReplyDelete
 30. // இங்க சொல்ற முதல் வார்த்த "அண்ணே பாத்து போங்க, ஜாக்கிரதை.....எதாவது அடிபட்டுட்டா நீங்க ஹாஸ்பிடலுக்கு போகணும்...... //

  நம்மூர் சினிமாவுல காட்டுற மதுரக்காரைங்க மாதிரின்னு சொல்லுங்க...

  ReplyDelete
 31. // வணிகத்தமிழர்கள் (ஜாதிப்பேர சொல்லக்கூடாதில்ல!)சமூகம் //

  இதைச் சொன்னாலே போதுமே... understood...

  ReplyDelete
 32. @ சி.பி.செந்தில்குமார்
  // போஸ்ட் எல்லாம் ஓக்கே தான் . ஆனா எங்களை மாதிரி யூத்துக்கு பிடிச்ச மாதிரி ஃபிகர் ஸ்டில் போட்டா தேவல.... ஹி ஹி //

  யோவ் இது அந்தமாதிரி இடம் இல்லைன்னு டிஸ்கியை படிச்சா புரியலையா...

  ReplyDelete
 33. @வைகை

  "தமிழ் பெயர்களில் நகரங்கள்! புதிய தகவல் !"

  >>>>>>>>>>>>>>

  முதல்ல நீங்க படிக்கிற பெயர்கள் தற்போதைய பெயர்கள்...........முன்னாடி இருந்த பெயர்களே நான் அடுத்து எழுதி இருப்பவை!

  ReplyDelete
 34. @Philosophy Prabhakaran

  "@ சி.பி.செந்தில்குமார்
  // போஸ்ட் எல்லாம் ஓக்கே தான் . ஆனா எங்களை மாதிரி யூத்துக்கு பிடிச்ச மாதிரி ஃபிகர் ஸ்டில் போட்டா தேவல.... ஹி ஹி //

  யோவ் இது அந்தமாதிரி இடம் இல்லைன்னு டிஸ்கியை படிச்சா புரியலையா..."

  >>>>>>>>>

  வரலாற்றுல மறைக்கப்பட்ட விஷயங்கள பதிவு எழுத வந்த இங்கயுமா அந்தக்காலத்து நமீதாவோட போட்டோ போடா முடியும் ஹி ஹி!

  ReplyDelete
 35. சிறப்பான பதிவு
  ஆதரவு என்றும் உண்டு

  இன்னைக்கு நம்ப பதிவு

  சத்யம் ஓனர் மனைவி எனக்கு எழுதிய கடிதம்

  http://speedsays.blogspot.com/2011/02/blog-post_18.html

  ReplyDelete
 36. @Speed Master

  உங்க வருகைக்கு நன்றி

  உங்க பதிவே படிச்சிட்டேனுங்க என்னோட இன்னைக்கு பதிவுக்கு உங்கள வரவேற்கிறேன்

  http://vikkiulagam.blogspot.com/2011/02/blog-post_18.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி