என்னோட ட்விட்டுகள் ஒரு பார்வை பாருங்க(!?)
நம்ம உடன்பிறவா சகோதரர்களான மீனவ நண்பர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடல்படைக்கும் மற்றும் அதைக்கண்டும் காணாது இருக்கும் இந்திய மாநில, மத்திய அரசுகளின் அலட்சியப்போக்கைக்கண்டித்தும் ட்விட்டரில் ஒரு அமைதிப்புரட்சி நடந்து கொண்டு இருக்கிறது அதில் நான் அனுப்பிய ட்விட்டுகள் உங்கள் பார்வைக்கு........

தீர்க்க முடியாத பிரச்சனை என்றதும் அயல் நாட்டு சதி என்றாய் இப்போது நாங்கள் சொல்லட்டுமா மாநில மத்திய கூட்டு சதி என்று 

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றார்களே நீ உப்போடு சேர்ந்து என் சகோதரர்களின் உயிரையும் குடித்திருக்கிராயே? 


இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றாயே அதனால் தானோ இதயத்தை நோக்கி சுடும்போது பதறவில்லை உண்மையில் உனக்கு இதயமில்லையா@

மஞ்சத்துண்டய்யும், ரப்பர் ஸ்டாம்ப்பையும் வைத்துக்கொண்டு நாங்க என்ன செய்வது என்று யாராவது சொல்லுங்க தோழர்களே

சாணக்கியன் என்றால் என்ன - சாதுவான மக்களை கொல்பனுக்கு கொடுக்கப்படும் பட்டமா @


ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்ட முடியும் அதே ஒரு உயிரை எடுத்துவிட்டால் அவனுக்கு ஏதடா மறு உயிர் all தெரிந்த ஏகாம்பரமே

சாப்பிட்ட சாப்பாட்டு தட்டில் யாரும் உமிழ்வதில்லை ஆனால் சாப்பாடு போட்டவன் முகத்திலேயே உமிழ்கிராயே உன்னை என்சொல்வது

இந்தியா எனும் பெரும் தேசம் அதில் தேசாந்திரிகளாக தமிழர்கள் எனும் இனம் இதெல்லவோ வரலாற்று சின்னம்

இறால் புடிச்சி நாட்டோட வியாபரத்த பெருக்குனவங்கள இராளுக்கே இரய்யாக்குற உங்கள என்னா செய்யலாம்

எதிரிக்கு எதிரி நண்பன்னு சொன்னாங்க இங்க துரோகிக்கு துரோகி நண்பனா இருக்கீங்களே என்னாடா ஞாயம் இது

நாங்க போட்ட மிச்சத்த சாப்பிட்ட நாய்களுக்கு இருக்குற நன்றி கூட நாங்க போட்ட பதவிய கவ்வுன உங்களுக்கு இல்லையே

ஓடு ஓடு ஓடு ஓடு கொலைஞ்சன் வராரு ஓடு மீனவன வச்சி கூட்டாஞ்சோறு ஆக்கி சாப்பிட வாராரு ஓடு

எத்தன துரோகிங்க நாட்டுல தெரியல ஆனா அத்தன துரோகிங்களும் தேர்தல் வந்தா போதும் பிச்ச எடுக்க எங்க கிட்ட வந்துடறானுங்க

இறையாண்மை என்பது மீனவர்கள் இரையாவதை குறிக்கும் சொல்லா

மன்னன் என்பது அந்தக்காலம் கடித மன்னன் என்பதோ இந்தக்காலம்

இப்போதைய தமிழக அரசியல் மூர்த்திகளுக்கு வைப்போம் 49 O எனும் காப்பு

இனி எவனுக்கும் சும்மா கிடையாது ஓட்டு நாங்க போடப்போறோம் 49 O வேட்டு

மீனவன் என்பதை மீனும் அவனும் ஒன்று என்று சுட்டுக்கொன்றுகொண்டு இருக்கீறீர்களே வீணர்களே

கண்டனம் என்பதே இப்போ கண்டவனுங்களும் சொல்லிட்டு போறதுன்னு ஆக்கிட்டீங்களே

என் நாடு என் மக்கள்னு சொன்னோமே இப்போ எது என் நாடு எங்க என் மக்கள்னு சொல்ல வச்சவனுங்கள என்ன செய்ய

ஓட்டுக்கு துட்டு கொடுக்க ரெடியா இருக்கியே 500 உயிரை திருப்பி கொடுக்க முடியுமா உன்னால

கடலை மட்டுமே நம்பி போன என் சகோதரனின் குடும்பத்துக்கு சங்க பரிசா குடுத்த உனக்கு நாங்க என்ன பரிசு குடுக்கறது

நல்லரசு கேள்விப்பட்டி இருக்கேன் இது என்னாடா கொல்லரசு உங்கள எல்லாம் பதவிக்கா பெத்துபோட்டு இருக்காங்க

எதிரி சுடுரான்னு கட்டுமரத்துல ஏறுனா அங்க இருந்தது ரப்பர் ஸ்டாம்பும் மஞ்ச துண்டும் என்ன பண்ணுவான் நண்பன் நீயே சொல்லு

கல்தோன்றி மன்தோன்றான்னு சொல்லி சொல்லியே எங்கள கல்லறைல அறைஞ்சவனே

"மானாட மார்பாட" பாக்குற உனக்கு எங்க உயிர் ஊசாலடுரத பத்தி கவலை இல்ல அப்படித்தானே

செத்து செத்து விளயாடர்துன்னா என்னன்னு இப்போதான் புரியுது நாங்க செத்து நீ விளாயாடுரன்னு

வாழும் வரை போராடுன்னாங்க பெரியவங்க நாங்க வாழுற வர உன்கூட போராடனுமா

உயிருக்கும் தாலிக்கும் அர்த்தம் தெரியாத உங்களுக்கு எதுக்குடா மஞ்ச கலர் வேலி 

வாழற நாளெல்லாம் சாகுற நாளா இருக்கே இதுல எங்க சந்தோசம் இருக்கு படுபாவிங்களா 

மீனவன் பொணத்த வச்சி அரசியல் செய்ய உங்களுக்கு எல்லாம் கூசலயாடா?#tnfisherman


கொசுறு: இது இப்போதைக்கு போதும்னு நினைக்கிறேன். முடிஞ்சா உங்க கருத்துகள சொல்லிட்டு போங்க.  
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

17 comments :

 1. //மீனவன் பொணத்த வச்சி அரசியல் செய்ய உங்களுக்கு எல்லாம் கூசலயாடா?//வேதனையான விடயம்

  ReplyDelete
 2. // இனி எவனுக்கும் சும்மா கிடையாது ஓட்டு நாங்க போடப்போறோம் 49 O வேட்டு#tnfisherman //

  இதைப்பத்தி விவரமா சொன்னா யூஸ்புல்லா இருக்கும்...

  ReplyDelete
 3. எதிரிக்கு எதிரி நண்பன்னு சொன்னாங்க இங்க துரோகிக்கு துரோகி நண்பனா இருக்கீங்களே என்னாடா ஞாயம்//////////////என்ன சொல்றது இன துரோகிகளை

  ReplyDelete
 4. வந்துட்டேன் படிச்சுட்டேன் ஒட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 5. செவுடன் காதுல சங்குஊதுன கூட கேட்டுடும் ஆனா இவிங்க காதுல ம்ம்ஹும்

  ReplyDelete
 6. @Philosophy Prabhakaranநம்ம புதிய பதிவ பாத்துட்டு சொல்லுங்க நண்பரே

  ReplyDelete
 7. @அஞ்சா சிங்கம்இவனுங்கள சொல்லி பயனில்லா நம்மள நாம திருத்திப்போம்

  ReplyDelete
 8. @நா.மணிவண்ணன்அவங்க கேக்க கூடாதுன்னுதான் இருக்காங்க நாம நம்ம மக்களுக்கு புரியவைப்போம்

  ReplyDelete
 9. //உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும் என்றார்களே நீ உப்போடு சேர்ந்து என் சகோதரர்களின் உயிரையும் குடித்திருக்கிராயே?//

  ReplyDelete
 10. உணர்ச்சி மிக்க டிவிட்டர்களை எழுதியிருக்கிறீர்கள்.
  உங்க டுவிட்டர் முகவரி தரவும் , பின் தொடர வசதியாக இருக்கும்..

  ReplyDelete
 11. ட்விட்டர் சிங்கமே வாழ்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி