ஏக்கமா நோக்கமா!

அன்பு நண்பர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன், வேலை நிமித்தமாக வெளி நாடுகளுக்கு சென்று அங்கு வாழ்கையை போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் எண்ணற்ற மக்கள் தங்கள் குடும்பத்தின் மேல் கொண்ட பாசத்துக்காக தங்களின் சுய விருப்பங்களை கூட விடுத்து குடும்பத்தின் சந்தோஷமே முதல் என்று எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...........அவர்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யுட்......................இப்பதிவு ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்ப்பட்ட தொலைபேசி சம்பாழனை மட்டுமே..............

என்ன விஷால் எப்படி இருக்க.................

இருக்கேன் சொல்லுங்க.................

என்ன இப்பல்லாம் என்கூட பேசுறதுக்கு கூட உனக்கு பிடிக்கலையா..................

அப்படியெல்லாம் இல்லப்பா..................

பின்ன என்ன......................ஆமாம் நீங்க என்னை இங்கயே ஸ்கூல் சேர்க்க போறதா அம்மா சொன்னாங்க..............

அப்படித்தாம்பா நெனைக்கிறேன்..............

ஏன் ஹனோயில இல்லாத ச்ச்சூலா..............

அப்படி இல்லப்பா.............இங்க நம்ம ஊரு மாதிரி இல்ல...............ரொம்ப அதிகமான அளவுக்கு பணம் கட்டனும்.................

எனக்கு International school வேணாம் நான் வியத்னாம் ச்ச்கூல்லையே படிக்கிறேன்...........எனக்கு உன்கூட இருக்கணும்................

இல்லப்பா அது வந்து................


இது வரைக்கும் நீங்க என்னை எந்த விஷயத்துக்கும் வற்ப்புருதுனது    இல்ல...........please  பா நான் அங்கேயே வந்துடறேன்........................நான் உங்கள தொல்ல பண்ண மாட்டேன் please அப்பா...............

சரிப்பா நீ வா பாத்துக்கலாம்..............


5 வயது குழந்தையின் ஏக்கம் அந்த தொலைபேசியின் சம்பாழனையில் தெரிந்தது......

கொசுறு: இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா கருத்துக்கள் வரவேட்க்கப்படுகிறது........... 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

59 comments :

 1. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

  ReplyDelete
 2. >>>தங்கள் குடும்பத்தின் மேல் கொண்ட பாசத்துக்காக தங்களின் சுய விருப்பங்களை கூட விடுத்து குடும்பத்தின் சந்தோஷமே முதல் என்று எண்ணி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...........அவர்களின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யுட்......................  நானும்....

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரம், தங்களின் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.
  என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளின் எதிர்காலமே முக்கியமானது என்று கூறுவேன். தந்தையினைப் பிரிந்திருக்கும் பிள்ளைக்கு - சீ... நம்ம வெற்றிக்கு, நம்ம கல்வியினை ரசிப்பதற்கு அப்பா அருகில் இருக்கவில்லையே, நம்மை அவர் பாடசாலை விட்டு வந்ததும் பாராட்டவில்லையே என்று ஒரு ஏக்கம் உருவாகும்.
  ஆதலால் தந்தையின் அருகில் இருந்து பிள்ளை படிக்க நினைப்பது சரியானது. காரணம் தந்தை மகனுக்கிடையிலேனா பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கல்வியில் பிள்ளை முன்னேற தந்தையின் வழிகாட்டுதலும் உதவும்.
  ஆனால் வெளி நாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பிப்பதற்கு வேண்டிய பொருளாதார நிலமைகளினைக் கருத்திலெடுத்தால் தந்தையின் இவ் இடத்தில் எனது கருத்து ஏற்க கூடியதாக அமையுமோ தெரியவில்லை.

  ReplyDelete
 4. பிள்ளையின் ஏக்கமே முக்கியமானதாக் இருந்தாலும் இது முழுக்க முழுக்க உங்கள் பொருளாதார நிலைமையை பொறுத்தது! உங்களை நீங்கள் வருத்திக்கொண்டு படிக்கவைப்பதே அந்த பிள்ளையின்மீது சிறு கோபத்தையும் வரவைக்கலாம்! எதுவாக இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட முடிவே முக்கியமானது!

  ReplyDelete
 5. முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

  March 7, 2011 10:16 AM//

  எல்லாரும் கேட்டுக்கோங்க அண்ணன் யூத்து...
  பாட்டா தான் பின்னூட்டம் போடுவாரு...

  ReplyDelete
 6. நான் இனிமே தான் இடுகையை படிக்கணும்...படிச்சுட்டு வரேன்...

  ReplyDelete
 7. //இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா கருத்துக்கள் வரவேட்க்கப்படுகிறது...///

  இது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது வைகை அண்ணன் சொல்வதுபோல் குழந்தையின் ஏக்கத்திற்காக பார்த்தாலும் உங்கள் பொருளாதாரம், பணிச்சூழல் ஆகிய நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனி வே இதில் உங்கள் முடிவுதான்...

  ReplyDelete
 8. @நிரூபன்

  நான் முடிவு பண்ணிட்டேன் நண்பா ஆனாலும் நம்ம நண்பர்ஸ் கிட்ட ஒரு பதில் அதுக்குதான் ஹி ஹி!

  எனக்காக தங்களின் பொன்னான நேரத்தை கமண்டுக்கு அளித்ததற்கு நன்றி நண்பா

  ReplyDelete
 9. குழப்பமே வேண்டாம், பிள்ளையின் ஏக்கமே முக்கியத்துவம் வாய்ந்தது...
  வாழ்வது சில காலம், அதில் எவ்வளவு நாள் நாம் நம் உறவுகளுடன் செலவழிக்க வைப்பு கிடைக்கின்றதோ அதை பயன்படுத்திக் கொள்வதில் ஒன்றும் பெரிய இழப்பில்லை என்பது என் கருத்து...
  ச்சே என்னை சீரியஸா பேச வெச்சிடீங்களே...

  ReplyDelete
 10. @வைகை
  "பிள்ளையின் ஏக்கமே முக்கியமானதாக் இருந்தாலும் இது முழுக்க முழுக்க உங்கள் பொருளாதார நிலைமையை பொறுத்தது! உங்களை நீங்கள் வருத்திக்கொண்டு படிக்கவைப்பதே அந்த பிள்ளையின்மீது சிறு கோபத்தையும் வரவைக்கலாம்! எதுவாக இருந்தாலும் உங்கள் தனிப்பட்ட முடிவே முக்கியமானது!"

  >>>>>>>>>>>>>>>

  சத்தியமான வார்த்தைகள் நண்பா............

  நான் முடிவு பண்ணிட்டேன் நண்பா ஆனாலும் நம்ம நண்பர்ஸ் கிட்ட ஒரு பதில் அதுக்குதான் ஹி ஹி!

  ReplyDelete
 11. @டக்கால்டி
  "எல்லாரும் கேட்டுக்கோங்க அண்ணன் யூத்து...
  பாட்டா தான் பின்னூட்டம் போடுவாரு..."

  >>>>>>>>>>>>

  அண்ணன் யூத்து...யூத்து......யூத்து....யூத்து

  ReplyDelete
 12. @மாணவன்

  "இது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது வைகை அண்ணன் சொல்வதுபோல் குழந்தையின் ஏக்கத்திற்காக பார்த்தாலும் உங்கள் பொருளாதாரம், பணிச்சூழல் ஆகிய நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனி வே இதில் உங்கள் முடிவுதான்..."

  >>>>>>>>>>

  உண்மைதான் நண்பா

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 13. @டக்கால்டி

  "குழப்பமே வேண்டாம், பிள்ளையின் ஏக்கமே முக்கியத்துவம் வாய்ந்தது...
  வாழ்வது சில காலம், அதில் எவ்வளவு நாள் நாம் நம் உறவுகளுடன் செலவழிக்க வைப்பு கிடைக்கின்றதோ அதை பயன்படுத்திக் கொள்வதில் ஒன்றும் பெரிய இழப்பில்லை என்பது என் கருத்து...
  ச்சே என்னை சீரியஸா பேச வெச்சிடீங்களே..."

  >>>>>>>>>>>>

  உண்மைதான் நண்பா

  உங்க கருத்தோட ஒன்றிப்போறேன் சீரியஸா ஆக்கியதுக்கு மன்னிக்கணும் நண்பா

  ReplyDelete
 14. ஆக்கியதுக்கு மன்னிக்கணும் நண்பா

  March 7, 2011 10:50 AM//

  மன்னிப்பா?பெரிய வார்த்தை எல்லாம் பேசறீங்களே...

  ReplyDelete
 15. @டக்கால்டி
  அப்படியெல்லாம் இல்ல எப்பவும் யாரும் வருந்த செய்யக்கூடாதுன்னு ஒரு நெனப்பு எனக்கு ஹி ஹி!

  ReplyDelete
 16. அப்படியெல்லாம் இல்ல எப்பவும் யாரும் வருந்த செய்யக்கூடாதுன்னு ஒரு நெனப்பு எனக்கு ஹி ஹி!

  March 7, 2011 10:59 AM//

  அதே ஹி ஹி...

  ReplyDelete
 17. கருத்து சொல்ற அளவுக்கு நாம பெரிய ஆள் கிடையாதுங்க ,ஊருக்கே கருத்து சொல்ற ஆளு நீங்க ஒரு முடிவு எடுக்கமையா இருப்பீங்க

  ReplyDelete
 18. @நா.மணிவண்ணன்

  "கருத்து சொல்ற அளவுக்கு நாம பெரிய ஆள் கிடையாதுங்க ,ஊருக்கே கருத்து சொல்ற ஆளு நீங்க ஒரு முடிவு எடுக்கமையா இருப்பீங்க"

  >>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  நான் ஒரு யதார்த்த வாதி உங்களைப்போலவே நண்பா

  முடிவ எடுத்துட்டேன் பணத்த விட பாசம் தான் முக்கியமுன்னு ஹி ஹி!

  ReplyDelete
 19. நான் ஒரு யதார்த்த வாதி உங்களைப்போலவே நண்பா

  முடிவ எடுத்துட்டேன் பணத்த விட பாசம் தான் முக்கியமுன்னு ஹி ஹி!

  March 7, 2011 11:22 AM//

  அருமையான முடிவு

  ReplyDelete
 20. @dakkalti

  "அருமையான முடிவு"

  >>>>>>>>>>>

  உங்க கருத்துக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 21. அவர்களின் வலி உங்களின் பதிவுகளில் தெரிகிறது.

  ReplyDelete
 22. குழந்தையின் வேண்டுகோளை மதித்து நல்ல முடிவை தந்தை எடுத்துள்ளார்...

  எனது வலைபூவில் இன்று:
  இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

  ReplyDelete
 23. @வேடந்தாங்கல் - கருன்
  "அவர்களின் வலி உங்களின் பதிவுகளில் தெரிகிறது"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  உங்கள் வார்த்தை உண்மைதான் நண்பா

  ReplyDelete
 24. இங்கே படிக்வையுங்கள்

  கலாச்சாரம், தமிழ் அகீயவை வியட்நாமில் கிடையாது

  ReplyDelete
 25. குழந்தையின் ஏக்கத்தை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பொழுது போனால் திரும்ப வராத குழந்தை பாசமும் வளர்ச்சியையும் தொலைத்து விட்டு என்ன செய்ய?

  ReplyDelete
 26. அது யார் உங்க பையனா?

  ReplyDelete
 27. @Speed Master

  "இங்கே படிக்வையுங்கள்

  கலாச்சாரம், தமிழ் அகீயவை வியட்நாமில் கிடையாது"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா!

  மன்னிக்கவும்......................
  என்னைப்பொறுத்த வரை எங்கு இருந்தாலும் அவர்களின் குணம், பண்பாடு மாறாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  ReplyDelete
 28. @Chitra

  "குழந்தையின் ஏக்கத்தை நிச்சயமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். பொழுது போனால் திரும்ப வராத குழந்தை பாசமும் வளர்ச்சியையும் தொலைத்து விட்டு என்ன செய்ய?"

  >>>>>>>>>>>>

  உண்மையான வார்த்தைகள் சகோ

  ReplyDelete
 29. விக்கி ஒரு அங்கிள்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு...ஹி ஹி

  ReplyDelete
 30. @டக்கால்டி

  நண்பா நமீதா நடனம் பாக்க ஆசைப்படும் 80 வயசு முதியவர என்னனு சொல்லுவீங்க ஹி ஹி!

  ReplyDelete
 31. குழந்தையின் ஏக்கம் கலங்கடிக்குது.. :((


  கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க..

  ReplyDelete
 32. உறவுகளை பிரியும் வலி நானும் அனுபவைத்து கொண்டு தான் இருகிரேன்.

  உங்கள் மகன் உங்களுடன் சேர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. @டக்கால்டி

  நண்பா நமீதா நடனம் பாக்க ஆசைப்படும் 80 வயசு முதியவர என்னனு சொல்லுவீங்க ஹி ஹி!//

  அவரே பாவம் இப்போ ஆணி புடிங்கிட்டு இருக்காரு...அவர போயி..

  ReplyDelete
 34. @பயணமும் எண்ணங்களும்

  "குழந்தையின் ஏக்கம் கலங்கடிக்குது.. :((


  கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க.."

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  முடிவு பண்ணியாச்சுங்க! அவர விடவா பணம் பெருசு ஹி ஹி!

  ReplyDelete
 35. @ராஜகோபால்

  வருகைக்கு நன்றி நண்பா

  வாழ்த்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 36. @டக்கால்டி

  "அவரே பாவம் இப்போ ஆணி புடிங்கிட்டு இருக்காரு...அவர போயி.."

  >>>>>>>>>>>>>>

  அந்தாளு என்ன பண்றாருன்னு தான் ஊருக்கே தெரியுமே நண்பா ஹிஹி!

  ReplyDelete
 37. //சி.பி.செந்தில்குமார் said... முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...//அப்போ இப்ப வெட்டு கொத்து ஒண்ணுமே இல்லையா??

  ReplyDelete
 38. //ஏன் ஹனோயில இல்லாத ச்ச்சூலா............//
  அப்பிடீன்னா??ஹிஹி
  http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_07.html

  ReplyDelete
 39. பிள்ளைகளின் ஏக்கத்தை நிறைவேற்றுவது தந்தையின் நோக்கமாக இருக்க வேண்டும்

  ReplyDelete
 40. @ரஹீம் கஸாலி

  "பிள்ளைகளின் ஏக்கத்தை நிறைவேற்றுவது தந்தையின் நோக்கமாக இருக்க வேண்டும்"

  >>>>>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி நண்பா

  அதே அதே !

  ReplyDelete
 41. //இது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது வைகை அண்ணன் சொல்வதுபோல் குழந்தையின் ஏக்கத்திற்காக பார்த்தாலும் உங்கள் பொருளாதாரம், பணிச்சூழல் ஆகிய நிலைமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனி வே இதில் உங்கள் முடிவுதான்...//

  இதுதான் ஏன் கருத்தும். திருமணம் ஆகி குடும்பம் பிள்ளைகள் என்றுவரும்போது அனைவருக்கும் அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதே தலையாய கடமையாகிறது.
  இதில் நமெக்கென்று உள்ள சொந்த விருப்பங்கள் எல்லாம் கூட இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். உண்டு.உடுத்துவது மட்டுமே நம் விருப்பங்களாக ஆகிவிடும்.
  அப்படி தன் குடும்ப நன்மை கருதி வாழ்வதே ஒரு சராசரி இந்திய ஆண்களின் வாழ்கை. நம் சமுதாயம் குடும்ப அடிபடையில் இன்னமும் வாழ்வதற்கு இதுவே அடிப்படை. இது தற்கால உழைக்கும் பெண்களுக்கும் கூட பொருந்தி வருகிறது. உண்மையில் வாழ்கை என்பது நாம் பிறருக்கு என்ன செய்தோம் என்பதே அன்றி வேறு என்ன இருக்க முடியும்.
  பிறர் சிலவற்றை பெற வேண்டும் என்றால் நாம் சிலவற்றையாவது இழந்து தான் ஆகவேண்டும் இல்லையா?

  ReplyDelete
 42. @கக்கு - மாணிக்கம்

  "பிறர் சிலவற்றை பெற வேண்டும் என்றால் நாம் சிலவற்றையாவது இழந்து தான் ஆகவேண்டும் இல்லையா?"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி தலைவரே!

  உண்மைதானுங்க!

  ReplyDelete
 43. பையன் அறிவாளியா இருக்கான்

  ReplyDelete
 44. இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!

  ReplyDelete
 45. //கொசுறு: இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா கருத்துக்கள் வரவேட்க்கப்படுகிறது...........//

  ரெண்டுமே ஒன்னா இருக்கணும் என்பது என் ஆசை....

  ReplyDelete
 46. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "பையன் அறிவாளியா இருக்கான்"

  >>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி தலைவரே

  அவன் அவங்க அம்மா மாதிரி ஹி ஹி!

  ReplyDelete
 47. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  "இன்னிக்கு எல்லோருக்கும் அண்ணன் டெம்பிளேட் கமெண்டும் ஓட்டுக்களும் போடுவேனாம்! நீங்கள் கோபிக்க கூடாதாம்!!"

  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பா

  போடறதுன்னு முடிவு பண்ணிட்ட அப்புறமென்ன ஹி ஹி!

  ReplyDelete
 48. @MANO நாஞ்சில் மனோ

  "ரெண்டுமே ஒன்னா இருக்கணும் என்பது என் ஆசை...."

  >>>>>>>>>>>>>>

  நாஞ்சிலார் சொன்ன கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 49. குழந்தையின் ஏக்கமே முக்கியமானது..நல்ல பள்ளி இருக்கும் இடமாக/நாடாகப் பார்த்து நகர்வது இன்னொரு தீர்வு..ஆனாலும் அவரவர் பொருளாதாரச் சூழ்நிலையே இதைத் தீர்மானிக்கும்...நல்ல சிந்தனையைத் தூண்டும் பதிவு!

  ReplyDelete
 50. //5 வயது குழந்தையின் ஏக்கம் அந்த தொலைபேசியின் சம்பாழனையில் தெரிந்தது...//

  தந்தையின் வேதனை மனதுக்குள்
  பதிவின் மூலம் தெரிகிறது.

  //இது ஒரு தந்தையின் நோக்கம் முக்கியமா, அன்றி பிள்ளையின் ஏக்கம் முக்கியமா//


  பிள்ளைகளின் ஏக்கத்தை நிறைவேற்றுவது தான் தந்தையின் நோக்கமாக இருக்கும்.

  ReplyDelete
 51. @செங்கோவி

  வருகைக்கு நன்றி நண்பா

  பணத்தால் மனம் அதுவும் குழந்தையின் மனம் உடையக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  ReplyDelete
 52. @ஆயிஷா

  "பிள்ளைகளின் ஏக்கத்தை நிறைவேற்றுவது தான் தந்தையின் நோக்கமாக இருக்கும்"

  >>>>>>>>>>>>
  வருகைக்கு நன்றி சகோ
  பணத்தால் குழந்தையின் மனம் உடையக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

  ReplyDelete
 53. பிள்ளையின் நோக்கம் முக்கியம் தான், ஆனால் சம்பளம் கட்டலைன்னா இன்னாபா பண்றது.. இதுதான் தலையெழுத்துன்னு போறதுதான் வழி நமக்கு..

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி