மானிட்டர் மூர்த்தி ஏன்? எதுக்கு?

வணக்கம் நண்பர்களே..................பதிவுலகம் எனும் தனி உலகம் என்னையும் வரவேற்று தன் குழந்தையாக பாவித்து வருகிறது..........அதற்க்கு என் சிரம் தாழ்ந்த முதல் வணக்கங்கள்...................


அழவும், சிரிக்கவும் எளிதாக செய்ய முடிந்த குழந்தை உலகில் இயல்பாக ஜெயிக்கும் சக்தி கொண்டது............இது என்னோட தனிப்பட்ட கருத்து...........ஹி ஹி!

சரி விஷயத்துக்கு வருவோம்............எனக்கு பல நண்பர்கள உருவாக்கி கொடுத்தது இந்த பதிவுலகம்...........அதிலும் மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்.......இந்த விஷயம் தான் என்னையும் என் பதிவையும் சிறக்க வச்ச ஒரு தலைப்புன்னு நான் நினைக்கிறேன்...........


மூர்த்தி - வாழ்கைக்காக மட்டும் இல்லாமல் பல அதிசயங்களை சாதிக்க துடித்த ஒரு இளைஞன்...............வெறும் வெற்றுக்கூச்சல் மட்டுமே கொண்டு வாழும் சமூகத்தில் தன் படைப்புகள் மூலம் சீர்திருத்தம் கொண்டுவர நினைத்த ஒரு அதிசய பிறவி...............சென்னைப்பட்டணத்தில் பிறந்த என்னைப்போல பல மக்கள் சினிமாவை வெறும் பொழுது போக்காக மட்டுமே பார்ப்பவர்கள்................

ஆனால் அதே நேரம்............பல வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் தங்கி.........மூன்று வேளை உணவு கிடைக்கவில்லை என்றாலும், தன் நோக்கமான சினிமாவில் ஜெயிக்க போராடிக்கொண்டு இருக்கும் சகோதரர்களில் ஒருவன் அவன்..............இப்படிப்பட்ட மனிதன் பேச்சு வெறும் அந்த நேர பொழுது போக்காக கண்டு வந்த ஒருவன் தான் நான்!.................

சாதிப்பேன் என்று விடிந்ததில் இருந்து அந்தி சாயும் வரை ஓயாமல் ஓடிக்கொண்டு இருந்தான் அந்த நண்பன்.................அவனுடைய போராட்டத்தைக்கண்ட நான் கொஞ்ச கொஞ்சமாக அவனை கிண்டல் செய்வதை குறைத்துக்கொண்டேன்..................


7 வருட கடுமையான போராட்டத்திற்கு பிறகும் அவனால் ஒன்றும் சாதிக்க முடியவில்லை...............கொஞ்ச கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையானான்............பின் அந்த சினிமா(துணை இயக்குனருக்கு துணை!)உழைப்பில் அவனுக்கு கிடைத்த சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு..............மனம் போன போக்கில் போய் கொண்டு இருந்தான்.........

அவன் அடிக்கடி சொல்லும் விஷயங்கள் பல படங்களில் வந்த வண்ணம் இருந்ததை காண முடிந்தது..........அதாவது அவன் உழைப்பை பல அட்டை பூச்சிகள் குடி எனும் ஒரு விஷயத்தின் மூலம் வாங்கிக்கொண்டு அவனை சிதைத்துக்கொண்டு இருந்ததை அறிந்து நான் மிக வருந்தினேன்...............

"மச்சி நிச்சயமா நான் பெரிய ஆளா வருவேன் நீ வேணா பாரேன்" - அடிக்கடி அவன் சொல்லும் செய்தி இது................

வேலை இல்லாத போது என்னைப்போன்ற நண்பர்களால் எதோ அவன் வாழ்கை ஓடிக்கொண்டு இருந்தது................குடி இருந்த வீட்டுக்காரர் வந்தால் அவர் முகத்தை பார்க்க வெற்க்கப்படுவான்...........ஏனெனில் அந்த வாடகைப்பணத்தை நாங்கள் 3 பேர் தருவோம் என்பதால்...............அவனால் முடிந்ததை கொடுக்க முயற்சிக்கும் போது கூட நானும் நண்பர்களும் கொடுக்க விடமாட்டோம்...........டேய் இத நீயே வச்சிக்க..........ஆனா குடிக்க யூஸ் பண்ணாத என்போம்..........

"மச்சி நான் பெரிய ஆளா வருவேன் பாரேன், அப்போ உங்கள எப்படி பாத்துக்கறேன் பாரு" என்று அவன் சொல்லும்போது நாங்கள் அப்போவும் எங்களுக்கு துட்டு வேணாம் மச்சி நீ எங்கள ஞாபகம் வச்சிருந்தா போதும் என்போம்....................

அவனுடைய கருத்துக்கள் பல விஷயங்களில் துளைத்து போகும் தன்மை கொண்டவை..............என்னைப்பொறுத்தவரை அவன் ஒரு மானிட்டருக்கு அடிமையாய் போன அறிவாளி...............


இன்று அந்த நண்பன் மன நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறான்..............அவனுடைய தாக்கமே இந்த மானிட்டர் மூர்த்தி பக்கங்கள்..........சினிமா என்பது மக்களின் இயல்பான விஷயங்களை பகிர வந்த தளம் அது வெறும் நிழல்களையும், வெற்று கோழைகளையும் உருவாக்கி வெற்று கோஷங்களாக அடங்கிப்போவது யாரால்!...........சிந்திப்பீர் செயல் படுவீர் நண்பர்களே..............

கொசுறு: இயற்கை அடிக்கடி ஒரு விஷயத்தை மனிதனுக்கு ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறது உதாரணம் - ஜப்பான் நில நடுக்கம்........அங்கு இறந்த மக்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

25 comments :

 1. நான் ஒரு வாத்திங்க. 30 வருடம் தொழில் பார்த்ததில எதிலும் எங்கும் குத்தம் கண்டுபிடிச்சே பழக்கம் ஆயிடுச்சுங்க. மன்னிச்சுக்கோங்க."மூன்று வேலை சோறு" அப்படீன்னா அது என்னங்க?

  ReplyDelete
 2. @DrPKandaswamyPhD

  "நான் ஒரு வாத்திங்க. 30 வருடம் தொழில் பார்த்ததில எதிலும் எங்கும் குத்தம் கண்டுபிடிச்சே பழக்கம் ஆயிடுச்சுங்க"

  >>>>>>>>>>>>
  ஐயா கண்ண தெறந்துட்டீங்க வாத்யாரே......அது உணவுன்னு வரவேண்டியது ஹி ஹி!மன்சு கோங்க தலைவரே!

  ReplyDelete
 3. .சினிமா என்பது மக்களின் இயல்பான விஷயங்களை பகிர வந்த தளம் அது வெறும் நிழல்களையும், வெற்று கோழைகளையும் உருவாக்கி வெற்று கோஷங்களாக அடங்கிப்போவது யாரால்!...........சிந்திப்பீர் செயல் படுவீர் நண்பர்களே..............


  நல்லவிஷயம் சொல்லியிருக்கீங்க பாஸ்! பாவம் அந்த நண்பன்!!

  ReplyDelete
 4. @ விக்கி உலகம்
  // ஐயா கண்ண தெறந்துட்டீங்க வாத்யாரே......அது உணவுன்னு வரவேண்டியது ஹி ஹி!மன்சு கோங்க தலைவரே! //

  வாத்தியார் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... "மூன்று வேளை" என்று எழுதுவதற்கு பதிலாக "மூன்று வேலை" என்று எழுதியிருக்கிறீர்கள்... மற்றபடி உணவு, சோறு, பூவா எல்லாம் கரெக்டுதான்...

  ReplyDelete
 5. மூன்று வேலை அல்ல....வேளை தான் வேலையாகிவிட்டது. அதைத்தான் அய்யா கந்தசாமி குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன்

  ReplyDelete
 6. சோறுனாலும், உணவுனாலும் ஒண்ணு இல்லையா நண்பரே?


  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

  ReplyDelete
 7. நானே உங்களிடம் மானிட்டரின் வரலாறை கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன்...இதன் ஒரு சிறு முன்குறிப்பை எனது பதிவில் கமென்ட்டை போட்டதாக ஞாபகம் நண்பா...

  ReplyDelete
 8. மனதைத் தொட்ட பதிவு!

  ReplyDelete
 9. பாவம் அந்த நண்பர்.

  ReplyDelete
 10. மனதை பாதித்த பதிவு.

  ReplyDelete
 11. @விக்கி உலகம்: தொப்பி தொப்பி

  ReplyDelete
 12. இதயம் தொட்ட எழுத்து

  ReplyDelete
 13. நண்பனின் கஷ்டத்தை பார்க்கும் போது மனசு துடிக்கிறது....

  ReplyDelete
 14. //DrPKandaswamyPhD said...
  நான் ஒரு வாத்திங்க. 30 வருடம் தொழில் பார்த்ததில எதிலும் எங்கும் குத்தம் கண்டுபிடிச்சே பழக்கம் ஆயிடுச்சுங்க. மன்னிச்சுக்கோங்க."மூன்று வேலை சோறு" அப்படீன்னா அது என்னங்க?//

  நம்ம பிள்ளை'தானே விடுங்க விடுங்க வாத்தியாரே....

  ReplyDelete
 15. வருந்துகிறேன் சார்

  ReplyDelete
 16. மானிட்டர் மூர்த்தியின் கதை மனசை சிரமப்படுத்துகிறது.

  வழக்கமாய் உங்கள் பதிவில் இழையோடும் நகைச்சுவை உணர்வுக்கு பின்னால் இப்படி ஒரு துரோகங்களின் வலியா?

  ReplyDelete
 17. மூர்த்தியின் கோபம் தீரும் வரை, இந்த சமூகம் பற்றி பேசட்டும்.
  இனி மானிட்டர் என்பது பெயரில் மட்டும் இருக்கட்டும்.

  ReplyDelete
 18. உங்கள் நண்பருக்கு, வலையுலக நண்பர்களும் ஆதரவாய் இருப்பார்கள் என நம்புகிறோம்..

  ReplyDelete
 19. உங்கள் நண்பர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. சாரி தக்காளி.. நான் ரொம்ப லேட்ட்டு

  ReplyDelete
 21. உங்க நண்பருக்காக வருந்துகிறேன் நண்பா..

  ReplyDelete
 22. Philosophy Prabhakaran
  ரஹீம் கஸாலி
  தமிழ்வாசி - Prakash
  டக்கால்டி
  செங்கோவி
  தமிழ் 007
  bandhu
  தீபிகா
  பார்வையாளன்
  MANO நாஞ்சில் மனோ
  நா.மணிவண்ணன்
  பாரத்... பாரதி...
  வசந்தா நடேசன்
  இராஜராஜேஸ்வரி
  சி.பி.செந்தில்குமார்
  பதிவுலகில் பாபு

  உங்களின் மனமார்ந்த பிரார்த்தனை மூலம் நண்பன் சீக்கிரத்தில் குணமாவான்

  வருகைக்கு நன்றி நண்பர்களே

  ReplyDelete
 23. கஜா கஜா மேட்டரா இருக்குமுன்னு பார்த்தா, சென்டிமென்ட்ல நெஞ்ச நக்கிடீங்களே...வாழிய தாய் குலமே

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி