தக்காளி ஓட்டு போடுமா(!?)

வணக்கம் நண்பர்களே...........தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.............இந்த நேரத்தில் நடந்த ஓர் சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..........


ஒரு சின்ன ப்ளாஷ் பேக்................

அது ஒரு காலை நேரம்.....நானும் என் அம்மாவும் ஓட்டு போட சென்னை சாலிகிராமம் பூத்துக்கு சென்றிருந்தோம்...........

மணி 11.30 இருக்கும்...............

டேய் குமார்...........என்னடா இவ்ளோ கூட்டமா இருக்கு.............

விடும்மா சீக்கிரத்துல ஓட்டு போட்டுட்டு போயிறலாம்...........

(என் அம்மாக்கு இரத்த அழுத்தம் உற்பட பல விஷயங்கள் இருந்தாலும்.......ஓட்டு போடுவதை தவிர்த்ததில்லை இதுவரை!)

அப்போது திடும் என உள் புகுந்த கரை வேட்டிகள் அந்த அறையில் இருந்த வாக்காளர்களை வெளியேற்றினர்...........

அப்போது நான் அந்த அதிகாரியிடம்........49 O விண்ணப்பபடிவம் கேட்டுக்கொண்டு இருந்தேன்............என் தோளில் ஒரு கரை வெட்டி(வேட்டி!) கை வைத்தது..........

தம்பி கெளம்பு என்றது..........(நான் அந்த நண்பரை முறைத்து விட்டு என் பணியை தொடர்ந்தேன்!)

டேய் உன்னதான்............

நான் அப்போதும் அந்த படிவத்தை எழுதி முடிப்பதில் கண்ணாக இருந்ததால்.....என்னை விட்டு விட்டு மற்றவர்களை வெளியேற்றியது.........நானும் என் தாயும் அந்த தாளை கொடுத்துவிட்டு வெளியேறும்போது...........

உனக்கு இன்னைக்கு நேரம் நல்லா இருக்கு.........அதான் முழுசா போறே என்றான் அந்த தீவட்டி...........(நான் அவனை முறைத்தேன்!)


டேய் குமார் வா போலாம் என்று என்தாய் என்னை இழுத்துக்கொண்டு வந்தார்கள்........

(என் தாய் அங்கு இல்லாமல் இருந்திருந்தால் ஒரு வேளை வேறு விதமாக நடந்திருக்குமோ........)

இன்று....................

Account மேனேஜரிடம் இருந்து நெட் போனில் அழைப்பு..........

ஏம்பா திடீர்னு லீவு கேட்டு இருக்க............அதுவும் personal காரணம்னு சொல்லி......என்ன விஷயம்னு பாஸ் கேக்கறாரு...........

அது வந்து சார்................

சொல்லு பரவாயில்ல..........பணம் ஏதாவது வேணுமா...........

இல்லங்க.........ஏப்ரல் 13 எங்கூர்ல தேர்தல்...........அதுக்கு ஓட்டு போட போகணும் அதேன்..............


அந்தப்பக்கம் ஒரே சிரிப்பு சத்தம்..............ஏன்யா யாருக்காவது முடியல்லன்னு சொல்லு ஒத்துக்கறேன்..........அதுக்காக இப்படி ஒரு பொய் தேவையா................

சார் நீங்க விடுங்க நான் பாஸ் கிட்ட பேசிக்கிறேன்.......என்னை நீங்க அவமானப்படுத்தறதா நெனைக்கிறேன்..................

சரி டென்சன் ஆகாதே............இங்க பாரு project sign ஆகுற நேரம் நீ இருந்தே ஆகணும்........அதுவும் இல்லாம கொஞ்சம் யோசிச்சி பாரு நீ ஊருக்கு போயிட்டு வர கிட்ட தட்ட $2500 அதாவது 1 லட்சம் செலவாகும் யோசிச்சி முடிவு பண்ணு....அந்தப்பணம் இருந்தா உன்னோட குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட உபயோகப்படும்.........என்னவோ போப்பா நான் உன் நல்லதுக்கு சொல்றேன்..........

சார்...........நீங்க சொல்றது உண்மை தான்........ஆனா என் நாட்டுல எனக்கு இருக்க கடமை ஓட்டு போடுறது.......அது உங்க பார்வைல எப்படியோ.........4 நாள் லீவு கெடச்சா போதும்.......எனக்கு துட்ட விட கடமை முக்கியம்...........ஒரு வேளை நான் சொல்றது உங்களுக்கு முட்டாள் தனமா தோணலாம்...........என்னைப்பொறுத்தவரை இது என்னோட உரிமையோட கலந்த கடமை.................


உன்ன நெனச்சா என்ன சொல்றதுன்னு தெரியல போ...............என்றார்.

கொசுறு: இவை உண்மையாக நடந்தவை தங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன...............
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

22 comments :

 1. அம்புட்டு நல்லவானாய்யா நீ?

  ReplyDelete
 2. மெய்யாலுமேவா?

  ReplyDelete
 3. சார்...........நீங்க சொல்றது உண்மை தான்........ஆனா என் நாட்டுல எனக்கு இருக்க கடமை ஓட்டு போடுறது.......//

  ரெம்ப வருத்தப்படவேண்டாம்.. நீங்க போகலைனாலும் உங்க கடமைய செய்ய ஆளிருக்கு

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "அம்புட்டு நல்லவானாய்யா நீ?"

  >>>>>>>>>>>>

  அப்போ நீர் சொல்வதப்பாத்தா ஓட்டு போடறவங்க நல்லவனா இருக்கனுமா ஹிஹி!

  ReplyDelete
 5. @வைகை

  "மெய்யாலுமேவா?"

  >>>>>>>>>>>

  அடப்பாவிகளா உண்மைய சொன்னா என்னமா ஜர்க்காவுரானுங்க!
  .............................

  "ரெம்ப வருத்தப்படவேண்டாம்.. நீங்க போகலைனாலும் உங்க கடமைய செய்ய ஆளிருக்கு"

  >>>>>>>>>>>

  அது தெரிஞ்சி தான் நான் போகணும்னு சொல்றேன்

  ReplyDelete
 6. >>உன்னோட குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட உபயோகப்படும்.....

  நீயே ஒரு குழந்தைப்பையன்.. உனக்கு ஒரு குழந்தையா?

  ReplyDelete
 7. @சி.பி.செந்தில்குமார்

  "நீயே ஒரு குழந்தைப்பையன்.. உனக்கு ஒரு குழந்தையா?"

  >>>>>>>>>>>

  சரிங்க மாம்ஸ் நீங்க சொன்னத ஒத்துக்கறேன் ஹிஹி!

  ReplyDelete
 8. உங்க பொறுப்புணர்ச்சியை நான் பாராட்டுறேன்..!

  ReplyDelete
 9. நான் அப்போதும் அந்த படிவத்தை எழுதி முடிப்பதில் கண்ணாக இருந்ததால்.....என்னை விட்டு விட்டு மற்றவர்களை வெளியேற்றியது.........நானும் என் தாயும் அந்த தாளை கொடுத்துவிட்டு வெளியேறும்போது...........

  உனக்கு இன்னைக்கு நேரம் நல்லா இருக்கு.........அதான் முழுசா போறே என்றான் அந்த தீவட்டி...........(நான் அவனை முறைத்தேன்!)

  யோவ்! ஊரோட ஒத்து ஓடனும்! தெரியாதா உனக்கு? எதுக்கு மாத்தி யோசிச்சே?

  ReplyDelete
 10. இதோ வந்துட்டேன் மாப்ள..

  ReplyDelete
 11. உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மாப்பு!

  ReplyDelete
 12. @தமிழ் 007

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 13. @Speed Master

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 14. # கவிதை வீதி # சௌந்தர் said...
  இதோ வந்துட்டேன் மாப்ள..
  >>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள

  ReplyDelete
 15. தக்காளி, அந்த அல்லக்கை எப்படிய்யா அப்புறம் சும்மா விட்டான்....? சே....!

  ReplyDelete
 16. நாலு நாளு மின்னாடியே போஸ்ட்டு போட்டிருக்கிங்க போல.இன்னிக்கு தான் பாக்க கெடச்சிது!சரி லீவு கெடச்சுதா, இல்லியா?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி