வணக்கம் நண்பர்களே......................வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார்............................மாபெரும் வீரர்.....மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்.............


இவரைத்தெரியாதவர்கள் இருக்க முடியாது...................அன்றொரு நாள் போரில்...............

சக்கர வியூகத்தை உடைத்துக்கொண்டு உள் புகுந்தான் அபிமன்யு எனும் மாவீரன்................கோழையாக வளர்க்காமல் வீரனாக வளர்க்கப்பட்டவன்......எப்பேர் பட்ட எதிரி எதிரில் நின்றாலும் பயப்படாமல் போர் புரியக்கற்றவன்........

சுற்றிலும் சொந்தக்காரர்கள் (கோழைப்படை) எனும் எதிரிப்படை............தனி ஒருவனாக அப்படையை எதிர்த்து சண்டையிட்டுக்கொண்டு இருந்தான்..............

மகா பராகிரமசாளிகள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருந்தனர்............அவனை பார்த்து கெளரவப்படை சிரித்தது............அப்போதும் சிறிதும் மனம் கலங்காமல் சண்டையிட்டுக்கொண்டு இருந்தான்.............

உன் காலம் முடியப்போகிறது சிறுவா............உன் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்...............என்றான் அந்த மிகப்பெரியப்படையின் தலைவன்


என் காலம் முடிந்து விடும் என்று தெரிந்தே இந்த வியுகத்துக்குள் புகுந்தேன் பெரியவர்களே.........உங்களிடத்தில் போர்த்திறமை அதிகமிருந்தும் தர்மம் எனும் உயரிய குணம் இல்லாததது வருத்தமே...........நான் இறக்கலாம்.......என் வீரம் இறக்காது........உலகம் தன் வாழ் நாள் வரை என்னை மாவீரன் என்றும், மிகப்பெரிய படையை தனி ஒரு சிறுவனாக தன்னந்தனியாக எதிர்த்து போரிட்டு மாய்ந்தான் என்று புகழ் பாடும்..............


அதே நேரத்தில் உங்கள் நிலையை எண்ணிப்பாருங்கள்........இதுவரை பல கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நீங்கள்......இனி வரும் சமுதாயத்தின் பார்வையில் மனிதர்களாக அல்லாமல் புழுக்களாக மதிக்கப்படுவீர்கள்.........தாங்கள் இதுவரை எடுத்து வைத்த நல்ல புகழ் மறையும்........இப்புவி உள்ளவரை உங்கள் கோழைத்தனம் எதிரொலிக்கும்........நீவீர் புகழ் மாண்டு போகும்.............நான் இறப்பதற்கு அஞ்ச கோழை அல்ல......என் தாய் என்னை இப்புவிக்கு அளித்ததே இந்த அரும்பெரும் சாதனையை படைக்கத்தான் என்று இன்று புரிந்து கொண்டேன்......வெறும் மண்ணுக்காக......மதியிழந்து உங்கள் உயிரை இழக்கப்போகும் பெரியோரே.......அந்த மண்தான் உங்களையும் அரிக்கப்போகிறது ஞாபகம் வைத்துக்கொள்வீராக..........


சிரித்துக்கொண்டே உயிர் துறந்தான் அந்த மாவீரன்...............

கொசுறு: எத்தனை உயிர்களை பலி கொடுத்து வாங்கிய ஜனநாயகம் எனும் அபிமன்யுவை உங்களுக்கு தெரிகிறதா நண்பர்களே........இந்த அரசியல் வியாதிகள் அவனை குறிவைத்து நிற்பது தெரிகிறதா.........அவனைத்துளைத்திருக்கும் ஒவ்வொரு அம்பும் இலவசம் எனும் விஷம்.........முடிவெடுங்கள்.....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

30 comments :

 1. அருமையான கருத்து... நல்ல பதிவு.

  ReplyDelete
 2. @Chitra

  வருகைக்கு நன்றி சகோ

  ReplyDelete
 3. அருமை அருமை. அழகாக சொல்லி இருக்கீங்க. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 4. ஏன் நண்பரே, இன்னும் தமிழ்மணம் இணைப்பு கொடுக்கவில்லையா?

  ReplyDelete
 5. இப்படி எல்லாம் நல்ல பதிவு போட்டா எப்படிய்யா கும்மறது?

  ReplyDelete
 6. FOOD said...

  ஏன் நண்பரே, இன்னும் தமிழ்மணம் இணைப்பு கொடுக்கவில்லையா?

  அந்தாளு பல கனெக்‌ஷனை கவனிக்க வேண்டி இருக்காம்..

  ReplyDelete
 7. புராணங்களில் எனக்கு மிக பிடித்த வீரர்களில் அபிமன்யுவும்..இந்த்ரஜிதும் முக்கியமானவர்கள்!

  ReplyDelete
 8. இந்த அம்பு எத்தனை காலம்தான் துளைக்கும் என்று பார்ப்போம்?

  ReplyDelete
 9. @FOOD
  "ஏன் நண்பரே, இன்னும் தமிழ்மணம் இணைப்பு கொடுக்கவில்லையா?"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பரே தமிழ்மணம் எனக்கும் தகறாரு ஹிஹி!

  ReplyDelete
 10. @சி.பி.செந்தில்குமார்

  வருகைக்கு நன்றி மாப்ள!

  இப்படியெல்லாம் புரளி கெளபரத்துக்கும் நன்றி ஹிஹி!

  ReplyDelete
 11. @வைகை
  வருகைக்கு நன்றி மாப்ள!

  துளைத்துக்கொண்டு இருப்பதை உணர்த்தவே இந்தப்பதிவு!

  ReplyDelete
 12. வணக்கம் சகோ, அபிமன்யூ பற்றி இதிகாசக் கால வரலாற்றினை நினைவூட்டியிருக்கிறீர்கள்.
  அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கிக் கொண்ட வேளை அவனது தந்தையாரை(அருச்சுனனை) அழைத்த போது, மகாப்பாரதப் போர் நிறைவடைய வேண்டும் என்பதனால் கிருஷ்ணர் சூழ்ச்சி செய்து, அந்த அபயக் குரலை அருச்சுனனின் காதில் விழாமல் அபிமன்யூவைச் சாகடித்தகாப் இதிகாசத்தில் சொல்லப்படும் சூழ்ச்சி மட்டும் நினைவிற்கு வருகிறது.

  உங்களின் பதிவு அபிமன்யூவின் வாழ்க்கையினை நினைவூட்டி, இக்காலச் சமூகத்திற்கு வேண்டிய கடமைகளைச் சொல்லி நிற்கிறது.
  பதிவு தத்துவார்த்தம் நிரம்பிய வரலாற்று மேற்கோள்!

  ReplyDelete
 13. @நிரூபன்
  வருகைக்கு நன்றி மாப்ள...எதோ இந்த சிறு அணிலால் முடிந்த காரியம்!

  ReplyDelete
 14. அட்ரா...சக்க...

  சூப்பர் பதிவு மாப்பு!

  ReplyDelete
 15. @தமிழ் 007

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 16. அருமையான கருத்து! என்னடா திடீர்னு அபிமன்யுன்னு யோசிச்சேன்! சூப்பர்!

  ReplyDelete
 17. சூப்பர் மாப்பு வித்தியாசமான கோணத்தில் நல்ல கருத்து ...........

  ReplyDelete
 18. @ஜீ...

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 19. நிறைய எழுத தோன்றியது. வேண்டாம் தனி பதிவாகவே எழுதலாம் என்று நிறுத்திவிட்டேன் விக்கி.:))

  ReplyDelete
 20. @கக்கு - மாணிக்கம்

  வருகைக்கு நன்றி தலைவரே.....காத்திருக்கிறேன்!

  ReplyDelete
 21. இலவசத்துக்கு கொடுத்த சாட்டையடி அருமை...

  ReplyDelete
 22. @MANO நாஞ்சில் மனோ

  வருகைக்கு நன்றி மாம்ஸ் ஹிஹி!

  ReplyDelete
 23. இதோ வந்துட்டேன் நண்பா..

  ReplyDelete
 24. முடிவெடுக்கும் நேரம் கடந்து விட்டதென்றே தோன்றுகிறது. இனி எக்காலமும் ஜனநாயகம் மீளாது இங்கு

  ReplyDelete
 25. இத விட அருமையா சொல்ல முடியாது....

  ReplyDelete
 26. @ஜீவன்சிவம்

  "முடிவெடுக்கும் நேரம் கடந்து விட்டதென்றே தோன்றுகிறது. இனி எக்காலமும் ஜனநாயகம் மீளாது இங்கு"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பரே.......அப்படி மட்டும் நினைத்து விடாதீர்கள்.....நம்மிடம் மிஞ்சி இருப்பது நம்பிக்கை என்ற தும்பிக்கை மட்டுமே!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி