தனித்திரு ஆனா!.....பழிக்காதே!

வணக்கம் நண்பர்களே,


வெளி நாடுகளில் குடும்பத்துக்காக தன்னை எரித்து உழைத்துக்கொண்டு இருக்கும் உள்ளங்களில் அடிக்கடி தோன்றும் விஷயம் "என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு மனைவி மக்களைப்பிரிந்து வெளி நாடுகளில் வேலை நிமித்தமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெஞ்சங்கள் சுமந்து கொண்டிருக்கும் வலிகள் ஏராளம். சரி விஷயம் என்னான்னு கேக்குறீங்களா சொல்றேன் .............


பொதுவா நான் இதுவரை மத உணர்வுகளை பற்றி பதிவிட்டதில்லை. ஆனால் அதே சமயம் யாராவது அது சம்பந்தமாக பதிவிட்டால் படிக்க தவறுவதில்லை. எனக்கு என்னா தோணுதுன்னா............இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே இந்தப்பதிவு.


ஆத்திகம், நாத்திகம் - இந்த விஷயத்துக்கு என் கருத்து - எனக்கு சாமி கும்புட தோணுது கும்புடறேன், உனக்கு புடிக்கல கும்பிடாத அவ்ளோதான். இந்த பெரும் விஷயங்களில் நான் கொண்ட கருத்து. அதை விடுத்து எப்போதுமே என்னமோ சாமி கும்பிடறவன் எல்லாம் முட்டாள் மாதிரி சித்தரிப்பது எதற்க்கு என்று புரியவில்லை.

மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை என்பதாலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

யாராவது நமக்கு ஒரு சிறு உதவி செய்தாலே அவருக்கு நன்றி சொல்லும் மரபு நம்மிடம் உண்டு. எவ்ளோ பெரிய உதவிகளை செய்து வரும் இயற்கையை அவரவர்க்கு பிடிக்கும் வழியில் வழி படுகிறோம். ஆனால் அதனையே தொழிலாக கொள்பவர் சிலர்(இது தனிப்பாதை!).


சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.


கடவுள் மறுப்பு கொள்கை உடையோர் கூட இப்படி கருத்துகள் கூறுவதில்லை. மாறாக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அறிவாளிகள் மட்டுமே தான் தோன்றித்தனமாக எதிரிகளைப்போல் மோதிக்கொள்கின்றனர். வேண்டாமே, அமைதியாய் இருப்பதே பெரிய வலிமை என்று யாரோ சொன்னார்கள். தயவு செய்து இனி பதிவிடும்போது(மத விஷயங்கள்!) என் கருத்தையும் நண்பர்கள் கொஞ்சம் பரிசீலனை செய்தல் நன்று என்பது என் தாழ்மையான வேண்டுதல்.

ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!

கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே. 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

39 comments :

 1. தமிழ்மணத்துல இணைச்சுட்டேன்

  ReplyDelete
 2. புது வீடு கட்டலாமா..மாமா அடிக்கடி பதிவு போடலாமா

  ReplyDelete
 3. நாத்திகம் இந்திய மதத்தின் ஒரு அங்கமே! ஏனெனில் ஆத்திகவாதியை விட, நாத்திகவாதியே மதத்தைப் பற்றி அதிகம் அறிய ஆசைப்படுகிறான்!

  ரத்தம் சூடாக இருக்கும் போது, மதம் மட்டுமல்ல எதையும் மதிக்காத போக்கு! - இதற்கு விதி வில்க்கு மிகச் சிலரே!

  அங்கங்கள் தளர ஆரம்பிக்கும் போது, அகங்காரங்களும் விலகி, சிவமே அன்பாகி விடுகிறது!

  ReplyDelete
 4. @ஆர்.கே.சதீஷ்குமார்

  "தமிழ்மணத்துல இணைச்சுட்டேன்"

  >>>>

  வருகைக்கும் இணைத்ததுக்கும் நன்றி நண்பரே...
  .........................

  புது வீடு கட்டலாமா..மாமா அடிக்கடி பதிவு போடலாமா!

  >>>>>>>>>

  உங்கள விடவா ஹிஹி

  ReplyDelete
 5. @ரம்மி

  "ரம்மி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  நாத்திகம் இந்திய மதத்தின் ஒரு அங்கமே! ஏனெனில் ஆத்திகவாதியை விட, நாத்திகவாதியே மதத்தைப் பற்றி அதிகம் அறிய ஆசைப்படுகிறான்!

  ரத்தம் சூடாக இருக்கும் போது, மதம் மட்டுமல்ல எதையும் மதிக்காத போக்கு! - இதற்கு விதி வில்க்கு மிகச் சிலரே!

  அங்கங்கள் தளர ஆரம்பிக்கும் போது, அகங்காரங்களும் விலகி, சிவமே அன்பாகி விடுகிறது!"

  >>>>>>>>

  உங்க கருத்துக்கள் உண்மையின் பிரதிபிம்பங்களே நன்றி நண்பா!

  ReplyDelete
 6. இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
  //


  ஓ.கே..


  கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க..

  ReplyDelete
 7. //சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. //


  என் கருத்தும் அதேதான்....

  ReplyDelete
 8. ////மனிதனுக்கு ஒருவித பயம் ஏதாவது ஒரு விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதாலோ அல்லது நமக்கு ஒளி, ஒலி, தண்ணீர், காற்று எனும் விஷயங்களை தரும் இயற்க்கையை வணங்குவது தவறில்லை என்பதாலோ கூட கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கலாம்(ஒரு சிந்தனை தான்!).

  /// இந்த விடயத்தில் நானும் உடன் படுகிறேன்.

  ReplyDelete
 9. //தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.//


  சரிதான்....

  ReplyDelete
 10. @பட்டாபட்டி....

  "பட்டாபட்டி.... said...

  இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.
  //


  ஓ.கே..


  கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க.."

  >>>>

  நடத்துய்யா விளங்கிடும் ஹிஹி!

  ReplyDelete
 11. @கந்தசாமி.

  வருகைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. //ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!//

  அட கொக்காமக்கா அங்க சுத்தி இங்கே சுத்தி அய்யா அடிமடியிலேயே கையை வச்சிட்டியே......

  ReplyDelete
 13. "என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.//

  நம்ம சகோவுக்கு வீட்டு ஞாபகம் வந்திட்டுப் போல இருக்கே.

  ReplyDelete
 14. ஓ.கே..


  கடவுள் சாய்பாபா வாழக... வளர்ர்ர்ர்ர்ர்ர்க.."

  >>>>

  நடத்துய்யா விளங்கிடும் ஹிஹி!///

  வெளங்கிட்டு இருக்கு.....

  ReplyDelete
 15. //கொசுறு: இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே. //


  நடத்துங்க மக்கா நடத்துங்க....

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. இந்தப் பதிவின் கருத்துக்கள் நியாயமானவையே, மனிதனது நம்பிக்கைகளை விட,
  மனிதனுக்கு ஒரு விடயத்தைத் திணித்து,
  அதனூடாகப் பணம் ஈட்டுவதிலே இந்து மதத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

  இதனை நானும் ஓர் இந்து எனும் வகையில் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 18. இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் ஆனால் அதே நேரத்தில் இறை நம்பிக்கை உள்ளவர்களை மட்டப்படுத்தி பேசுவதை விரும்பாதவர் என்றும் சொல்லி இருந்தார். நியாயமான பேச்சு. இறைவன் இருக்கின்றான். அதை உணர்வின் மூலமே அறிய முடியும். இதில் எத்தனை நாட்கள் விடாமல் வாதம் செய்தாலும் முடிவு கிடைக்காது. நான் 100% இறைவனை நம்புகிறேன். இறைவன் பெயரால் நடக்கும் தவறுகளை கண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

  ReplyDelete
 19. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!//

  அட கொக்காமக்கா அங்க சுத்தி இங்கே சுத்தி அய்யா அடிமடியிலேயே கையை வச்சிட்டியே......"

  >>>>>>>>>

  ஹிஹி சரியா சரி!

  ReplyDelete
 20. @நிரூபன்

  "நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  "என்னா இருந்தாலும் சொந்த ஊருல இருக்காப்போல வருமா" - எனும் ஏக்கம் வந்து செல்லும். அதுவும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் பல பேருக்கு தனிமை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.//

  நம்ம சகோவுக்கு வீட்டு ஞாபகம் வந்திட்டுப் போல இருக்கே."

  >>>>>>>>>

  உண்மைதான்யா ஹிஹி!

  ReplyDelete
 21. @நிரூபன்

  "நிரூபன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  இந்தப் பதிவின் கருத்துக்கள் நியாயமானவையே, மனிதனது நம்பிக்கைகளை விட,
  மனிதனுக்கு ஒரு விடயத்தைத் திணித்து,
  அதனூடாகப் பணம் ஈட்டுவதிலே இந்து மதத்தைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தொழிற்படுகின்றன.

  இதனை நானும் ஓர் இந்து எனும் வகையில் வெளிப்படையாகவே ஒத்துக் கொள்கிறேன்"

  >>>>>>>>>

  தொழிலாக ஒரு க்ரூப் செயல் படுகிறது.......அவர்களை தாக்குவதாக நினைத்து பல நல்ல உள்ளங்களை காயப்படுத்துவது ஞாயமில்லை மாப்ள!

  ReplyDelete
 22. @! சிவகுமார் !

  "! சிவகுமார் ! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  இயக்குனர் மணிவண்ணன் ஒரு முறை அளித்த பேட்டியில் தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றும் ஆனால் அதே நேரத்தில் இறை நம்பிக்கை உள்ளவர்களை மட்டப்படுத்தி பேசுவதை விரும்பாதவர் என்றும் சொல்லி இருந்தார். நியாயமான பேச்சு. இறைவன் இருக்கின்றான். அதை உணர்வின் மூலமே அறிய முடியும். இதில் எத்தனை நாட்கள் விடாமல் வாதம் செய்தாலும் முடிவு கிடைக்காது. நான் 100% இறைவனை நம்புகிறேன். இறைவன் பெயரால் நடக்கும் தவறுகளை கண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை"

  >>>>>>>>>

  உங்க கருத்துக்கள் உண்மையே நன்றி மாப்ள!

  ReplyDelete
 23. இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல...........
  //////////////////////////////////
  அப்படியா?

  காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!./
  //////////////////////////////////

  அய்யய்யோ இந்த ஆளு கலைஞ்சர் மனசை புண் படுத்திட்டாரு ...................

  ReplyDelete
 24. //இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் சார்ந்து இருக்கும் மதத்தை தாக்குவதை பெருமையாக கருதுகிறார்களோ என்று தோன்றியதின் விளைவே//

  உண்மை மாம்ஸ்!
  எனக்கும் அப்படி அடிக்கடி தோன்றுவதுண்டு!
  கடவுள் நம்பிக்கை இல்லையென்று அடிக்கடி சொல்லிக் கொள்வதில் சிலருக்கு ஒரு பெருமை! அப்படி ஒருவர் அடிக்கடி பேசுவார். அதைப்பற்றி எனது பதிவு...

  http://umajee.blogspot.com/2010/12/blog-post_30.html

  ReplyDelete
 25. >>இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.

  தக்காளி கலக்கறான்

  ReplyDelete
 26. வலிக்காம அடிக்கறிங்க...

  நாம் ரொம்ப லேட்டு...

  இருந்தாலும் வந்துட்டோம்ல்ல..

  ReplyDelete
 27. ஆஹா...புது டிசைனிங் கலக்கல்

  ReplyDelete
 28. ஏனெனில் காலம் கடந்து வயது அதிகமாகும் போது வெளியில் சொல்ல முடியாமல் நித்தம் கடவுளை திருட்டுத்தனமாக வழி படும் நல்லவர்கள் இப்பூமியில் பெரிய பதவிகளில் உள்ளதையும் நினைவில் கொள்வீர்களாக!
  இதுவும் சரிதான் .
  SUPER

  ReplyDelete
 29. நான் ரொம்ப லேட்டு மாப்ள..

  ReplyDelete
 30. சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

  ReplyDelete
 31. //சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  >>இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.

  தக்காளி கலக்கறான்///


  உண்மைய சொல்லுய்யா நீ பதிவை படிச்சியா.....???

  ReplyDelete
 32. ///இந்தப்பதிவு யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல. அதே நேரத்தில் யாரும் அடுத்தவர் மனத்தை புண்படுத்தக்கூடாது என்பதற்க்கு மட்டுமே.///

  எப்படிலாம் தப்பிக்கவேண்டியதிருக்கு............. இல்லனே

  ReplyDelete
 33. //சமத்துவம் என்பது அடுத்தவர் மனத்தை புண்படுத்தாமல் இருத்தலே என்பது எனது தாழ்மையான கருத்து. அதை விடுத்து நம்மை நாமே தாக்கிக்கொள்வதில் என்னா பெருமை(!?). தயவு செய்து முடிந்தவரை கருத்துகளை கூறும்போது அறிவுரை சொல்வது போல் அல்லாமல் எனக்கு இப்படி தோன்றுகிறது என்பது போல் கூறுவது நல்லது என்று நினைக்கிறேன்.//
  அருமையாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 34. ஹே...மாம்ஸ்...வலைப்பூ சட்டை நல்லாயிருக்கு

  ReplyDelete
 35. உங்கள் மனதில் உள்ளதை சொல்லி விட்டிர்கள் வாழ்த்துக்கள்.

  என் மனதில் உள்ளதையும் சொல்லி விடுகிறேன்.

  நாம் எந்த மதத்தில் இருந்தாலும் முதலில் எல்லோரையும் மனிதராக மதிக்க கற்றுக் கொள்ளனும்.

  எனக்கு அல்லாஹ் கடவுள்.
  ரமேஷுக்கு சிவன்தான் கடவுள்.
  இன்னும் சிலருக்கோ இயற்கைதான் கடவுள்.

  ஆக நாம் கருத்துக்களை பிறர் மனம் நோகாதபடி பகிர்வதர்க்கு முயற்சி செய்வதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமை.

  திரு குரான்,இராமாயணம்,பைபிள்,எல்லாவற்றையும் ஆராயுங்கள் எது உங்கள் வாழ்விற்க்கு ஏற்றதோ அதை தேர்ந்தெடுங்கள்.

  ReplyDelete
 36. அண்ணே அருமை...நான் எழுதம்னு நெனச்சது..நீங்க முந்திகிட்டீங்க...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி