வணக்கம் நண்பர்களே.......


கடந்த ஒரு வாரமாக கடின உழைப்பை சம்பளம் தருபவர்கள் எடுத்துக்கொண்டு விட்டதால்(!!).......நண்பர்களின் பதிவுகளுக்கு வர இயலவில்லை.....உடனுக்குடன் கருத்துரை வழங்கவும் முடியவில்லை......எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......

நடந்து கொண்டு இருக்கும் ஒரு விவகாரமான வழக்கில்......சேர்க்கப்பட்டு இருக்கும்(!)..........என் தமிழ்நாட்டின் தியாக தீபத்தை காப்பாற்ற கோரி இங்கிருந்து ஆப்பிரிக்கா வரை நடை பயணம் போகலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறேன்.......


யாரும் இதில தவறு கண்டு பிடிக்க முடியாது..........ஏன்னா எங்க சோழ மன்னனின் தவப்புதல்வி........பெண் இனத்துக்காக தன்னை அரசியலில் இணைத்துக்கொண்ட புண்ணியவதி(!) அவர்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாமல் அவரை கோர்ட்டு படியேற வைத்திருக்கும் மத்திய நேர்மை தவறாத(!) மன்னர்களை பார்த்து கேட்கிறேன்........


தேரா மன்னா செப்புவது....என்னா!...........எங்கள் மாசற்ற மாணிக்கம்..........ஊழல் எனும் பெயரை அன்பளிப்பு என்று மாற்றி வைத்த பெருமைக்குரிய சோழ மன்னனின் குழந்தையை போய் இப்படி அலைக்கழிக்கிறீர்களே.......என்னய்யா உங்க ஞாயம்.........ஹூம்!


ராசா எனும் நேர்மை தவறாத சிங்கத்தை(!) உலகுக்கு தெரியவைத்த எம் சோழனை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்...........இப்படி ஒரு விஷயம் நிகழாதிருந்தால்........இந்தியா முழுமைக்கும் மட்டும் இல்லாமல் உலகிற்கே மிகப்பெரிய சாதனையை எடுத்து சென்ற மனிதனை(!) எப்படியப்பா தெரியும்......!

சோதனைய கடந்தா தானய்யா சாதனை(அய்யோ கொல்றாங்களே!)..........இந்த சோதனைகள் எங்களுக்கு புதிதல்ல.........உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை எங்கே எங்கள் சோழன் பெற்று விடுவாரோ என்று பயந்து போய் இப்பேற்பட்ட செயல்களை செய்யும் நல்லோரே(!).........ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.............இதெல்லாம் நீங்களே எங்களுக்கு செய்து கொண்டு இருக்கும் மிகப்பெரிய விளம்பரங்கள்.......

எங்களுக்கு தெரிந்ததெல்லாம்...........கடமை, கோமணம் ச்சே கண்ணியம், தட்டுப்பாடு மன்னிக்க கட்டுப்பாடு.........இதை வழி வழியாக நாங்கள் பின்பற்றி வருகிறோம்...........இனி அடுத்த பல தலைமுறைகளும் இதனையே பின் பற்றவே எங்கள் சோழர்(!)...........தன் குழந்தைகளை இந்த மண்ணுக்காக கொடுத்திருக்கிறார்...........

ஏய் உலகமே உனக்கு ஒரு நாள் தெரியவரும் எம் சோழரின் மக்கள் குற்ற மற்றவர்கள் என்று.......அன்று நீ அழுது புரண்டாலும்..........நான் உன்னை மன்னிக்க மாட்டேன்......ஞாபகம் இருக்கட்டும்!..........எல்லோரும் எதிர்பார்க்கும் சோழனுடைய ஆட்சியை எதிர்நோக்கி இருக்கும் ஒரு சாமானியன் பார்வையில்....


கொசுறு: பதிவின்தலைப்புக்கான விளக்கம் என்னவென்றால்....கோர்டில் இருக்கும் சொம்பு தண்ணீர் பேசுகிறது ஹிஹி!........தொடர்ந்து சீரியஸ் பதிவு எழுதேறேன்னு சொல்லி ஒரு நண்பர் திட்டியதால்.......ஹிஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

39 comments :

 1. இந்த குழந்தையை(!) //// இந்த குழந்தையை பார்றா ? பால் குடிக்குமா?

  ReplyDelete
 2. உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை //// இன்னும் பிடிக்கலையா ?

  ReplyDelete
 3. அருமை,அதுவும் தலைப்பு சொம்புல ஜலா,நல்லா இருந்தது

  ReplyDelete
 4. நீங்க வச்ச டைட்டிலுக்கே உங்கள கல்லால அடிக்கணும்

  ReplyDelete
 5. //எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......//

  "ஹலோ.. அப்துல் கலாம் சாரா. வியட்நாம்ல விழுற மாதிரி ஒரு ராக்கெட் கண்டுபிடிக்க சொன்னனே. எப்ப ரெடி பண்ணுவீங்க?

  ReplyDelete
 6. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  இந்த குழந்தையை(!) //// இந்த குழந்தையை பார்றா ? பால் குடிக்குமா?"

  >>>>>>>>>>>

  நான் காபி குடிப்பேனுங்க ஹிஹி!
  ...............

  !* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தை //// இன்னும் பிடிக்கலையா ?
  >>>>>>>>>>>>>

  இன்னும் டீ வரலைங்க!

  ReplyDelete
 7. @meenu-asha

  வருகைக்கு நன்றிங்கோ!

  ReplyDelete
 8. @Carfire

  "Carfire said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  நீங்க வச்ச டைட்டிலுக்கே உங்கள கல்லால அடிக்கணும்"

  >>>>>>>>>

  விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த விட்ரு!

  ReplyDelete
 9. @! சிவகுமார் !

  "! சிவகுமார் ! said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

  //எல்லோரும் இந்த குழந்தையை(!) பொறுத்தருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.......//

  "ஹலோ.. அப்துல் கலாம் சாரா. வியட்நாம்ல விழுற மாதிரி ஒரு ராக்கெட் கண்டுபிடிக்க சொன்னனே. எப்ப ரெடி பண்ணுவீங்க?"

  >>>>>>>>>>>>>>

  விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த தெரியாம சொல்லிருச்சி விட்ரு ஹிஹி!

  ReplyDelete
 10. ///எங்கள் மாசற்ற மாணிக்கம்..........ஊழல் எனும் பெயரை அன்பளிப்பு என்று மாற்றி வைத்த பெருமைக்குரிய சோழ மன்னனின் குழந்தையை போய் இப்படி அலைக்கழிக்கிறீர்களே.......என்னய்யா உங்க ஞாயம்.........ஹூம்!/// ஆமால்ல அதுதானே ...)

  ReplyDelete
 11. நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி

  ReplyDelete
 12. என்னது? குழந்தைப்பையனா? அடேய்..

  ReplyDelete
 13. @சி.பி.செந்தில்குமார்

  மைனஸ் ஓட்டு வாங்குறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் தல.. இது சின்ன பயபுள்ள

  ReplyDelete
 14. He He...Asusual in your style...Super...

  ReplyDelete
 15. சொம்பில வம்பு!! :)

  ReplyDelete
 16. என்னய்யா இப்பிடி போட்டு தாக்குறீங்க...நம்ம மைனஸ் ஓட்டுகாரன் உள்ளே வந்துற போறான்..ஜாக்கிரதை..

  ReplyDelete
 17. தமிழ்மணம் ஆறாவது ஓட்டு போட்டாச்சு, ஏழாவதா ஒரு ஓட்டு போடுங்கப்பா...

  ReplyDelete
 18. //விடுய்யா மாப்ள எதோ அறியாத குழந்த விட்ரு!//


  ஹா ஹா ஹா ஹா அடகொன்னியா, இதை நீராய்யா சொல்றது. எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது...

  ReplyDelete
 19. //சி.பி.செந்தில்குமார் said...
  நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி///


  மிலிட்டரி'காரன் சுட்டுபுடுவான்னு பயம்தான்...

  ReplyDelete
 20. //என்னது? குழந்தைப்பையனா? அடேய்..//


  அட விடுய்யா பொழச்சி போகட்டும்...

  ReplyDelete
 21. @MANO நாஞ்சில் மனோ

  உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க

  ReplyDelete
 22. வெறுமனே சோழன் என்று சொன்னால் எப்படி?மனுநீதிச் சோழன் என்று சொல்லுங்கள்!

  ReplyDelete
 23. //Carfire said... [Reply to comment]
  @MANO நாஞ்சில் மனோ

  உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க
  May 6, 2011 5:08 PM///

  இல்லையே சரியாதானே இருக்கு....

  ReplyDelete
 24. இது விக்கி ஸ்டைல்!

  ReplyDelete
 25. //MANO நாஞ்சில் மனோ said...
  உங்க சைட்ல தமிழ் மனம் ரொம்ப மக்கர் பண்ணுது கொஞ்சம் என்னனு கேளுங்க
  இல்லையே சரியாதானே இருக்கு....//
  இல்ல, எல்லா சைட்லயும் தமிழ்மணம் பிரச்னை பண்ணுது.

  ReplyDelete
 26. தமிழ்மணத்தில் ஏழாவது சொம்புல ஜலம்!

  ReplyDelete
 27. ராசா எனும் நேர்மை தவறாத சிங்கத்தை(!) உலகுக்கு தெரியவைத்த எம் சோழனை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுபவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்...........இப்படி ஒரு விஷயம் நிகழாதிருந்தால்........இந்தியா முழுமைக்கும் மட்டும் இல்லாமல் உலகிற்கே மிகப்பெரிய சாதனையை எடுத்து சென்ற மனிதனை(!) எப்படியப்பா தெரியும்......!//

  ஐயோ...ஐயோ...சகோ- கலக்கலான அரசியல் கலாய்ப்பு..
  ஹி...ஹி...

  ReplyDelete
 28. செம்பு ஜலா...தலைப்பே ஒரு ஹிக்காக இருக்கே.

  ReplyDelete
 29. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said... [Reply to comment]
  நீயும் தான் தி முக வை தாக்கறே.. ஆனா உனக்கு யாரும் மைனஸ் ஓட்டு போடலையே .. அது ஏன்? ஹி ஹி"

  >>>>>>>>>>>>>>>>>>>

  அண்ணே என்னே இப்படி இல்லாதத எல்லாம் சொல்லி இந்த பிஞ்சி குழந்தைய பயமுறுத்திறீங்க ஹிஹி!

  ReplyDelete
 30. @Jana

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 31. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said... [Reply to comment]
  என்னய்யா இப்பிடி போட்டு தாக்குறீங்க...நம்ம மைனஸ் ஓட்டுகாரன் உள்ளே வந்துற போறான்..ஜாக்கிரதை.."

  >>>>>>>>>>>>>>

  ஏன்யா நீவேற அதெல்லாம் பெரிய மனுசங்க விஷ்யம்யா!

  ReplyDelete
 32. @சென்னை பித்தன்

  "சென்னை பித்தன் said... [Reply to comment]
  வெறுமனே சோழன் என்று சொன்னால் எப்படி?மனுநீதிச் சோழன் என்று சொல்லுங்கள்!"

  >>>>>>>>>>>

  அப்படியும் சொல்லிக்கலாம்னே!
  வருகைக்கு நன்றி அண்ணே!

  ReplyDelete
 33. @FOOD

  வருகைக்கு நன்றி தல!

  ReplyDelete
 34. @நிரூபன்

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி