விமான விபத்து - ஜஸ்ட்டு மிஸ்ஸு!

வணக்கம் நண்பர்களே...........


இப்பவே சொல்லிடுறேன்......இது ஒரு குடிக்காரப்பதிவு....அதனால நல்ல பசங்க(குடி விருப்பம் அற்றவர்கள் ஹிஹி!).........பத்து அடி பின்னே போயிக்கோங்க ஹிஹி!..........

விபத்துக்களை காட்சியாக ஊடகங்களில் காணும்போது மனது பதறும்........அதுவே நம் வாழ்வில் ஏற்படும் போது........எப்படி இருக்கும்......அதன் பாதிப்பே இந்த பதிவு...........

நான் வேலை நிமித்தமாக.........ஹனோயில் இருந்து டானாங்(முன் கால தண்டாயுதம்!).........எனப்படும் உள்நாட்டு பயணத்தை செய்ய வேண்டி வந்தது........இரு நாட்கள் முன்பு...........

இந்த நாட்டு விமானங்கள் மிகுந்த சிரத்தையோடு கவனிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை எனக்கு.........அதன் காரணமாக மிக தைரியமாக செல்வேன்......இந்த முறையும் அவ்வாறு சென்று விட்டேன்............


கிளம்பிய நேரம் இரவு என்பதால்.......சற்று அயர்ந்து விட்டேன்........திடீரென்று அலறல் சத்தம்..........என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது........விமானத்தின் கட்டுப்பாடு தளர்ந்திருந்தது போலும்........ஆட்டம் பலமாக இருந்தது.......

நானும் இரவு எனபதால் அடித்த நீர் சத்து காரணமாக......சுற்றிலும் சிறிது பொறுமையாக நோட்டம் விட்டேன்........

ஓ......எல்லோரும் தங்கள் தெய்வங்களை வேண்டிக்கொண்டு இருப்பதை காண முடிந்தது......என்னங்கடா இது...இந்த வெண்ணைக்கு(எனக்கு!) வந்த சோதனை.......சரி அடிச்ச சரக்கு இறங்கிப்போச்சி........அடி ஆத்தா கொஞ்சம் இங்க பாத்தா நல்லா இருக்கும்.........


அந்த பெண்!..........விமான பணிப்பெண் என்னை கடந்து போக முயன்ற போது.........

ஹல்லோ.........

சொல்லுங்க.........

இன்னொரு பெக் வேணும் கிடைக்குமா...........

என்ன நடந்துட்டு இருக்கு தெரியுமா...........

ஹிஹி அதான் போகப்போறோமே.........கொஞ்சம் போட்டுக்கிட்டு போவோமே.......அதான் கேட்டேன்.........

அவள் என்னை முறைத்து விட்டு அகல முயன்றாள்........

நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ...........

ஸ் ஸ் ..........ஓகே வெயிட்!

(பக்கத்தில் இருந்த மனிதர்.....என்னைப்பார்த்து இப்படியும் குடிகாரர்கள் உண்டா என்றார்....)

ஹலோ.......

என்ன என்றார் அவர்...........


ஏன்யா.....மேல போகணும்னு முடிவாயிருச்சி......இதுல என்ன குடிச்சிட்டு போனவன்........குடிக்காம போறவன்......மூடிட்டு உன் சாமிய கும்பிடு என்று சொல்லி விட்டு காத்திருந்தேன்.........

(அந்த மாது(!) என்னை நோக்கி வந்தாள்......எனக்கு முன் உற்காந்து இருந்த பெண் மணியிடம்......)

சாரி...பிரச்னை கட்டுக்குள் வந்துடுச்சி....பயப்பட தேவையில்ல...சீக்கிரத்துல நல்ல விதமா தரை இறங்கிடுவோம்........என்றாள்......

(நான் அவளை நோக்கி!)

ஹாலோ.......நான் கேட்டதுக்கு இன்னும் பதில் இல்லை.......

அவள் என்னை முறைத்து பார்த்தாள்.........பின் என்ன நினைத்தால் என்று தெரியவில்லை விருட்டென்று போனவள் அந்த குடுவை கொண்டுவந்து...ஒரு கோப்பையில் ஊற்ற வேண்டியதை ஊற்றி கொடுத்து விட்டு என் நன்றியை நிராகரித்து சென்று விட்டாள்........

குலுங்கிய விமானம்.......தரையை இருமுறை முத்தமிட்டு விட்டு.......மூன்றாவது முறை தள்ளாட்டத்துடன் பாதுகாப்பாக இறங்கி விட்டது.......

எல்லோரும் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்துக்கொண்டும்......ஆண்டவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டும் இருந்தனர்......


பக்கத்தில் இருந்தவர்..என்னைப்பார்த்து....புன்னகைத்தார்........

நானும் "Finlay i got my drink" என்றேன்...........

அவர் என்னை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு சென்றார்..........

கொசுறு: மக்களே நீங்களே சொல்லுங்க என் மேல ஏதாவது தப்பு இருக்கா......இந்த உலகம் ஏன் இப்படி கோவப்படுது என் மேல.........அறியல......புரியல.......தெரியல!(விமானத்துல எந்த மொழில பேசுனாங்க என்பதனைத்தும் தமிழ் படுத்தப்பட்டுள்ளது.....பிளக்காத்தனமா கேக்கப்படாது! ஹிஹி!) 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. see this

  http://kumpuduraenunka.blogspot.com/2011/05/blog-post_20.html

  ReplyDelete
 2. அடடா உங்கள் குடியுரிமையை விட்டு குடுக்காம இருந்திருகின்களே

  ReplyDelete
 3. விக்கி நீங்களும் மரணத்துக்கு
  அஞ்சாத ஒரு மா வீரர்தான். எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு. :)) எதார்த்தம் ரொம்ப அநியாயமாத்தான் தெரியும் அதனை நம்பாதவர்களுக்கு. எல்லாரும் உங்களை மாதிரியா என்ன ? விடுங்க.

  ReplyDelete
 4. HEY MACHCHI......GOOD EXPERIENCE....... AND TRY TO STOP DRINKING.........I HATE IT

  ReplyDelete
 5. அட மாம்ஸ் நீங்களும் நம்மாளா? திநகர்ல இருக்கற கிங் ஓடின் பார் போலாமா “-)

  ReplyDelete
 6. Oruvarai oruvar anaithuk kondeergalaa?

  Ok Ok

  ReplyDelete
 7. /////ஹிஹி அதான் போகப்போறோமே.........கொஞ்சம் போட்டுக்கிட்டு போவோமே.......அதான் கேட்டேன்.........

  அவள் என்னை முறைத்து விட்டு அகல முயன்றாள்........//// அப்ப முறைக்காமல்............ஹஹாஹா

  ReplyDelete
 8. ஆபத்து வேளையிலும் எப்படி ஸ்டெடியா நின்றிருக்கீங்க!

  ReplyDelete
 9. Anne sarakku oothi kudutha ponnu supera irundhucha

  ReplyDelete
 10. நீ பயந்து போய்தானே பெக்கு கேட்டே என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் ஹி ஹி ஹி ஹி....

  ReplyDelete
 11. //அதான் போகப்போறோமே.........கொஞ்சம் போட்டுக்கிட்டு போவோமே.......அதான் கேட்டேன்.........
  //

  நல்ல கொள்கை போங்க

  ReplyDelete
 12. விக்கி அண்ணா நானா இருந்த சைடு டிசும் சேர்த்து கேட்டுருப்பன் ..
  . என் இனமடா நீ

  ReplyDelete
 13. மாம்ஸ் பயணிக்கரப்போ கொஞ்சம் கொறச்சுக்கங்க.

  ReplyDelete
 14. //மாம்ஸ் பயணிக்கரப்போ கொஞ்சம் கொறச்சுக்கங்க// தம்பி சொல்றதைக் கேளுங்க விக்கி.

  ReplyDelete
 15. //மாம்ஸ் பயணிக்கரப்போ கொஞ்சம் கொறச்சுக்கங்க// தம்பி சொல்றதைக் கேளுங்க விக்கி.

  ReplyDelete
 16. இப்படித்தான் என்னா பிரச்சனை வந்தாலும், ”தீயா” இருக்கனும் கொமாரு..

  ReplyDelete
 17. நமக்கு வேலை முக்கியம்.. .

  வாழ்க்கையின் கடைசி நேரத்திலும்.. கடமை ஆற்றிய உம் ஆற்றல் கண்டு சிலிர்த்தேன்..


  அதே பிரச்சனை வந்திடுச்சு.. அப்பவே காந்தர்வ மணம் புரிஞ்சிருக்கலாமே..
  ஆமாம.. ஏர்ஹோஸ்டல்.. அழகா இல்லையா?..

  சரி.. விடு.. மாமே...
  ஹி..ஹி

  ReplyDelete
 18. 30000 அடிக்கு மேல பிளேன் போயிட்டிருக்கு! எந்திரிச்சா நிக்கறே?
  எங்கே மூஞ்சில இருந்த கம்பிளிப் பூச்சியைக் காணோம்?

  ReplyDelete
 19. அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.. நாயே .. நக்கல் பண்றே/.? ராஸ்கல்..

  ReplyDelete
 20. இப்பவே சொல்லிடுறேன்......இது ஒரு குடிக்காரப்பதிவு....அதனால நல்ல பசங்க(குடி விருப்பம் அற்றவர்கள் ஹிஹி!).........பத்து அடி பின்னே போயிக்கோங்க ஹிஹி!//

  ஏன் இன்னைக்கு Saturday night ஆ?

  ReplyDelete
 21. இந்த நாட்டு விமானங்கள் மிகுந்த சிரத்தையோடு கவனிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை எனக்கு.........அதன் காரணமாக மிக தைரியமாக செல்வேன்......இந்த முறையும் அவ்வாறு சென்று விட்டேன்............//

  ஒரு அவலத்திற்குள்ளும், நக்கலுக்கு குறைவில்லை.

  அவ்..
  அவ்..

  ReplyDelete
 22. நானும் இரவு எனபதால் அடித்த நீர் சத்து காரணமாக......சுற்றிலும் சிறிது பொறுமையாக நோட்டம் விட்டேன்........//

  இரவிலை தான் பார்க்க இலகுவாக இருக்குமோ..

  என்னோடை அனுபவம்,
  மேடான் ஐலண்டில் இருந்து, பணி நிமித்தமாக ஜகார்த்தா போக வேண்டிய தேவை ஒரு தடவை ஏற்பட்டது.
  பிளேனுக்கு ஒரு பக்க கண்ணாடியே இல்லை. இந்தோனேசியாவின் கருடா எயார்லைன்ஸ்.. குளிரோ குளிர்.

  ReplyDelete
 23. நானும் இரவு எனபதால் அடித்த நீர் சத்து காரணமாக......சுற்றிலும் சிறிது பொறுமையாக நோட்டம் விட்டேன்........//

  இரவிலை தான் பார்க்க இலகுவாக இருக்குமோ..

  என்னோடை அனுபவம்,
  மேடான் ஐலண்டில் இருந்து, பணி நிமித்தமாக ஜகார்த்தா போக வேண்டிய தேவை ஒரு தடவை ஏற்பட்டது.
  பிளேனுக்கு ஒரு பக்க கண்ணாடியே இல்லை. இந்தோனேசியாவின் கருடா எயார்லைன்ஸ்.. குளிரோ குளிர்.

  ReplyDelete
 24. நானும் இரவு எனபதால் அடித்த நீர் சத்து காரணமாக......சுற்றிலும் சிறிது பொறுமையாக நோட்டம் விட்டேன்........//

  அவ்...அவ்...நீர்ச் சத்தோ...

  ReplyDelete
 25. நானும் "Finlay i got my drink" என்றேன்...........//

  oh...
  போதையிலை இருந்திட்டு, ஒரு பெக் வாங்கி சாதிச்ச நினைப்பு...அவ்..

  ReplyDelete
 26. @hajasreen

  " hajasreen said...
  அடடா உங்கள் குடியுரிமையை விட்டு குடுக்காம இருந்திருகின்களே"

  >>>>>>>>>>

  மாப்ள நக்கலா!

  ReplyDelete
 27. @கக்கு - மாணிக்கம்

  " கக்கு - மாணிக்கம் said...
  விக்கி நீங்களும் மரணத்துக்கு
  அஞ்சாத ஒரு மா வீரர்தான். எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கு. :)) எதார்த்தம் ரொம்ப அநியாயமாத்தான் தெரியும் அதனை நம்பாதவர்களுக்கு. எல்லாரும் உங்களை மாதிரியா என்ன ? விடுங்க."

  >>>>>>>>>>>>>

  தலைவரே.......எனக்கு வெக்க வெக்கமா வருது ஹிஹி!

  ReplyDelete
 28. @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

  " ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
  HEY MACHCHI......GOOD EXPERIENCE....... AND TRY TO STOP DRINKING.........I HATE IT"

  >>>>>>>>>>>>

  மாப்ள நன்றி.....கண்டிப்பா முயற்சி பண்றேன்!

  ReplyDelete
 29. @இரவு வானம்

  மாப்ள சென்னைக்கு வரும்போது கண்டிப்பா போவோம் ஹிஹி!

  ReplyDelete
 30. @டக்கால்டி

  மாப்ள ஏன்ய்யா உனக்கு புத்தி இப்படி போகுது ஹிஹி!

  ReplyDelete
 31. @கந்தசாமி.

  " கந்தசாமி. said...
  /////ஹிஹி அதான் போகப்போறோமே.........கொஞ்சம் போட்டுக்கிட்டு போவோமே.......அதான் கேட்டேன்.........

  அவள் என்னை முறைத்து விட்டு அகல முயன்றாள்........//// அப்ப முறைக்காமல்............ஹஹாஹா"

  >>>>>>>>>

  மாப்ள உதைக்காம இருந்த வரை சந்தோசம்கர!

  ReplyDelete
 32. @நா.மணிவண்ணன்

  " நா.மணிவண்ணன் said...
  Anne sarakku oothi kudutha ponnu supera irundhucha"

  >>>>>>>>>>>

  மாப்ள ஏன்ய்யா!

  ReplyDelete
 33. @MANO நாஞ்சில் மனோ


  " MANO நாஞ்சில் மனோ said...
  நீ பயந்து போய்தானே பெக்கு கேட்டே என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம் ஹி ஹி ஹி ஹி...."

  >>>>>>>>>>>

  மனோக்கு தன்னை போல பிறரை என்னும் மனசு ஹிஹி!

  ReplyDelete
 34. @ANaND

  "ANaND said...
  விக்கி அண்ணா நானா இருந்த சைடு டிசும் சேர்த்து கேட்டுருப்பன் ..
  . என் இனமடா நீ"

  >>>>>>>>>>>>>

  நன்றி மாப்ளே!

  ReplyDelete
 35. @தமிழ்வாசி - Prakash

  " தமிழ்வாசி - Prakash said...
  மாம்ஸ் பயணிக்கரப்போ கொஞ்சம் கொறச்சுக்கங்க."

  >>>>>>>>>>>>

  நன்றி மாப்ளே!.......முயற்சி பண்றேன்!

  ReplyDelete
 36. @செங்கோவி

  " செங்கோவி said...
  //மாம்ஸ் பயணிக்கரப்போ கொஞ்சம் கொறச்சுக்கங்க// தம்பி சொல்றதைக் கேளுங்க விக்கி."

  >>>>>>>>>

  நன்றி மாப்ளே!.......முயற்சி பண்றேன்!

  ReplyDelete
 37. @பட்டாபட்டி....

  " பட்டாபட்டி.... said...
  இப்படித்தான் என்னா பிரச்சனை வந்தாலும், ”தீயா” இருக்கனும் கொமாரு.."

  >>>>>>>>>

  மாப்ள நீ சொன்னா சர்தான்........ஹிஹி....
  ..............................

  " பட்டாபட்டி.... said...
  நமக்கு வேலை முக்கியம்.. .

  வாழ்க்கையின் கடைசி நேரத்திலும்.. கடமை ஆற்றிய உம் ஆற்றல் கண்டு சிலிர்த்தேன்..


  அதே பிரச்சனை வந்திடுச்சு.. அப்பவே காந்தர்வ மணம் புரிஞ்சிருக்கலாமே..
  ஆமாம.. ஏர்ஹோஸ்டல்.. அழகா இல்லையா?..

  சரி.. விடு.. மாமே...
  ஹி..ஹி"

  >>>>>>>>

  எதுக்குய்யா தலைய வெட்ட முயற்சி பண்ண சொல்ற ஹிஹி!

  ReplyDelete
 38. @ரம்மி

  "ரம்மி said...
  30000 அடிக்கு மேல பிளேன் போயிட்டிருக்கு! எந்திரிச்சா நிக்கறே?
  எங்கே மூஞ்சில இருந்த கம்பிளிப் பூச்சியைக் காணோம்?"

  >>>>>>>>>>

  மாப்ள என்னமோ திட்ற...ஹிஹி திட்டு திட்டு!

  ReplyDelete
 39. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  அவனவன் பிரச்சனை அவனவனுக்கு.. நாயே .. நக்கல் பண்றே/.? ராஸ்கல்.."

  >>>>>>>>>

  என்னாச்சி வீட்ல உதையா ஹிஹி!

  ReplyDelete
 40. @நிரூபன்

  " நிரூபன் said...
  நானும் இரவு எனபதால் அடித்த நீர் சத்து காரணமாக......சுற்றிலும் சிறிது பொறுமையாக நோட்டம் விட்டேன்........//

  இரவிலை தான் பார்க்க இலகுவாக இருக்குமோ..

  என்னோடை அனுபவம்,
  மேடான் ஐலண்டில் இருந்து, பணி நிமித்தமாக ஜகார்த்தா போக வேண்டிய தேவை ஒரு தடவை ஏற்பட்டது.
  பிளேனுக்கு ஒரு பக்க கண்ணாடியே இல்லை. இந்தோனேசியாவின் கருடா எயார்லைன்ஸ்.. குளிரோ குளிர்"

  >>>>>>>>>>>

  மாப்ள....இப்படி கூடவா விமானங்கள் இருக்கு.....சாமி ஏன்யா பய முறுத்துற.......இந்த கருமத்துக்கு தான்.......நான் ஏறி உக்காந்த உடனே தூங்கிடுவேன்.......ஹிஹி!

  ReplyDelete
 41. @நிரூபன்

  " நிரூபன் said...
  நானும் "Finlay i got my drink" என்றேன்...........//

  oh...
  போதையிலை இருந்திட்டு, ஒரு பெக் வாங்கி சாதிச்ச நினைப்பு...அவ்.."

  >>>>>>>>>

  இது புரியாத வயசுய்யா மாப்ள!

  ReplyDelete
 42. நீங்கள் தான் இந்தியா & வியட்நாமின் உண்மையான குடிமகன்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி