தூது அகம் எதுக்கு!

வணக்கம் நண்பர்களே.......


வெளிநாட்டுல வாழுற மக்களுக்கு இந்த அகம் தான் பாதுகாப்பு.........இந்த அகம் மூலமாத்தான் பல விஷயங்கள செய்ய முடியும்.........அதாவது விசா மற்றும் பல உதவிகள் இந்த அகம் மூலமாத்தான் கிடைத்து கொண்டு இருக்கு.......

பொதுவா........பல நாட்டுல தனியா சேம்பர்னு ஒன்னு இருக்கும் அதுவும் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் தனி தனியா இருக்கும்.........அது மூலமா நண்பர்கள் மற்றும் பண்டிகைகள பரிமாறிக்கற வழக்கம் நடந்து கிட்டு இருக்கு.......பல இடங்களில் இது வியாபார நோக்கோடையும் நடக்குது..........

சரி நான் சொல்ல வந்த விஷயத்துக்கு வரேன்...........


கொஞ்ச நாளைக்கு முன்னால.......இந்த ஊருக்கு நம்ம மாண்புமிகு ஒருத்தரு வந்து இருந்தாரு.......அப்போ நம்ம சாம்பார்ல ச்சே சேம்பர்ல இருந்து அழைப்பு வந்துது எனக்கு(!)...........அவரு இங்க வாழுற இந்தியர்களோட ஒரு கலந்துரையாடல் அகத்துள(தூதரகம்!).......... நடத்த விரும்பறதாக சொன்னாங்க......ஆனா தணிக்கை படுத்தப்பட்ட கேள்விகள் தான் கேக்கனும்னு சொன்னாங்க.....இல்லப்பா நான் வரலன்னு சொல்லிட்டேன்..........

ஏன்னு மறுபடியும் போன் வந்துது....நான் ஏதாவது கேப்பேன் அப்புறம் தலைவலி உங்களுக்குதான்னு சொன்னேன்.......நீங்க வந்துட்டு போங்க பலத்த காட்டணும்னு(!) சொன்னாங்க(இது என்ன மாநாடா டவுட்டு!).........சரின்னு கெளம்பி போனேன்......


மாண்புமிகுவோட பேச்சி ஆரம்பிச்சி நல்லாத்தான் போயிட்டு இருந்துது(!).......கேள்வி நேரத்துல அவரு சொன்னாரு.......உங்களுக்கு கேக்க நெனைக்கிற கேள்விகள கேக்கலாம்னு............பயபுள்ள எல்லாத்துக்கும் சொல்லி கூட்டி வந்து இருப்பாங்க போல..........எல்லாம் மெளனம் காத்தாங்க..........நம்மள பாத்தாலே மூஞ்ச திருப்பிக்கற வட நாட்டு கூட்டம் என்னையே பாத்துட்டு இருந்துது(!)........எதுக்குய்யா வம்புன்னு நானும் அமைதியா இருந்தேன்......

திடீர்னு ஒரு பய புள்ள எழுந்து..........

"நம்ம தலைநகர்ல இருந்து இந்த நாட்டு தலைநகரத்துக்கு நேரடி விமான போக்குவரத்து எப்ப தொடங்கும்" அப்படின்னு கேட்டு ஒரு குண்ட போட்டாரு.....

அதுக்கு மாண்புமிகு கொடுத்த பதில்...........


நண்பரே(!)......இது ஒரு அருமையான கேள்வி(அடப்பாவமே!)...........நான் நெறய நாட்டுக்கு போயி இருக்கேன்(எதுக்கு மூட்டைய இரக்கவா!).........அரபு நாடுகள்ல தான் நெறைய இந்தியர்கள் வேலையில இருக்காங்க(அவங்க ஆளுங்கள மட்டும் சொல்றாரோ!)...........அங்க தான் நேரடி விமான சேவை பயனளிக்கும்.......இங்க இருக்க இந்தியர்கள் குறைவு......அது மட்டுமில்ல இது நீங்க விமான போக்குவரத்து துறைகிட்ட கேக்கவேண்டிய கேள்வின்னாரு(அதானே!..பய புள்ள கேக்குறான் பாரு கேள்வி நானே ஊருக்கு போற வரைக்கும் என் பதவி இருக்குமான்னு தெரியல!).............

பல நல்ல(!) கேள்விகளுக்கு நேரிடையான(!) பதில் கெடைக்காம மக்கள் திண்டாடித்தான் போனாங்க........என்னோட நண்பரோட மனைவி அவருகிட்ட என்னமோ கேக்க துடிச்சிட்டு இருந்தாங்க......

நானும் "என்ன Sister என்ன விஷயம்" அப்படின்னு கேட்டேன்....அவங்க சொன்னத கேட்டு அப்படியே ஷாக்காயிட்டேன்.......கேளுங்க அதுக்கு தானே கூப்பிட்டு இருக்காங்க......ஆம்பளைங்க கேள்விக்கு தான் பதில் இல்ல நீங்க கேளுங்க சகோ என்றேன்..........

அவங்க முறை வந்தது..........அவங்களும் கேக்க ஆரம்பிச்சாங்க...........

நாங்க இங்க வந்து 12 வருஷம் ஆகுது.......இது வரை ஓட்டு போடல.... ஒரு முறை கூட.........அந்த விஷயம் எங்களுக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு.......வெளிநாட்டு வாழும் இந்தியர்களுக்கு அந்த வசதிய எப்ப ஏற்ப்படுத்தி தரப்போறீங்க..........அப்படின்னாங்க.......

அப்போ பாக்கணுமே....ஒரே நிசப்தம்.........பயபுள்ளைங்க(நானும்!) எல்லாம் கப்சிப்புன்னு அவரையே பாத்துட்டு இருந்தோம்!..........ஒரு கிளாஸ் தண்ணிய குடிச்சிட்டு(அதானே!) அய்யா சொன்னாரு! 

இதுக்கு அரசாங்கம் முயற்சி செய்ஞ்சிட்டு இருக்கு சீக்கிரம் பாப்போம் என்றார்.

எப்போன்னு கேட்டாங்க மறுபடியும்...........

சீக்கிரத்துல.......இதுக்கெல்லாம் சரியான நேரம் சொல்ல முடியாது...இது முக்கியமான முடிவு.........பாப்போம்னு சொல்லிட்டாரு......(உடனே எஸ் ஆயிட்டாரு!)

கேள்வி நேரம் முடிஞ்சி அவரு போகும்போது அந்த சகோவ பாத்து கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி......


"ஏம்மா நீங்க சீரியசாதான் கேட்டிங்கலான்னு" - அந்த சகோக்கு வந்துதே கோபம்........ஏங்க நாங்க இந்தியாக்கு கொண்டுவர அந்நிய செலாவணி பணம் மட்டும் வேணும்........ஆனா ஏங்க ஓட்டு வேணாமா.......ஒவ்வொரு நிமிஷமும் இந்தியால என்ன நடக்குதுன்னு இங்க மனசு புழுங்கிகிட்டு பாத்துட்டு இருக்கோம் தெரிஞ்சிக்கங்க அப்படினாங்க.........

அவ்ளோ தான் அவரு விருட்டுன்னு கெளம்பி பூட்டாரு.....

கொசுறு: எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

45 comments :

 1. எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....// மாப்ள எப்படி இப்படியெல்லாம்..

  ReplyDelete
 2. >>எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....

  தக்காளி பர்சனல் லைஃப்ல முன்னே பின்னே இருந்தாலும் பொது வாழ்வுல ஓக்கே ஹி ஹி

  ReplyDelete
 3. //தக்காளி பர்சனல் லைஃப்ல முன்னே பின்னே இருந்தாலும் பொது வாழ்வுல ஓக்கே ஹி ஹி//

  அதென்ன முன்னே பின்னே....??? தெளிவா சொல்லுய்யா மூதேவி...

  ReplyDelete
 4. >>MANO நாஞ்சில் மனோ said...

  //தக்காளி பர்சனல் லைஃப்ல முன்னே பின்னே இருந்தாலும் பொது வாழ்வுல ஓக்கே ஹி ஹி//

  அதென்ன முன்னே பின்னே....??? தெளிவா சொல்லுய்யா மூதேவி...

  விட்றா விட்றா பப்ளிக்ல எதுக்கு பர்சனல் சேட் வா .. ஹி ஹி

  ReplyDelete
 5. //விட்றா விட்றா பப்ளிக்ல எதுக்கு பர்சனல் சேட் வா .. ஹி ஹி//

  அடபாவி தக்காளி ஒப்பனான [[டிரஸ் இல்லை]] ஆளுய்யா....

  ReplyDelete
 6. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  "!* வேடந்தாங்கல் - கருன் *! said...

  எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....// மாப்ள எப்படி இப்படியெல்லாம்.."

  >>>>>>>>>>

  அப்படியேதான் இப்படி ஹிஹி!

  ReplyDelete
 7. எலேய் விக்கி சோனியா மேடம்கிட்டே சொல்லி ரயில் விட ஏற்பாடு பண்ணிர்றேன்னு அவங்ககிட்டே சொல்லுலேய்...

  ReplyDelete
 8. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  >>எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....

  தக்காளி பர்சனல் லைஃப்ல முன்னே பின்னே இருந்தாலும் பொது வாழ்வுல ஓக்கே ஹி ஹி"

  >>>>>>>>>

  எது பிஸ்கோத்து மாதிரி 50 - 50 யா ஹிஹி!

  ReplyDelete
 9. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  எலேய் விக்கி சோனியா மேடம்கிட்டே சொல்லி ரயில் விட ஏற்பாடு பண்ணிர்றேன்னு அவங்ககிட்டே சொல்லுலேய்..."

  >>>>>>>>

  நீதான் ஊருக்கு போறேல்ல அப்படியே சொல்லிடுய்யா ஹிஹி!

  ReplyDelete
 10. அத போட்டோவுல இருக்குறது நேற்று உம்ம ரூமுக்கு வந்தாங்களே அவங்கதானே....

  ReplyDelete
 11. // விக்கி உலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...

  எலேய் விக்கி சோனியா மேடம்கிட்டே சொல்லி ரயில் விட ஏற்பாடு பண்ணிர்றேன்னு அவங்ககிட்டே சொல்லுலேய்..."

  >>>>>>>>

  நீதான் ஊருக்கு போறேல்ல அப்படியே சொல்லிடுய்யா//

  மும்பை ஏர்போர்ட் இப்பமே வயிறு கலங்கிட்டு இருக்குன்னு நண்பன் போன் பண்ணினான்....

  ReplyDelete
 12. தங்கள் அனுபவம் பேசுகிறது...

  வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமைப்பற்றி மத்திய அரசு துரிதமாக நடிவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்...

  மற்றபடி விமான சம்மந்தப்பட்ட நடவடிக்கைகள் மத்திய அரசு விவகாரம்...

  புதிய புதிய வார்த்தைகள் பயன்படுத்தியிருக்கிறிர்கள்....

  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 13. அப்படியே கொஞ்சம் வலைச்சரம் வந்துபோங்க நண்பரே...

  ReplyDelete
 14. ////ஏங்க நாங்க இந்தியாக்கு கொண்டுவர அந்நிய செலாவணி பணம் மட்டும் வேணும்........ஆனா ஏங்க ஓட்டு வேணாமா/// நல்ல கேள்வி ...

  ReplyDelete
 15. தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டை குத்தியாச்சு மாமு....அந்த கொசுறு பஞ்சு சூப்பரு...

  ReplyDelete
 16. கவிதை வீதியில் இன்று...

  வானம் வசப்படும்....

  ReplyDelete
 17. //////எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம் //////////

  எத்தனை பேருக்கு இந்த சிறந்த எண்ணம் இருக்கிறது !???

  ReplyDelete
 18. "# கவிதை வீதி # சௌந்தர் said...
  அப்படியே கொஞ்சம் வலைச்சரம் வந்துபோங்க நண்பரே..."

  >>>>>>>>>>>>>>>>>>>>

  மாப்ள வருகைக்கு நன்றி........
  வந்துட்டுதான்யா வந்தேன்!

  ReplyDelete
 19. வயலார் ரவிகிட்ட கேள்வி பதிலாக்கும்!

  ஆமா!சேட்டன்,சேச்சிக பாதிப் பேர் வளைகுடாவுல சுத்துறாங்க...அப்புறமெப்படி கேரளாவும் 83% ஆளுக ஓட்டுப் போட்டாங்க...தமிழ் நாட்டிலும் அதே கணக்கு!

  ReplyDelete
 20. கொசுறு: எந்த நாட்டுல இருக்கோம்ங்கறது இல்ல முக்கியம் நம்ம தாய் நாட்ட எந்த அளவு நேசிக்கரோம்கறது தான் முக்கியம்....


  ...... தத்துவ பஞ்ச்!

  ReplyDelete
 21. இன்று இன் வலையில்
  IPL ல நம்ம பதிவர்கள்
  http://rajamelaiyur.blogspot.com/2011/05/ipl.html

  ReplyDelete
 22. @ராஜ நடராஜன்

  " ராஜ நடராஜன் said...
  வயலார் ரவிகிட்ட கேள்வி பதிலாக்கும்!

  ஆமா!சேட்டன்,சேச்சிக பாதிப் பேர் வளைகுடாவுல சுத்துறாங்க...அப்புறமெப்படி கேரளாவும் 83% ஆளுக ஓட்டுப் போட்டாங்க...தமிழ் நாட்டிலும் அதே கணக்கு!"

  >>>>>>>>

  மாப்ள வருகைக்கு நன்றி...அவங்களுக்கு மட்டும் post vote வழங்கி இருக்காங்க!

  ReplyDelete
 23. @Chitra

  வருகைக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 24. தூது அகம் எதுக்கு!//

  சகோ, பதிவின் தலைப்பே கவிதை நயம் கலந்ததாக இருக்கு, இருங்க உள்ளே இறங்கிப் படிச்சிட்டு வாறேன்.

  ReplyDelete
 25. "நம்ம தலைநகர்ல இருந்து இந்த நாட்டு தலைநகரத்துக்கு நேரடி விமான போக்குவரத்து எப்ப தொடங்கும்" அப்படின்னு கேட்டு ஒரு குண்ட போட்டாரு.....//

  அவ்........அவ்...

  ReplyDelete
 26. நண்பரே(!)......இது ஒரு அருமையான கேள்வி(அடப்பாவமே!)//

  எனது அனுபவத்தில்,
  ஒரு சில விடை தெரியாத அன்பர்கள், சமாளிப்பதற்காக இப்படியான வசனங்களைச் சொல்லுவார்கள்.

  ஹி...ஹி....
  அது தான் இங்கேயும்.

  ReplyDelete
 27. அந்தச் சகோதரியின் கேள்விகளில் ஜனநாயகம் மீதான அக்கறை தொனித்திருக்கிறது.

  ReplyDelete
 28. நிங்கள் நாடு ஏதாயினு?

  ReplyDelete
 29. குடும்பம் அங்கிட்டு வந்தவுடன் கும்மி குறையுதே ஏன்? #டவுட்டு.

  ReplyDelete
 30. @நிரூபன்

  மாப்ள வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 31. @ரம்மி

  மாப்ள வருகைக்கு நன்றி!
  ................


  ரம்மி said...

  நிங்கள் நாடு ஏதாயினு?

  >>>>>>>>>>>>>>

  மாப்ள நக்கல் பன்றியா ஹிஹி!

  ReplyDelete
 32. @FOOD

  "FOOD said...

  குடும்பம் அங்கிட்டு வந்தவுடன் கும்மி குறையுதே ஏன்? #டவுட்டு.

  >>>>>>>>>

  அண்ணே இன்னும் வரலீங்..........அடுத்தவாரம் தாங்!"

  ReplyDelete
 33. எப்படிங்க இப்படி பதிவ பட்டய கிளப்புறீங்க

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  சார்லி சாப்ளின் “The Kid”

  http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி