வணக்கம் நண்பர்களே...........வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது.......அதுவும் உண்மை மட்டுமே பேசவேண்டும் என்று சொல்லிக்கொடுத்த முன்னோர்கள்...........காலம் மாறும், காட்சி மாறும்........உலக நடைமுறைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு உண்மை பொய்யாகும் என்பதை சொல்லவில்லையோ என்று ஒரு சிந்தனை அதுதான் இந்த பதிவுக்கு காரணம்.......

நம்மில் பலர் இந்த விஷயத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்........உதாரணமாக.......உண்மை பேசுபவனிடம் "தான்" என்ற சிறு அகந்தை இருக்கும்.......அவனுக்கு நடிக்க தெரியாது..........அதனால் பார்ப்பவர்கள் இவனுக்கு என்ன ஒரு திமிர் என்று கூற வாய்ப்பு அதிகம்.......ஏனெனில், உண்மைக்கு ஒரு பழக்கமுண்டு அது வீரம்............


அதாவது யாருக்கும் பயப்படாமலும் தன் மனசாட்சிக்கு மட்டும் நேர்மையாக வாழ்பவரில் நிறய பேர் அவப்பெயர் மட்டுமே கிடைக்கபெறுகிறார்கள்..........

உதாரணமாக...........

ஒரு கம்பனில வேலை செய்யுரவங்கல்ல யாரு உண்மை பேசுவாங்கன்னு மேலதிகாரிக்கு தெரியும். அந்த நல்லவன மட்டுமே பல துட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு கூடவே வச்சி இருப்பாங்க.......அதே நேரம் வியாபார விஷயம் பேசும் போது கிட்ட சேக்கறது அதிகமா இருக்காது.....அப்படியே சேத்தாலும்.....அவர்கிட்ட சொல்லி இருப்பாங்க........ஏதும் பேசக்கூடாதுன்னு..........


என் நண்பர் ஒருவர் உண்மை மட்டுமே பேசுவேன்னு தீர்க்கமா இருந்து வர்றார்......இது வரை 27 வேலை மாத்தி உள்ளார்.......என்னிடம் கடந்த வாரம் வேலை நிமித்தமாக உதவி கேட்டார்..........

மாப்ள.......உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆளு கிடையாது.......

இல்ல சொல்லுடா கேட்டுக்கறேன்.......

இப்போ உன்ன நம்பி ஒரு குடும்பம் இருக்கு...........

அதனால............

மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

அப்போ என்னை விளங்காதவன்னு சொல்ற.....இத நீ சொல்றது தான்டா கஷ்டமா இருக்கு............

இல்லடா.......என்ன பண்றது சில நேரத்துல........எனக்கும் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும்......பல மொள்ளமாரிகள் கூட வேல செய்ய வேண்டிய நிர்பந்தம் வரும்..........அப்போ நான் அமைதியா இருந்திடுவேன்.....நீ என்னை சந்தர்ப்பவாதின்னு கூட நெனச்சிக்க..........

நான் பொய் சொல்ல மாட்டேன்......எந்த நிலைமையிலும்.......!..எனக்கு உன்னால வேலை வங்கி தர முடியுமா முடியாதா................

என்னால முடியும்..........ஆனா..அது வியாபாரம்........அதுவும் பெரிய அளவுல நடக்குற தொழிலுக்கு ஆள் தேவை..........நீ அங்க சில நேரம் வளைந்து கொடுத்து ஆகணும்.......

அது முடியாது.............

டேய்..........உன் பொண்டாட்டி ரொம்ப கஷ்டப்படுராடா...........பாவம்டா உன்ன நம்பி வந்ததுக்கு அவ வேலைக்கு போயி உனக்கு சாப்பாடு போட்டுட்டு இருக்கா.....ஏன்டா இப்படி இருக்க.......கொஞ்சம் வளைஞ்சி கொடுத்து போ......அதுதான் வாழ்க்க..........

நான் படிச்ச படிப்புக்கு........என் உண்மைக்கு கெடைக்காத வேலை.......வளைஞ்சி கொடுத்தாத்தான் கெடைக்கும்னு இருந்தா அது வேணாம்..........

எலேய்....இதெல்லாம் நீ தனியா இருந்தா ஓகே..........இப்போ உன்ன நம்பி ஒரு பொண்ணு இருக்கு........ஒரு குழந்த இருக்கு..........மவனே இப்படி பேசிட்டு இருந்தா......இதுக்கு பேரு விதண்டா வாதம்...........

என் நல்ல குணங்களை பார்த்து தான் என் பொண்டாட்டி என்னை கல்யாணம் பண்ணிகிட்டா.......இன்னிக்கி வரைக்கும் அவள் எதுவும் சொல்லல.......


அடங்கோ.......அதான்டா நீ இப்படி இருக்க.....காதலிக்கும்போது நீ நல்ல ஆண்மகனா இருந்தா போதும்.......ஆனா திருமணம் ஆனா நல்ல குடும்பஸ்தனா இருக்கணும்.......உன்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..........அதான் உன் பொண்டாட்டி அமைதியா இருக்கா.........அவ சம்பாதிக்கற துட்டுல எத்தன நாளு இப்படியே ஓட்டுவ வாழ்கைய......நமக்காக இல்லாட்டியும் குடும்பத்துக்காக சில நேரங்களில் வளைஞ்சி போகுறது தப்பு இல்லடா மாப்ள..........

சரி முடிவா என்னை என்ன செய்ய சொல்ற..........

கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. >>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....

  டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற

  ReplyDelete
 2. >>மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

  ஓஹோ.. அதனால தான் நீ பொய்யா பொளக்கறியா? ராஸ்கல்

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  >>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....

  டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற"

  >>>>>>>>>

  சிங்கிள் தான் நீ டபுள் ஆக்காத பிச்சிடுவேன்!
  .............................

  சி.பி.செந்தில்குமார் said...

  >>மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத...........

  ஓஹோ.. அதனால தான் நீ பொய்யா பொளக்கறியா? ராஸ்கல்

  >>>>>>>>>>>>>>>>>

  பய புள்ள எப்படில்லாம் யோசிக்குது ஹிஹி!

  ReplyDelete
 4. //வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது//
  எந்த அளவுக்கு வளையலாம்? ரொம்ப வளைஞ்சா முறிஞ்சிடாது? :-)

  ReplyDelete
 5. ///
  கொசுறு: நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

  ////


  ஒன்னுமே புரியல

  ReplyDelete
 6. //மனசாட்சிக்கு பயந்து வேல செய்.........ஆனா உண்மைய சொல்றேன்னு உன் வாழ்கைய நீயே கெடுத்துக்காத//

  உண்மையான வரிகள்...

  ReplyDelete
 7. //சி.பி.செந்தில்குமார்
  >>வாழ்கையின் நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு முடிந்தவரை நாமும் வளைந்து செல்லவேண்டி இருக்கிறது....
  டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற//
  சி பி எப்ப திருந்துவார்#டவுட்டு

  ReplyDelete
 8. //நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!//
  வாழ்க்கை நிதர்சனங்கள்!

  ReplyDelete
 9. //டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற//

  strogly agreed sibi boss

  ReplyDelete
 10. காலத்திற்கு ஏற்ற மாதிரி நடந்து கொண்டால் தான் இன்றைய வாழ்வில் வாழமுடியும்.

  ReplyDelete
 11. டேய்.. காலங்காத்தாலயே டபுள் மீங்க்கா.. ? வெளங்கிடும்டா.. வெள்ளீக்கிழமை வேற

  -நன்றி
  கமென்ஸ் உதவி.. சி.பி செந்தில்குமார்..

  ReplyDelete
 12. நான் என்ன சொல்லி இருப்பேன்...........ஒரு நேர்மையான, உண்மை மட்டுமே பேசும் ஒரு குடும்பஸ்தனை........வாழ்கையின் கொடிய பயணத்தை காட்டி.........நான் பாதை மாற்ற நினைத்தது..........சரியா தவறா..............!

  கண்டிப்பாக சரிதான் சகோ...சுயநலவாதியாக இருக்க வேண்டாம்...ஆனால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு, வளைந்து தருவதில் தவறென்ன இருக்கிறது....

  ReplyDelete
 13. This is a good topic . Sorry friends, actualy my net connection is broken. I can't type in tamil.

  ReplyDelete
 14. நாலுபேருக்கு நல்லதுன்னா பொய் தப்பில்லை ஹே ஹே ஹே ஹே ஹே கொன்னியா இது நீ சொன்னதுதான் ஹி ஹி ஹி...

  ReplyDelete
 15. வளஞ்சி நெளிஞ்சி என்ன, நேரே போயும் திரும்பலாம், சரிய்யா அவனுக்கு வேலையை வாங்கி குடுய்யா...

  ReplyDelete
 16. கறையே நல்லது என்றானபின் பொய் கூடாதா என்ன?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி