வியட்நாம் - பொம்மலாட்டம்!

வணக்கம் நண்பர்களே...........ஹனோயிக்கு வரும் வெளி நாட்டவர்களை பெரிதும் ஈர்க்கும் இந்த பொம்மலாட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவே இந்த பதிவு..............இதன் பெயர் Water Puppet Show என்று சொல்றாங்க..........இந்த பொம்மைகள் மரத்தால் செய்யப்பட்டவைகள்..........


இதன் சிறப்பம்சம்..........இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்............எவ்வளவு கஷ்டம் பாருங்க.........தண்ணிக்கு மேலே இந்த பொம்மைகள் போடும் ஆட்டம் காண்பவரை சபாஷ் போட வைக்கும்.......அதுவும் வியத்னாமியர்களின் பாரம்பரியத்தய்யும்........விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலையும் சித்தரித்து இருக்கும் இந்த ஷோ ரொம்ப நல்லா இருக்கும்............


அதே நேரத்தில்........பல வியட்நாமியர்கள் இந்த ஷோக்கு சென்றதில்லைன்னு கூறும்போது வியப்படஞ்சிருக்கேன்..........அப்போ தான் புரிஞ்சிது உள்ளூர் காரனுக்கு எப்பவுமே சொந்த விஷயத்துல ஆர்வம் கம்மின்னு.........(நம்மூரிலும் அதே கதைதானே ஹிஹி!)..........


இந்த பொம்மலாட்டம்......11 வது நூற்றாண்டுல இருந்து வந்தாலும்........90 களில் தான் உலகத்துக்கு தெரிய ஆரம்பிச்சிது.......ஏன்னா போர்களிலேயே தங்கள் வாழ்கையில் பெரும் பகுதிய கழிச்சிட்ட வியட்நாமியர்களுக்கு...........90 களில் இருந்து தான் வாழ்கையின் சந்தோசத்த அனுபவிக்க ஆரம்பிச்சாங்க........


இந்த பொம்மலாட்டத்துல இன்னொரு சிறப்பு இதில் வரும் ட்ராகன் உருவத்திலிருந்து......தீ வரும் அதுவும் ஜுவாலையாக...........அப்போ ஒரு நிமிழம் 3D படம் பாக்குறா மாதிரி இருக்கும்.........குழந்தைங்க முதல் பெரியவங்க வரை அப்போ தன்னை மறந்து பாப்பாங்க.........எவ்ளோ உழைப்பு.........தண்ணிக்கு அடியிலிருந்து இதை செய்வாங்க.............


முழு ஷோவ்வும் தண்ணிக்கு மேலதான் நடக்கும் பார்வையாளர்கள் பார்க்கும்போது.........பொம்மைகள் மனிதர்களின் உருவங்கள் போலவே தெரியும்...........


இந்த ஷோ பல நாடுகள்ல நடத்தி பேமஸ் ஆயிடுச்சி.........அதனால அந்த நாடுகளின் பெயர்களையும் சொல்லுவாங்க..........அப்படி இருந்தும் முதலில் இந்த ஷோவுக்காக இந்தியாவுக்கு போக விரும்பினாங்க கலைஞ்சர்கள்..........அதுக்காக இந்தியா சலுகை கொடுத்து இலவசமா இந்த கலைஞ்சர்கள வரவேற்றது...........இதுல நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது(!)..............


கொசுறு: இந்த ஆட்டம் ஆரம்பிக்கும் போது இந்த ஷோவின் வரலாறு சொல்லுவாங்க.........நம்மூரு பொம்மலாட்டதுக்கு..நம்மாளுங்க எப்போ உயிர் கொடுக்கப்போறாங்கன்னு தெரியல(!).........படங்களுக்கு உதவிய Google.com க்கு நன்றி..........

கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....... 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. >>
  கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....

  vaayyaa வாய்யா அறிவுக்கொழுந்து.. கமெண்ட்டுபவரின் பெயரை க்ளிக் பண்ணி போனா போச்சு? ஏஹ்ஹே ஹேஹேய்

  ReplyDelete
 2. பய புள்ள திடீர்னு கலாச்சாரப்பதிவா போடறானே.. சம்சாரம் ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல.. நடிக்கிறான்

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  >>
  கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....

  vaayyaa வாய்யா அறிவுக்கொழுந்து.. கமெண்ட்டுபவரின் பெயரை க்ளிக் பண்ணி போனா போச்சு? ஏஹ்ஹே ஹேஹேய்"

  >>>>>>>>>

  நான் கொஞ்சம் சோம்பேறிங்க அதான்..உங்க அளவுக்கு அறிவாளியோ நேரம் உடையவரோ இல்லீங்க ஹிஹி!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  பய புள்ள திடீர்னு கலாச்சாரப்பதிவா போடறானே.. சம்சாரம் ஊர்ல இருந்து வந்துட்டாங்க போல.. நடிக்கிறான்"

  >>>>>>>>>>>>>>

  இன்னும் வரலீங்க........வந்த அப்புறம் தானுங்க பதிவு போட முடியுமான்னு தெரியும்.....ஹிஹி!

  ReplyDelete
 5. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  இரண்டாவது டிக்கட்..."

  >>>>>>>>>>>>

  அண்ணே வாங்க எப்படி இருக்கீங்க!

  ReplyDelete
 6. உண்மையில் ஆச்சரியம் தான்..
  இந்தியால் இந்த கலை தற்போது முழுவதுமான அழிந்தே விட்டது...


  காலையில் நல்லசெய்தி மற்றும் பதிவு
  வாழ்த்துக்கள்.. விக்கி...

  ReplyDelete
 7. ////
  விக்கி உலகம் said...

  " # கவிதை வீதி # சௌந்தர் said...
  இரண்டாவது டிக்கட்..."

  >>>>>>>>>>>>

  அண்ணே வாங்க எப்படி இருக்கீங்க!////

  நல்லா இருக்கேன் விக்கி..

  ReplyDelete
 8. வியட்னாம் பொம்மலாட்டம் பற்றிய சுவையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க நன்றிகள் சகோ.

  ReplyDelete
 9. வியட்னாம் நாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றித்துள்ள பொம்மலாட்டம் பற்றிய விந்தையான தகவல்களைத் தந்ததற்கு நன்றிகள் சகா.

  ReplyDelete
 10. பொம்மலாட்டங்கள் மறந்து விட்ட அற்புத கலை ஸ்கூலில் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கே வந்து மதிய வேளையில் இது போன்று நடத்துவார்கள் நாங்கெல்லாம் ஒரே ஜாலியா முன்வரிசையில் உட்கார சண்டை போட்டு ஆட்டத்தை ரசிப்போம். ஒருவரே பல குரலில் பேசியும் அதே சமயம் பொம்மைகளை நடிக்க வைத்தும் பிரம்மிக்க வைப்பார். இந்த கலை தற்போது 90% அழிந்து விட்டது. பல கலைஞர்கள் பாதிக்க பட்டு வேறு பொழப்ப தேடி போய்விட்டதால் இந்த கலை முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளது அரசு இது போன்ற நலிவடைந்த கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். காலையில் நல்ல செய்தி கொடுத்த மாப்ள மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
 11. //கொசுறு: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.......தாங்கள் தங்களின் கருத்துகள் சொல்லும்போது தங்களின் தற்போதைய பதிவின் லிங்கை அளித்து விட்டு செல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.....ஏனெனில், என்னுடைய ரீடரில் சரியாக வருவதில்லை..........நன்றி....... //


  லிங்க் கொடுக்காம போய்ட்டா தக்காளி இத காரணம் வைத்தே பதிவுக்கு வராம போய்டுவான் தப்பிக்கலாம்னு பார்க்கறியா உன்ன யாரு விட்டது.ஜிமெயிலில் புதிய பயனுள்ள சூப்பர் வசதி - People Widget

  ReplyDelete
 12. வியட்நாம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது தொடருங்கள்..இதைத்தான் எதிர்பார்த்தேன்..வியட்நாம் பற்றி தெரிந்துகொள்ள உங்கள் ப்ளாக் வரவேண்டும் என்ற நிலை வர வேண்டும்

  ReplyDelete
 13. மாமா., தயவு செய்து என்னுடை போன வருடத்து இடுக்கைக்கு வோட்டு போட்டுவிட்டு செல்லவும்!

  பார்க்க - www.naathaariand oothaari .com சும்மா அதிருதா...........

  :)

  ReplyDelete
 14. படங்களும் பதிவும் அருமை....வியட்நாம் வாசிகள் இதை ரசிக்க மாட்டார்களா?உள்ளூரு மாடு விலை போகாதுன்னு சும்மாவா சொன்னாங்க...தத்துவம் சரியா மாம்ஸ்...

  ReplyDelete
 15. ஒரு பொம்லாட்டம் நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது :)
  வியட்நாம் பொம்மலாட்டம் அழகு

  ReplyDelete
 16. // தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்.///

  ஓ அப்பிடியா....???

  ReplyDelete
 17. // தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்.//

  ஆத்தா நான் பாசாகிட்டேன்....

  ReplyDelete
 18. ///இந்த ஷோவில் காட்டப்படும் பொம்மைகளை இயக்குபவர்கள் தண்ணிக்கு அடியில் இருந்தே இயக்குகிறார்கள்///என்ன தண்ணி என்று சொல்லவேஇல்லையே பாஸ் ;-)

  ReplyDelete
 19. போட்டோக்களை பார்க்கவே கலக்கலாய் தான் இருக்கு ...

  ReplyDelete
 20. பொம்மலாட்டம் மிக சிறந்த ஒரு கலை. அதை கண் முன் கொண்டு வந்து நிறுத்திய தங்கள் பதிவுக்கு பாராட்டு!

  ReplyDelete
 21. வியட்னாமுக்கு ஒரு டூர் போடலாம் போலிருக்கே!

  ReplyDelete
 22. வெரிகுட் தக்காளி.... இப்படியே கலக்குய்யா..!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி