பெண்களின் திருமண வயது என்னவாக இருக்கவேண்டும்?

வணக்கம் நண்பர்களே.......பெண் என்று சொல்லும் போதே ஒரு வித பாசம் வெளிப்படும்......ஏனெனில், ஆணின் கடமை என்பது..........பொருளாதாரம் சம்பந்தபட்ட விஷயத்தையே பெரிதும் சார்ந்து இருக்கும்......அதுவே பெண் என்பவள் தாயாய், தமக்கையாய், நண்பியாய் பல உருவங்களை கொண்டு இருக்கிறாள்.........

ஆனாலும், இன்னும் சரி நிகர் சமானமான மனப்பான்மை சமுதாய பார்வையில் வரவில்லை என்றே தோன்றுகிறது......


காரணம்...........இப்போதைய கால கட்டத்தில் பெண் கல்வி நல்ல நிலையை நோக்கி போய்கொண்டு இருக்கிறது......எல்லா வித கல்வி கேள்விகளிலும்........ஆணை விட பெண் சிறந்து வருகிறாள்...இருந்தாலும்!...அதை பற்றிய ஒரு பார்வை இந்த பதிவு...........

திருமணம்.........

இது இப்போது சடங்காக இல்லாமல் ஒரு வித புரிதலுடன் நடப்பது சந்தோசத்தை கொடுக்கிறது......இருந்தாலும் திருமணத்திட்கு பின் பெண்ணின் வாழ்கை கணவன் மற்றும் எதிர் கால சந்ததிகள் என்ற குறுகிய வட்டத்தில் நின்று விடும் அபாயம் அதிகமாக உள்ளது..........


இந்த கால பெண்கள் படிப்பை முடித்து நல்ல வேலையில் சேர்ந்து சொந்த காலில் நிற்கிறார்கள்.......அதே நேரத்தில் அவர்களின் வயது 29 வரை பெரிதாக அவர்களுக்கு தெரிவதில்லை.......அதுவே 30 தொட்டவுடன் தான் திருமண விஷயமே ஞாபகத்துக்கு வருகிறது..........

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் இரு பெண்கள்.......இருவரும் படிப்பை முடித்து விட்டார்கள்.....முதல் பெண் Msc...வரை படிச்சிட்டு கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு இருந்தாங்க.....அவங்க அப்பா அந்த பெண்ணுக்கு வரன் தேடிட்டு இருந்தார்......தன்னை விட அதிகம் படித்த மற்றும் பை நிறைய சம்பளம் வாங்கும் மாப்பிள்ளைய தேடி கொண்டு இருந்தாங்க.......அந்த பெண்!


கொஞ்ச நாள் கழித்து திருமணம் ஆச்சி.......பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த அந்த குடும்பம்......3 மாதத்தில் அப்பெண் பிறந்த வீடு நோக்கி திரும்பியதை எண்ணி வருந்தியது.......விசாரித்ததில் கணவன் மனைவியிடையே பெரிய அளவில் சண்டை நடந்ததாக கூறப்பட்டது........எனினும் கஷ்டப்பட்டு இருவரையும் சேர்த்து வைத்தார்கள்.......2 வருடம் கழித்து விவாகரத்துக்கு விண்ணபிச்சி இருக்காங்க.........Ego தான் காரணம்னு சொல்லிகிட்டாங்க........நானும் போன்ல பேசிப்பாத்தேன்(படிச்சவங்களாலையே முடியல!).....ஒன்னும் நடக்கல.....(33 வயசாச்சி அந்த பொண்ணுக்கு)

ரெண்டாவது பொண்ணுக்கு இந்த நிலைமை வரக்கூடாதுன்னு இன்னும் வரன் தேடிட்டு இருக்காங்க......பொண்ணுக்கு 31 வயசாச்சி MBA (BE முடிச்சிட்டு!)படிச்சிருக்கு........ஆனா யாரு கிட்டயும் முகம் கொடுத்து பேசாது........கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்...........(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)


ரெண்டு பொண்ணுகளும் வேலைக்கு போகல.......வீட்ல சீரியல் பாத்துட்டு இருக்காங்க..........இந்த ரெண்டு பேரையும் படிக்க வச்ச பெத்தவங்க விட்டத்த பாத்துட்டு இருக்காங்க..........

இந்த விஷயங்கள மேற்கோள் காட்டி நான் யோசிக்கற விஷயம்......படிப்பு வெறும் ஏட்டு சுரைக்காயா.....!....எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது.....!

கொசுறு: இது என் ஆதங்கமே.......முடிந்தால் சற்று விலாவாரியாக எடுத்துரைக்கவும்!....என்னுடைய பார்வையில் தவறு இருப்பின் சொல்லித்திருத்த நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள் நண்பர்களே..........உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்....!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

48 comments :

 1. பய புள்ள சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சதும் நல்லவன் மாதிரியே நடிக்கறான் பாரு ராஸ்கல்.. முக மூடியை கழட்டுடா

  ReplyDelete
 2. சட்டப்பூர்வமாக தாலி கட்டிய மனைவியுடனான 7 வது ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஹி ஹி

  ReplyDelete
 3. சாரிடா மன்னிச்சுக்க .. 2வது கமெண்ட்ல ஒரு கரெக்‌ஷன்.. முதல் மனைவி என வாசிக்கவும். ஹி ஹி

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  பய புள்ள சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சதும் நல்லவன் மாதிரியே நடிக்கறான் பாரு ராஸ்கல்.. முக மூடியை கழட்டுடா"

  >>>>>>>>>>>>

  அண்ணே ஏற்கனவே வந்தாச்சி காலையில டிபன் செஞ்சிட்டு தான் வந்தேன் ஹிஹி!

  ReplyDelete
 5. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  சட்டப்பூர்வமாக தாலி கட்டிய மனைவியுடனான 7 வது ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஹி ஹி"

  >>>>>>>>>

  வாழ்த்துக்களுக்கு நன்றி.......ஏன் இந்த கொலைவெறி நான் அந்த அளவுக்கெல்லாம் ஒர்த் இல்லையா ஹிஹி!

  ReplyDelete
 6. சி.பி.செந்தில்குமார் said...

  சட்டப்பூர்வமாக தாலி கட்டிய மனைவியுடனான 7 வது ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஹி ஹி

  >>>>>>>>>>>>

  எனக்கு என்னய்யா பயம்.......நான் எப்பவுமே திறந்த புத்தகம் ஹிஹி!
  என்னை பற்றி தெரிந்தவர்கள் நம்பனும் நீ சொல்றத ஹிஹி!

  ReplyDelete
 7. இந்த விஷயங்கள மேற்கோள் காட்டி நான் யோசிக்கற விஷயம்......படிப்பு வெறும் ஏட்டு சுரைக்காயா.....!....எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது...>>>>

  எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது???
  எனக்கும் இந்த டவுட்டு தான்?

  ReplyDelete
 8. "தமிழ்வாசி - Prakash said...

  இந்த விஷயங்கள மேற்கோள் காட்டி நான் யோசிக்கற விஷயம்......படிப்பு வெறும் ஏட்டு சுரைக்காயா.....!....எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது...>>>>

  எந்த வயது......திருமணத்துக்கு ஏற்றது???
  எனக்கும் இந்த டவுட்டு தான்?"

  >>>>>>>>>>>>

  வாய்யா மாப்ள எப்படி இருக்க சுகம்தானே!

  ReplyDelete
 9. வயதை விட அவரவர் வீட்டில் உள்ள பொருளாதாரச் சூழலே திருமணத்தை தீர்மானிக்கின்றது..நீங்க சொன்ன எடுத்துக்காட்டு பொதுவானது இல்லையே..அது சில ஈகோ பார்ட்டிங்க தானே தன் வாழ்க்கையை கெடுத்துக்கிறது..

  டைவர்ஸ் வாங்குன அந்த ஆம்பிளையையும் ரெண்டு வரி திட்டும்யா..ஏதோ சொல்லணும்னு தோணுச்சு..அப்புறம் உங்க இஷ்டம்.

  ReplyDelete
 10. உங்கள் கருத்துக்கள் எனக்கும் ஏற்புடையதுதான் நண்பரே. கல்வி கற்பது மட்டுமே ஒருவரது வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளித்திடாது. மனிதர்களை மனிதர்களாய் மதிப்பது மட்டுமே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்க முடியும். என்ன,பெண்கள் இருபதைந்தையும், ஆண்கள் முப்பதிற்குள்ளும் மணம் முடித்தல், உளவியல் ரீதியாகவும், உடல் கூறு ரீதியாகவும் நலம் பயக்கும். Not too early,nor too late.

  ReplyDelete
 11. //சி.பி.செந்தில்குமார் said...
  பய புள்ள சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சதும் நல்லவன் மாதிரியே நடிக்கறான் பாரு ராஸ்கல்.. முக மூடியை கழட்டுடா//
  வயிற்றெரிச்சல் திலகம் வாழ்க!

  ReplyDelete
 12. @செங்கோவி

  "செங்கோவி said...

  வயதை விட அவரவர் வீட்டில் உள்ள பொருளாதாரச் சூழலே திருமணத்தை தீர்மானிக்கின்றது..நீங்க சொன்ன எடுத்துக்காட்டு பொதுவானது இல்லையே..அது சில ஈகோ பார்ட்டிங்க தானே தன் வாழ்க்கையை கெடுத்துக்கிறது..

  டைவர்ஸ் வாங்குன அந்த ஆம்பிளையையும் ரெண்டு வரி திட்டும்யா..ஏதோ சொல்லணும்னு தோணுச்சு..அப்புறம் உங்க இஷ்டம்"

  >>>>>>>>>>>>>>

  "வேண்டாம் குடும்ப மானம் பூடும்னு அந்தபய அந்த பொண்ணு கால்ல விழுந்து கெஞ்சுனான்யா"

  நான் சந்திச்ச அந்தபய அப்பாவிய்யா இருக்கான்யா...அதனால தான் திட்ட முடியல....இங்க நான் சொல்ல வர்ற விஷயம் கல்வி குடும்பத்தோட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையா இருக்குதா!

  ReplyDelete
 13. இந்த விஷயத்தில் நான் ஒன்று சொல்வதக்கில்லை...

  எதிர்பார்த்து செய்யும் திருமணங்கள் சங்டங்களில் முடிந்து விடுகிறது.
  சில திருமண வாழ்க்கை மகிழ்ச்சியிவ் முடிகிறது.

  இரு மணங்கள் ஒத்துப்போகாத வரையில் திருமண வாழ்க்கை இன்பம் தராது.
  இதில் படிப்பு பணம் அழகு எல்லாம் அடுத்தப்பட்சமே இவைகளை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது..

  படிக்காத பெண்களும் விவாகரத்து வரை செல்கிறது அதற்க்கு என்ன சொல்ல

  ReplyDelete
 14. கண்டிப்பாக பெண்ணுக்கு 21 லிருந்து 25 க்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் இது என்னுடைய தாழ்மையான மற்றும் அனுபவித்து சொல்லும் அறிவுரை...

  ReplyDelete
 15. @FOOD

  "FOOD said...

  உங்கள் கருத்துக்கள் எனக்கும் ஏற்புடையதுதான் நண்பரே. கல்வி கற்பது மட்டுமே ஒருவரது வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளித்திடாது. மனிதர்களை மனிதர்களாய் மதிப்பது மட்டுமே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்க முடியும். என்ன,பெண்கள் இருபதைந்தையும், ஆண்கள் முப்பதிற்குள்ளும் மணம் முடித்தல், உளவியல் ரீதியாகவும், உடல் கூறு ரீதியாகவும் நலம் பயக்கும். Not too early,nor too late"

  >>>>>>>>>>>

  நீங்க சொல்றது சர்தான் தல.......ஆனா இப்போ படிப்ப காரணம் காட்டி பெண்கள் வயதை கடக்கிறார்கள்....ஆனால் அதே படிப்பை திருமணம் முடித்த பிறகு அந்தரத்தில் விட்டு விடுகிறார்களே...அது தான் என் வருத்தம்!

  ReplyDelete
 16. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  இந்த விஷயத்தில் நான் ஒன்று சொல்வதக்கில்லை...

  எதிர்பார்த்து செய்யும் திருமணங்கள் சங்டங்களில் முடிந்து விடுகிறது.
  சில திருமண வாழ்க்கை மகிழ்ச்சியிவ் முடிகிறது.

  இரு மணங்கள் ஒத்துப்போகாத வரையில் திருமண வாழ்க்கை இன்பம் தராது.
  இதில் படிப்பு பணம் அழகு எல்லாம் அடுத்தப்பட்சமே இவைகளை வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது..

  படிக்காத பெண்களும் விவாகரத்து வரை செல்கிறது அதற்க்கு என்ன சொல்ல"

  >>>>>>>>>>

  என்ன மாப்ள சொல்றே.....படிச்சவங்க தான் திருமணத்துக்கு முன்னாடி ஒருத்தர ஒருத்தர் நல்லா பேசி புரிஞ்சிகிட்டதா நெனச்சி கல்யாணம் பண்ணிக்கறாங்க.....!

  படிப்பு என்பது ஒரு அறிவு அவ்வளவே.....படிப்பு இல்லாதவர்களை அறியாமையில் செய்து விட்டார்கள் என்று கூறி விடுகிறோம்.....!

  ReplyDelete
 17. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  கண்டிப்பாக பெண்ணுக்கு 21 லிருந்து 25 க்குள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் இது என்னுடைய தாழ்மையான மற்றும் அனுபவித்து சொல்லும் அறிவுரை..."

  >>>>>>>>>

  அப்படியும் இப்ப முடியல மாப்ள! அதான் பல உடல் சம்பந்தப்பட்ட முரண்பாடுகளுக்கு காரணமா இருக்குது!

  ReplyDelete
 18. பெண்களின் திருமண வயது என்னவாக இருக்கவேண்டும்?//

  ஆராய்ச்சிக்குரிய பதில், இன்னோர் விடயம் அவரவர் மனங்களின் எண்ணக் கருத்தினை/ உட்க் கருத்தினை அடிப்படையாக வைத்தும் இத் திருமண வயது வேறுபடலாம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 19. அதே நேரத்தில் அவர்களின் வயது 29 வரை பெரிதாக அவர்களுக்கு தெரிவதில்லை.......அதுவே 30 தொட்டவுடன் தான் திருமண விஷயமே ஞாபகத்துக்கு வருகிறது..........//

  இல்லைச் சகோ, பெண்ணுக்கு 30 வயதிற்குப் பிறகு திருமணம் செய்ய நேரிடும் போது,
  குழந்தை பெற்றுக் கொள்ளல் தொடர்பில் அவள் பாரிய சிரமங்களை எதிர் கொள்ள நேரிடலாம்.

  30 வயதின் பின்னர் எலும்புகள் முற்றி விடும். இதனால் பிள்ளையினைச் சுகப் பிரசவமாக பெற முடியாது. சிசேரியனை நாட நேரிடலாம்,. சினை முட்டைகளின் நிலையும் வயது ஏற ஏற மந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்.

  ReplyDelete
 20. இது கொஞ்சம் குழப்பமான விடயம் சகா. முதலாவது பெண்ணின் படிப்பு முடிந்த பின்னர் அவள் திருமணம் செய்யலாம் எனும் தர்க்க அடிப்படையில் பார்க்கையில்,
  இங்கே பெண்ணின் வயதும் தேக ஆரோக்கியமும் குறுக்கே நிற்கிறது.

  இதே போல இளம் வயது என்று பார்க்கையில் இள வயதில் திருமணம் செய்வோருக்குப் புரிந்துணர்வு நிலை கம்மி என்பதால், குடும்பத்தில் சச்சரவுகள் உருவாகி விவாகரத்தில் முடிவுறலாம்,

  ஆக இவ் இரு நிலைகளையும் கருத்திற் கொண்டு தான் பெண்ணின் திருமண வயதினை நிர்ணயிக்க முடியும்.

  ReplyDelete
 21. @சி.பி.செந்தில்குமார்

  சட்டப்பூர்வமாக தாலி கட்டிய மனைவியுடனான 7 வது ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஹி ஹி//

  ஐயோ, தாயி! காளியம்மா காப்பாற்று!

  ReplyDelete
 22. //பொண்ணுக்கு 31 வயசாச்சி MBA (BE முடிச்சிட்டு!)படிச்சிருக்கு........ஆனா யாரு கிட்டயும் முகம் கொடுத்து பேசாது........கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்...........(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)//
  இந்தமாதிரிப் பெண்களுக்கு எந்த வயதுமே திருமணத்திற்கு ஏற்றதில்லை பாஸ்! முடிச்சுத்தான் தீரணும்னா பதினஞ்சு வயசுலயே கட்டி வச்சா...அப்புறம் படிச்சுட்டு முப்பதில டைவர்ஸ் எடுத்துக்க சரியா இருக்கும்! (நீங்க அந்த ஆண் பற்றியும் சொன்னதாலதான் இப்படிச் சொல்கிறேன்)

  ReplyDelete
 23. @விக்கி உலகம்


  அண்ணே ஏற்கனவே வந்தாச்சி காலையில டிபன் செஞ்சிட்டு தான் வந்தேன் ஹிஹி!//

  அவ்.....அண்ணாச்சி பொறுப்புள்ள குடும்பஸ்தன் ஆயிட்டாரு;-))

  ReplyDelete
 24. @நிரூபன்

  உங்க கருத்துகள் உண்மை மாப்ள.....இதைத்தான் நானும் சொல்ல வருகிறேன்!

  ReplyDelete
 25. @ஜீ...

  அடடா இப்படி சொல்லிபுட்டியே மாப்ள........என்னத்த சொல்றது!

  ReplyDelete
 26. @நிரூபன்

  "நிரூபன் said...

  @விக்கி உலகம்


  அண்ணே ஏற்கனவே வந்தாச்சி காலையில டிபன் செஞ்சிட்டு தான் வந்தேன் ஹிஹி!//

  அவ்.....அண்ணாச்சி பொறுப்புள்ள குடும்பஸ்தன் ஆயிட்டாரு;-))"

  >>>>>>>>>>>>>

  ஏன் இதுவரைக்கும் பொறுப்பற்றவனா இருந்ததனா டவுட்டு ஹிஹி!

  ReplyDelete
 27. இந்த காலத்துல யாரப்பா வயசப்பத்தி கவலைப்படறாங்க... கல்யாணம் செஞ்சா சரி...

  ReplyDelete
 28. //// பெண் என்று சொல்லும் போதே ஒரு வித பாசம் வெளிப்படும்...... ////மாப்ள உன்னக்க? நம்பிட்டேன் . ..

  ReplyDelete
 29. ///@ சி.பி.செந்தில்குமார் said...

  பய புள்ள சம்சாரம் ஊர்ல இருந்து வர்றாங்கன்னு தெரிஞ்சதும் நல்லவன் மாதிரியே நடிக்கறான் பாரு ராஸ்கல்.. முக மூடியை கழட்டுடா ////
  அட போங்க சார் , நீங்க ஒண்ணு
  மாப்பிளைக்கு ஏதோ முகம் எல்லாம்? எல்லாம் முகமூடிய வச்சுதான் ஒப்பேத்திகிட்டு இருக்காரு ,

  ReplyDelete
 30. ///@ ஆனா யாரு கிட்டயும் முகம் கொடுத்து பேசாது........கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்...........(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)////

  மாப்ள நெத்தி அடி . . . எப்படி கரெக்ட்டா சொல்லிருக்க?
  வாழ்த்துக்கள் . . .
  இருந்தாலும் உன் தனடக்கதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு .

  ReplyDelete
 31. தக்காளி தீடீர் தீடீர்ன்னு இப்படி பதிவ போடுதே


  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

  நாமே ராஜா, நமக்கே விருது-8
  http://speedsays.blogspot.com/2011/05/8.html

  ReplyDelete
 32. @சங்கவி

  "சங்கவி said...

  இந்த காலத்துல யாரப்பா வயசப்பத்தி கவலைப்படறாங்க... கல்யாணம் செஞ்சா சரி..."

  >>>>>>>>>>>>>>

  அடப்பாவமே அப்படியா இருக்கு நிலம!

  ReplyDelete
 33. @♔ℜockzs ℜajesℌ♔™


  "♔ℜockzs ℜajesℌ♔™ said...

  //// பெண் என்று சொல்லும் போதே ஒரு வித பாசம் வெளிப்படும்...... ////மாப்ள உன்னக்க? நம்பிட்டேன் . ..

  >>>>>>>>>>>>

  வாய்யா நல்லா இருக்கியா!
  ..............................

  "♔ℜockzs ℜajesℌ♔™ said...

  ///@ ஆனா யாரு கிட்டயும் முகம் கொடுத்து பேசாது........கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்...........(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)////

  மாப்ள நெத்தி அடி . . . எப்படி கரெக்ட்டா சொல்லிருக்க?
  வாழ்த்துக்கள் . . .
  இருந்தாலும் உன் தனடக்கதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு"

  >>>>>>>>>>

  அப்படியே நேரா போ கடல் வரும் பாத்துட்டு திரும்பி வந்துடு கொய்யால!

  ReplyDelete
 34. பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சரியான வயதில் திருமணம் செய்து வைக்கவேண்டும் .அதுதான் பெண்களுக்கு நல்லது .ஆண்களுக்கும் நல்லது ........

  ReplyDelete
 35. @Speed Master

  வாய்யா மாப்ள நல்லா இருக்கியா!

  ReplyDelete
 36. //கேட்டா அந்தம்மா அளவுக்கு அறிவுள்ளவங்க கிட்ட மட்டும் தான் பேசுமாம்......//

  ஹா ஹா செம காமடி போங்க

  ReplyDelete
 37. மாம்ஸ் அண்ணன் சி பி பின்னூட்டத்தில் சொல்வதெல்லாம் உண்மையா? ஹி ஹி

  ReplyDelete
 38. ஆண்களுக்கு திருமண வயது... இதைப்பத்தி கட்டுரை எழுதுனா என்னவாம்?

  ReplyDelete
 39. தமிழ் மணத்துல மைனஸ் ஓட்டு வேலை செய்யலை. பல முறை முயற்சி செஞ்சேன்.No use. இப்ப கூலிக்கு ஆள் வச்சி ட்ரை செய்யறேன். கொஞ்ச நேரம் பொறுங்க.

  ReplyDelete
 40. @tamilan

  நண்பா வருகைக்கும் உங்கள் கருத்துகளுக்கும் நன்றி!

  ReplyDelete
 41. @சசிகுமார்

  மாப்ள என்னா இப்படி சொல்லிபுட்ட ஹிஹி!

  ReplyDelete
 42. @NKS.ஹாஜா மைதீன்

  மாப்ள அவன் பாவம் தில்லு இல்லாம அடுத்தவங்களுதுன்னு சொல்றான் விடு ஹிஹி!

  ReplyDelete
 43. @! சிவகுமார் !

  மாப்ள அதான் நீ எழுதிட்டியே ஹிஹி!

  ReplyDelete
 44. ..(நான் முட்டாப்பய...அதனால பேசுறது இல்ல!)//

  அது இப்போதான் உமக்கு தெரியுமாக்கும் ம்ஹும் எங்களுக்கு எப்பவோ தெரியுமே ஹி ஹி...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி