பயம் என்னை விட்டு...(பெண் பார்வையில்!) - 2

வணக்கம் உறவுகளே.........


நான் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டு அந்த பெரிய விமான தளத்தின் முகப்பில் நுழைந்தேன் என் மகனுடன். அந்த வரிசையை பார்த்து தெரிந்து கொண்டேன்...விமான பயணத்துக்கும் இப்படி வரிசையில் தான் நின்று செல்ல வேண்டும் என்று!


என் துணை ஏற்கனவே சொல்லி இருந்த படியே ஆனது! அதன் படி அந்த எடை மேடையில் பொருளை வைத்து பார்க்கும் போது அது அதிகமான எடையை காட்டியதால் நான் என்ன செய்வதென்று யோசித்து கொண்டு இருந்தேன். ஆனாலும் அந்த சகோதரர் என்னை புன்முறுவலுடன் செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.


அடுத்த இடமான Immigration இடத்துக்கு சென்றோம். அங்கு அந்த அதிகாரி எதற்க்காக வியத்னாம் செல்கிறீர்கள் என்று கேட்டார். அதற்க்கு துணைவர் சொல்ல சொன்னபடி சுற்று பயணத்துக்காக என்று கூறினேன். குழந்தயுடனா என்றார்..அதற்க்கும் ஆமாம் என்று கூறினேன்(உள்ளத்தில் ஒரு வித பயம் இருந்தது என்றாலும்!).

அங்கிருந்து விடை பெற்று மேலே இரண்டாவது மாடியை நோக்கி சென்றேன் குழந்தையுடன். அங்கே அனைவரும் அமர்ந்திருந்தனர்....அந்த இடத்தில் இருந்த அந்த தொலைக்காட்சி பெட்டியில் மலேசிய விமானம் குறித்த தகவல்களை கண்களால் துழாவினேன். என் மகன் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக அந்த கதவு திறக்கப்பட்டு விமானத்தின் உள் நுழயலானேன். உள்ளே ஏசி ரயிலின் பெட்டி போன்று நீண்டு சென்றது. எனக்கான இருக்கையை அந்த விமானப்பணிப்பெண் காட்டினாள். 


அப்பாடா என்று மூச்சி விட்டேன்....ஒரு வழியாக உட்காந்தாயிற்று....என் அம்மாவை தொலை பேசியில் அழைத்து சொல்லி விட்டேன். இப்போது துணையிடம் இருந்து வந்த அழைப்பிலும் சொல்லியாயிற்று. அந்த விமானப்பெண் என்னருகில் வந்து கைப்பேசியை அணைக்கும் படி கூறினாள். பின் அந்த இடுப்பில் அணியும் பெல்டை அணியவிட்டு சென்றாள்.


பயணம் ஆரம்பித்தது.....விமானம் ஓடு தள பாதையில் ஓடி சிறிது சிறிதாக மேலெழும்ப தொடங்கியது.......என் அடிவயிற்றில் எதோ இனம் புரியாத பட படப்பு...பட்டாம் பூசிகள் திடீரென சிறகடிப்பது போல் உணர்ந்தேன்...ஒரு வித பயம் கலந்த படபடப்புடன் என் மகனை பார்த்தேன் அவன் என்னையே ஒரு வித மாக பார்த்து கொண்டு இருந்தான்.....ஏனெனில் உயர பறக்கும் போது காத்து அடைபட்டது காரணமாக இருந்திருக்கும் என்று புரிந்தது......நானும் இப்போது ஒரு பறவை போல எனக்கு தோன்றியது!


பல ஆயிரம் அடிகளுக்கு மேல நான் முதல் முறையாக....பறந்து கொண்டு இருக்கிறேன்..இது கனவா இல்லை நினைவா..ஆண்டவா நல்ல படியாக போய் சேர வேண்டும் வியட்நாமுக்கு!

உறவுகளே தொடர்வேன்......

துணைவர் பகுதி: நண்பர்ஸ்!... மேடம் எனக்கு பதிவுலகத்துல சீனியர்......அவங்கள பாத்து தான் நான் சும்மா ஜாலிக்கு எழுத ஆரம்பிச்சேன்...இப்போ அவங்களோட எழுத்துக்கள இங்க பதியரதுல நான் பெருப்படறேன் நன்றி! 

படங்களுக்கு உதவிய Google images க்கு நன்றி. 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

25 comments :

 1. >>மேடம் எனக்கு பதிவுலகத்துல சீனியர்......அவங்கள பாத்து தான் நான் சும்மா ஜாலிக்கு எழுத ஆரம்பிச்சேன்...இப்போ அவங்களோட எழுத்துக்கள இங்க பதியரதுல நான் பெருப்படறேன் நன்றி!

  சரி சரி விட்றா.. இன்னைக்கும் நீ தான் சமையலாம் அண்ணி சொல்லிட்டாங்க ஹா ஹா

  ReplyDelete
 2. ஆணாதிக்கம் ஒழிக.(பதிவு நல்லா இருக்கு சகோ. இதை அவங்களே பதிவிட சொல்லி இருக்கலாமில்ல. அவங்க தளத்தோட பெயரை சொல்லுங்க போய் பார்க்கலாம்.)

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  உனக்கு இப்படி போட்டு கொடுத்து போடுறதே வேலையாப்போச்சி ஹிஹி!

  ReplyDelete
 4. கலக்குங்க... கலக்குங்க...

  ReplyDelete
 5. @ராஜி

  "ராஜி said...

  ஆணாதிக்கம் ஒழிக.(பதிவு நல்லா இருக்கு சகோ. இதை அவங்களே பதிவிட சொல்லி இருக்கலாமில்ல. அவங்க தளத்தோட பெயரை சொல்லுங்க போய் பார்க்கலாம்.)"

  >>>>>>>

  வாங்க சகோ..ஒரு பயந்த சகோதரனை இப்படிதிட்டலாமா!...இந்த ப்ளாக் அவங்கலோடதுங்கோ போய் பாருங்க

  http://www.dandanakavijay.blogspot.com/

  ReplyDelete
 6. @சங்கவி

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க மாப்ள!

  ReplyDelete
 7. விக்கி உலகம் said...

  @ராஜி

  "ராஜி said...

  ஆணாதிக்கம் ஒழிக.(பதிவு நல்லா இருக்கு சகோ. இதை அவங்களே பதிவிட சொல்லி இருக்கலாமில்ல. அவங்க தளத்தோட பெயரை சொல்லுங்க போய் பார்க்கலாம்.)"

  >>>>>>>

  வாங்க சகோ..ஒரு பயந்த சகோதரனை இப்படிதிட்டலாமா!...இந்த ப்ளாக் அவங்கலோடதுங்கோ போய் பாருங்க

  http://www.dandanakavijay.blogspot.com/
  >>>
  Thanks sago

  ReplyDelete
 8. //படங்களுக்கு உதவிய Google images க்கு நன்றி.//

  இதுக்காக கூகிள் இமேஜஸ் "நோ மென்சன்" சொல்லாது

  ReplyDelete
 9. முதல் விமான பயந்த அனுபவத்தை நேர்த்தியாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . தொடர்வேன் என்று முடித்திருக்கிறீர்கள் . நானும் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 10. அனுபவம் பேசுகிறது....

  அசத்தலான வர்ணனை...
  விமாமத்தில் பயணம் செய்வது மிகவும் பயம் கலந்த உணர்வுதான்...

  ReplyDelete
 11. மாப்ள சூப்பரா இருக்கு

  ReplyDelete
 12. பயங் கலந்த முதலாவது விமானப் பயண அனுபவத்தைச் சுவாரஸ்யமாகவும், உங்கள் சுட்டியின் குறும்புகளோடு இணைத்து எழுதியுள்ளீர்கள், அருமை.

  ReplyDelete
 13. அருமையான அனுபவ பகிர்வு!!

  ReplyDelete
 14. நல்ல எழுத்து நடை (மாப்ள நீ சொல்லிக் கொடுத்த மாதிரியே கமெண்ட் போட்டுட்டேன்)

  ReplyDelete
 15. @THOPPITHOPPI

  "THOPPITHOPPI said...

  //படங்களுக்கு உதவிய Google images க்கு நன்றி.//

  இதுக்காக கூகிள் இமேஜஸ் "நோ மென்சன்" சொல்லாது"

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள..........நீர் சொன்ன கருத்துக்கு ஹிஹி!

  ReplyDelete
 16. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  அனுபவம் பேசுகிறது....

  அசத்தலான வர்ணனை...
  விமாமத்தில் பயணம் செய்வது மிகவும் பயம் கலந்த உணர்வுதான்..."

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ!


  உண்மைதானுங்க..உண்மையில் மனது முழுதும் பயம் படர்ந்திருந்தது சகோ!

  ReplyDelete
 17. @நிரூபன்

  வருகைக்கு நன்றி சகோ!......

  பாராட்டுக்கு நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி