வாழ்கையே கொஞ்ச காலம்தான்!

வணக்கம் நண்பர்களே..........


வியட்நாமிய மக்களைப்பார்த்து நெறய விஷயம் புரிஞ்சிகிட்டேன்.......முதல்ல உழைப்பு........என்னமா தீயா உழைக்கிறாங்க.........ஆணும் பெண்ணும் சும்மா பறந்து பறந்து(!) உழைக்கிறாங்க(நம்மூர்ல இல்லையான்னு கேட்டுப்புடாதீங்க!).......அதுக்கேத்த வாழ்கை வாழறாங்க.........(என்சாய் பண்ணுறாங்கப்பா!)

நம்ம பாரம்பரியம் எப்படின்னா......கடினமா உழைச்சி அந்த உழைப்போட வருமானத்த நம்ம அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வச்சிட்டு போயிருவோம்......நமக்கு தெரிஞ்ச அந்த உழைப்போட அருமை நம்ம சந்ததிகளுக்கு தெரியாம போக நிறைய வாய்ப்பு இருக்கு............


ஆனா இங்க அப்படியில்ல.........தனி மனித சுதந்திரம் அதிகம்.........அதாவது.....குழந்தைகளோட படிப்பு 10 வரை பெற்றோர் பொறுப்பு..........அதுக்கு பிறகும் உதவி செய்வார்களே தவிர......அந்த குழந்தைகளோட தனிப்பட்ட செலவுகளுக்கு அவர்களே பகுதி நேரம் உழைச்சி சம்பாதிசிக்கோணும்......தங்களின் வயதான காலத்திலும் தங்கள் வாரிசுகளிடம் அண்டி வாழ்வதை இவர்கள் விரும்புவதில்லை.......

ஒரு U turn.......

மிருகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் உடையில் மட்டுமே.....ஆனாலும் மிருகம் சேமிப்பு என்ற போர்வையில் நாலு தலைமுறைக்கு சேத்து வைக்க நினைக்கறது இல்ல.....மனுஷன் தன்னை விட தன் தலைமுறைக்காகவே அதிகமாக கவலைப்படுகிறான்((தலீவர் போல!)........பணத்துக்காக துடிக்கிறான்.......


இந்தியர்கள் மட்டுமே குடும்பத்துக்காக மிகவும் வருந்துபவர்களாக தோன்றுகிறது.......மேலை நாட்டவர் அந்த அளவு வருந்துவதாக தெரியவில்லை.....

நம்ம நாட்டுல தான் 50 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சி அந்த காசை புள்ளைங்க கிட்ட கொடுத்து புட்டு பெரியவங்க தீண்டத்தகாதவர்களாக பல முதியோர் இல்லத்துல இருக்குறாங்க.........ஏன் இந்த கஷ்டம் நம்ம மக்களுக்கு மட்டும்!.......தன் புள்ளைங்க வாழ்கைய நெனச்சிக்கிட்டு எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம காச சேத்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத நெனச்சிகிட்டே வாழ்ந்துடுறாங்க........... 

இந்த நிலைமை மாறனும்.......ஒரு பக்கம் குடும்பத்த பத்தி கவலைப்படாத குடிகார கூட்டம்......இன்னொரு பக்கம் குடும்பத்த பத்தியே நெனச்சிக்கிட்டு சோறுதண்ணி நேரத்துக்கு திண்ணாம வாழ்கைய ஓட்டுற கூட்டம்..........

என்னதான் பையனுக்கும் பொண்ணுக்கும் செய்ஞ்சி வச்சாலும் கடைசில நமக்கு நல்ல கதி இல்ல...........முடிஞ்ச வரைக்கும் நமக்கு கெடைச்ச இந்த மனுசப்பய வாழ்கைய சந்தோசமா அனுபவிக்கனும்............

"பேக்கட்டுல பத்து ரூபா இல்லைன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க...."

கடைசில நாமெல்லாம் "வால்மீகி" தான்!

என்னதான் குடும்பத்துக்கு செஞ்சாலும்......கடைசில சொல்லுவாங்க பாருங்க ஒரு வார்த்தை.......இது உங்க "கடமை" அப்படின்னு......அந்த வார்த்தைக்குள்ள தான் நம்ம வாழ்கையே அடங்கி கெடக்குதோ...........!

என்னோட தாழ்மையான கருத்து என்னன்னா கடமைய செய்யுங்க...........அதே நேரத்துல அந்த கடமை உங்கள எதிர்காலத்துல காப்பாத்தும்ங்கர எண்ணத்தை தூக்கி போட்டுடுங்க...........உங்களுக்காகவும் கொஞ்சம் சேமிச்சி வச்சிக்கோங்க.........


ஏன்னா நீங்களும் உங்கள நம்பி வர்ற மனைவியும்(நல்லா கவனிங்க உங்கள நம்பி!)............மட்டுமே நிஜம்..........மத்ததெல்லாம் "passing clouds"................

குழந்தைங்க மேல அன்பு வைங்க........ஆனா அவங்க தான் நம்ம எதிர்காலம்ங்கர எண்ணம் வைக்காதீங்க..........நம்மளோட கனவுகள அவங்க மேல திணிக்காம........அவங்கள ஒரு Product அப்படின்னு நெனைக்கறத விடுத்து.......அவங்கள அவங்க சொந்த கனவுகளோட வாழ விடுங்க........

கனவு மெய்ப்பட வேண்டும்..............


"வாழ்கை வாழ்கை இன்பமடா........வாழ்வது அவரவர் கையிலடா........வாழ நினைப்பவன் மனிதனடா...........வாழ வைப்பவன் தெய்வமடா............."

கொசுறு: வாழ்கையே கொஞ்ச காலம்தான்........இந்த வாலிபம் கொஞ்ச நேரம்தான்.......! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

42 comments :

 1. நேத்து ஃபுல்லா தூங்காம இருந்தும் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு வந்து பதிவும்போட்ட தக்காளி வாழ்க..

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  அண்ணே நீங்க என் பதிவுக்கு வந்ததே பெரிய விஷயம்னே!

  ReplyDelete
 3. >>
  இந்தியர்கள் மட்டுமே குடும்பத்துக்காக மிகவும் வருந்துபவர்களாக தோன்றுகிறது....

  ஏன்னா இந்தியர்கள் தான் செண்ட்டிமெண்ட்ஸ் உள்ளவர்கள்

  ReplyDelete
 4. தமிழ்மணத்தில் முதல் பச்சக் நான்தான்...

  #வாழ்கையே கொஞ்ச காலம்தான்........இந்த வாலிபம் கொஞ்ச நேரம்தான்.......!#

  தத்துவ புலி மாம்ஸ் வாழ்க வாழ்க...

  ReplyDelete
 5. சரியாக சொன்னீர்கள்

  சொத்தை மட்டும் சேமிக்காமால்

  உழைப்பின் அருமையும் குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டும்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

  நூறு = 100 = == தமிழுக்கு நன்றி

  http://speedsays.blogspot.com/2011/06/100.html

  ReplyDelete
 6. ஆமா இது தக்காளி யோட பதிவுதானே

  வரவர சமுதாய பெருப்புள்ள பதிவா வருதே என்னாச்சு


  தக்காளி வீட்டுல அடி அதிகமோ

  டிஞ்சர் வேண்டுமா!!!????

  ReplyDelete
 7. அமெரிக்காவுக்கே ஆப்படிச்சவர்களாச்சே வியட்நாமியர்கள் ....

  ReplyDelete
 8. யதார்த்தமான நிகழ்வுகளை பதிவாக போட்டு இருக்க மாப்ள நன்றி.

  ReplyDelete
 9. எலேய் இதென்ன மீள் பதிவு மாதிரி இருக்கே..?? எங்கயோ படிச்சா மாதிரி இருக்கே..? டவுட்டு...???

  ReplyDelete
 10. தமிழ்மணத்துல ஏழாவது ஓட்டுப் போட்டு எனது பணியினை நிறைவு செய்கிறேன்

  ReplyDelete
 11. மனிதனை புரிந்துக் கொண்டு உள்ளீர்...

  மனிதனின் செயல்கள் வித்தியாசமானவை...

  ReplyDelete
 12. எதார்த்தமான நல்ல பதிவு .. என்னுடைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நல்ல பதிவு அண்ணே ...

  புரிதோர் புரியா விடின் மடியும்வரை போர்களம்தான்

  ReplyDelete
 14. இது உங்க "கடமை" அப்படின்னு......அந்த வார்த்தைக்குள்ள தான் நம்ம வாழ்கையே அடங்கி கெடக்குதோ...........!//

  உண்மையில் எமது சமுதாயக் கட்டமைப்புக்கள் தான், எங்கள் இளம் சந்ததியின் முன்னேற்றத்திற்குட் தடையாக நிற்கிறது சகோ. பெற்றோருக்கான கடமை, கடமை என்று பிள்ளைகள் மீது பொறுப்புக்களைத் தீர்த்து பிள்ளைகளை அவர்களின் எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடியாத நிலைக்குப் பெற்றோர்கள் ஆளாக்கி விடுகிறார்ர்கள்.

  இனி வரும் காலங்களில் என்றாலும் இந்த நிலை மாற வேண்டும்.

  ReplyDelete
 15. ஒரு பக்கம் குடும்பத்த பத்தி கவலைப்படாத குடிகார கூட்டம்......இன்னொரு பக்கம் குடும்பத்த பத்தியே நெனச்சிக்கிட்டு சோறுதண்ணி நேரத்துக்கு திண்ணாம வாழ்கைய ஓட்டுற கூட்டம்..........>>>>>

  என்னம்மா.... கவலைப்படுறாரு மனுஷன்.

  ReplyDelete
 16. பிள்ளைகளுக்காக உழைத்தால் கூட பரவாயில்லை .சிலர் வீட்டோட மாப்பிள்ளைகளுக்கும் சேர்த்தல்லவா உழைக்கிறார்கள் ..........(வீட்டோட மாப்பிள்ளைகளால் பாதிக்கப் பட்ட பிள்ளைகள் சார்பாக !!!)

  ReplyDelete
 17. ஹிஹிஹி நாஞ்சிலை வலி மொழிகிறேன்..
  அடச்சீ வழி மொழிகிறேன்...என்ன ஒரு தத்துவம் பாஸ் ஹிஹி

  ReplyDelete
 18. //ஒரு பக்கம் குடும்பத்த பத்தி கவலைப்படாத குடிகார கூட்டம்......இன்னொரு பக்கம் குடும்பத்த பத்தியே நெனச்சிக்கிட்டு சோறுதண்ணி நேரத்துக்கு திண்ணாம வாழ்கைய ஓட்டுற கூட்டம்//மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 19. நாலஞ்சு நாளா பதிவுகள் வித்யாசமா இருக்கே! எழுதத்தூண்டும் அந்த சக்திக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நல்ல பதிவு.

  கனவு மெய்படவேண்டும்....

  ReplyDelete
 21. நம்ம நாட்டுல தான் 50 வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சி அந்த காசை புள்ளைங்க கிட்ட கொடுத்து புட்டு பெரியவங்க தீண்டத்தகாதவர்களாக பல முதியோர் இல்லத்துல இருக்குறாங்க.........ஏன் இந்த கஷ்டம் நம்ம மக்களுக்கு மட்டும்!.......தன் புள்ளைங்க வாழ்கைய நெனச்சிக்கிட்டு எந்த வித சந்தோசத்தையும் அனுபவிக்காம காச சேத்து அதுங்க படிப்பு, எதிர்காலம் இத நெனச்சிகிட்டே வாழ்ந்துடுறாங்க...........
  உண்மையான வார்த்தைகள் அருமை நண்பரே

  ReplyDelete
 22. மிகவும் உண்மை தல, அதான் கடமையை செய் பலனை எதிர் பார்க்காதேன்னு பெரியவங்க சும்மாவா சொன்னங்க

  ReplyDelete
 23. @Speed Master

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ஹிஹி இது வேறயா சர்தான்!

  ReplyDelete
 24. @MANO நாஞ்சில் மனோ

  உனக்கு ஞாபம்லாம் இருக்குமா டவுட்டு!

  ReplyDelete
 25. "# கவிதை வீதி # சௌந்தர் said...

  மனிதனை புரிந்துக் கொண்டு உள்ளீர்...

  மனிதனின் செயல்கள் வித்தியாசமானவை..."

  >>>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 26. @நிரூபன்

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 27. @koodal bala

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 28. @FOOD

  அண்ணே வருகைக்கு நன்றி!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி