காதல் திருமணம் - காலத்தின் கட்டாயமா!

வணக்கம் நண்பர்களே..........இந்த தலைப்பு கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்னோட பதிவுல ஓட்டெடுப்பு மூலமா உங்க எண்ணத்தை புரிஞ்சிக்க நெனச்சி வச்சேன்..........

தேவை - 13

தேவையில்லை - 5

மனமுடைதல் அதிகம் - 10

முயற்சிக்க பயம் - 4

இவை வெறும் ஓட்டுக்கள் மட்டுமா அல்ல மனித மனங்களின் பிம்பங்களா......


இருந்தாலும்........தேவை என்று சொல்பவர்கள்..........தங்களின் அடுத்த சந்ததிக்கு இதனை தெரிவிப்பார்களா.........சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.......ஏனென்னில், காதல் வெறும் உடம்பு சம்பந்தபட்டே அதிகமாக வருவதாக தோன்றுகிறது.....இந்த இனக்கவர்ச்சி மட்டுமே அடுத்த 25 வருடங்களுக்கு போது மானதாக இருப்பதில்லை........அதனால் தானோ என்னவோ அதிகப்படியான பிரிவுகள் ஏற்படுகின்றன..........(மனமுடைதல்!)


காதல் புனிதமாவது என்பது எப்போது........!

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் வாழ்கையிலும் இந்த காதல் தன் வலியை பதிவு செய்துவிட்டு செல்லும்......அதை வெறும் அப்போதைய வலியாக நினைப்பவன் மட்டுமே(!)....தொடர்ந்து செல்ல முடியும்....என்பது யதார்த்தம்......

இந்த கால கட்டத்தில்......காதல் எப்படி பார்க்கப்படுகிறது..........புரியவில்லை!

ஆனால், காதல் திருமணம் புரிந்தவர்களும் தன் குழந்தைகள் காதலித்தால் ஏன் எதிர்க்கிறார்கள்..........தன்னை போல தன் குழந்தைகள் எதையும் இழக்ககூடாது என்பதாலா.........!

எனக்கு ஒரு பெண் இருந்தால் நான் என் பெண்ணை காதல் திருமணம் செய்ய அனுமப்திப்பேனா!

இந்த கேள்வி என் நண்பர் என்னை கேட்டார்........

நானும் நிச்சயமாக.......என்றேன்....


இல்லை......நீ ஒரு தகப்பனாக இருந்து பார் என்றார்.........

உண்மைதான்........பேச்சிக்கு சொல்வதும் அதனால் நேரிடையாக பாதிக்கப்பட்டு சொல்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது......

முதலில்...........காதல் வருமானத்தை பார்த்து வந்தால்........அது கண்டிப்பாக.....ஒரு இடத்தில முறிவதை நம்மால் தடுக்க இயலாது...........அதுவே திருமணத்துக்கு பிறகு வரும் காதல் பல விஷயங்களுடனே முதிர்ச்சியுடன் காணப்படும் என்பது என் தாழ்மையான கருத்து...........

அதே நேரத்தில்............சமுதாயம் என்று வரும்போது.........இந்த ஜாதி மத விஷயங்கள் ஒடுங்கி(!) போக இந்த காதல் திருமணம் தேவையானதாக உள்ளது.........இதை எந்த மாதிரி மாற்ற இயலும்...........


சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் போக வேண்டும்......அதே நேரத்தில் திருமணம் புரிந்தவர்களும்...........மனம் ஒத்து நீண்ட காலம் வாழ வேண்டும்........தங்களின் கருத்துக்கள் வரவேட்க்கப்படுகின்றன நண்பர்களே........

கொசுறு: வாழ்கை எனும் நீண்ட நேர பயணத்தை துணையுடன் ரசிப்பவன் அறிவாளி.......அதை வினையுடன் பார்ப்பவன் முட்டாள் - இது என் தாழ்மையான கருத்து........நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. சிலர் எப்பவும் ஒரே மாதிரி பதிவு போடுவாங்க.. சிலர் சம்சாரம் பக்கத்துல இருக்கறப்ப வேற மாதிரி பதிவு போடுவாங்க. தக்காளி 2வது டைப் போல.. ஏண்டா இப்படி?

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  அண்ணே ஏன்னே..இப்படி சொல்றீங்க.......உங்க கனிவான பதிலுக்கு நன்றி ஹிஹி!

  ReplyDelete
 3. இந்தப்பதிவின் மூலமா தக்காளி என்ன சொல்லவர்றான்னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு 25 டி வி டி பரிசு ஹி ஹி

  ReplyDelete
 4. vootla anni kitta adi vaangurathula irunthu comment podura varaikkum

  ReplyDelete
 5. இந்தப்பதிவின் மூலமா தக்காளி என்ன சொல்லவர்றான்னு யாராவது கண்டு பிடிச்சா அவங்களுக்கு 25 டி வி டி பரிசு ஹி ஹி//

  appo 25 dvd enakku thaana?

  ReplyDelete
 6. நல்லவங்க என்னமா சொல்றாங்க ஹிஹி!

  ReplyDelete
 7. அன்புடையீர்,
  தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.


  சுட்டிகளை சொடுக்கி படித்து
  சிந்திப்போமா?


  1.
  2009ல் இந்தியாவில் நடந்த பெண் (வன்)கொடுமைகள்


  2. இந்தியாவில் கருவிலேயே கருகும் பெண் குழந்தைகள்

  3 .
  பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


  4. பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் .

  5. உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா?

  6. “பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு” - வேதம். இல்லை யென்றால் அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது “ உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்”.

  7. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

  8. . இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம்


  9. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

  10. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது.ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..


  பெண்ணடிமையா ? பெண்ணுரிமையா ?

  ReplyDelete
 8. சகோ, இது கொஞ்சம் இடக்கு முடக்கான விடயம். அதாவது காதல் திருமணம் என்பது அடிப்படையில் பின்வரும் விடயங்களை வைத்து வேறுபடும்.
  * முதலாவது எமது மனதிற்கு ஒருவரைப் பிடித்திருந்தால் காதல் வரலாம். அது பின்னர் திருமணத்தில் கை கூடலாம்.

  *பருவ கால இச்சைகளை/ உடலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டி நேரும் போது ஒரு சிலருக்கு அது காலக் கிரமத்தில்(Earlier) எழுவதால், அந்த உணர்ச்சிகளின் வடிகாலாகத் தோன்றும் காதல்- பின்னர் சந்தர்ப்ப சூழ் நிலைகளால் கலியாணத்தில் முடியலாம்.

  * இன்னோர் விடயம் அட எல்லோரும் காதலித்து திருமணம் செய்கிறார்களே, அதே போல நாமும் ஒரு தடவை வாழ்ந்தால் என்ன எனும் நோக்கத்தில் காதலித்து திருமணம் செய்யும் நபர்கள்

  * இக் காலத்தில் பார்க்கப்படும் ஜாதகம்- ஜோதிடக் குறிப்புக்களால் அரேஞ் மரேஜ் செய்ய முடியாதவர்களும் தமக்கான துணையினைக் காதல் திருமணத்தின் மூலம் தேட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.

  * வறுமை, குடும்ப சூழ் நிலைகளும்- அரேஞ் மாரேஜ்ஜை விடுத்து காதல் திருமணம் எனும் கட்டாய நிலைக்குத் தள்ளி விடுகிறது.

  ஆக இத்தைய மனிதர்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில் காதல் திருமணம் என்பது காலத்தின் கட்டாயமாகத் தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 9. தல நீங்க என்ன சொல்ல வர்றீங்க...

  ReplyDelete
 10. உண்மையில் எமது எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் ஒரு திடமான வாழ்க்கையினையும், அவர்களிற்கான சுதந்திரத்தை நாம் பறிக்காது அவர்களின் மன விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட வைக்க வேண்டுமாயின் காதல் திருமணம் எனும் நிலைக்கு எம் எதிர்காலச் சந்ததியினர் ஆளாகும் போது நிச்சயமாக நாம் குறுக்கே நிற்கக் கூடாது.

  ReplyDelete
 11. @tamilan

  அண்ணே படிச்சி பாக்குறேன்னே!

  ReplyDelete
 12. @நிரூபன்

  நான் சொல்லவர்றது என்னன்னா இப்போ இருக்க பணிசுமைகளில் காதல் என்பது ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடாக இல்லாமல்......வெறும் சபலமாக பார்க்கப்படுகிறதோ என்பதே அது.........
  கொஞ்சகாலத்துக்கு பிறகு வெறுப்புகள் உமிழப்படுகின்றன....
  அதன் பொருட்டே சொல்லி இருக்கிறேன் நண்பா!

  ReplyDelete
 13. @சங்கவி

  மாப்ள என்னை பொறுத்த வரை காதல் என்பது உண்மையில் வெளிப்படுவது திருமணத்துக்கு பிறகே.......அதை கட்டிக்காக்க வேண்டியது நமது கடமை....திருமணம் என்பதே வாழ்கையின் மிகப்பெரிய படிக்கல் தானே!

  ReplyDelete
 14. @நிரூபன்.

  "நிரூபன் said...

  உண்மையில் எமது எதிர்காலச் சந்ததியினர் மத்தியில் ஒரு திடமான வாழ்க்கையினையும், அவர்களிற்கான சுதந்திரத்தை நாம் பறிக்காது அவர்களின் மன விருப்பத்தின் அடிப்படையில் செயற்பட வைக்க வேண்டுமாயின் காதல் திருமணம் எனும் நிலைக்கு எம் எதிர்காலச் சந்ததியினர் ஆளாகும் போது நிச்சயமாக நாம் குறுக்கே நிற்கக் கூடாது."

  >>>>>>>>>

  வெற்று ஜாதி உணர்வுகளுடன் தடையாக நிற்பது தேவையற்றதாக இருந்தாலும்........
  பெரியவர்கள் கவலைப்படுவதே தம்பதிகளின் நீண்ட நாள் வாழ்கை பற்றியே!

  ReplyDelete
 15. காதல் 21-ம் நூற்றாண்டில் தவிர்க்க முடியாத விஷயம் அதை நாகரீகமாக கையாள வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய சமூதாயம் விளங்க வேண்டும்.....

  ReplyDelete
 16. காதல் திருமணத்தில்தான் கசப்புகள் அதிகமாகி பிரிவுகளை ஏற்படுத்துகின்றன...

  ReplyDelete
 17. என்ன ஒரு புனித பணி..சமூக தொண்டு

  ReplyDelete
 18. தக்காளி என்னப்பா ஆச்சு

  இப்படி ஒரு பதிவ நான் எதிர்பார்க்கல


  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
  Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
  http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

  ReplyDelete
 19. ...... , .............இது எதுக்குங்க ?

  ReplyDelete
 20. http://josephinetalks.blogspot.com/2011/06/blog-post.html காதலை பற்றிய என் கருத்துக்கள் !

  ReplyDelete
 21. மாப்ள நீம்பாட்டுக்கு இப்படி நல்லவனாயிட்டேன்னா அப்புறம் நாங்கள்லாம் என்ன பண்றதுன்னு சிபி கேட்க சொன்னாப்ல, பாவம்யா அவரு இந்த பதிவ பாத்துட்டு பொறி கலங்கி போய் இருக்காரு.....!

  ReplyDelete
 22. எதுவுமே புரியல மாம்ஸ்! இதைப்பற்றிப் பேச எனக்கு வயசு போதாதுன்னு நினைக்கிறேன்! :-)

  ReplyDelete
 23. விக்கி உலகம் said...
  @சங்கவி

  மாப்ள என்னை பொறுத்த வரை காதல் என்பது உண்மையில் வெளிப்படுவது திருமணத்துக்கு பிறகே.....///


  செல்லாது செல்லாது...

  ReplyDelete
 24. காதலை வாழ்க்கை முழுமைக்கும் அனுபவிப்பவன் அதில் தோல்வி அடைபவன் மட்டுமே ........

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி