பயம் எப்படி என்னை விட்டு போனது!


வணக்கம் உறவுகளே.. 

பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஆனா என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிரமமான விஷயம் அதுவும் குழந்தையுடன் செல்லும் பெண்களுக்கு பெரிய போராட்டம் என்பேன்.

பெண்களுக்கு பொறுமை என்பது மிகத்தேவையான ஒன்று அதுவும் குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள் மிகுந்த பொறுமையுடன் கூடிய விழிப்போடு இருக்க வேண்டியது மிக அவசியம் என்று நினைக்கிறேன். என்னுடைய பயணம் பற்றிய பகிர்வே இந்த பதிவு.


நான் மிகவும் அதிகமாக படித்தவள் இல்லை! அதனால் எனக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியுமே தவிர சரளமாக பேச இயலாது. எனினும் என் துணைவரின் வற்புறுத்தலால் ஓரளவுக்கு இப்போது பேசுகிறேன். நாடு விட்டு நாடு பயணிக்கும் விமானத்தை திருமணத்துக்கு முன் பார்த்திருக்கிறேன் அவ்வளவே! பயணித்தது இல்லை.


இந்த விஷயத்தில் நான் மிகுந்த பயம் கொண்டவளாக இருந்திருக்கிறேன். அதாவது எந்த இடத்திற்க்கு சென்றாலும் யாராவது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் சென்று தான் பழக்கம். பெரிய குடும்பம் என்பதால் அப்படியே வளர்ந்து விட்டேன். திருமணம் முடித்த பிறகும் சில வருடம் அப்படியே இருந்தேன். அந்த நேரத்தில் துணைவருக்கு வெளி நாட்டில் வேலை கிடைத்து கிளம்பினார். 


வேலை பொருட்டு அவர் முதலில் சென்று விட்டார். பின்பு கிட்ட தட்ட மூன்று மாதம் கழித்து நான் செல்ல முடிவாகியது. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது...எங்கள் வீட்டிலோ என் கணவரை வற்புறுத்த சொன்னார்கள். அதாவது நான் தனியாக செல்லவேண்டாம் என்று சொல்லி அவரை வந்து கூட்டிப்போக சொன்னார்கள். அதுவும் குழந்தையுடன் செல்வது இன்னும் கடினம் என்று பய முறுத்தினார்கள். 


ஆனால் நான் தனியாகவே செல்வதாக முடிவு செய்து விட்டேன். தேவையில்லாமல் அவருக்கு தொந்தரவு மற்றும் வீண் பண செலவு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அவரும் தைரியமாக வந்து சேர் என்று சொல்லி விட்டார்!. அதுவும் எங்கள் மகன் அப்போது 2 வயது குழந்தை. 

எல்லோருக்கும் தைரியம் சொல்லி விட்டு நான் புறப்பட்டேன்......

தொடரும்...

கொஞ்சம் மேலாக: நான் சிறிய சிறிய பதிவுகளாகவே இடுவதை பொறுத்துக்கொள்ளுமாறு அன்பு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன் நன்றி!


வித்யா குமார்

கொசுறு: பதிவை படித்து விட்டு கமன்ட் போடவும்...இப்படிக்கு "விக்கிஉலகம்" ப்ளோக்கை இப்போதைக்கு தத்து கொடுத்த தக்காளி.....ப்ளீஸ் மேடம் இது மட்டுமாவது நான் எழுதிக்கரனே!...(நண்பர்கள் கவனிக்கவும்!)

இது ஒரு காபி பேஸ்ட் பதிவு இந்த பயம் என்பது எப்படி என்னை விட்டு போனது! ப்ளோகில் இருந்து சுடப்பட்டது.
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. அடப்பாவி .. வீடுக்காரம்மவிர்க்கு ஐஸ் ஸா ?

  அவங்க போடற மாதிரியே ஒரு போஸ்ட் நீயே போட்டுட்டு..

  ReplyDelete
 2. >>ஆனால் நான் தனியாகவே செல்வதாக முடிவு செய்து விட்டேன். தேவையில்லாமல் அவருக்கு தொந்தரவு மற்றும் வீண் பண செலவு வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.

  இந்த பதிவை மிசஸ் விக்கி தான் எழுதுனாங்க என்பதற்கான ஆதார வரிகள்...

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் உங்களின் வாழ்க்கை துணைவியாருக்கு..

  ReplyDelete
 4. //நான் சிறிய சிறிய பதிவுகளாகவே இடுவதை பொறுத்துக்கொள்ளுமாறு //முடியாது ., என்ன செய்வதாக உத்தேசம்., ஹி ஹி

  ReplyDelete
 5. என்னங்க இப்படி ஒரு பதிவு...

  ReplyDelete
 6. அனுபவம் பேசுகிறது..

  அந்த பதிவுக்கும் போயிட்டு வருகிறேன்...

  ReplyDelete
 7. பயணம் என்பது எல்லோருக்கும் பிடிக்கும்னு நினைக்கிறேன். ஆனா என்னை பொறுத்தவரை கொஞ்சம் சிரமமான விஷயம் அதுவும் குழந்தையுடன் செல்லும் பெண்களுக்கு பெரிய போராட்டம் என்பேன்.//

  உண்மைதான். குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது கணவர், குழந்தைகள் இடையே நேரத்தைக் கடைப்பிடிகக தவியாய் தவித்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. மனைவிக்கு மரியாதை..nice..

  ReplyDelete
 9. யோவ் மாப்ள நீ தான் இந்த பதிவுலகத்துல மாட்டிகிட்டு படாத பாடு படர இருக்க தேவையில்லாம அவுங்களை ஏன்யா கூப்பிடுற ஹா ஹா

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் .....வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்...............

  ReplyDelete
 12. சுட்டதகூட சொல்லிடிங்க ... நீங்க ரொம்ப நல்லவர்

  ReplyDelete
 13. படிக்கவே பயங்கரமா இருக்கு

  ReplyDelete
 14. மாப்ள. நல்ல விஷயம்... தொடர்ந்து எழுத சொல்லு!

  ReplyDelete
 15. எப்படிஎல்லாம் காப்பி அடிக்கிறாங்க... திருமதி விக்கி அவர்களே... உங்களிடம் அனுமதி வாங்கினாரா?

  ReplyDelete
 16. எழுத்து நடையைப் பார்க்கும் போதே நினைத்தேன்.
  வீட்டுக்கார அம்மா தான் எழுதி இருக்காங்க.
  ஹி...ஹி...

  ReplyDelete
 17. பயம் பற்றிய முதலாவது தொடரில், விமானப் பயணத்தினைப் பலர் ஏன் வெறுக்கிறார்கள் தொடர்பான அலசலினைக் கிராமப் புற மக்களில் இருந்து ஆரம்பித்திருக்கிறார் கட்டுரையாளர். அடுத்த அங்கள் எப்படியிருக்கும் என்பதைப் படிக்க வெயிட்டிங்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி