திரும்பி வந்த காந்தி!

வணக்கம் நண்பர்களே........


மேரி வந்த மன்னிக்கவும் மாறி வந்த அரசியல் விஷயம் பலரையும் புருவம் தூக்கிப்பாக்க வச்சிருக்கு........இதுக்கும் யாரும் எதிர் பாக்காத வெற்றிய கொடுத்து இருக்காங்க மக்கள்....வெற்றியை வாங்கியவங்க சிந்திச்சி செயல் படுவாங்கன்னு நம்புவோமாக.............


கொஞ்சம் பின்னோக்கி போவோம்.........பின்னாடி போனா முட்டிப்போமேன்னு கேக்காதீங்க..........இது சுதந்திரத்துக்கு பின்பு நாம கடந்து வந்த பாதைய சொல்றேன்...

சரி காந்தி நோட்டுல இருந்து ஆரம்பிப்போம் அய்யயோ மன்னிச்சு!...காந்தி என்னா சொன்னாரு ......டேய் நல்லவங்களே சுதந்திரம் வாங்கியாச்சி.....இந்த கட்சிய கலாசிடுவோம்........ச்சே கலைச்சிடுவோம்....அவங்க, அவங்க போய் நம்ம நாட்டுக்கு நல்லது பண்றா மாதிரி வேல செய்யுங்கன்னு சொன்னாரு.......கேட்டாங்களா......

அவரு திரும்பி வந்து பாக்குறாரு இப்போ!........இப்படியும் இருக்குமோ!


காந்தி அண்ணே!..........உங்க வேல முடிஞ்சி போச்சி உங்கள வச்சி சுதந்திரத்த வாங்கியாச்சி...........இப்போ நாங்க இவ்ளோ வருசமா செலவு பண்ண காச எப்படி திரும்ப எடுக்கறது......உங்களுக்கு அது தேவையில்லாம இருக்கலாம்....ஏன்னா நீங்க துட்டுக்கு ஆசப்படாதவரு.....அதனால தான் உங்க முகத்த போட்டு கரன்சிய தயாரிச்சி வச்சி இருக்கோம்!....

ஏன்பா என்ன இப்படி பண்றீங்க.......

இல்லன்னே நாங்க நல்லவங்கள எப்பவுமே மறக்கறது இல்ல..அதனால்தான் உங்க படம் போட்ட...துட்ட நாங்க வச்சிக்க போறோம்......

இந்த கட்சிய கலைக்க சொன்னனே.......

இல்லங்க மகாத்மா!........ஏற்கனவே 60 வர்சத்துக்கு மேல ஓட்டிட்டோம்...மேலும் இந்த கட்சி வச்சி தான் நாங்க அடுத்த நூறு வருசத்துக்கு இந்த மக்கள் கிட்ட இருந்து ஆட்டைய போட முடியும்.......நீங்க என்னமோ மக்கள் கஷ்டப்படக்கூடாத்துன்னு சொல்றீங்களே......அது உண்மைதான் நாங்க தான் உங்க மக்கள்...அதானலதான் இது காந்தி தேசம்னு சொல்லி சொல்லியே  நோட்டு தேசமா மாத்திட்டோம் மகாத்மா அவர்களே.........

இங்க பாருங்கப்பா.......மத்த நாடுகள்ல தீவிரவாத அடிப்படயில சுதந்திரம் வாங்குறாங்க..........நாம அஹிம்சை முறையில சுதந்திரம் வாங்கி இருக்கோம் இத கொஞ்சம் யோசிச்சி பாருங்க...........

அய்யோ அய்யோ...இன்னும் நீங்க அந்த காலத்துலேயே இருக்கீங்களா.......உங்க அஹிம்சைய நாங்க தொடர்ந்து கடைப்பிடிச்சி வர்ரோமே....அதனால தான் யாரு எங்கள பத்தி பேசுனாலும் சைலண்டா அவங்க கதைய முடிச்சிடுவோம்.........இது உங்களுக்கு தெரியாது போல...........

எல்லா மதத்தாரையும் சகோதரர்களா பாவிக்க சொன்னனே...........

அதையும் நாங்க கடபிடிச்சிட்டு வரோம்........பாருங்க நாங்க இந்துக்கள பாத்து சாமி இல்லன்னு சொல்லுவோம். அவங்களும் அத பெருசா எடுத்துக்க மாட்டாங்க.......அப்புறமா மானம் ரோசம் இல்லாம அவங்க ஓட்ட வாங்குவோம்...ஆனா மத்த மதத்தினர்கிட்ட நல்லவங்க மாதிரியே காட்டிக்கிட்டு ஒன்னு ரெண்டு சீட்ட கொடுத்து அமுக்கிடுவோம்.........நேரா சாமிய கும்புடலன்னாலும் புற வாக்குல போயி மன்னிப்பு கேட்டுப்போம் ஹிஹி!...

நேர்மை, நியாயம் கடைபிடிக்க சொன்னனே.......

அதுக்கு தான் சினிமான்னு ஒன்னு வச்சி பல நடிகர்கள் மூலமா வசனம் பேச வச்சி நீங்க சொன்ன வர்த்தைகள பட்டி தொட்டிக்கெல்லாம் பரப்பி வச்சி இருக்கோமே..........

கஷ்டப்படுற கன்னுக்குட்டிய கொன்னுடறது மேலுன்னு சொன்னனே.......


ஆமாம்......நாங்க கன்னு குட்டிய மட்டும் இல்ல........கஷ்டப்படுற ஏழைகள போராட்டம்னு சொல்லி தலையில பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவோம்.....அப்புறம் எப்படி அவங்க கஷ்டப்படுவாங்க ஹிஹி!

பெண்களுக்கு உயர்ந்த பதவிகள் தரணும்னு சொன்னனே.........

இன்னா வாத்தியாரே......இப்போ நாட்டுல நடக்கறது அவங்க ஆட்சி தான் மெயின் சுட்ச் அவங்க கிட்ட தான் இருக்கு.........இது இன்னும் உங்களுக்கு தெரியலையே.........மேலும் பெண்கள வச்சி டான்சு நிகழ்ச்சி எல்லாம் நடத்தி அது மூலமா அவங்கள பேமசு ஆக்கி வச்சி இருக்கோம்!

என்னப்பா எல்லாத்துக்கும் பதில் வச்சி இருக்கீங்க..........

நம்ம மக்களை முன்னேற்றனும்னு சொன்னனே...........

அதனாலதான் நாங்க பெத்த மக்களுக்கு மட்டும் எல்லா வித மொழியையும் ஊட்டி மேலேத்தி உட்டுட்டோம்....மத்த பய புள்ளைங்களுக்கு 50 வருசமா இந்த 500 கீமீ தாண்ட விடாமா பொத்துனாப்போல வச்சி இருக்கோம் ஹிஹி!


உங்க கிட்ட இப்படிப்பட்ட பதில்கள எதிர் பார்க்கவா நான் திரும்ப வந்தேன்.....ராமா நான் பாத்த இந்தியா இதுவல்லவே.........அய்யோ.....!..நான் கெளம்பறேன்!...மாற்றம் வரும் என்று நம்பி கெளம்பறேன்!

நாட்டுல பொறுமைதான முக்கியம் இது தெரியலையே நம்ம மகாத்மாவுக்கு!

கொசுறு: இது ஒரு சாதாரண நிகழ்வு......பய புள்ளைங்க இந்த பதிவ பாத்துபுட்டு காந்திய நான் ஏன் இழுத்தேன்னு கேக்கப்படாது ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. ஹூம்.. திருந்திட்டான் தக்காளி

  ReplyDelete
 2. மேரி வந்த//

  இருங்க உங்க வீட்டுக்கார அம்மாவிற்கு போன் பண்றோம்;-))

  எப்போதுமே மேரி நினைப்புல..
  ஹி....ஹி...

  ReplyDelete
 3. உரையாடல் வடிவில் அஹிம்சையின் இன்றைய நிலையினை உணர்த்தும் பதிவு....
  கூடவே சமகாலப் பொருளாதார நிலையினையும் சொல்கிறது சகோ.

  மக்கள் மனங்கள் நடை முறை அரசியலை உணர்ந்து மாறினால் தான், எதிர்காலத்தினை வளமானதாக்க முடியும்,

  எங்கள் நாட்டைப் பொறுத்த வரை அது சரிப்படாத விடயம்- காரணம் ஆயுத அடக்கு முறை.

  ஆனால் மக்கள் சுதந்திரம் அதிகமுள்ள பாரதத்திற்கு மக்களின் தீர்க்கமான முடிவுகள், ஜனநாயக அணுகு முறைகள் சாத்தியப்படும் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 4. ..நான் கெளம்பறேன்!...மாற்றம் வரும் என்று நம்பி கெளம்பறேன்!

  ReplyDelete
 5. Lage raho Munnabhai padathul vara concept ah use panni irukkeenga...

  ReplyDelete
 6. @நிரூபன்

  "நிரூபன் said...

  மேரி வந்த//

  இருங்க உங்க வீட்டுக்கார அம்மாவிற்கு போன் பண்றோம்;-))

  எப்போதுமே மேரி நினைப்புல..
  ஹி....ஹி..."

  >>>>>>>>>>>

  ஏன்யா ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!

  ReplyDelete
 7. @நிரூபன்

  கண்டிப்பா மாறும்...ஆனா அதுக்காக முயற்சிக்கறத நிறுத்தக்கூடாது!

  ReplyDelete
 8. @koodal bala

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 9. @இராஜராஜேஸ்வரி

  மாற்றம் கண்டிப்பா வரும் ......வருகைக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 10. @ஜீ...

  வருகைக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 11. எலே விக்கி எப்படியா எல்லா பதிவுலும் உன்னால காமடி பண்ணமுடியுது...

  ReplyDelete
 12. வித்தியாசமான சிந்தனை நல்ல பகிர்வு

  ReplyDelete
 13. /////நேர்மை, நியாயம் கடைபிடிக்க சொன்னனே.......

  அதுக்கு தான் சினிமான்னு ஒன்னு வச்சி பல நடிகர்கள் மூலமா வசனம் பேச வச்சி நீங்க சொன்ன வர்த்தைகள பட்டி தொட்டிக்கெல்லாம் பரப்பி வச்சி இருக்கோமே.// ஹிஹிஹி உண்மை தானே ...

  ReplyDelete
 14. அண்ணே என்ன இது இம்புட்டு நாளா தேகப்பற்றில இருந்தீங்க, இப்போ திடீருன்னு தேசப் பற்றூக்கு மாறிட்டீங்க!

  ஆனாலும் அருமையான பதிவண்ணே!

  ReplyDelete
 15. என்னது காந்தி திரும்பி வந்துட்டாரா ?

  ReplyDelete
 16. அருமையான பதிவு விக்கி..யதார்த்தத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
 17. விக்கி மாமு அருமையான பதிவு.... உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் பதிவு போட நேரம் இருக்கு.


  தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

  ReplyDelete
 18. பதிவு சூப்பர் மாப்ள

  ReplyDelete
 19. உண்மை உண்மை...நூறு சதவீதம்....பயபுள்ளைக நோட்டுல காந்திய வச்சு இருக்கானுகளே அது போதாதா?

  ReplyDelete
 20. மாறுமா? மாற்றங்க‌ள் வருமா?

  ReplyDelete
 21. காலம் ஒரு நாள் மாறும், நம் கனவுகள் யாவும் நனவாகும்.

  ReplyDelete
 22. நாட்டில் நடப்பவற்றை நாசூக்காக சொல்லியிருக்கிறீர்கள்...

  ReplyDelete
 23. ஆமா, காந்திய ஏன் இழுத்தே ( விட்டுடுவோமாக்கும்)

  ReplyDelete
 24. காலம் ஒரு நாள் மாறும்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி