தலீவருக்கு என்னாச்சி....!

வணக்கம் நண்பர்களே.....


அண்மையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில்........

தலீவரே என்ன தான் நடக்குது.......பய புள்ளைங்க ப்ளான் பண்ணி நம்மள சாச்சி புட்டாய்ங்க....இப்போ சொல்லுங்க நாட்ட ஒரு கலக்கு கலக்கிடுவோம்.....

தம்பி......ஏன் இந்த நேரத்துல இப்படி பேசிப்பழகுற....பிரச்சன வரும்போது அத தனக்கு சாதகமா மட்டுமே மாதிக்கும்படி!...சிந்திப்பவனே சரியான அரசியல்வாதி(வியாதி!).....

என்ன இப்படி சொல்லி புட்டீங்க...நம்ம குடும்பத்து ஆளுங்க ஒவ்வொருத்தரா ஜெயுளுக்கு போயிட்டு இருக்காங்க....நீங்க அமைதியா இருக்கீங்களே....

அதான் அறிக்கையா விடுரனே போதும்யா!(பய புள்ளைங்க நம்ம குடும்பம்னு சொல்லுதுங்களே....எப்படியாவது நாம(!) அடிச்சி வச்சி இருக்க துட்ட ஆட்டைய போட பாக்குதுங்களோ!)

என்ன தலீவரே.....இந்த அறிக்கையில கூட ஒன்னும் எதிர்ப்பு காட்டலேன்னு நம்ம தொண்டர்கள் குமுறுறாங்க......

தம்பி....நான் அப்படி அறிக்கை விடலன்னா....இந்த வயசுல என்னைய கொண்டு போயி குமுற குமுற கும்முவாங்கய்யா....இது தேவையா.....!

என்னா தலீவா இப்படி சொல்லிபுட்டே....நாங்க உட்ருவமா....நாங்க இருக்கோம் நீ கவலைப்படாதே......


தம்பி நீ இருப்ப.....நானு..!....கொஞ்சம் யோசிச்சி பாத்தாங்களா இந்த மக்களுங்க...நான் கடந்த 50 வருசமா தமிழ் மொழிய எப்படி கட்டிக் காப்பாத்தி வர்றேன்னு....கொஞ்சம் கூட நன்றி இல்லாம ஆங்கில விருப்பம் உள்ள அந்தம்மாவ தேர்ந்தெடுத்துட்டாங்க பாரு.....

நான் கூட கேக்கனும்னு இருந்தேன்....உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா.....

நம்ம மக்களுக்கு அந்த கஷ்டத்த கொடுக்க கூடாதுன்னு நானும் என் மக்களும் மட்டும் தனியா கத்து வச்சிருக்கோம்யா ......அப்பதானே போராட முடியும் நம்ம மக்களுக்காக..!

ஹிந்தி எதிர்ப்பு நடத்தியே கட்சிய வளத்தீங்களே.....இப்போ உங்க சொந்த காரங்க எல்லாம் இந்தி பேசுறாங்களே....

அதாவது....மேல் சாதி மட்டுமே அந்த மொழிய தெரிஞ்சி வச்சிக்கனும்ங்கர சம்ப்ரதாயத்த உடச்சிட்டு இருக்கேன்யா...............இது புரியாத சிலர் என்னை ஏசுறாங்க...........சாதரணமாவே நம்ம மக்களுக்கு படிப்பு மேல ஒரு வெறுப்பு உண்டு...அதனால அவங்கள கஷ்டப்பட்டு படிக்க வேணாம்னு தான் என் வழி வந்தவங்கள இப்படி கஷ்டப்பட்டு படிக்க வச்சி இருக்கேன்....

சரி தலைவரே....இப்போ உங்க பொண்ணுக்காக மட்டும் இப்படி பொங்குறீங்களே.....உங்க பசங்க பேர்ல இல்லாத பாசம் அப்படியென்ன............


அதாவதுய்யா.........என் பையங்க பாரு..ஒருத்தரு ரொம்ப நல்லவரா நாட்டுக்கு காட்டிக்கணும்னு கஷ்டபடுராறு...இன்னொருத்தரு...மொழிப்பிரச்சனையில கஷ்டப்படுறாரு....ஆனா பொண்ணு மட்டும்தான் என்னைப்போலவே...நெளிவு சுளிவு தெரிஞ்சது...என்னோட மூளைய அப்படியே காப்பி பண்ணி வந்து இருக்கு...அதான் இப்படி கஷ்டப்படுறேன்....

நம்ம தொண்டர்களுக்கு ரொம்ப கோவமா பூடுச்சி..நீங்க இவ்ளோ நடந்தும் அந்த கட்சி கூட சமாதானமா போகுரத நெனச்சி...


வேற என்னத்தய்யா பண்றது...எனக்கு குடும்பம்தான் கட்சி (அய்யய்யோ உண்மைய சொல்லிட்டனோ!).....இல்ல கட்சி தான் எல்லாமே அதனால...இப்போ மாநிலமும் சரி இல்ல...மத்தியிலும் நம்ம நிலைமை சரியில்ல...(எனக்கு யாரு எப்படிப்போனாலும் கவலை இல்ல..என் குடும்பந்தான் முக்கியம்!)..அதனாலதான் விடாம புடிச்சிட்டு இருக்கேன் அந்த கட்சிய...!

தலீவரே....என்னை விட்ருங்க இது வரைக்கும் உங்கள போயி நம்பிட்டு இருந்தேன் பாருங்க.............ச்சே!

கொசுறு: இது பாவப்பட்ட ஜீவன்களின் கதறலின் ஒரு பகுதி மட்டுமே!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. haa haa ஹா ஹா தம்பி.. நேற்றைய நிகழ்வுகளை சொல்லு

  ReplyDelete
 2. இது பாவப்பட்ட ஜீவன்களின் கதறலின் ஒரு பகுதி மட்டுமே!// யாருப்ப இவங்கல்லாம்..

  ReplyDelete
 3. அவுங்க இந்த ஜன்மத்தில் திருந்த போவதில்லை

  ReplyDelete
 4. நம்ம மக்களுக்கு அந்த கஷ்டத்த கொடுக்க கூடாதுன்னு நானும் என் மக்களும் மட்டும் தனியா கத்து வச்சிருக்கோம்யா .//
  ஹஹா ஹிந்தி கூட தெரிஞ்சி வெச்சிருப்பாங்க

  ReplyDelete
 5. //அதான் அறிக்கையா விடுரனே போதும்யா!(பய புள்ளைங்க நம்ம குடும்பம்னு சொல்லுதுங்களே....எப்படியாவது நாம(!) அடிச்சி வச்சி இருக்க துட்ட ஆட்டைய போட பாக்குதுங்களோ!)//

  மாப்ள தலிவர இப்டி ரவுண்டு கட்டி அடிக்கிறீங்களே கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்கப்பா

  ReplyDelete
 6. அந்த பாவப்பட்ட ஜென்மம் நீங்க தானே...ஹா...ஹா...

  ReplyDelete
 7. கதறல் தலைவர் காதுல விழாது

  ReplyDelete
 8. //
  கொசுறு: இது பாவப்பட்ட ஜீவன்களின் கதறலின் ஒரு பகுதி மட்டுமே!
  //
  கதறல் தலைவர் காதுல விழாது

  ReplyDelete
 9. இங்கயும் தலிவரா..பாவம்யா!

  ReplyDelete
 10. பாவம்யா, விக்கி.

  ReplyDelete
 11. யாரையோ சொல்றீங்க போல?

  ReplyDelete
 12. யோவ் என்னய்யா எதிக்க்சு எல்லாம் வருது??தப்பு தப்பு

  ReplyDelete
 13. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 14. சம கால அரசியலை வைச்சு ஒரு உள் குத்துப் பதிவு ரசித்தேன் சகோ.

  ReplyDelete
 15. வருகைதந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி