பெண் நடத்தும் உணவகம் - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே...........


எங்கு போனாலும் நம் முதல் விருப்பம் நாவுக்கு ஏற்ற உணவு கிடைக்குமாங்கர கவலைதான்!...அதிலும் வெளி நாடு சென்று வேலை செய்பவர்களின் நிலைமை இன்னும் மோசம்..


பல நாடுகளில் இருக்கும் இந்திய உணவகங்கள் அதிகப்படியான விலையை கேட்பதாகவே இருப்பதாக எனக்கு தோன்றுகிறது...வியட்நாமிலும் இந்திய உணவகங்கள் உண்டு...மொத்தமாக 5 இந்திய வகை உணவுகளை கொடுக்கும் உணவகங்கள் இருக்கின்றன...(இந்த பகுதியில் ஹனாய் மட்டுமே சொல்லி இருக்கிறேன்!)


இதில் 4 உணவகங்கள் இந்தியர்களால் நடத்தப்படுகின்றன...இதை பற்றி இறுதியில் சொல்கிறேன்...ஒரு உணவகம் வியத்னாமியர்களால் நடத்தப்படுகிறது..அதுவும் இதில் இந்திய உணவுகள் மட்டுமே..என் மகனுக்கு இங்கு உணவருந்தவே பிடிக்கும் ...அதுவும் வெள்ளிக்கிழமை மாலையானால் போதும்...நான் வீட்டுக்கு வருவதற்குள் தயாராக நின்று கொண்டு இருப்பார்...


இந்த உணகத்தைப்பற்றி சொல்ல வேண்டுமானால்...இந்த உணவக முதலாளி ஒரு வியட்நாமிய பெண் பெயர் ஹுவே...இந்த சிறிய வயதில்(30) இந்த உணவகத்தை நேர்த்தியுடன் நடத்தி வருகிறார்...இவரின் குடும்பத்து அங்கத்தினர்கள் அனைவரும் இந்த உணவகத்தில் வேலை செய்கின்றனர்(6 பேர்)...இவர்கள் இல்லாமல் கவனிப்பு வேலையாட்கள்(service) தனி....என் மனைவிக்கும் எனக்கும் நல்ல தோழி...இந்திய உணவு செய்யும் முறையை இங்கிருக்கும் ஒரு இந்திய உணவகத்திடமே வேலை செய்து நன்றாக அறிந்து கொண்டு தன் சொந்த உணவகத்தை ஆரம்பித்து செவ்வனே நடத்தி கொண்டு இருக்கிறார்..(உணவு செய்பவர்களும் வியட்நாமியர்களே!)


இங்கிருக்கும் உணவு வகைகள் இந்திய உணவகங்களிலேயே மிகவும் குறைந்த விலையாக இருக்கிறது....எடுத்துக்காட்டாக ஒரு கோழி பிரியாணி மற்ற உணவகங்களில் $7 அதாவது இன்றைய இந்திய ரூபாய் விலையில் 315 ரூபாய்கள்...ஆனால் இந்த உணவகத்தில் $3.5 மட்டுமே(157.50)...இதனால் இந்தியர்கள் மொய்க்கும் இடமாக மாறிப்போய் இருக்கிறது..


மற்ற இந்திய உணவகங்கள் வரி என்று பொய் சொல்லி மேலும் 12% (கட்ட வேண்டிய இடத்துக்கு கட்டாமல்!) அதிகமாக பணம் பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள்...உணவுகளும் தரமாக இருப்பதில்லை அதிலும் கவனிப்பு (Service) நன்றாக இருப்பதில்லை...இதற்கும் அவர்களும் என் நண்பர்களே...கேட்டால் வருபவர்கள் வரட்டும்...ஐரோப்பியர்களுக்கு விலை ஒன்றும் பெரிய விஷயமல்ல(இந்தியர்கள் வருகை குறைவு!) என்ற மெத்தனத்துடன் இருப்பது புரிந்தது...


இந்த உணவகம் அமைந்திருப்பது ஒரு அழகான ஏரியின் ஒரு பகுதியில்(மறு பகுதியில் எங்கள் வீடு!)...அதனால் வரும் விருந்தினர்கள் அந்த ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே உணவருந்துவார்கள்(என் மகனும் என் குடும்பமும் கூட!)...அதுவும் மழை பெய்யும் போது இரண்டாவது தளத்தில் அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டே அந்த ஏரியில் மழை நீர் விழுவதை ரசிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்(மழை விரும்பி நான்!)....


மற்ற இந்தியர்களால் நடத்தப்படும் உணவகங்களை நல்லவிதமாக சொல்லமுடியாத காரணத்தாலும் அவர்கள் என்நண்பர்கள் என்ற காரணத்தாலும் தவிர்த்து விடுகிறேன்...வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்களாக நண்பர்களே..நன்றி!  கொசுறு தகவல்: இந்தியாவை காட்டிலும் வியட்நாமுக்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகமாம்(வருடத்திற்க்கு!)

கொசுறு: என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

28 comments :

 1. கேபிள் சங்கருக்குப்போட்டியா? தம்பி?

  ReplyDelete
 2. >>என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி!

  .. நீ எழுதிய பதிவா.. அண்ணி எழுதிக்குடுத்த பதிவா?

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...

  கேபிள் சங்கருக்குப்போட்டியா? தம்பி?"

  >>>>>

  இது ஒரு பாமரனின் பதிவு அவ்வளவே அண்ணே!
  ............................

  "சி.பி.செந்தில்குமார் said...

  >>என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது....ஆங் ஒன்றை மறந்து விட்டேனே ஹிஹி!

  .. நீ எழுதிய பதிவா.. அண்ணி எழுதிக்குடுத்த பதிவா?"

  >>>>>>>>>>>>

  இது வேறயா...நடத்துய்யா...
  இப்படிவேற சொல்லி ஏன் குழப்பம் விளைவிக்கிற!

  ReplyDelete
 4. //வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்கலாக நண்பர்களே நன்றி!//

  வியட்நாம் வந்தா எங்க உன் வீட்டுக்கு வந்துடப்போராங்கன்னு நைசா கழட்டி விடுற நடத்து மாப்ள நடத்து

  ReplyDelete
 5. //என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது//

  அப்ப நீங்க இவ்வளவு நாள் எழுதிகிட்டு இருந்தது தமிழ் இல்லையா.... அக்கா உங்களையே இப்படி சொன்னா எங்களோட பதிவ எல்லாம் பார்த்தா அவ்ளோதான்னு நினைக்கிறேன் மாப்ள தயவு செய்து காட்டிடாத

  ReplyDelete
 6. @சசிகுமார்

  "சசிகுமார் said...

  //என்னால் அழகிய தமிழில் எழுத முடியாது என்றும்(!)...கொத்தி குதறும் நடையில் மட்டுமே எழுத முடியும் என்றும் கிண்டலடித்த மேடத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இடப்பட்ட பதிவு இது//

  அப்ப நீங்க இவ்வளவு நாள் எழுதிகிட்டு இருந்தது தமிழ் இல்லையா.... அக்கா உங்களையே இப்படி சொன்னா எங்களோட பதிவ எல்லாம் பார்த்தா அவ்ளோதான்னு நினைக்கிறேன் மாப்ள தயவு செய்து காட்டிடாத"

  >>>>>

  அடப்பாவமே இப்படி வேற நினைக்கிறியா மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 7. @விக்கியுலகம்

  மாப்ள பதிவு போடும்போது பலமுறை வாசித்து...அழகிய தமிழில் போடுமாறு எனக்கு அறிவுரை ஹிஹி!...நாம பாக்காத அறிவுரையா ஹிஹி!

  ReplyDelete
 8. //வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்கலாக...// உணவருந்துவீர்களாக..எங்க கரெக்டாச் சொல்லு..உணவு அருந்துவீர்களாக...களாக..ளாக...புரியுதா...(நல்ல தமிழாம்ல!)

  ReplyDelete
 9. ஹிஹி அழகான பதிவு அண்ணே..
  நாக்கில் எச்சில் ஊருது...
  ஒரு பார்சல் ஆர்டர்!!

  ReplyDelete
 10. இந்த நடையை தொடரவும்...வியட்நம் பற்றி நீங்கள் எழுதும் பதிவுகளை நான் மிஸ் செய்வதில்லை...உணவகம் கட்டுரை கலக்கல்...கொடுத்து வைத்தவர் நீர்

  ReplyDelete
 11. புதிய தகவல் புகைப்படங்களுடன்..

  அது சரி நீங்க ஏங்க அங்க அடிக்கடி போறீங்க...

  ReplyDelete
 12. வியட்நாம் வந்தால் அந்த ஓட்டலில் சாப்பிடுகிறேபம் பில் தருவது யார்.. நீங்கள் தானே...?

  ReplyDelete
 13. பசிக்கிது சாப்பிட்டு வர்றேன்

  ReplyDelete
 14. நாங்க எப்போ வர்றது அண்ணே ஒரு சிக்கன் பிரியாணி பார்சல் பண்ணுங்க ..

  ReplyDelete
 15. வாழ்க கொட்டல்கள் ..)))

  ReplyDelete
 16. சூப்பரா இருக்கு மாம்ஸ்! :-)

  ReplyDelete
 17. மாப்ள வெளிநாட்டில் இருக்கும் இந்திய உணவங்களை பத்தி சொன்னது 100% சரி! அவனுகளுக்கு ஒரு அலட்சியம், எப்படியும் இந்தியர்கள் இங்க வந்துதானே ஆகனும்னு ஒரு தெனாவெட்டு.....!

  ReplyDelete
 18. இன்றும் உங்கள் பதிவு அருமை.

  ReplyDelete
 19. //வியட்நாம் வந்தால் இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்துவீர்களாக நண்பர்களே..நன்றி! //
  விளம்பரம்!

  ReplyDelete
 20. எழுத்து நடை அருமை. அது என் தங்கை எழுதிகொடுத்திருந்தாலும்!

  ReplyDelete
 21. வியட்நாம் வரவேண்டும் என்ற என் ஆசையில் எண்ணெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச்செய்துள்ளீர்கள்.
  வந்ததும் முதல் சாப்பாடு இந்த ஒட்டல்லதான்.
  பில்லை பற்றிக்கவலையில்லை.
  என் நண்பர் விக்கி கொடுப்பாரு.
  அவரு ரொம்ப நல்லவரு..

  ReplyDelete
 22. உங்கள் பதிவால் சில விடயத்தை அறிந்து கொண்டேன்...
  அதைவிட உங்க வீட்டு முகவரியையும் சொல்லியிருந்தால் முதல் அங்க வந்திருப்பமே...
  அதையெல்லாம் விட்டிட்டு ஒட்டல்ல காட்டிறீங்களே?
  இது நியாயமா?

  ஹிஹி அழகான பதிவு அண்ணே.
  வாழ்த்துக்கள்....


  !!எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு

  ReplyDelete
 23. வியட்னாம் வந்தால் கண்டிப்பாக இந்த உணவகத்திற்கு வர வேண்டும்,

  ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி