காலேஜ் (இடைச்செருகல் + கலக்கல்!) நண்பேன்டா!நண்பர்களைப்பற்றி அடிக்கடி நினைப்பதுண்டு. அந்த வயசுல, அதாங்க பிஞ்சு(எலேய் என்னா!) வயசுல பல கலாட்டாக்கள் உண்டு.அத இப்பவும் மறக்க முடிவதில்லை என் செய்வேன். மற்றும் நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல, அதேன் இந்தப்பதிவு.

அது காலேஜு கால காலைபொழுது ..................

மச்சி எப்படியிருக்கே ..................(கேட்டான் ஹரீஷ்)

ஏன்டா பாத்தா எப்படி தெரியுது.................. நல்லாத்தான் இருக்கேன்............என்னா இன்னிக்கி கிளாசுக்கு போகலையா..........

போகணும்...............

ஏன்டா குமாரு .............ஒரு விஷயம் தெரியுமா............

என்னாது .........

அதான் நம்ம காலேஜு நோடீசு போடுல போட்டு இருககாங்க பாக்காலையா......

இல்லையே சொன்னாதானே தெரியும்............

காலேசு கல்சுரல் ப்ரோகுராமு பெங்களூருல நடக்குதான்..........அதுக்கு கலந்துக்கறவங்க பேரு கொடுக்க சொல்றாங்க ................

டேய் யாருகிட்ட அவ்வளவு துட்டு இருக்கு.......

அட முட்டாப்பயலே ......இலவச அழைப்புடா..............

அப்படியா.......சரி என்னா ப்ரோகுராமுன்னு சொல்லி பேர் குடுக்கறது................

(கூட்டம் ஒரு வழியாக கூடி முடிவு எடுத்தது )

அப்போ நாம நாட்டுப்புற நடனம் ஆட பெங்களூரு போறோம் இல்லையா ...........

ஆமாண்டா குமாரு..........இந்த ஹரீஷு இருக்கானே இவன்தான் பாட்டு பாடுறான்............

>>>>ரயிலடி ........

ஏன்டா சரக்க வாங்கி வர சொன்னா என்னாடா இவ்ளோ நேரம் ...........

லூசு சும்மா இரு.......நம்ம NCC மாஸ்டரும் வாராரு டோய்..............

என்னடா இங்க சத்தம் ஏதாவது கண்டு பிடிச்சேன் பிச்சி புடுவேன்.......(என்றார் முறுக்கு மீசை)

டேய் போயிட்டாரு.......ரயிலு ஸ்டார்ட் ஆயிடுச்சி...........இந்தா, ஆளுக்கு ஒரு பீரு பாட்ல புடிங்க..........(ரயிலின் ஆட்டத்துடன் எங்க ஆட்டமும் ஆரம்பித்தது......)

எலேய் என்னா அங்கே இதோ வர்றேன்........(குரல் மீசையினுடயது)

மச்சான் வர்றாரு மாஸ்டரு........

எல்லோரும் குடித்து முடித்திருந்தனர் என்னைத்தவிர.............

டேய் அதக்குடுரா என்று பாட்டிலை எடுத்து ஜன்னல் வழியாக வீசினான் நண்பன்............

டமால்ன்னு சத்தம்.............அய்யோ அம்மான்னு அடுத்த சத்தம்................

1. பீர் பாட்டில் எதிர் வந்த கம்பத்தின் மீது மோதிய சத்தம் முதலில்...........

2. அந்த பாட்டிலின் ஒரு பீசு பறந்து வந்து அடுத்த பகுதியில் இருந்தவரின் நெற்றி ஓரத்தில் கிழித்து சென்றதால் அவர் ரத்தத்துடன் எழுப்பிய சத்தம்...........

சட்டென எல்லா விளக்கையும் அணைத்து விட்டோம்............

அவருக்கு லேசான கீறல் மட்டுமே இருந்திருக்க வேண்டும்......அங்கிருந்து வந்து வண்டி வண்டியாக மஞ்சள், சிவப்பு என்று இரு வித கலர் பூக்கள் போன்ற சொல்களால் எங்களை சந்தொசப்படுத்திசென்று விட்டார்........(ஹி ஹி)

பெங்களூர் காலேஜ் தங்கும் விடுதியில்

ஏன் மச்சி எல்லாம் சரி .....இந்த பாட்டுக்கு எப்படி ஆடுறது.......அத சொல்லிகுடுங்கடா...........

ஆடுனானுங்க , ஆடுனானுங்க எவனுக்கும் டான்சு சுட்டு போட்டாலும் வரல............

என்னதான் பண்றது...........சரி எதுக்கு பெங்களூர் வந்தோம் ..........வாங்க பப்புக்கு போவோம் என்று கிளம்பினோம்.............

ஒரு பெரிய மக்குல (mug) நெறைய பீர ஊத்தி கொடுத்தாங்க...........

மச்சி எனக்கு வேணாம் .............(என்றான் சீனு)

அடச்சீ குடி..................என்றார்கள் நண்பர்கள்.............விடுங்கடா அவன்தான் பயப்படுறானிள்ள என்றான் ஹரிஷ்.

நான் போய் மூச்சா போயிட்டு வரேன்னு போனான் சீனு............ திரும்பி வந்து அந்த கிளாச கையில எடுத்தான்.............

எல்லாம் ஒரு டிக் இடிச்சி ஒரே மூச்சில முழுசையும் குடிக்கறதா பந்தயம்............

குடிச்சி முடிச்சவுடனே.............சீனு சொன்னான் - அய்யோ அம்மா தல சுத்துது டேய் யாராவது என்ன புடிங்க என்றான்.............

அடி செருப்பால............நாயே .........குடிச்சது கோகு(coca cola) என்னமா நடிக்கிராண்டா ...........
என்றான் ஹரிஷ்

ஏன்டா நீ குடிகலையா.........

இல்ல மச்சி நான் நாளைக்கு பாடனும்ல அதான் என்றான்............

போட்டிக்கு கூப்பிடுறாங்க மேடையிலே......:

யாருக்கும் டான்சு வரல............எவனையும் காணும் எல்லாம் எஸ் ஆயிட்டானுங்க நான் உட்பட ..........அப்போ தனியாளா நின்னு அந்தப்பாட்ட சூப்பரா பாடி பரிசு வாங்குனான் அந்த ஹரீஷ்(டான்சு மற்றும் பாட்டு இணைந்து பாடுவதாகத்தான் எல்லோரும் அங்கு சென்றோம்!?).


கொசுறு: இந்தப்படத்தில் இருக்கும் திரு. ஹரிஷ் ராகவேந்திரா தான் அந்தப்பாடகர்(பெருமையுடன் நான் சொல்லிக்கொள்கிறேன் இவர் எனது காலேஜ் நண்பன் சாரி நண்பர்). அந்த நண்பனுக்கு இன்று என்னை நினைவிருக்கிறதோ இல்லையோ தெரியாது.
இந்த பதிவை இவ்ளோ நேரம் கொடுத்து படித்த என் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி(ஹி ஹி).....மறுபடியும் மீள் பதிவு கோச்சிகாதீங்கப்பா 

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. adangkoo அடங்கோ . லஞ்ச் டைம்ல பய பதிவு போடரானே

  ReplyDelete
 2. ரீலா? ரியலா? எவன் கண்டான்? ஹா ஹா

  ReplyDelete
 3. மாப்பூ உண்மையிலே ஹரிஸ் உங்க பள்ளித்தோழரா எனக்குப்பிடித்த பாடகர் ஆமா அந்த பீர் மார்க்கு என்னது!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  ரீலா? ரியலா? எவன் கண்டான்? ஹா ஹா"

  >>>>>>>>

  இது உண்மைகள் தங்கும் இடம் ஹிஹி!

  ReplyDelete
 5. @Nesan

  " Nesan said...
  மாப்பூ உண்மையிலே ஹரிஸ் உங்க பள்ளித்தோழரா எனக்குப்பிடித்த பாடகர் ஆமா அந்த பீர் மார்க்கு என்னது!"

  >>>>>>>>>>>>

  மாப்ள அவரு என்னோட கல்லூரி தோழர்!

  என்னது பீர் மார்க்கு!

  இப்போ அவரு பெரிய ஆளுய்யா..ஞாபகம் இருக்காது அவருக்கு என்னை ஹிஹி!

  ReplyDelete
 6. ஹாய் மாம்ஸ்... என்ன ரொம்ப நாளா ஆளையே காணும். ஹே.. ஹே..

  ReplyDelete
 7. பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே!

  ReplyDelete
 8. மாப்ள காலேஜ் படிக்கும் போதே ஆரம்பிச்சாச்ச

  ReplyDelete
 9. இவன் போட்டோவை பார்க்கும் போதே நெனச்சேன் அந்த ஹரிஷ் இவர்தான்னு

  ReplyDelete
 10. மாப்ள ஹரிஷ்க்கு பதில் நீ பாடியிருந்தா நீயும் பெரிய பாடகனா ஆயிருக்கலாம் மாப்ள மிஸ் பண்ணிட்டியே

  ReplyDelete
 11. காலேஜ் ரவுசு தாங்க முடியல

  ReplyDelete
 12. மஞ்சள், சிவப்பு என்று இரு வித கலர் பூக்கள் போன்ற //இலை இல்லாத
  பூவா ?

  ReplyDelete
 13. //நம்ம பதிவுலக நண்பருங்க நம்மள சீரியசு பார்ட்டின்னு நெனைக்கறாங்க போல,// யாருய்யா அப்படி விக்கியைக் கேவலமா நினைச்சது?

  ஹாரீஸ் அருமையான பாடகர்.உங்க ஃப்ரெண்டாய்யா?

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said...

  adangkoo அடங்கோ . லஞ்ச் டைம்ல பய பதிவு போடரானே//

  மீள் பதிவுக்கு என்ன லஞ்ச டைம் வேண்டிக்கிடக்கு? யூரின் போற டைமே போதும்.....

  ReplyDelete
 15. FOOD said...

  பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே!//

  போன்லயே பாட்டா?

  ReplyDelete
 16. பீரு மட்டும் தானா இல்ல........

  ReplyDelete
 17. என்னமோ போ... நீ சொல்லுற... நாங்கெல்லாம் நம்புறோம்...

  ReplyDelete
 18. மாம்ஸ், உங்களுக்கு இம்புட்டுப் பெரிய ஆளுங்க எல்லாம் நண்பர்களா..

  ஆச்சரியமாக இருக்கிறதே.

  ReplyDelete
 19. எல்லோரும் குடித்து முடித்திருந்தனர் என்னைத்தவிர.............//

  இதை நாம நம்பனுமாக்கும்.

  ஹி....ஹி...

  ReplyDelete
 20. கல்லூரி வாழ்வின் லூட்டிகளை அற்புதமாக எழுதியிருக்கிறீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி