இப்படி பாத்து இருக்கீங்களா? - வியட்நாம்!

வணக்கம் நண்பர்களே..........நேற்று ஒரு புதுவித அனுபவமாக இருந்திருக்கும் என் மனைவிக்கும், மகனுக்கும்...ஏனெனில் INS Airavat (ஐராவதம்!) - எனும் பெயர் கொண்ட இந்தியாவின் போர்க்கப்பல் வியட்நாம் வந்து இருந்தது...அழைப்பின் பேரில் சென்று இருந்தோம்...


ஹோனாயிலிருந்து துறைமுகத்திற்கு கிட்ட தட்ட 90 கிமீ தூரம் இருக்கும்...துறைமுகத்தின் பெயர் - ஹைபோங்!....அழகிய துறைமுகம் என்று சொல்ல முடியாவிட்டாலும்....முக்கிய துறைமுகம் என்று சொல்லலாம்!...2 மணி நேர பயணத்தில்(உபயம் -தூதரக பஸ்!) போய் சேர்ந்தோம்....


பெரிய போர் கப்பல் என்பதால் அனுமதி கெடுபிடிகள் அதிகம்...அதுவும் எங்களின் பெயர்கள் குறிப்பிட்டு இருந்த லிஸ்ட் காணாமல் போயிருந்தது குறிப்படத்தக்கது...அனைவரையும்(10 இந்தியர்கள், 15 வியட்நாமியர்!) கரையிலேயே நிற்க வைத்து விட்டார்கள் வியட்நாமிய போலீஸ்காரர்கள்!....பின் அந்த கப்பலின் கேப்டனிடம்(ப்ளாக் டைசன் அல்ல!) பேசிப்பார்த்தோம்....அவரும் இந்தியர்களை மட்டுமாவது அனுமதிக்குமாறு அந்த அதிகார்களிடம் பேசி அனுமதி வாங்கினார்......


எவ்வளவு பெரிய கப்பல்....உள்ளே டாங்கு மற்றும் ஒரு பெரிய அளவிலான லாரி நிற்கும் அளவுக்கு கீழ் தளம் இருந்தது...நல்லிணக்க காரணமாக வந்து இருந்ததால் அதனை தாங்கி வரவில்லை கப்பல்.....மேலும் மேல் தளத்தில் நவீன ரக ஹெலிகாப்டர்(ரோந்து!) நிற்க வைக்கப்பட்டு இருந்தது.....அது எவ்வாறு அந்த தளத்தில் இருந்து மேலெழும்பும் என்று விளக்கப்படுத்தினார் ஒரு அதிகாரி....


மொத்தம் 20 ஆபிசர்களும், 180 சிப்பந்திகளும் இந்த கப்பலில் பயணம் செய்கின்றனர்......அப்படியே பார்த்து கொண்டு வந்த போது ஒரு அதிகாரி என்னை பார்த்து தமிழா என்றார்...ஆமாங்க என்றேன்...நீங்க என்ற போது அவர் தான் ஆந்திரம் என்றும் தமிழ் தெரியும் என்றும் சொல்லி அவருடைய ஆபீசர்கள் தாங்கும் குளிர் அறைக்கு கூட்டி சென்றார்....மேல் தளம் அதிகமான வெப்பத்தில் தகித்தது...உள்ளே மிதமான குளிர்(A/C) வீசிக்கொண்டு இருந்தது....

நலம் விசாரித்த வண்ணம் பேசலானேன்.....உள்ளே இருந்த மிகப்பெரிய LCD டிவியில் கேம் X எனப்படும் விஷயத்தை என் மகனிடம் கொடுத்து விளையாட சொல்லி விட்டார் அந்த அதிகாரி(கார் கேம் 3D)....அந்த அதிகாரியின் முகம் என் நண்பன் ஒருவரின் முகதத்தை போல இருந்தது...அன்னியோன்யமாக பேசினார்...சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான்(HIET) கல்லூரியில் ஏரோனாடிக்ஸ் படித்ததாக கூறினார்....(இந்த கல்லூரி கிண்டி முனை - ஜோதி தியேட்டர்(ஹிஹி!) அடுத்து இருக்கிறது)....

அவர் பேசிக்கொண்டே வந்தார்....எப்படிப்பட்ட வேலை...கடல் நடுவே செல்ல வேண்டும்...தொடர்ந்து பல வாரங்களாக கடலில்(கப்பலில்!) இருப்பதாகவும்...பொதுவாக மாதத்துக்கு சில நாட்கள் குடும்பத்தை பார்க்க முடியும் என்றும்(விடுமுறை அல்ல!) என்றும் கூறினார்....இந்த கப்பல் விஷாகப்பட்டினத்தில் இருந்து வருவதாகவும் வரும் வழியில் புரூனே, கம்போடியா மற்றும் ங்காசாங் (அழகிய வியட்நாமிய துறைமுகம்!) கடந்து வந்ததாக கூறினார்!.....

பல விஷயங்களையும்...போர் நேர நடை முறைகளையும் விளக்கினார் அந்த நண்பர்(காபி மற்றும் ஸ்நாக்ஸ் உடன்!)....எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது இந்த பயணம்...இரவு வந்து சேர்ந்தோம் இனிதாக!

கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

43 comments :

 1. நானும் கப்பலை நேரில் பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது உங்கள் பதிவு.நன்றி.\எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்.\உண்மைதான் .

  ReplyDelete
 2. துறைமுக அனுபவம் சூப்பரா பகிர்ந்திருக்கிங்க.

  ReplyDelete
 3. நல்லவங்களுக்கு நண்பர்கள் சீக்கிரம் கிடைப்பாங்க.

  ReplyDelete
 4. கலக்கல்! வாழ்த்துக்கள் மாம்ஸ்! தொடர்ந்து நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும்!

  ReplyDelete
 5. கப்பல் பார்க்க போயிருக்கீங்க...கவிந்திடாதே??

  ReplyDelete
 6. கப்பல்பார்த்ததை சுவையான பதிவாக்கியிருக்கிறீர்கள்! நட்பு விடயம் உண்மைதான்!

  ReplyDelete
 7. வணக்கம் விக்கி, சென்ற மாதம் இந்த வாய்ப்பை நான் தவற விட்டேன். ஆனால் இப்போது கப்பலுக்குள் நேரடியாக சென்று பார்த்த அனுபவம் தந்துவிட்டது உங்கள் பதிவு. நன்றி !!

  ReplyDelete
 8. நல்லதொரு பகிர்வு..
  நண்பருக்கு நன்றி.

  ReplyDelete
 9. ஆஹா மாப்ள கொடுத்து வச்சவரு நாம இங்கயே இருந்தாலும் நம்மள ஒரு நாய் கூப்பிட மாட்டேங்குது ஆனால் மாப்பிள்ளைக்காக வியட்நாம் சென்று சுற்றி காட்டி இருக்கிறார்கள் பெரிய ஆளு மச்சி நீ ஹீ ஹீ

  ReplyDelete
 10. அண்ணே கலக்கல்னே

  ///கொசுறு: எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..///

  உங்க ராசி அப்படினே

  ReplyDelete
 11. மாப்ள.. கப்பலுக்குள் சென்று சுற்றி பார்ப்பது ஒரு உன்னதமான அனுபவம் இல்லையா? நான் நிறைய கப்பல்களை பார்த்திருக்கிறேன். போர் கப்பல்களை பார்த்ததில்லை.

  ReplyDelete
 12. பிளாக் டெம்ப்ளேட் செமயா இருக்கே?அடிக்கடி மாத்திட்டே இருப்பதாலா? ஹி ஹி

  ReplyDelete
 13. அழகிய அனுபவம் ..
  அந்த கப்பலின் பெயர் ///ஐராவதம்!///இந்திரன் யானையின் பெயர் தானே ...))

  ReplyDelete
 14. உணர்ச்சி பூர்வமான அனுபவம்தான்...


  பகிர்வுக்கு மிக்க நன்றி தல...

  ReplyDelete
 15. ////
  எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..
  ///////

  அது மிகப்பெரிய கலை....

  ReplyDelete
 16. கப்பல் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 17. நண்பா...கப்பலை பற்றி நேரடி ஒளிபரப்பாக இருந்தது... பதிவு...
  செல்லும் இடம் எல்லாம் நண்பர்கள் கிடைப்பது...
  உங்கள் நட்பின் விசாலத்தை காட்டுகிறது.

  ReplyDelete
 18. கப்பல் நின்னா இறங்கி தள்ளுவாங்களான்னு கேட்டீங்களா மாம்ஸ்!

  ReplyDelete
 19. நான் ஒர்க் பண்ணது வேற கப்பல்ல மாப்பு!

  ReplyDelete
 20. என் ப்ளாக்கில் எழுதப்படும் பதிவுகள் கூகுள் ரீடரிலும் டாஷ்போர்டிலும் அப்டேட் ஆகவில்லை.
  என்ன செய்ய வேண்டுமென நண்பர்கள் ஆலோசனை கூறுங்களேன்.

  ReplyDelete
 21. நல்ல அனுபவம் ......தாங்கள் கொடுத்து வைத்தவர்தான் ........

  ReplyDelete
 22. நல்லா இருந்த டெண்ப்லேட் ஏன் மாப்ள மாத்துன?

  ReplyDelete
 23. ..எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்.....

  மாப்ள உன் முக ராசி அப்படின்னு நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 24. உங்கள் தயவில் நாங்களும் கப்பலைக்
  கண்டு ரசித்தோம்
  இவனிடம் கொடுத்தால் பத்து பேருக்குப்
  போய்ச் சேரும் என்றால் ஆண்டவன்
  அள்ளி அள்ளிக் கொடுப்பானாம்
  இல்லயேல் கொடுக்கமாட்டானாம்
  உங்களுக்கு எங்கு சென்றாலும் நண்பர்கள்
  கிடைப்பது கூட ஆண்டவனின்
  சித்தமாக இருக்கும்
  பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. //எங்கு சென்றாலும் எளிதில் நண்பர்கள் கிடைத்து விடுவது கடவுளின் கருணை என்பேன்..//
  அத்துடன் விக்கியின் சொக்கத்தங்க குணமும் என்பேன். பகிர்வு அருமை நண்பரே. படித்து, பார்த்து ரசித்தேன்.

  ReplyDelete
 26. தங்கள் தயவால் நானும் பார்த்தேன் கப்பலை .

  பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 27. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

  வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

  ReplyDelete
 28. hindusthan college old makabalipuram road il ullathu. gindiil iruppathu college in office.

  ReplyDelete
 29. அருமையான அனுபவம் மாப்ள....

  ReplyDelete
 30. டெம்ப்ளே நல்லாருக்கு, ஆனா வலது பக்கத்துல உள்ள எழுத்துக்கள் கலர் மாத்தனும், படிக்க முடியல!

  ReplyDelete
 31. நன்பர்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை அதுவும் நல்ல நன்பர்கள்..!?
  நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.. 

  காட்டான் குழ போட்டான்...

  ReplyDelete
 32. சூப்பரான அனுபவம் மச்சி

  ReplyDelete
 33. அனுபவி ராசா அனுபவி ஹி ஹி....!!

  ReplyDelete
 34. நண்பனா இருக்க நினைக்கிரவனுக்கு எங்கே போனாலும் நண்பன் கிடைச்சிருவான்ய்யா.....!!!

  ReplyDelete
 35. ஐயய்யோ தமிழ்மணம் காணோமே....

  ReplyDelete
 36. வணக்கம் பாஸ்,
  இந்தியாவின் மிகப் பெரிய போர்க் கப்பலினைப் பார்த்து, ரசித்த விடயங்களோடு, அந்தக் கப்பல் பற்றிய சிறப்பினையும் பகிர்ந்திருக்கிறீங்க. ரசித்தேன்.

  ReplyDelete
 37. ஓட்டுப் பட்டைகளைக் காணவில்லையே பாஸ்,
  இந்த இணைப்பில் சென்று இணைக்கலாம்,

  http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html

  ReplyDelete
 38. டெம்பிளேட் கலக்கல், ஆனால் பதிவின் டைட்டில் டெம்பிளேட்டினுள் மறைகின்றதே.

  ReplyDelete
 39. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  ReplyDelete
 40. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி