அழகு நிலையம் - வியட்நாம் (பெண் பார்வையில்!)

வணக்கம் உறவுகளே.....

பெண்கள் வீட்டு பொறுப்பை மட்டும் கவனித்து வந்த காலம் மறைந்து வருகிறது என்று நினைக்கிறேன். முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்!

என் கணவர் பல விஷயங்களில் எனக்கு பெரிய தூண் என்பேன். அவரின் தூண்டுதலான வார்த்தைகள் தான் என் தாழ்வு மனப்பான்மையை அகற்றியது. எனக்கு கிட்ட தட்ட 10 வருட அனுபவம் இருந்தது அழகியல் துறையில்(!). அதை விட்டு விடாத வண்ணம் செயலாக்கி கொண்டு இருக்கிறேன். அதுவும் வியட்நாமில் இந்த வேலையை செய்வது சற்று சிரமமே. ஏனெனில், இங்கு இருக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தவர்கள் என்பதால் முக  சம்பந்தப்பட்ட வகைகள் (அலங்காரம் தவிர!) அதிகமாக தேவை இருக்காது.

இருந்தாலும் இவர்களின் சுத்தம் என்னை அதிசயிக்க வைத்தது. உடல் அழகுக்கு பெண்கள் அதிகமாக செலவழிக்கிறார்கள். இருந்தாலும் இந்தியாவை போல தனித்தனி பொருள்கள்(instruments!) கொண்டு செய்து கொள்பவர்கள் குறைவு மற்றும் இங்கு இருக்கும் பெண் அழகு நிலையங்கள் அதிகப்படியான பணத்தை பிடுங்கி விடுகின்றன.


இந்த வேலை சம்பந்தப்பட்ட பொருள்கள் இங்கு கிடைக்காது. ஒவ்வரு முறையும் இந்தியா செல்லும்போதும் கொண்டு வருவேன். கணவரின் நண்பர்கள் சிங்கப்பூரில் இருந்தோ அல்லது மலேசியாவில் இருந்தோ வரும்போது கொண்டு வந்து தருவார்கள்.

நான் முதலில் ஆரம்பித்தது இந்திய பெண்களுக்கு மட்டுமே. ஏன்னெனில், என் அனுபவம் அதனை சார்ந்து மட்டுமே இருந்ததால். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறேன், அதிலும் இங்கு வரும் பெண்கள் எளிதில் திருப்தி அடைந்து விட மாட்டார்கள். இங்கிருக்கும் (இந்திய)பெண்களின் கணவர்கள் பெரிய வேலைகளில் இருப்பதால் அவர்களால் வீட்டவர்களுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை.


அதுவும் இல்லாமல் குழந்தைகள் பள்ளிக்கு சென்றவுடன் பெண்கள் பாடு திண்டாட்டம்தான். எனவே வெளியில் சென்று வருவது மூலம் தங்கள் நேரத்தை தனிமை எனும் கொடிய விஷயத்தில் இருந்து காத்து கொள்கிறார்கள். பலர் பகுதி நேர ஆசிரியர்களாக ஆங்கிலம் கற்று கொடுக்க செல்கிறார்கள்.

நாங்கள் அழகு நிலையம் வீட்டில் ஒரு சின்ன அறையை ஒதுக்கி ஆரம்பித்த போது, இந்திய பெண்கள் தங்கள் வீட்டுக்கு வர சொல்லி வற்ப்புறுத்தினார்கள்(!)..என்னை பொறுத்தவரை அப்படி சென்று வருவதை விரும்பாத காரணத்தால் ஏற்க்க மறுத்து விட்டேன். கொஞ்ச காலம் சென்றது...தானே பெண்கள் வர ஆரம்பித்தனர். இப்போது சுமாராக போய் கொண்டு இருக்கிறது.

இதில் பல வகை உண்டு - முக அழகு, தலை முடி அழகு, கால் அழகு மற்றும் பல இருக்கிறது. இவை எல்லாம் செய்ய வேண்டுமானால் இடம் பெரிதாக வேண்டும். சீக்கிரத்தில் அதுவும் நடக்கும் இன்று நினைக்கிறேன்.


விரைவில் ஒரு தனி நிலையம் அமைக்க யோசித்து கொண்டு இருக்கிறேன். ஏனெனில் பல நாட்டு பெண்களும் வர ஆரம்பித்து உள்ளனர். இதன் மூலம் என் நண்பிகள் வட்டம் பெரிதாகி வருகிறது(!). வீட்டை விட்டு வெளியே செல்லவே பயந்த நான் இன்று பல நாட்டு பெண்களுடன் சகஜமாக பேசி வருவது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்(!) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று!


சொச்சம்: எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)


Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

24 comments :

  1. அழகே....அழகே.... நீ எங்கே இருக்கிறாய்?

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! மேலும் வளர!!!

    ReplyDelete
  3. தமிழ்மணம் இணைச்சாச்சு

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரி தொடர்ந்து முன்னேற...

    ReplyDelete
  5. விக்கி சார் “படித்தவுடன் கிழித்து விடவும்” எனும் தலைப்பில் எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளார். அதில் அவருக்கு பிடித்த நடிகை பற்றி பல வரிகள் எழுதி உள்ளார். என்னன்னு கேளுங்க மேடம்.

    ReplyDelete
  6. அப்போ விக்கிக்கு ஃப்ரீயாவே ப்ளிச்சிங்கா?..மாப்ள வெள்ளை வெளேர்னு ஆயிருப்பாரோ..

    ReplyDelete
  7. சிவா .. போட்டு குடுக்கரதுல கில்லாடி போல..

    ReplyDelete
  8. ////////வெறும் பணத்துக்காக இதை செய்யாமல் நான் கற்று கொண்ட விஷயத்தை விட்டு விடக்கூடாது எனபதால் ஆரம்பித்ததே இந்த நிலையம். இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. //////////

    அருமையானப படைப்பு ஒரு மாறுபட்ட சிந்தனையுடன் நேர்த்தியாக பல புதுமைகளை எதார்த்தமாக சொல்லி இருக்கும் விதம் சிறப்பு . பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  9. //இந்தியாவில் இருக்கும் என் சொந்தங்களின் கண்கள் இன்று விரிந்து பார்க்கின்றன. படிப்பறிவு குறைந்து திருமணம் ஆன இந்தப்பெண்(!) இன்று ஆங்கிலத்திலும், சொந்த வேலையிலும் வெளுத்து வாங்குகிறாளே என்று!//


    இதற்காகவே பாராட்டலாம்.
    பாராட்டுக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. தன்னம்பிக்கைப் பகிர்வு.

    ReplyDelete
  11. //எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)//
    இந்த கொசுறு, உண்மையில் நீங்க எழுதிய வரிகள் மாதிரி தெரியலயே சகோ. குமார் எழுதிக் கொடுத்தது மாதிரியே இருக்கே!

    ReplyDelete
  12. >>எல்லாப்புகழும், எல்லா விஷயத்திலும் என்னை ஊக்குவித்து நண்பராக இருக்கும் கணவருக்கே!(இவர் மட்டும்தான் ஐஸ் வைப்பாரோ!)

    தம்பி தக்காளி.. நீ இந்தியாவுல இருந்தப்போ பாக்கு வித்தே. இப்போ ஊக்கு விக்கிறியா?

    ReplyDelete
  13. தன்னம்பிக்கைப் ப்கிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  14. பாராட்டுக்கள்!!!விக்கி சாருக்கும் தான்!!பாவம் தானே ஹிஹி

    ReplyDelete
  15. அழகோவியம் உயிரானதே

    ReplyDelete
  16. இன்று எனது வலைப்பதிவில்

    நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

    நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

    http://maayaulagam-4u.blogspot.com

    ReplyDelete
  17. தன்னம்பிக்கை ஊட்டும் பகிர்வு வாழ்த்துக்கள் .
    இன்று என் தளத்தில் ஒரு பாடல் காத்திருக்கின்றது
    உங்கள் அனைவரின் கருத்தினைக் காண மறவாதீர்கள்
    உறவுகளே....

    ReplyDelete
  18. முடிந்தவரை உழைப்போம், அது குடுமபத்தின் சந்தோஷத்தை பாதிக்காத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும் என்பது என் எண்ணம்!//

    அருமையான கருத்து, தங்களின் இக் கருத்தினை நான் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அக்காச்சி, உங்கள் முயற்சி வெகு விரைவில் வெற்றி பெற்று, உங்களின் கனவு நிறைவேறட்டும்.

    ReplyDelete
  20. Hi Friend This Is Mohan VelloreWe buyd one script (cannot copy) your content anyone Copying ?This problem Was SolvedPlz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)You Need This Just Rs 500 Lets buy Contact Mohanwalaja@gmail.com

    ReplyDelete
  21. உங்கள் தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்கும் பாராட்டு, அதேநேரத்தில் துணைநிற்கும் விக்கிக்கும் பாராட்டுக்கள்......

    ReplyDelete
  22. கற்றதை பலருக்கு பயன்படும் வண்ணம் இருப்பது நல்ல முயற்ச்சி முன்னேற வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி