முன்னாள் காதலியுடன் ஒரு நாள்!

வணக்கம் நண்பர்களே....


காதல் எப்பேற்பட்ட விஷயம்...அது ஒரு மனுசன நல்லவனாக்கும், கெட்டவனாக்கும்...வீரன கோழயாக்குக்கும், கோழைய வீரனாக்கும்....அது போலதான் இந்த நிகழ்ச்சி....


ஹலோ!......இருக்கியா!...

இருக்கேன் சொல்லுங்க....

எப்போ பிரீயாவே!

ஏன்? என்ன விஷயம்....!

அவரு எப்போ வருவாரு....

அவரு வர நெறைய நேரம் இருக்கு......

சரி டாக்ஸி புடிச்சி அந்த இடத்துக்கு வந்துடு...நான் காத்து இருக்கேன்...!

சரி வந்துடறேன்.....


அவள் அங்கு வந்து காத்து இருந்தாள்....நான் அவளை சந்தித்து பேசினேன்...பல வருடங்கள் கழித்து ஒரு புதிய அனுபவமாக இருந்தது...அந்த பேச்சின் சுவாரஸ்யமே தனி(!)......அவள் என் முன்னாள் காதலியான என் இப்போதைய மனைவி...மகன் பிறந்த பிறகு தனிமையில் சந்தித்து பேசி மகிழ்வது குறைந்து விட்டது என்ற குற்ற சாட்டை தூக்கி வீசிய சந்தோஷத்தில் கணவனாகிய நான்!..(குழந்தை(அவர்!) பள்ளி சென்று விட்டதால்!)

கொசுறு: இதைப்போல் உங்கள் வீட்டிலும் பெண்கள் மனதில் வைத்து சொல்ல முடியாமல் தவிக்கலாம்...முடிந்தால் அவர்களை திருமணத்துக்கு பின் கொஞ்சம் rewind உலகத்துக்கு அழைத்து சென்று பாருங்கள்....வாழ்கை மேலும் சுகமாகும்!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

31 comments :

 1. முதல் காதலையும் ,முதல் முத்தத்தையும் மறக்க முடியாதே!

  ReplyDelete
 2. இவரு பெரிய சஸ்பென்ஸ் படம் எடுக்கறாரு. சொந்த சம்சாரம் கூட கடலை போட்டதை பெரிய சாகசம் மாதிரி பதிவு போடறாரு. ராஸ்கல்ஸ்.

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  முதல் காதலையும் ,முதல் முத்தத்தையும் மறக்க முடியாதே!"

  >>>>>>>>>>>>>>

  எனக்கு அப்படி ஒன்னும் இல்லப்பா!...உன்னையபோல் கிடையாது ஹிஹி!...
  ................................

  " சி.பி.செந்தில்குமார் said...
  இவரு பெரிய சஸ்பென்ஸ் படம் எடுக்கறாரு. சொந்த சம்சாரம் கூட கடலை போட்டதை பெரிய சாகசம் மாதிரி பதிவு போடறாரு. ராஸ்கல்ஸ்"

  >>>>>>>>>>

  யோவ் பல வீட்டுல பெண்கள் புழுங்கிகிட்டு தான்யா இருக்காங்க....இத பாத்தாவது ஒரு மனசு மாறாத!

  ReplyDelete
 4. நானும் நம்ம தக்காளிதான் மறுபடி முருங்க மரத்துல ஏறிடுச்சோன்னு பதறிட்டேன்....

  ReplyDelete
 5. //////சி.பி.செந்தில்குமார் said...
  முதல் காதலையும் ,முதல் முத்தத்தையும் மறக்க முடியாதே!
  ///////

  ஆனா சிபிக்கு வர்ரதெல்லாம் முதல் காதலாவே இருக்கே அது எப்படி?

  ReplyDelete
 6. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நானும் நம்ம தக்காளிதான் மறுபடி முருங்க மரத்துல ஏறிடுச்சோன்னு பதறிட்டேன்...."

  >>>>>>>>>>>>

  ஏன்யா ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!
  ...............................

  "பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //////சி.பி.செந்தில்குமார் said...
  முதல் காதலையும் ,முதல் முத்தத்தையும் மறக்க முடியாதே!
  ///////

  ஆனா சிபிக்கு வர்ரதெல்லாம் முதல் காதலாவே இருக்கே அது எப்படி?"

  >>>>>>>>>

  எத்தனாவது "முதல்" அதுதான் மேட்டரு ஹிஹி!

  ReplyDelete
 7. அந்த நாள்...
  ஞாபகம்....
  நெஞ்சிலே...
  வந்ததே ...
  நண்பனே...
  நண்பனே...

  ReplyDelete
 8. மாப்ள நான் கூட மொதல்ல என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன். நமக்கு காதல், கல்யாணம் ரெண்டுமே இல்லை. (இன்னும் அதற்கான வயசு வரவில்லை) ஆகவே எதிர்காலத்துல யூஸ் பண்ணிக்கிறேன்.

  ReplyDelete
 9. மாப்ள அக்காவுக்கு ஐஸ் வைக்க ஒரு பதிவா நடதுய்யா ஹா ஹா

  ReplyDelete
 10. மாப்ள தலைப்பே கலக்கலா இருக்கே..

  ReplyDelete
 11. ///இதைப்போல் உங்கள் வீட்டிலும் பெண்கள் மனதில் வைத்து சொல்ல முடியாமல் தவிக்கலாம்...முடிந்தால் அவர்களை திருமணத்துக்கு பின் கொஞ்சம் rewind உலகத்துக்கு அழைத்து சென்று பாருங்கள்....வாழ்கை மேலும் சுகமாகும்!///

  அதெல்லாம் காதலிக்கும் போது , காப்பு கட்டியாச்சுன்னா.....

  தனியா மாட்டி அடிவாங்குனதயெல்லாம் நாங்க பப்லிக்ள சொல்ல மாட்டோம்.

  பன்னி நாம எவ்வளவு புத்திசாலிகன்னு இவங்களுக்கு சொல்லுயா

  ReplyDelete
 12. கலிகாலம், புள்ளைக்கு பயந்து என்ன வெல்லாம் பண்ண வேண்டி இருக்கு..

  அது சரி அவரு தான் வீட்டுல இல்லையே பேச (செய்ய) வேண்டியது எல்லாம் வீட்டுலேயே செஞ்சு இருக்கலாமே!!!?? // டவுட்..

  ReplyDelete
 13. சிபி கமெண்ட்டை நான் வழிமொழிகிறேன்..

  அடுத்தவன் பொண்டாட்டியை தள்ளிக்கிட்டுப் போன நித்யானந்தாவை விட மோசமா விக்கி சீன் போடுறாரே..

  ReplyDelete
 14. இத நம்பலாமா .....நம்பவேண்டாமான்னே தெரியலையே ....

  ReplyDelete
 15. நான் கூட ஏதோ 'ஆட்டோகிராப் ' போல ஓடிவந்தேன்

  ReplyDelete
 16. ippadiyellaam ice vaikkalaamaa? asaththunga maams

  ReplyDelete
 17. முடிந்தால் அவர்களை திருமணத்துக்கு பின் கொஞ்சம் rewind உலகத்துக்கு அழைத்து சென்று பாருங்கள்....வாழ்கை மேலும் சுகமாகும்!//


  என் முன்னாள் காதலிய திருமணதிற்கு பிறகு வெளில கூட்டிபோனா அவ புருஷன் உதப்பானே?

  ReplyDelete
 18. இருந்தாலும்..தக்காளி உன் அட்வைசூ சூப்பரூ...

  ReplyDelete
 19. சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!

  ReplyDelete
 20. ///இதைப்போல் உங்கள் வீட்டிலும் பெண்கள் மனதில் வைத்து சொல்ல முடியாமல் தவிக்கலாம்...முடிந்தால் அவர்களை திருமணத்துக்கு பின் கொஞ்சம் rewind உலகத்துக்கு அழைத்து சென்று பாருங்கள்....வாழ்கை மேலும் சுகமாகும்!/
  >>>
  ரிப்பீட்ட்ட்ட்ட்டேடேடேய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 21. உபயோகமான தகவல் பகிர்வு சூப்பருங்கோ.

  ReplyDelete
 22. புதுசு புதுசா சிந்திக்கிறாங்களே,போஸ்ட் போட!

  ReplyDelete
 23. மாப்பிள தலைப்ப பார்திட்டு உள்ள வந்தால் கடிச்சு வைச்சிட்ட மாப்பிள..!காட்டான் குழ போட்டுட்டான்..

  ReplyDelete
 24. நண்பா...நல்ல டெக்னிக்!!!!!!!!
  நானும் யூஸ் பண்ணி பாக்கிறேன்.

  ReplyDelete
 25. என்னமோ ஏதோன்னு பதறிப் போய் (?!) ஓடி வந்தா.....இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு மாம்ஸ்! :-)

  ReplyDelete
 26. முன்னால் காதலி என்றுமே காதல் மனைவியாக இருக்கட்டும்.....அந்த மனைவியை என்றுமே காதலித்துக்கொண்டேயிருங்கள்....

  ReplyDelete
 27. வித்தியாசமான சிந்தனை ஓட்டத்தில் பதிவு

  ReplyDelete
 28. சஸ்பென்ஸ் தலைப்பில், பலரின் சிந்தனையினைத் தூண்டு, பதிவிடுவதைத் தவிர்த்து, மனைவியோடு உலா வர வைக்கும் ஓர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி