ராணுவ வீரன்னா கேவலமா! - கண்டனப்பதிவு(Late Post!)

வணக்கம் நண்பர்களே...சில நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தைய சுட்டு கொன்னதுக்கு என் கண்டனங்களை சொல்லி இருந்தேன்...எப்பேர்பட்ட மனுசனா இருந்தாலும் ஒரு குழந்தையை சாதாரண விஷயத்துக்காக சுட்டு கொன்றது மிகப்பெரிய தவறு...

இப்படி இருக்கையில் சில நாட்களாக இந்திய ராணுவ வீரர்களை பற்றி பல நாதாரிகள் கேவலமாக எழுதி வருகின்றனர்....தக்காளி தில் இருந்தா போய் ஒரு நாள் தோட்டாக்களுக்கு நடுவுல நில்லுங்கடா பாக்கலாம்....இங்க வீட்டுக்குள்ள உக்காந்து கிட்டு ஓட்டு போடாம விடுமுறை விட்டா சுண்டல் சாப்பிட்டு கிட்டு தூங்கும் தைரியசாலிங்க வெளிய வாங்க.....


தக்காளி ஒரு நாளைக்கு அந்த இடத்துல நில்லுங்க...வெறும் சினிமா போல தோட்டா பறக்காது...நிஜமான தோட்டா பறக்கும்...ரெண்டு குண்டு உடம்புல வாங்கி பாத்துட்டு பேசணும்....


என்னமோ இவனுங்க போய் அங்கே இந்தியாவுக்கு எதிரானவங்கள போட்டு தள்ளிட்டாப்போல பேசுறாங்க....என்ன வேணா பேசலாம் சன நாயக நாட்டுல...அதுக்காக வந்து உயிரை கொடுங்கடான்னா எவ்ளோ பேரு வருவாங்க..தங்கள் உயிரை கொடுக்க....நாட்டுக்குள்ள இருக்க கொள்ளக்காரங்கள தூக்க ஓட்டு போடவே வீட்ட விட்டு வெளிய வர பயந்த துக்கடா பசங்கா....இந்த விஷயத்துக்காக வந்து கிழிக்கபோராங்களா....

சினிமால எவ எந்த டிரஸ் போட்டா...போட்டாளா இல்லையான்னு...அவளுக்கு கடுதாசி எழுதி தங்களோட கருமாந்திர உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்பவர்களுக்கு தெரியுமா நாடுன்னா என்ன சுதந்திரம்னா என்ன...அதுக்காக ரத்தம் சிந்துறதுன்னா என்னன்னு!

கோவம் வந்தா பக்கத்துல இருக்குறவன சுடுபவன் அல்ல ராணுவ வீரன்...சாகும் போதும் நாலு எதிரிகள கொன்னுட்டு சாகனும்னு நெனைக்கிரவனே உண்மையான வீரன்......


பல பதிவுகளில் ராணுவம் செய்த கொடுமைன்னு போடுறாங்க.....எங்க பாதுகாப்பு பிரச்சனை வந்தாலும் அங்க முதல் ஆளா போய் நின்னு...எவன் சுட்டாலும் வாங்கிக்க வேண்டிய பொறுப்பு ராணுவ வீரனுக்கு உண்டு....அதே சமயம் அவனால உணர்ச்சி வசப்பட்டு வேலை செய்ய முடியாம கடமை கைய கட்டி வச்சி இருக்கும்(!).....இது தான் உண்மை....


வெறும் வரிப்பணத்துக்காக வேலை பார்ப்பவங்கன்னு நினைப்பவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கறேன்...நீங்க பாக்குற நகர வேலைய விட்டு புட்டு அங்க போய் ஒரு மாசம் பாதுகாப்பு பணிங்கற பேர்ல உசுர வச்சி பந்தயம் ஆடும் வேலையில நின்னு பாருங்க தெரியும்...எவனோ(!) பொறந்த ஊருங்கரத்துக்காக இன்னும் என் சகோதர்களால என் சகோதர்களே செத்துட்டு இருக்க இடமெல்லாம் இருக்கு இந்த புண்ணிய பூமியில....

தில்சன் எனும் குழந்தையின் மரணத்துக்கு காரணம்...ஒரு தனிப்பட்ட நபரின் முட்டாள் தனமான மற்றும் எதேச்சதிகார உணர்வே காரணம்...இதற்க்கு குடி காரணம் அல்ல என்பதே என் கருத்து....இதற்காகாக ஒட்டு மொத்த ராணுவ வீரர்களை குறிபார்த்து வன்சொற்களை வீசியவர்களுக்கே இந்த கண்டன பதிவு....

இந்த நாட்டுக்குள்ள எவ்ளோ வேணா பிரச்சினை இருக்கலாம்...இதான் சாக்குன்னு துண்டாட நெனச்சி மக்களின் மனசுல விஷ விதைகள் விதைக்கிரவங்க யாரா இருந்தாலும் அவர்கள் புதைக்கப்படுவார்கள்!

கொசுறு: யாகாவாராயினும் நாகாக்க இல்லன்னா எதால வேணாலும் அடிக்கப்படுவார்கள்!.....இந்தப்பதிவு அந்த குற்றவாளிக்கான ஆதரவுப்பதிவு அல்ல...அதே சமயம் நாட்டை காக்கும் உண்மையான வீரர்களுக்கான ஆதரவுப்பதிவு!...late but not waste!


ஜெய் ஹிந்த்!
 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

30 comments :

 1. இனிய மதிய வணக்கங்கள்!

  ReplyDelete
 2. @நிரூபன்

  வாங்க இனிய மதிய வணக்கங்கள் நிரூ!

  ReplyDelete
 3. காத்திரமான முறையில் உங்கள் கருத்துக்களை, வீரியமுள்ள தோட்டாக்கள் போல, வேகத்துடன் பதிந்துள்ளீர்கள்.

  ஒட்டு மொத்த இராணுவத்தையும் குறை கூறுவது நியாயமற்ற செயல். ஆனால், இந்தச் சம்பவம் நிகழும் போதி, பார்த்துக் கொண்டு நின்ற, ஏனைய வீரர்களாவது, உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம் தானே?

  ReplyDelete
 4. காத்திரமான முறையில் உங்கள் கருத்துக்களை, வீரியமுள்ள தோட்டாக்கள் போல, வேகத்துடன் பதிந்துள்ளீர்கள்.

  ஒட்டு மொத்த இராணுவத்தையும் குறை கூறுவது நியாயமற்ற செயல். ஆனால், இந்தச் சம்பவம் நிகழும் போதி, பார்த்துக் கொண்டு நின்ற, ஏனைய வீரர்களாவது, உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கலாம் தானே?

  ReplyDelete
 5. @நிரூபன்

  உங்கள் கருத்துக்கு நன்றி...இதில் தடுக்க முற்பட்டார்களா இல்லையா என்பது நமக்கு இன்று வரை விளங்காத ஒன்றே!

  ReplyDelete
 6. தம்பி, நீ எப்பவும் எதிலும் லேட் பிக்கப் தானே. ஹி ஹி

  ReplyDelete
 7. ஓக்கே பாஸ், ஆனால் நாட்டுக்காக பல்வேறு பட்ட அர்பணிப்புக்களைச் செய்யும் வீரர்களுக்கு மணி மகுடம் சூட்டாது, இந்தச் செயலை அடிப்படையாக வைத்து, ஒட்டு மொத்த இந்திய இராணுவம் மீதும் கறை பூச சில தீய சக்திகள் முயல்கின்றனவே. அதன் பின்னணி என்னவாக இருக்கும்?


  நான் கூடச் செங்கோவியின் பதிவில் இந்திய இராணுவத்தினரில் தவறு என்று, அவர் அதனைத் தெளிவுபடுத்திக் கூறும் வரை வாதாடினேன். பின்னர் தான் அந்த விடயத்தினைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 8. சொந்தமா , சுதந்திரமா கருத்து சொல்ல ஒரு தைரியம் வேணும் மாப்ள..

  ReplyDelete
 9. @நிரூபன்

  "நிரூபன் said...
  ஓக்கே பாஸ், ஆனால் நாட்டுக்காக பல்வேறு பட்ட அர்பணிப்புக்களைச் செய்யும் வீரர்களுக்கு மணி மகுடம் சூட்டாது, இந்தச் செயலை அடிப்படையாக வைத்து, ஒட்டு மொத்த இந்திய இராணுவம் மீதும் கறை பூச சில தீய சக்திகள் முயல்கின்றனவே. அதன் பின்னணி என்னவாக இருக்கும்?


  நான் கூடச் செங்கோவியின் பதிவில் இந்திய இராணுவத்தினரில் தவறு என்று, அவர் அதனைத் தெளிவுபடுத்திக் கூறும் வரை வாதாடினேன். பின்னர் தான் அந்த விடயத்தினைப் பற்றி ஓரளவு புரிந்து கொண்டேன்."

  >>>>>

  இந்தியாவை பற்றி இந்திய ராணுவ செயல்பாடு பத்தி சொல்லனும்னா நெறய இருக்கு மாப்ள...அதை பொதுவில் வைக்க நான் விரும்ப வில்லை!....வேணும்னா தெரிய வைக்கிறேன்!

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் தோழரே,

  உங்கள் கருத்தில் இலட்சம் கிலோ வாட்
  நியாயம் தெரியுது..

  உங்க கருத்துக்களில் உள்ள நியாயத்தை உணர்கிறேன்..

  கார்கில் போரில் எத்தனை எத்தனை ராணுவ வீரர்கள் நமக்காக உயிரை விட்டனர் ?

  நாம் ஒரு மெழுகுவர்த்தி ஏத்தி 2 நாள் துக்கம் னு இருந்துட்டு நீங்க சொல்ற
  மாதிரி சினிமாக்காரிகளுக்கு கடுதாசி போட்டுக்கிட்டு இருக்கோம்.

  குட்...

  சரியான நேரத்தில் தந்துள்ள
  சரியான படைப்பு..

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 11. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  சொந்தமா , சுதந்திரமா கருத்து சொல்ல ஒரு தைரியம் வேணும் மாப்ள.."

  >>>>>

  என்னை புரிந்து கொண்டதற்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 12. @சிவ.சி.மா. ஜானகிராமன்

  வருகைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 13. ///கோவம் வந்தா பக்கத்துல இருக்குறவன சுடுபவன் அல்ல ராணுவ வீரன்...சாகும் போதும் நாலு எதிரிகள கொன்னுட்டு சாகனும்னு நெனைக்கிரவனே உண்மையான வீரன்....../// ரைட்டு, இந்த கருத்தோடு நானும் ஒத்துப்போகிறேன் ...

  ReplyDelete
 14. உங்கள் ஆதங்கம் சரியானது. அதற்கான எதிர்ப்பையும் முறையாக வைத்துள்ளீர்கள்.ஒரு ஆணோ, பெண்ணோ தவறு செய்தால், ஒட்டு மொத்த ஆண் அல்லது பெண் வர்க்கமே ஒழுக்கக்கேடானதென சொல்வதில்லை. மாறாக, இராணுவ வீரர் ஒருவர் தவறு செய்தால்,இராணுவமே தவறானதென எப்படிச் சொல்ல முடியும்? Better late than never.

  ReplyDelete
 15. நீ சொல்றது சரியான விஷயம்தான் மாப்ள, வீரியமான பதிவு!

  ReplyDelete
 16. @கந்தசாமி.

  கருத்தின் புரிந்துணர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 17. @FOOD

  கருத்தின் புரிந்துணர்வுக்கு நன்றி அண்ணே!

  ReplyDelete
 18. @பன்னிக்குட்டி ராம்சாமி


  கருத்தின் புரிந்துணர்வுக்கு நன்றி மாப்ள!

  ReplyDelete
 19. சரியான கருத்துக்கள் நண்பா! இது தனி மனிதன் செய்த குற்றமே தவிர ராணுவம் செய்த குற்றமல்ல. இதற்காக ஒட்டுமொத்த ராணுவத்தையும் குற்றம் சொல்வது மடத்தனம்.

  ReplyDelete
 20. அரசியல் வாதிகள் செய்றத தட்டி கேட்க துப்பு இல்ல ... ராணுவத பத்தி எவனும் பேச கூடாது

  ReplyDelete
 21. நண்பரே இந்த கொடுமைக்கெல்லாம் உச்சம் ஒரு நண்பரே "அதென்ன ராணுவ வீரன்? ராணுவ கூலின்னுதானே சொல்லணும்?" அப்படின்னு கேட்டாரே பார்க்கலாம்.

  ReplyDelete
 22. //இதான் சாக்குன்னு துண்டாட நெனச்சி மக்களின் மனசுல விஷ விதைகள் விதைக்கிரவங்க யாரா இருந்தாலும் அவர்கள் புதைக்கப்படுவார்கள்! // சூபர் மாமூ..இதே விசயத்தை நான் மென்மையாச் சொல்லி இருந்தேன். நீங்க ருத்ர தாண்டவம் ஆடி இருக்கீங்க.

  ReplyDelete
 23. மாமு! HATS - OFF!

  நாடு கொடுக்கும் அனைத்தையும் அனுபவித்து விட்டு, களங்கப்படுத்தும் கயவர் கும்பலை, அவர்தம் பதிவுகளை புறக்கணிப்போம்!

  ReplyDelete
 24. ungal kopam niyaayamaanathu. varikal onnonnum bullet speed pola speed'a irukku. army work eight hrs duty illai. 24 hrs duty.

  ReplyDelete
 25. ஏன் மாப்பிள நீ டென்சனாகிறா டென்சனாகினா கண்டத சாப்பிடுவாய் கண்டத சாப்பிட்டா கொலஸ்ரோல் வரும் கொலஸ்ரோல் வந்தா காட்டட்டாக் வரும் காட்டட்டாக் வந்தா சங்குதான் மாப்பிள..? 

  சில வலிகள அனுபவித்தாதான் தெரியும்..!?இந்தியராணுவத்தின் பிடிகளில் நானும் நான்கு நாட்கள் இருந்தனான் பதினைந்து வயது சிறுவனை தடுத்து வைத்திருக்கலாமா என அவர்களுக்கு தெரியவில்லை போலும் இத்தனைக்கும் எனது பள்ளிக்கு அருகில்தான் அந்த முகாம் இருந்தது..!? 

  அவர்கள் சாப்பிடும் அதே சாப்பாட்டதான் எனக்கும் தந்தார்கள்  இபோ நினைத்து பார்கும்போது ஒன்று மட்டும் விளங்குகிறது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் இருக்கும் இராணுவத்திணருக்கு  மனவியல் பயிற்சியும் அளிக்கவேண்டும் இதற்காக ஒட்டு மொத்த இரணுவத்தினரையும் குற்றம் சாட்ட முடியாதுதான் ..!?

  நல்ல காலம் காட்டான்  களவெடுத்ததெல்லாம் சொந்தகாரங்கட தோட்டத்திலதான்..!? இந்தியராணுவ முகாமின் பின்பக்கம் நல்ல கறுத்த கொழும்பான் மாம்பழம் காய்ததை கண்டவந்தான் இந்த காட்டான்...!!நல்ல காலம் காட்டான் போகவில்லை அந்த பக்கம்..!!? இல்லாட்டி இன்றைக்கு பாஸ்போட் சைஸ் போட்டோவோட இருபத்திரெண்டாவது நினைவஞ்சலி வந்திருக்கும்...!?

  ReplyDelete
 26. நன்றி விக்கி

  ReplyDelete
 27. இந்தப்பதிவு அந்த குற்றவாளிக்கான ஆதரவுப்பதிவு அல்ல...அதே சமயம் நாட்டை காக்கும் உண்மையான வீரர்களுக்கான ஆதரவுப்பதிவு!...late but not waste!
  well said brother.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி