குட்டிச்சுவர் - பாகம் 1

வணக்கம் நண்பர்களே...


"குட்டிச்சுவர்" - இந்தப்பெயர் ரொம்ப பிரபலம் ஒரு காலத்தில்(!).....வேலை வெட்டி இல்லாமல் இங்கு உற்காந்து உலக நாகரிகத்தில் இருந்து உள்ளூரு தரை டிக்கட்டுகள்(!) வரை நிமித்தி எடுத்துக்கொண்டு இருந்தார்கள் அவர்கள்(!) அப்போது.....(!)இருந்த தருணங்களின் கோர்வையே இந்த தொடர்.....அப்போது அந்த குடும்ப தலைவருக்கு வரும் வருமானம் மிகக்குறைவு....அம்மாவும் முடிந்தவரை வீட்டிலேயே துணி தைத்து தெரிந்தவர்களுக்கு கொடுத்து வந்த காலம்...இதற்கிடையில் பொறுப்பு(!) என்பது சிறிதும் அற்ற கொடுங்கோலனான அவனை(!) சமாளிப்பதே வீட்டில் அனைவருக்கும் பெரிய சவாலாக இருந்தது.....அந்த சுவர்தான் அந்த நண்பர்களின் பொழுது(!) போக்குத்தளம்.....


டங்கு: மாப்ள....நாளைக்கு Interview போகப்போறேன்டா....
பங்கு: என்னமோ முதல் முறையா போகப்போறா மாதிரி சொல்றா....இது 40 வது முறை....
டங்கு: என்னடா பண்றது....எதையாவது எடக்கா கேக்குறாங்க...நானும் கோவப்பட்டு பதில சொல்லி தோத்துடறேன்....
பங்கு: விட்ரா....என்ன இன்னிக்கி வீட்ல திட்டு அதிகமா இருக்கும்....அதானே....
டங்கு: ஆமாம்டா.....நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன்...சரியான வேலை அமைய மாட்டேங்குது.....இன்னிக்கு ஒரு டூத்பேஸ்ட் கம்பனிக்கு போயிருந்தேன்....


பங்கு:  என்ன நீ பல்லு விளக்கினியான்னு கேட்டானா...ஹிஹி!


டிங்கு: அட ஏன்டா நீவேற....இவனுக்கு அந்த இடத்துல வேலைக்கு சொன்னதே நான்தான்....இந்த பய அங்க போய் என்னத்த பண்ணிட்டு வந்தானோ இரு கேப்போம்(!)...சொல்லு மாப்ள என்னாச்சி!
டங்கு: அவரு என்னைய பாத்து...தம்பி சென்னைல கிண்டில இருந்து தாம்பரம் வரை எத்தன Outlet இருக்குத்துன்னு கேட்டாரு....
பங்கு: அதுக்கு நீ என்ன சொன்னே!....
டங்கு: நாலுன்னு சொன்னேன்....
டிங்கு: அடப்பாவி...அவரு எத்தன கடை தோராயமா இருக்கும்னு கேட்டு இருக்காரு....
டங்கு: எனக்கெப்படிடா தெரியும் Outlet அப்படின்னா கடைன்னு...நீயாவது முன்னமே சொல்லி இருக்கணும்....
டிங்கு: ச்சே...நல்ல வேலைய விட்டு வந்து நிக்கறியே....
டங்கு: டேய் நான் முன்னமே சொன்னேன்....எனக்கு இந்த வேலையில அனுபவம் இல்லைன்னு உண்மைய சொல்லிடலாம்னு...கேட்டியா....ஏற்கனவே எனக்கு 6 மாசம் அனுபவம் இருக்காப்ல சொல்லி வச்சிருக்க....அவரு திட்டி தீத்தாரு என்னைய....
டிங்கு: வேற என்னத்த பண்றது...வெறும் டிகிரிக்கு எவனும் வேலைய தங்கத்தட்டுல வச்சிக்கிட்டு கூப்டு கொடுக்க மாட்டான்டா....
டங்கு: சரி என்னதான் வழி.....


டிங்கு: விட்ரா...அதோ மீனாட்சி வர்றா...அவளை கேப்போம்....
டங்கு: வாம்மா ஜான்சி ராணி எப்படி இருக்க....
மீனா: கொழுப்புதான்டா உனக்கு....என்னாச்சி உன்னோடா Interview விஷயம்.....

டங்கு: ஒன்னும் ஆகல....
மீனா: நான் சொல்றத கேளு....உனக்கு இந்த PMRY லோன் பத்தி தெரியுமா.....
டங்கு: கேள்விப்பட்டு இருக்கேன்....
மீனா: அதுக்கு அப்ளை பண்ணு...நாங்க இருக்கோம் எப்படியாவது வாங்கிடலாம்....
டிங்கு: ஆமா நாங்கல்லாம் இருப்போம் நீ இருக்க மாட்டே...ஹிஹி!
டங்கு: என்னன்னு கேட்டு பண்றது.....
மீனா: கம்பியூட்டர் சென்டர் ஆரம்பிக்கப்போறேன்னு போடு....உனக்கு ஒரு விஷயம் தெரியுமா...நம்ம ஏரியா சங்கத்துல முடிவு எடுத்து உங்க அப்பறத்தான் இந்த ஏரியா MC தேர்தலுக்கு நிக்க வைக்க போறாங்களாம்....பைசா செலவில்லாம ஜெயிச்சிடுவாறு பாரு...
டங்கு: அவருக்கு அரசியலே பிடிக்காதே.....
மீனா: பெருசுங்க ஒன்னுகூடி முடிவு பண்ணிடுசிங்க....உங்க அப்பவோட சம்மதம் தான் பாக்கி....
டங்கு: ஏற்கனவே நிதி(!) இருந்தாரே...ஏன் இந்த முறை மாத்துறாங்க......
மீனா: என்னத்த கிழிச்சாரு....அதான் மாத்த நினைக்கிறாங்க....பாத்துங்க அவன் இப்போ ரொம்ப கோவமா இருக்கானாம்....


டங்கு: அவன் கோவத்த தூக்கு குப்பையில போடு.....சரி இந்த லோன் வாங்குற விஷயம் எப்படின்னு சொல்லு.....
மீனா: சொல்லுறேன்...
இனி அதிரடி....
கொசுறு: புயலுக்கு முன்னே அமைதி....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

13 comments :

 1. புதிய தொடரா தலைப்பு சூப்பர் ஹீ ஹீ

  ReplyDelete
 2. பேருலாம் பயங்கரமா இருக்கு :-)

  ReplyDelete
 3. புதிய தொடரா? கலக்குங்க மாம்ஸ்! :-)

  ReplyDelete
 4. தொடர் செம... தொடரட்டும்.

  ReplyDelete
 5. தொடர் ஆரம்பித்துள்ளீர்கள் ,தொடர்ந்திடுவோம்

  ReplyDelete
 6. தமிழ் மணம் எட்டு

  ReplyDelete
 7. அசத்தல் ஆரம்பம்
  தொடருங்கள் விக்கி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. புது தொடரா??? அப்போ பாதில நிக்குறது எல்லாம் அவ்ளோ தானா?????

  ReplyDelete
 9. தலைப்பை பார்த்ததும் உங்க சொந்த கதை என்று நினைத்தேன்

  ReplyDelete
 10. ஆஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே .. இனி அதிரடி ஆரம்பம் தான்... கலக்குங்க மாம்ஸ்

  ReplyDelete
 11. ///டங்கு: ஏற்கனவே நிதி(!) இருந்தாரே...ஏன் இந்த முறை மாத்துறாங்க......
  மீனா: என்னத்த கிழிச்சாரு....அதான் மாத்த நினைக்கிறாங்க....பாத்துங்க அவன் இப்போ ரொம்ப கோவமா இருக்கானாம்..../// அது சரி தான் ))

  ReplyDelete
 12. ஒரு மனிதனுக்கு அனுபவ அறிவும் வேண்டும் என்பதை Outlet மூலமாகப் புரிய வைத்துக் குட்டிச் சுவர் எனும் தலைப்பில் அருமையான தொடரினை ஆரம்பித்திருக்கிறீங்க.

  அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி