குட்டிச்சுவர் - பாகம் 3

வணக்கம் நண்பர்களே.....


டங்கு: அப்படி சொல்லாதீங்க அண்ணே...ஏதாவது வழி சொல்லுங்க.....

பியூன்: அது ஒண்ணுதான் தம்பி வழி.....

டிங்கு: என்னடா பண்றது....

டங்கு: விடு மாப்ள பாத்துக்கலாம்......

டிங்கு: ஏன்னே லோன் வந்தப்புறம் அதுல இருந்து எடுத்துப்பாரோ.....

பியூன்: இல்ல தம்பி நீங்க முதல்ல அந்தப்பணத்த கொடுத்தாத்தான் லோனே கிடைக்கும்....புரியாத ஆளுங்களா இருக்கீங்களே....

டிங்கு: சரிண்ணே....

மீனா: டேய் அவன ஏன் முரசிட்டு நிக்கிறே.....வா போய் வேற வழி பார்ப்போம்....

(மீண்டும் குட்டிச்சுவர் அவர்களை வரவேற்றது......அதில் ஏறி மூன்று நண்பர்கள் இந்த விஷயத்தில் இருந்து எப்படி வெளிவருவது என்று யோசித்து கொண்டு இருந்தார்கள்....அப்போது!)

சாந்தி: டிங்கு...மகா போன் பண்ணி இருந்தா...உன்ன பாக்கணுமாம்....நான் உன்கிட்ட சொல்றேன்னு சொன்னேன்....


டிங்கு: அவளுக்கு வேற வேலையே கிடையாது.....

மாப்ள உனக்கு காதலோட மதிப்பே தெரியல....அவ இத்தன தடவை போன் பண்றாளே....ஏன் இப்படி அவளை கஷ்டப்படுத்துற.....ஒரு எட்டு போய் பாத்திட்டு வந்துடறது தானே.....

டிங்கு: முயற்சி பண்றேன்....

ஏய் தம்பி இங்க வா.....(குரல் வந்த திசையை பார்த்தார்கள்!)

டிங்கு: யார்ரா இந்த ஆளு....

டங்கு: மாப்ள இவருதாண்டா நிதி நம்ம வார்டு கவுன்சிலரு......

வார்டு: ஏய் உன்னத்தான்......

டிங்கு: சொல்லுங்க....என்ன விஷயம்....

வார்டு: டேய் பிச்சிடுவேன்....இறங்கி வந்து பதில் சொல்லு....

டிங்கு: யோவ் ஊரு காச தூக்கி பேக்கட்டுல போட்டு சுத்துற உனக்கெல்லாம் என்னத்துக்கு மரியாத.....மரியாத நாங்க தானா கொடுக்கணும்.....கேட்டு கொடுக்கக்கூடாது.....

வார்டு: அடிங்....(அடிக்க தன் பைக்கிலிருந்து இறங்கி வந்தார்!).....நான் யாரு தெரியுமாடா ஆளும் கட்சில என் செல்வாக்கு தெரியுமா...உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்...

டங்கு: அண்ணே....ஏன்னே டென்சன் ஆகுறீங்க...அவன் அப்படித்தான்..என்ன விஷயம் சொல்லுங்கண்ணே.....


வார்டு: எலேய் இவங்க அப்பன இந்த தேர்தல்ல எல்லாம் நிக்க வேணாம்னு சொல்லு.....மீறி நின்னா சொல்றதுக்கில்ல....எது வேணா நடக்கும்......

டிங்கு: ஹூம்....ஏன்யா இதான் விஷயமா....போய் பொழப்ப பாரு.....அது அவரோட சொந்த விஷயம்....வேணும்னா அவர்கிட்டயே போய் அத சொல்லு....அத விட்டுட்டு.....எங்கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கா....போய்யா...போ!

வார்டு: இவனுக்கு என்ன திமிரு....டேய் இவன நாலு சாத்து சாத்துனாத்தான் அடங்குவான் போல.....

டிங்கு: ஏய் போயிரு...ஏற்கனவே நான் கொலவெறில இருக்கேன்....

வார்டு: இதோடா...காமடி பண்ணிட்டு இருக்கான்

டங்கு: மாப்ள வேணாம்டா....4 பேரு இருக்கானுங்க....அதுவும் உள்ள சாமான்(கத்தி!) வச்சிருப்பானுங்க போல....சரின்னு சொல்லிடு பின்னாடி பாத்துக்கலாம்....

(பேசிக்கொண்டு இருக்கும்போதே ஒருவன் ஓடி வந்து குத்த முயன்றான் முகத்தில்!)

சினிமா சண்டை போல இல்லாமல்...அந்த நிஜ சண்டை 3 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது....

வார்டு: டேய் எங்கள அடிச்சிட்ட இல்ல...உன்ன விட மாட்டோம்டா....(கூவிக்கொண்டே ஓடினான் அந்த அசிங்க வாதி(!)....

டிங்கு: எலேய்....வந்து இந்த பைக்குகள எடுத்துட்டு போங்கடா....அடப்பாவிகளா...என்னமா ஓட்றானுங்க.....

டங்கு: மாப்ள...எனக்கென்னமோ பயமா இருக்குடா....நம்ம அவசரப்பட்டுட்டமோன்னு....

டிங்கு: விட்ரா பாத்துக்கலாம்....


(வீட்டுக்குள் நிழைகிறான் டிங்கு....அப்பா அவனை பார்த்து.........)

அப்பா: டேய் தடிமாடு......உன்ன பெத்ததுக்கு ஒரு எருமைய பெத்து இருக்கலாம்..அதனலயாவது பலன் உண்டு.....இப்படி ஊரெல்லாம் ரவுடித்தனம் பண்ணி சண்ட போட்டுட்டு வர்றியே...நீயெல்லாம் என்னத்த தின்ற.....

அம்மா: ஏன்டா மரம் மாதிரி நிக்கற....கேக்குறாரு இல்ல பதில் சொல்லு....

டிங்கு: நான் இப்போ எது சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல....என் மனசாட்சிக்கு தெரியும் நான் செய்ஞ்சது தப்பு இல்லன்னு.....

அப்பா: கிழிச்சே.....உனக்கு கடவுள் மேலேயே நம்பிக்க கிடையாது....இதுல மனசாட்சிய பத்தி பேசுற....உன்னக்கு பின்னாடி ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கேன்...அத கரை சேக்கணும்...

டிங்கு: கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல....நான் என்ன பண்ணனும்.....நான்தான் என்னால இப்போதைக்கு முடிஞ்சது கொடுக்கரனே....அப்பா: நீ நைட்டானா எங்க போறே....மாசத்துக்கு 500 ரூவா எந்த வேலை செய்ஞ்சி கொடுக்கறேன்னு தெரியனும்....

தொடரும்.....

கொசுறு: தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

34 comments :

 1. அதிகாலை வணக்கமுங்கோ!

  ReplyDelete
 2. தமிழ்மணம் இணைப்பு, முதல் ஓட்டு.

  ReplyDelete
 3. உங்க ஓட்டு பதியலாமே.

  ReplyDelete
 4. //தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...//
  அதிகாலை தத்துவம்.

  ReplyDelete
 5. அரசியல் மிரட்டல் இப்படித்தான்.

  ReplyDelete
 6. சரி. பின்னர் சந்திக்கிறேன்.

  ReplyDelete
 7. கவிதையைப் போல தலைப்பு.

  ReplyDelete
 8. கலக்கல்...தொடருங்கள்...தொடர்கிறேன்...

  ReplyDelete
 9. தமிழ் மணம் 5 .... குட்டி சுவர்ல குட்டிங்களே வருல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 10. டங்கு: மாப்ள வேணாம்டா....4 பேரு இருக்கானுங்க....அதுவும் உள்ள சாமான்(கத்தி!) வச்சிருப்பானுங்க போல....சரின்னு சொல்லிடு பின்னாடி பாத்துக்கலாம்....//

  எவம்லேய் அது...? எட்றா அந்த வீச்சருவாளை.....

  ReplyDelete
 11. நைட்டானா எங்கே போவாயிங்க...?? டாஸ்மாக்'குத்தான்.....

  ReplyDelete
 12. குட்டி சுவர் மிரட்டுது

  ReplyDelete
 13. கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல.../

  ithuvum sarithaan..
  hahaa...
  nallaayirukku..
  thodarunkaL..

  ReplyDelete
 14. டைட்டில்ல எதுக்கு உம் பேரு? ஹி ஹி

  ReplyDelete
 15. The pictures are very nice. :-)

  ReplyDelete
 16. //நான் இப்போ எது சொன்னாலும் நீங்க நம்ப போறது இல்ல....என் மனசாட்சிக்கு தெரியும் நான் செய்ஞ்சது தப்பு இல்லன்னு..//ஆம்பள பசங்க சொன்னா எங்க எடுபடுது

  ReplyDelete
 17. தொடருங்கள் விக்கி இன்னும் என்னென்ன சுவாரசியங்கள் கத்து இருக்கிறது என்பதை அறிய ...

  ReplyDelete
 18. சூப்பர் மாம்ஸ், குட்டிசுவர்தான் பல பேரோட வாழ்க்கையில் போதிமரம்

  ReplyDelete
 19. கடவுள மனசுல நெனசிக்கிட்டா போதும்...கோயில் கோயிலா போய் கெஞ்சிட்டு இருக்க வேண்டியதில்ல


  ஆமா சரிதானே

  ReplyDelete
 20. தொடர் அருமை தொடருங்கள் ,தொடர்கிறேன்

  ReplyDelete
 21. தமிழ் மணம் 19

  ReplyDelete
 22. தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா...Nice.,

  ReplyDelete
 23. ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
  http://bit.ly/n9GwsR

  ReplyDelete
 24. தொடரின் போக்கு மற்றும் உரையாடல்கள்
  அருமையாக இருக்கிறது.
  தோல்வியை நிலையென்று எண்ணாதே என
  உரைத்துச் சொல்கிறது.....
  இன்றுமுதல் தொடரைத் தொடரும் நண்பர்களில்
  நானும்.......

  ReplyDelete
 25. இந்த குட்டிசுவத்துல ஏறி அமருவதும் சுகமாகத்தான் இருக்கிறது

  ReplyDelete
 26. அண்ணன் பெரிய தாதாவா இருப்பார் போலிருக்கே.

  ReplyDelete
 27. தோல்வி நிலையென நினைத்தால்....மனிதன் வாழ்வை நினைக்கலாமா..

  ReplyDelete
 28. முத்தான பகிர்வுக்கும் அருமையான படங்களுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்>

  ReplyDelete
 29. கலக்கலா நகர்த்தியிருக்கிறீங்க.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி