வணக்கம் நண்பர்களே....

அவள் எப்போது என் வாழ்வில் வந்தாள்.....................

அது நான் 8 வது படித்துக்கொண்டு இருக்கும்போது நடைபெற்ற சம்பவம்:

டேய் குமாரு ..........

என்னப்பா ........... வா மாம்பலத்துக்கு போயி ட்ரஸ் எடுத்துட்டு வரலாம் வா.

என்னா திடீர்னு...........

மாமாக்கு கல்யானம்ல அதேன்........... அந்த திருமண நிகழ்வின் போது தான் அவளை நான் முதல் முறையாகப்பார்தது.

அதற்கடுத்து பல நாட்கள் கழித்து மாமா வீட்டுக்கு செல்லும்போது அன்புடன் அவள் அளித்த பலகாரங்களை தின்றபோது.......... அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் ஞாபகம் வருகிறது...

இங்கபாரு கூச்சப்படாதே .......உனக்கு என்னா வேணும் நா வாங்கி தாரேன்............ஆனா நீ நல்லா படிச்சி பெரியா ஆளா வரணும் சரியா.

எல்லோரும் சொல்லும் சாதாரண வார்த்தைதான். ஆனால் அதற்க்காக அவள் செய்த முயற்சிகள் கணக்கில் அடங்காதவைகள்.......... என் மீதும் என் படிப்பின் போக்கின் மீதும் வீட்டில் உள்ளோருக்கு நம்பிக்கை போனபோது....

இங்க பாருங்க..... இவன என்கூட அனுப்பி வைங்க நான் பாத்துக்கறேன் என்று அவள் வீட்டுக்கு கூட்டி வந்து என்னை படிக்கவைத்தது.

இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும் சொன்ன போது இவனை டிகிரி முடிக்க வைக்கிறேன் என்று அவள் போட்ட சபதம்............

என் தந்தை ஐயோ இப்படி முரட்டு பயலா போயிட்டானே என்று வருந்தும் போது.........கவலைப்படாதிங்க இந்த வயசுல அவனுக்கு பொறுப்புன்னா என்னா தெரியும்..........போக போக சரியாப்போயிடுவான் என்று தட்டிக்கொடுத்து ஊக்கு வித்த பாங்கு ...............

ஸ்பெஷல் கிளாசுக்கு போவதாக சொல்லிவிட்டு சினிமா பார்த்து விட்டு வந்த என்னை அடிக்க வந்த அப்பாவுக்கு முன் ....... ஏம்பா சினிமாவுக்கு தான் போறேன்னு என்கிட்டே சொல்லி இருந்தா இன்னும் கொஞ்சம் பணம் அதிகமா கொடுதிருப்பேனுள்ள..... 1st கிளாஸ் டிக்கட்டுக்கு போயி இருக்காலாமுள்ள என்று கூறி அனைவரையும் திடுக்கிட வைத்த அவள்.......

காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர காலேஜ் கிரவுண்டுல வச்சி புரட்டி புரட்டி எடுத்த போது (இதுல வீரம்னு நெனப்பு இவனுக்கு) பிரின்சிபால் என்னை காலேஜ விட்டே தூக்க முடிவு பண்ண போது ........... அங்கு வந்து எனக்காக பரிந்து பேசி உண்மையை விளக்கி ..........என் தம்பி வேணும்னு அடிச்சிருக்க மாட்டான்... நீங்க என்னப்பா பண்ணீங்க என்று விளக்கம் கெட்டு அவர்களின் அசிங்கமான (ராகிங்கு) நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி என்னை காப்பாற்றிய அவள்.

டேய் இந்த வயசுல சைட்டு அடிக்காமா சாமியாரு மாதிரி எப்ப பாரு உம்முன்னு மூடியா இருக்காத .............அது உன் எதிர்காலத்துக்கு நல்லது இல்ல ............ சந்தோசமா இரு ..........ஆம்பள.. பொம்பளன்னு பாத்து பாத்து பழகுனா நல்ல விதமா யோசிக்க வராது......வக்கிர புத்தி தான் பெருகும் என்று எனக்கு நடு மண்டையில் ஆணி அடித்தாட் போல உணர வைத்த அவள்.........


இன்று எங்கு சென்றாள் இந்த முரட்டு தம்பியை பார்க்காமல்............


எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்னு தெரியுது. ஆனா எத தொலசேன்னுதான் ஞாபகம் வரமாட்டேன்குது. எல்லோரும் என்னை என்னா கஷ்டம் வந்தாலும் கலங்காத மடயன்னு சொல்லும்போது வந்த சிரிப்பும், நய்யாண்டியும் என்னை விட்டு சற்று ஒதுங்கி நின்று என்னை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது.சாதாரணமா ஒரு நடிகன் படத்துல கண்ணீர் காட்சில நடிக்கும்போது, காமடி மட்டுமே நினைவுக்கு வந்த இந்த முட்டாப்பய மனசுக்கு இப்போ என்னாச்சி............

என்னவோ படிச்சே, ஏதோ முடிச்சே உனக்கு உன்னப்பத்தி தெரிஞ்சிக்கவே நெறைய காலம் ஆச்சி உனக்கு. உன் பலம் என்ன பலவீனம் என்னன்னு உனக்கு தெரியாது இருந்தப்போ, எங்கிருந்தோ வந்தாள் அவள்................


வீட்டுல கொஞ்ச காலத்துலேயே முதல்வி ஆனாள். இவ்வளவு பெரிய கூட்டுக்குடும்பத்துல அதுவும் புதிய எண்ணங்களை விதைக்கும் தலைமுறை கூட்டம் கம்மியா இருந்த குடும்பத்துக்குள்ள வந்து கோலேசுவது அவ்வளவு சுலபமில்லையே.


இந்த பெரியவங்க சாதரணமாவே நான் செய்யற எதையும் ஒத்துக்க மாட்டாங்க. அதுவும் நான் எங்க போனாலும் எதாவது ஒரு தீவட்டி என்னப்பத்தி வீட்டுல வந்து போட்டுக்கொடுத்துடும்.

இந்த நிலமையில கைதி வாழ்க்கைய உடச்சி விடுதலை காற்றை சுவாசிக்க செய்ஞ்ச அன்புள்ள அம்மா அல்லது அக்கா. நான் எப்போதுமே நினைப்பதுண்டு என்னோடு கூடப்பிறக்காமல் போனவளே!


தாய் தன் குழந்தைக்கு செய்யும் பணிவிடைகளும் அறிவுரைகளும் அவளுடைய கடமை என்பது என் கருத்து. ஆனால், இந்ததாய்க்கு என்ன கடமை என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.


"நீ சொல்ற விதத்த மாத்து அந்த வித்தை தான் மத்தவங்ககிட்ட உன் பேச்சிக்கு மரியாதைய கொடுக்கும், உன்ன தொடர்ந்து கவனிப்பாங்க"

" என்னடா எங்கள எல்லாம் விட்டுட்டு வெளிநாடு போறேன்னு ஒன்னும் வருத்தப்படாதே .........எம் மூத்த பையன் வெளி நாட்டுல நல்ல உத்தியோகத்துல இருக்கான்னு சொல்லுறதுல எனக்கு தாண்டா பெரும உங்க அம்மாவவிட"

"எந்த ஊருல என்ன வேலையா இருந்தாலும், இந்த அக்கா கூப்பிட்ட உடனே லீவு கிடைக்கிற மாதிரி கேட்டுக்க"

இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.


ஒரு முறையும் மருத்துவமனைக்கு நோய் என்று செல்லாதவளே. இன்று ஒரே நாளில் உன் இதயம் துடிக்க மறந்து நின்றதேன்!?

சாவே உனக்கு சாவு எப்போது!?

ஏய் காலமே ஏன் என்னை இப்படி ஒரு கருணை கொள்ளைகாரியிடம் அறிமுகம் செய்து வைத்தாய்!?................


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.


  ..... very touching.... வாசித்து முடிக்கும் போது, மனது கலங்கத்தான் செய்கிறது.

  ReplyDelete
 2. வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..

  என்னுடைய பக்கமும் வாருங்கள்..
  http://desiyamdivyam.blogspot.com/

  ReplyDelete
 3. //எதையோ தொலைச்சிட்டு கொஞ்ச நாளா தேடிட்டு இருக்கேன்னு தெரியுது. ஆனா எத தொலசேன்னுதான் ஞாபகம் வரமாட்டேன்குது.//


  இந்த சூழ்நிலை எல்லோருக்குமே ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஏற்பட்டுவிடுகிறது.

  கனமான பகிர்வு.
  கனக்க வைக்கிறது.

  ReplyDelete
 4. உடன் பிறவா சகோதரி. உறவை, உயிரை உணர்த்திய அந்த உள்ளம் எங்கள் மனங்களையெல்லாம் கனக்கச் செய்தது.

  ReplyDelete
 5. ///காலேஜுக்கு போயும் திருந்தாம சீனியரு ரெண்டு பேர காலேஜ் கிரவுண்டுல வச்சி புரட்டி புரட்டி எடுத்த போது (இதுல வீரம்னு நெனப்பு இவனுக்கு) பிரின்சிபால் என்னை காலேஜ விட்டே தூக்க முடிவு பண்ண போது// பெரிய ஆளாய் இருப்பிங்க போல ))

  ReplyDelete
 6. நல்ல உலகசினிமாவை பார்த்த நெகிழ்ச்சி...இந்தப்பதிவு ஏற்படுத்தியது.

  ReplyDelete
 7. ////இப்படியெல்லாம் சொல்லியனுப்பியவளே, கடைசி மூச்சை விடும்போதும் தான் பெற்ற மகனை நினைக்காமல் என்னை நினைத்தாய் என்று சுற்றமும்,நட்ப்பும் கூறியபோது நான் அலறியதை என் சொல்வேன்.
  // கலங்க வைத்த வரிகள் ((

  ReplyDelete
 8. அட ஸ்பெசல் கிளாசெல்லாம் போயிருக்கிறீங்க..
  நல்லா இருக்கையா பதிவு மனசை ஏதோ செய்கிறது.. நீங்க தொலைத்ததை போன்று உலகில் உள்ள எல்லோருமே தங்களை ஏதோ ஒரு விடையத்தை தொலைத்தவர்களே.. நன்றி மாப்பிள பதிவுக்கு..

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 9. அட ஸ்பெசல் கிளாசெல்லாம் போயிருக்கிறீங்க..
  நல்லா இருக்கையா பதிவு மனசை ஏதோ செய்கிறது.. நீங்க தொலைத்ததை போன்று உலகில் உள்ள எல்லோருமே தங்களை ஏதோ ஒரு விடையத்தை தொலைத்தவர்களே.. நன்றி மாப்பிள பதிவுக்கு..

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 10. மாப்ள உங்க பதிவு இதயத்தை கனக்க வைக்குது...

  ReplyDelete
 11. படிக்கவே கஷ்டமா இருக்கு மாப்ள!

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. உணர்வு பூர்வமான காவியம்...

  ReplyDelete
 14. மனதை மகிழ வைக்கும் பதிவுகளுக்கு நடுவே நெஞ்சை நெகிழ வைத்த பதிவு தம்பி

  ReplyDelete
 15. உணர்வு பூர்வமானது

  ReplyDelete
 16. கவலை தான் பாஸ் என்ன பண்ண..

  ReplyDelete
 17. வாழ்க்கையின் மிகப்பெரிய சோகங்களில் ஒன்று........சகோதரிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ....

  ReplyDelete
 18. உணர்வு பூர்வமான பதிவு

  ReplyDelete
 19. கருணை கொள்ளைகாரியிடம் //
  sor silambam

  ReplyDelete
 20. ம‌ன‌தைத் தேற்றிக் கொள்ளுங்க‌ள்; க‌ண்க‌ளைத் துடைத்துக் கொள்ளுங்க‌ள்...

  ReplyDelete
 21. இவன் 10 வது பாஸ் ஆனாலே பெரிய விஷயம் என்று எல்லோரும் சொன்ன போது இவனை டிகிரி முடிக்க வைக்கிறேன் என்று அவள் போட்ட சபதம்............//

  உண்மையில், எமக்கெல்லாம் ஊக்கப்படுத்துவது, மனதிற்குப் பிடித்தவர்கள் அருகே இருந்து சொல்லும் போது தான் வெற்றியளிக்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 22. பதிவின் முதல் இரு பந்திகளில் மனதினைச் சிரிக்க வைக்கும் வன்ணம் எழுதி விட்டு, இறுதியில் இப்படியான, வேதனையினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  எழுத்து நடை அருமை. ரசித்தேன்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி