எப்படிப்பட்ட அரசியல் வாதி வேணும் - விளம்பரம்!

வணக்கம் நண்பர்களே....இப்படி ஒரு ஆள் தேவை - பொய் சொல்லக்கூடாது , கொள்ளையடிக்க கூடாது, அடுத்தவர் காசுக்கு பேயா அலையக்கூடாது, தன் சொந்த உழைப்பில் தான் சாப்பிடனும், திருடக்கூடாது, நேர்மை, ஞாயம், உண்மை, உழைப்பு......etc

எங்கே இப்படி பேசியவர்கள்....காணவில்லை...வரலாறு ஒரு முறை திரும்பி பார்க்கிறது....

நாலு முழம் வேட்டி போதும் எனக்கு....எனக்கெதுக்குய்யா விலையுயர்ந்த சட்டை....

அம்மாவுக்கு ரொம்ப வேர்க்குதாம்..ஒரு மின்விசிறி கேட்டாங்க....


நான் என்ன அம்புட்டா சம்பத்திக்கறேன்....பாக்கறேன்னு சொல்லு....

- இப்படி ஒரு முதலமைச்சர் இருந்தாரு....

கல்விக்காக பல கோடி செலவு பண்ண வேண்டி வருமே....

நம்ம குழந்தைங்க கல்விதான் இந்த நாட்ட பல படி உயர்த்தும்னே என்றார் அவர்...

இன்று...

கல்வி - " குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலை ஒன்றும் கேட்காதே....படிக்கும் படிப்பை நீ விலை போட்டு விற்காதே.."

 - இன்று இது தான் நிலை....


அன்று ஒருவர் சொன்னார் -

திராவிட இனம் தான் நம் மாநிலத்தை ஆளனும்...அப்போது தான் நாம் நம் நாட்டு மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்...

இன்று ஒருவர் சொல்கிறார் -

என் மகவுகள் பணக்காரர் ஆவது பலருக்கு பிடிக்கவில்லை...அவர்தம் சொந்த(!) மூலதனதாலேயே இந்த அளவுக்கு முன்னேறி உள்ளனர்(!)

அன்று -

நான் பிறந்தது வேறு இடமாக இருந்தாலும்...என்னை வளர்த்து பாராட்டி சீராட்டி இந்த அளவுக்கு கொண்டு வந்தது இந்த நாடே....இதற்கே என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர விழைகிறேன்....

இன்று -

நான் இருக்கும் வரை நானே எல்லாம்....யாரும் இதற்க்கு போட்டி இல்லை...


நேற்று:

லஞ்சத்துக்கு எதிரானவன் நான்...என் கையில் நிர்வாகம் இருந்தால்(!)...இந்த நாட்டை சோலையாக மாற்றுவேன்....

இன்று -

தம்பி ஒரு லொகேஷன் பாரேன்...

அன்று -

நாங்கள் இல்லையேல் இங்கு ஒருவரும் நிர்வாகத்தின் தலைமையில் உட்கார முடியாது...

இன்று -

ஐயோ போச்சே போச்சே...என்ன பெத்த ராசாவே...இப்படி வெறும் பயலா பூட்டியே...


நேற்று நீ...இன்று நான்...நாளை ?


கொசுறு: உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை முன் வைக்கவும்...நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வாதிகளை (வியாதிகள் அல்ல!) விரும்புகிறீர்கள்....இது ஒரு சர்வே....உங்கள் கருத்துக்கள் தேவை!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

40 comments :

 1. தலைவர் எப்படியாவது இருக்கட்டும்..

  நான் முதல் தொண்டன்...

  ReplyDelete
 2. தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சி...

  ReplyDelete
 3. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  தலைவர் எப்படியாவது இருக்கட்டும்..

  நான் முதல் தொண்டன்..."

  >>>>>>>>>>>

  வாங்க மாப்ள...கருத்து சொல்லுங்க கவிஞ்சரே!

  ReplyDelete
 4. அண்ணே அரசியல்வாதி எப்படி இருக்கணும்னா? நீங்க எப்படி இருக்கனும்ம்னு நெனைக்கிறீங்களோ அப்படி இருக்கணும் .எப்பூடி

  ReplyDelete
 5. விக்கி...

  அரசியல் வாதி என்பது இன்று ஒரு தொழில் போல் ஆகிவிட்டது...

  தேர்தலுக்கு மூலதனமாக பணசெலவிட்டு ஆட்சிப்பிடித்து பல கோடி சம்பாதிக்கவேண்டும் என்று தான் இன்றை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்..

  நேற்று என்ற நானோடு உண்மையான அரசியல் கடலில் கலந்தாயிற்று...

  இனி இதுதான் நம் தலையெழுத்து....

  ReplyDelete
 6. நேதாஜி மாதிரி வீரமும், நாட்டுப்பற்றும்
  காந்தியின் எளிமையும், பொறுமையும்
  விவேகனந்தரின் பேச்சும்,மதிநுட்பமும்
  இத எல்லாம் இருக்குற மாதிரி ஒரு நல்லா மனுஷன் வேணும்....
  எங்கயும் இருந்தா சொல்லுங்க......

  ReplyDelete
 7. @N.Manivannan

  " N.Manivannan said...
  அண்ணே அரசியல்வாதி எப்படி இருக்கணும்னா? நீங்க எப்படி இருக்கனும்ம்னு நெனைக்கிறீங்களோ அப்படி இருக்கணும் .எப்பூடி"

  >>>>>>>

  இதுக்குத்தான் இந்த மாதிரி அறிவாளிங்க கிட்ட கேக்கப்படாதுங்கறது ஹிஹி...சொல்லுய்யான்னா!

  ReplyDelete
 8. நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வாதிகளை (வியாதிகள் அல்ல!) விரும்புகிறீர்கள்//// எனக்கு அரசியல் பிடிக்காதே மாப்ள..

  ReplyDelete
 9. " # கவிதை வீதி # சௌந்தர் said...
  விக்கி...

  அரசியல் வாதி என்பது இன்று ஒரு தொழில் போல் ஆகிவிட்டது...

  தேர்தலுக்கு மூலதனமாக பணசெலவிட்டு ஆட்சிப்பிடித்து பல கோடி சம்பாதிக்கவேண்டும் என்று தான் இன்றை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்..

  நேற்று என்ற நானோடு உண்மையான அரசியல் கடலில் கலந்தாயிற்று...

  இனி இதுதான் நம் தலையெழுத்து...."

  >>>>>>>>>>>

  மாப்ள அப்படி சொல்லாதீங்க....தலையில இருக்க எழுத்து நம்மளோட வாழ்கைக்கு உதவவே உள்ளது....இதுக்கு எந்த மாதிரி மருந்து வேணும்ங்கறது தான் வாதமே....

  ReplyDelete
 10. அதனால நான் எந்த அரசியல்வாதியும் விரும்பல..

  வேணும்னா..
  தைரியத்துல ஜெ மாதிரியும்,
  தமிழ்ல கருணாநிதி மாதிரியும்,
  பம்முரதுல ராமதாஸ் மாதிரியும்,
  பேச்சுல வைகோ மாதிரியும்,
  அதுல விஜயகாந்த் மாதிரியும் இருக்குற அரசியல் வியாதியை நான் விரும்புகிறேன்..

  ReplyDelete
 11. @Carfire

  " Carfire said...
  நேதாஜி மாதிரி வீரமும், நாட்டுப்பற்றும்
  காந்தியின் எளிமையும், பொறுமையும்
  விவேகனந்தரின் பேச்சும்,மதிநுட்பமும்
  இத எல்லாம் இருக்குற மாதிரி ஒரு நல்லா மனுஷன் வேணும்....
  எங்கயும் இருந்தா சொல்லுங்க....."

  >>>>>>>>>>>>>>

  அடுத்தவர் துயர் பார்க்கும் போது அதை துடைக்க பொங்கும் ஒவ்வொரு மனிதனும் போராளியே...நீயும் அப்படித்தான் மாப்ள...உன்னிடத்திலேயே உள்ளதை மறந்திட்டியே!

  ReplyDelete
 12. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  நீங்கள் எப்படிப்பட்ட அரசியல் வாதிகளை (வியாதிகள் அல்ல!) விரும்புகிறீர்கள்//// எனக்கு அரசியல் பிடிக்காதே மாப்ள.."

  >>>>>>>>>>>

  மாப்ள நாம செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அரசியல் உள்ளது....

  .................

  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  அதனால நான் எந்த அரசியல்வாதியும் விரும்பல..

  வேணும்னா..
  தைரியத்துல ஜெ மாதிரியும்,
  தமிழ்ல கருணாநிதி மாதிரியும்,
  பம்முரதுல ராமதாஸ் மாதிரியும்,
  பேச்சுல வைகோ மாதிரியும்,
  அதுல விஜயகாந்த் மாதிரியும் இருக்குற அரசியல் வியாதியை நான் விரும்புகிறேன்.."

  >>>>>>>>>>>

  கூட்டாஞ்சோறு கலந்தாப்ல இருக்குமே மாப்ள

  ReplyDelete
 13. வரலாறு மீண்டும் திரும்பும் .

  ReplyDelete
 14. @நண்டு @நொரண்டு -ஈரோடு

  " நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  வரலாறு மீண்டும் திரும்பும்"

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி நண்பரே...கண்டிப்பா திரும்பும்!

  ReplyDelete
 15. காந்தியடிகள் மூன்று விதமான போராட்டங்களை ஒரே நேரத்தில் நிகழ்த்தினார் ....முதல் போராட்டம் ஜாதி மத வேறு பாட்டை களைவது ...இரண்டாவது தென் ஆப்பிரிக்க விடுதலை ...மூன்றாவது இந்திய சுதந்திர போராட்டம் .அவருக்கு இரண்டில் வெற்றி கிடைத்தது .நம் நாட்டில் இன்னும் ஜாதி மத மோதல்கள் குறையவில்லை .நேர்மையற்ற அரசியல்வாதிகளைப் போல் நேர்மையற்ற மக்களும் ,அதிகாரிகளும் இங்குள்ளனர் .ஒரு தூய்மையான தலைவனும் ,தூய்மையான ஜாதி மத வேறு பாடு பார்க்காத மக்கள் இருந்தால் நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும்

  ReplyDelete
 16. @koodal bala

  மாப்ள முதல் தேவை ஒரே இனமாக வேண்டியது(!)....காதல் திருமணங்களால் மட்டுமே இது சாத்தியம்...இரண்டாவது...ஒரே பொதுவான மொழி தேவை...பல நாடுகளின் வளர்ச்சிக்கு இதுவே காரணம்!

  ReplyDelete
 17. அடிக்கிற கொள்ளையில எனக்கு பங்கு தர்ற அரசில்வாதிகளை எனக்கு பிடிக்கும் )

  ReplyDelete
 18. @விக்கியுலகம் நீங்க சொல்றது சரிதான் மாம்ஸ் .....அதே நேரத்தில் மக்களும் ,அதிகாரிகளும் சட்டத்தை மதிக்க பழக வேண்டும் ....லஞ்சம் வாங்க மனமில்லாத அதிகாரிகளை லஞ்சம் வாங்கத் தூண்டும் மக்களும் ,திருந்தி வாழ்பவனை (மாமூலுக்காக)தவறு செய்யத் தூண்டும் அதிகாரிகளும் நம் நாட்டில் நிறையவே உண்டு ....அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை .சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஒருங்கிணைந்த மாற்றம் தேவை ...ஒரு சிந்திக்கத் தூண்டும் இடுகையை அளித்துள்ளீர்கள் !

  ReplyDelete
 19. மரியாதையா நாளையில இருந்து பதிவு போட்டதும் எனக்கு மெயில் அனுப்புய்யா, நீ பதிவு போடும்போது நான் ஆன்லைன்லையே இருக்குறது இல்லை, டைம் மாறுது சொன்னா புரியுதா ராஸ்கல் ஹி ஹி....

  ReplyDelete
 20. இனி எந்த ஜென்மத்துளையும் அரசியல்வாதிங்க நேர்மையா நடக்கப்போறதில்லை, அப்பிடியே அவர்கள் நேர்மையா இருந்தாலும் பை எலக்ஷன் வரவச்சிருவாயிங்க நம்மாளுங்க என்னா நான் சொல்றது...??!!!

  ReplyDelete
 21. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாச்சி...!!!

  ReplyDelete
 22. @நிகழ்வுகள்

  "நிகழ்வுகள் said...

  அடிக்கிற கொள்ளையில எனக்கு பங்கு தர்ற அரசில்வாதிகளை எனக்கு பிடிக்கும் )"

  >>>>>>>>

  உங்க வருத்தம் புரியுது மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 23. @koodal bala

  மடைய சரி பண்ணா தண்ணி தானே நிற்கும்...அது போல களைய வேண்டியவைகளை களையனும் முதலில்....இங்கு யார் அதை செய்வது என்பதே யோசனை...எறங்கி பாப்போம்....do or die...with fire!

  ReplyDelete
 24. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணே வருகைக்கு நன்றி...அவங்கள திருத்த வேணாம்...நாம எப்படி மாற்றத்தை கொண்டு வருவது என்பதே கேள்வி!

  ReplyDelete
 25. தமிழ்நாட்டுக்கு உடனடித்தேவை ஒரு காமராஜர்.இப்போது காங்கிரஸ்...உட்பட எந்தக்கட்சியிலும் காமராஜரைப்போன்ற தகுதியில் ஒருவர் கூட இல்லை.இது நமது துரதிர்ஷ்டமே.

  ReplyDelete
 26. @உலக சினிமா ரசிகன்

  கண்டிப்பாக கர்ம வீரர் போல தேவை ஒருத்தர்....அவரை தேடுவதிலேயே....பல வருடம் இழந்து விட்டோமே...இனி உருவாக்குவதை விட உருவாக வேண்டியவர்களே தேவை!

  ReplyDelete
 27. ஆட்சியில் ஏறுவதற்காக நாடகம் ஆடி
  ஏறியதும் தங்கள் விளையாட்டை காட்டுவதுதான் இவர்களுடைய வேலை..
  இவர்களை நம்பவே கூடாது..
  எந்த நல்லவனும் ஆசனத்தில் அமர்ந்தால் இப்படித்தானே மாறுகிறார்கள்,,,,,
  நடப்பதை பார்ப்போம்..
  என்னதான் செய்ய.....


  http://sempakam.blogspot.com/

  ReplyDelete
 28. அன்றைய அரசியல்வாதிகள் போல வேண்டுமென்றால் நாம் கனவு தான் காணவேண்டும்...

  ReplyDelete
 29. //இப்படி ஒரு ஆள் தேவை - பொய் சொல்லக்கூடாது , கொள்ளையடிக்க கூடாது, அடுத்தவர் காசுக்கு பேயா அலையக்கூடாது, தன் சொந்த உழைப்பில் தான் சாப்பிடனும், திருடக்கூடாது, நேர்மை, ஞாயம், உண்மை, உழைப்பு......etc//

  குட்டி சுவர்க்கம் தள நிர்வாகி ஆமினாவை இதற்கு பரிந்துரை செய்கிறேன் :)

  ReplyDelete
 30. அன்றும் இன்றும் என்றும்... காமராஜர்!!

  ReplyDelete
 31. அது ஒரு கனா காலம் பாஸூ

  ReplyDelete
 32. விக்கிய விடவா ஒரு அரசியல்வாதி வேணும்?

  ReplyDelete
 33. கிடைத்தால் நல்லாத்தான் இருக்கும்.
  கிடைக்கும் ஆனா கிடைக்காது சார்...

  ReplyDelete
 34. அன்று..... அப்படி பேசியதால் தான், அரசியலில் வளர்ச்சி. இன்று இப்படி பேசும் நிலைக்கு வரும்படியாக நடந்து கொண்டதால் தான் வீழ்ச்சி.... நாளையாவது தமிழ் மக்கள் நலன் கருதப்படுமா?

  ReplyDelete
 35. பாவம்யா அந்த அரசியல்வாதி...

  ஹா.....ஹாஅ....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி