அன்னா ஹசாரே ஒழிக!(ஊழல் வாழ்க!)

வணக்கம் நண்பர்களே....


ஊழலுக்கு எதிராக ஒரு வயதான கிழவரின் அணுகுமுறை நமக்கு வியப்பைத்தருகிறது...இந்த கிழவருக்கு இது தேவையா.....சிந்தியுங்கள்....

நாம் யார்(!) நமக்குள்ள பெருமை என்ன கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.....

நம் எதிரி நாடு என்று ஆட்சியாளர்களால் சுட்டிக்காட்டப்படும் சீனா(!) தன் மக்கள் தொகையை குறைத்து வரும் நேரத்தில் நாம் நம் உணவு உற்பத்தியை அல்லவா குறைத்து சாதனை செய்து(!) வருகிறோம்....


இப்பேர்ப்பட்ட உன்னதமான நேரத்தில் இந்த மக்களுக்கு தேவை என்ன....அந்த குழு நடவடிக்கை சத்தியமாக இந்த ஆட்சியாளர்களால் ஏற்ப்பட போவதில்லை....இப்படிப்பட்ட சூழ்நிலையில்....இந்த ஆட்சியாளர்களை எதிர்த்து ஊழலுக்கு எதிராக போராட ஒரு தனி மனிதன்(!) வந்திருக்கிறார்.....


இது வரை வெறும் குரலாக பதிவு செய்தோம்...இந்த நல் ஆதரவு மூலம் ஒழிக எனும் கோஷம் ஊழலுக்கு எதிரான போராட்டமாக வலுக்க ஆசைப்படும் ஓர் பதிவே இது.....

ஜெயிலில் அடைப்போம் என்று முழங்கிய ரிமோட்(!) ஆட்சியாளர்கள் இன்று அமைதிப் பேச்சுக்கு இந்த மனிதரை அழைக்கும் காலம் வந்து இருக்கிறது....இது நம்மைப்போன்ற பொதுமக்களை அழைத்து பேசும் உண்மையை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது....


இந்த புரட்சியை இந்த லோக்பாலுடன்(தங்கபாலு அல்ல!) விட்டு விடாமல் தொடரப்போவதாக அறிதியிட்டு கூறும் ஓர் வயதான இளைஞ்சரின் வழி காட்டுதலுடன் தொடருவோம் என்ற நம்பிக்கையுடன் உறுதி கோரும் உங்கள் நண்பன் விக்கி தக்காளி....

வெளி நாடு வாழ் நண்பர்கள் தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக வெளியிடப்பட்டு இருக்கும் கடிதத்தில் தங்கள் ஆதரவுக்கான கையெழுத்தை இட்டு தங்கள் தேச நலனை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....இக்கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு செல்ல இருக்கிறது!


கொசுறு: எல்லோரும் இழுத்தால் தான் தேர் நகரும்.....இது தேரோட்டம் அல்ல போராட்டம்(!)...ஒருவர் வடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்...உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும் ஓர் நண்பனாக....ஜெய் ஹிந்த்! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. வடம் பிடிப்போம்!

  ReplyDelete
 2. ஊர் கூடி தேர் இழுப்போம் ... ஜெய் ஹிந்த்

  ReplyDelete
 3. அன்னாவின் போராட்டத்தை மேட்டுக்குடியினர் போராட்டம் என்று பழிக்கும், பரம்பரை புரட்சியாளர் வரிசையில் இணைந்து வீட்டிரோ என தலைப்பைப் பார்த்து எண்ணினேன்!தனி நபர் போராட்டம், அரிதானது!

  ReplyDelete
 4. சாத்வீகப் போராட்டம் மட்டுமே மக்களை ஈர்க்கும்என்பதை வன்முறை குழுக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது!

  ReplyDelete
 5. நல்ல பதிவு விக்கி..அன்னா ஹசாரே வாழ்க!

  ReplyDelete
 6. mm நல்ல பதிவு...உணர்ச்சியுள்ளவங்க நடத்துங்க!

  ReplyDelete
 7. என்ன விக்கி,இப்படி ஒரு தலைப்பு.மற்றப்படி சொன்னதெல்லாம் சரி.

  ReplyDelete
 8. தேவையான தருணத்தில் ஒரு போராட்டம், ஒட்டு மொத்த மக்களும் இதை பயன்படுத்தி அவருக்கு கைகொடுத்தால் நல்ல முடிவு கிடைக்கும்..

  ReplyDelete
 9. அன்னா ஆட்டம் தொடரட்டும்!!

  ReplyDelete
 10. தலைப்பு நெருடலாகவே இருக்கிறது நண்பரே

  ReplyDelete
 11. கவர்ந்திழுக்கும் தலைப்பென்றாலும்,
  காத்திரமான பதிவு பாஸ்,

  ஹசாரேயின் போராட்டம் வெற்றி பெற்று.
  ஊழலற்ற அபிவிருத்தியுடன் கூடிய செழிப்பான பாரதம் மறுமலர்ச்சியடைய என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ReplyDelete
 12. இப்படியும் பேந்தா விளையாடலாமா?

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அஞ்சு நாள் ஆஃப். வந்ததும் அடிச்சாரய்யா சிக்ஸர்.

  ReplyDelete
 14. வெறும் சட்டம் நாட்டை மாற்றுமா விக்கி!!??..

  எப்பயுமே யாராவது கம்ப்ளைன்ட் குடுத்தா தான் கேஸ் இல்லாட்டி வெறும் நியூஸ்..

  இன்னைக்கு இந்தியா-ல இருக்கிற மாதிரி கடுமையான சட்டங்கள் எங்கேயும் இல்லை..

  தடா பொடா இன்னும் எவ்வளவோ இருந்தும் இந்தியா-ல பயங்கரவாதம் குறைஞ்சி இருக்கா?

  அது மாதிரி தான் இதுவும்

  வலுவான ஜன லோக்பால் சட்டம் பேப்பரில் மட்டும் எப்போதும் போல...

  ReplyDelete
 15. உங்க தலைப்பை தமிழ் மணத்தில பார்த்திட்டு நீங்க சேட்டைக்காரன் குரூப்போட சேர்ந்திட்டீங்களோன்னு நினைச்சி உள்ளே வந்தேன்.
  நல்ல வேளை அப்படியெல்லாம் இல்லை

  //எல்லோரும் இழுத்தால் தான் தேர் நகரும்.....இது தேரோட்டம் அல்ல போராட்டம்(!)...ஒருவர் வடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்...உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும் ஓர் நண்பனாக....ஜெய் ஹிந்த்!//

  உண்மை!
  ஜெய் ஹிந்த்!

  ReplyDelete
 16. @Karikal@ன் - கரிகாலன்

  //சேட்டைக்காரன் குரூப்//==?!?!?!?!?!?!

  ஹா...ஹா...ஹா...

  //எல்லோரும் இழுத்தால் தான் தேர் நகரும்.....இது தேரோட்டம் அல்ல போராட்டம்(!)...ஒருவர் வடம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்...உங்கள் நல் ஆதரவை எதிர் நோக்கும் ஓர் நண்பனாக....ஜெய் ஹிந்த்!//

  வடம் பிடித்து இழுப்பதற்கு முன்... தேர் எந்த திசையை நோக்கி இழுத்துச்செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் சகோ. கரிகால்..! அதுதான் ரொம்ப முக்கியம்..!

  அது கோவிலை நோக்கி போகாமல் ஊருக்கு வெளியே சுடுகாட்டை நோக்கி இழுத்துச்செல்வது பற்றி அறியாமல் வடம் பிடிப்பீர்களா..? :-)

  இந்த தேரோட்டம்... ஸாரி... போராட்டாம் 'ஜெய்ஹிந்த்'க்கு எதிர் திசையில் செல்வதை அவதானிக்க முடியவில்லையா சகோ.கரிகால்.. & "சகோ.விக்கி குரூப்"..?


  ஜன்லோக்பாலை எதிர்ப்போம்..! இந்திய ஜனநாயகத்தை காப்போம்..!

  ஜெய் ஹிந்த்!
  ஜெய் ஹிந்த்!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி