ஊழலை பற்றி பேச உனக்கு அருகதை இருக்கா!

வணக்கம் நண்பர்களே.....


ஊழலுக்கு எதிராக ஹசாரே நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இந்த நாட்டில் இருக்கும் இந்திய சமூக(!) அமைப்பு ஒரு கடிதத்தை தயார் செய்து இந்திய நிர்வாகத்துக்கு(!) அனுப்பினார்கள்(!)....

அதில் ஊழலுக்கு எதிரான தங்களின் கருத்துக்களை அளித்திருந்தார்கள்(கையொப்பத்துடன்!).....விஷயம் அதன் பின் நடந்த ஒரு சிறிய விவாதமே இந்தப்பதிவு(!).... (அடுத்து வரும் ஆங்கில, ஹிந்தி சம்பாழனைகள் தமிழ்படுத்தப்பட்டுள்ளன!)

என்ன சார் இம்புட்டு மோசமா போகுது இந்தியா....

ஆமாம்ங்க என்னத்த பண்றது.....

இருந்தாலும் வயசான மனுஷனுக்கு செம தில்லுங்க.....

ஆமாம்ங்க....

நாம நம்ம கடமைய சரியா செய்யணும்...

கண்டிப்பா.....


என்னப்பா இவ்ளோ பேரு பேசிட்டு இருக்கோம்....நீங்க மட்டும் அமைதியா உக்காந்து இருக்கே.....உங்க கருத்த சொல்லுங்க....

(ஏன்யா என்னைய கின்டுறீங்க விட்ருங்க மீ பாவம்!).....அதாங்க நீங்க சொல்லிட்டேன்களே அதெல்லாம் சர்தானுங்க.....

நாங்க உங்க கருத்த கேக்குறோம்....அதுக்கு பதில் சொல்லுங்க....ரொம்ப நாளா இங்க மீட்டிங்குக்கு வராம தப்பிச்சிட்டு இருந்தீங்க போல!...இன்னிக்கு மாட்டி கிட்டீங்க...ஹிஹி....இன்னிக்கு கண்டிப்பா நீங்க பேசியே ஆகணும்...

(இவனுக்கா இல்ல எனக்கா இன்னிக்கு சனி நாக்குல சப்லாங்கோல் போட்டு உக்காந்து இருக்கு!)

அய்யா....நீங்க கூப்டீங்க நான் வந்து விஷயத்த தெரிஞ்சிகிட்டேன்...இது போதும் வேலைப்பளு இருப்பதாலும்...குடும்பம் வந்துட்டதாலும் நேரம் இல்ல அதான் தொடர்ந்து வர இயலவில்லை...

அதெல்லாம் சரி இந்த ஊழலுக்கான கருத்தா நீங்க எதுவும் பதிவு செய்யல இது வரை....ஹிஹி!

(அடங்கொன்னியா...விடமாட்டீங்களாடா!)...என் கருத்துக்களை சொல்வதற்கு முன் உங்க கிட்ட ஒரு விஷயம்...அது என்னன்னா நீங்க எல்லாம் இப்போ நான் சொல்ற விஷ்யங்கள, பேசி முடிஞ்சப்புறம் மறந்துடுங்க அப்பத்தான் எல்லோருக்கும் நல்லது....

சரி சொல்லுங்க.....


எவனுக்காவது ஊழலப்பத்தியோ, கையூட்டு(லஞ்சம்!) பத்தியோ இங்க பேச தகுதி இருக்கா....பய புள்ள எவனாவது விசா வாங்க நேரடியா போய் இருக்கீங்களா...எல்லாத்துக்கும்(!) அதிகப்படியா துட்டு கொடுத்து செய்துக்கறீங்க...அதுக்கு பேரு என்ன?....இங்க இருக்க பல நிறுவனங்கள் பணியாளர்களை கொத்தடிமையா கூட்டி வந்து வேல செய்ய வைக்கிறாங்க...அதுக்கு நீங்க தான் மேலாளருங்க...தவிர்த்து நீங்கல்லாம் எப்படி வியாபாரம் பண்றீங்க...துட்டு எப்படி எல்லாம் இங்க விளையாடுதுன்னு எனக்கும் தெரியும்...அப்படி எல்லாம் இல்லாம நேர்மையா சம்பாதிக்கறவங்க மட்டும் அடுத்து பேசுங்க.....

இதன் பிறகு என்ன காமடிகள் நடந்திருக்கும் என்று சொல்லத்தேவை இல்லை!


நம்மை திருத்திக்கொள்ள முடியாத நாம் நாட்டை திருத்துவது பற்றி எப்படி பேச முடியும்....பல இடங்களில் மனசாட்சி குத்துகிறது......

கொசுறு: எப்பொருள் யார் யார் வாய் கேற்ப்பினும்....அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

62 comments :

 1. எய்ட்ஸ் நோயிலிருந்து உன்னை காத்துக்கொள் என்று அட்வைஸ் பண்ண ஒருத்தனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கனும்கறது அவசியம் இல்லை, சமூக அக்கறை மட்டும் இருந்தா போதுமே?

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  சமூக அக்கறையை பற்றி பேச நமக்கு ஒரு அருகதை வேண்டும் என்பதே என் வாதம் நண்பா!

  ReplyDelete
 3. (ஏன்யா என்னைய கின்டுறீங்க விட்ருங்க மீ பாவம்!)//

  அதே தாங்க!

  ReplyDelete
 4. பய புள்ள எவனாவது விசா வாங்க நேரடியா போய் இருக்கீங்களா..//

  எலேய் என்ன சொல்லுதே.....?

  ReplyDelete
 5. நீர் சொல்றதுலயும் நியாயம் இருக்குய்யா....!

  ReplyDelete
 6. @கோகுல்

  " கோகுல் said...
  (ஏன்யா என்னைய கின்டுறீங்க விட்ருங்க மீ பாவம்!)//

  அதே தாங்க!"

  >>>>>>>>>>

  மாப்ள அதே அதே சபாபதே!

  ReplyDelete
 7. @MANO நாஞ்சில் மனோ

  வருகைக்கு நன்றிங்க அன்னாசி ச்சே அண்ணாச்சி!

  ReplyDelete
 8. நாம் கேள்விப்படும் விஷயங்களில் நியாயம் இருக்கிறதா நமக்கு சரி என்று படுகிறதா எடுத்துக் கொள்வோம் அதனால் நாம் மேம்பட்டால் நல்லது தானே?
  சொல்பவர் நல்லவராய் இருப்பதோ கேட்டவரை இருப்பதோ நம்மை பாதிக்க போகிறதா? ஸோ அன்னப் பறவையாய் இருப்போமே !

  ReplyDelete
 9. உங்க வாதம் சரி தான். ஆனா நம்மாளுக நம்ம தப்பை யோசிக்கவே மாட்டாங்க.

  ReplyDelete
 10. @நாய்க்குட்டி மனசு

  சரியான கருத்துக்கள் சகோ முயற்சிக்கிறேன் நன்றி!

  ReplyDelete
 11. துரத்தும் சோகங்களை உரத்துச் சொல்லும் உங்கள் பாணி. நன்றி.

  ReplyDelete
 12. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 13. //
  நம்மை திருத்திக்கொள்ள முடியாத நாம் நாட்டை திருத்துவது பற்றி எப்படி பேச முடியும்....பல இடங்களில் மனசாட்சி குத்துகிறது......
  //
  நியாயமான கேள்வி

  ReplyDelete
 14. //
  16 Comments
  Close this window Jump to comment form

  Blogger சி.பி.செந்தில்குமார் said...

  எய்ட்ஸ் நோயிலிருந்து உன்னை காத்துக்கொள் என்று அட்வைஸ் பண்ண ஒருத்தனுக்கு எய்ட்ஸ் நோய் இருக்கனும்கறது அவசியம் இல்லை, சமூக அக்கறை மட்டும் இருந்தா போதுமே?
  //

  எண்கள் தலைவர் கருத்தை வழிமொழிகிறேன்

  ReplyDelete
 15. நாட்டுல 100 % நல்லவன் இல்லை நண்பா

  ReplyDelete
 16. கொசுறு: எப்பொருள் யார் யார் வாய் கேற்ப்பினும்....அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!

  உங்க ஊருல திருக்குறள் இப்படி தான் எழுதுவான்களா

  ReplyDelete
 17. ஊழலை பற்றி பேச உனக்கு அருகதை இருக்கா!//

  இது யாருக்கு பாஸ்...

  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 18. சவுக்கடிப் பதிவு அண்ணாச்சி,

  ’உன்னைத் திருத்து உலகம் திருந்தும்’ என்பதனை அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறீங்க.

  உங்களின் தன்னம்பிக்கைக் கொள்கைக்கு வாழ்த்துக்க அண்ணாச்சி.

  ReplyDelete
 19. எப்பொருள் யார் யார் வாய் கேற்ப்பினும்....அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு! .....

  ReplyDelete
 20. பதிவுப் படி தமிழ்நாட்டுல ஊழலைப் பற்றிப் பேச தகுதியான ஆளு நான் மட்டும்தான் போல:)

  ReplyDelete
 21. விக்கி!திடிர்ன்னு ஒரு ஃபளாஷ்!ஏர்போர்ட்ல வலுக்கட்டாயமா ஒரு கஸ்டம் ஆபிசர் என்கிட்ட 20 டாலரைப் புடிங்கிட்டான்.அப்ப நானும் ஊழலில் பங்குள்ளவனா?

  ReplyDelete
 22. சரியான சவுக்கடி!

  ReplyDelete
 23. கொசுறு: எப்பொருள் யார் யார் வாய் கேற்ப்பினும்....அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
  //

  நிலம், நகை, பணம் என்பதை பொருள் எனக்கொள்க-உபி

  ReplyDelete
 24. நம்மை திருத்திக்கொள்ள முடியாத நாம் நாட்டை திருத்துவது பற்றி எப்படி பேச முடியும்....பல இடங்களில் மனசாட்சி குத்துகிறது......

  உண்மைதான்!!

  ReplyDelete
 25. பல இடங்களில் மனசாட்சி குத்துகிறது..

  ReplyDelete
 26. இலஞ்சம் மற்றும் ஊழல் இரண்டுமே ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

  இலஞ்சம் என்பது கிராம நிர்வாக அலுவலரில் தொடங்கி மேல்மட்டம் வரை பொதுமக்களிடம் பெறும் கையூட்டு. எந்த விதிமுறைகளையும் மீறாமல் முறைப்படி ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானால்கூட கையூட்டு வெட்ட வேண்டும். இல்லை என்றால் காரியம் நடக்காது. அடுத்து அதே போன்றதொரு சான்றிதழை விதிமுறைகளை மீறி பெறவேண்டுமானாலும் கையூட்டு வெட்டியாக வேண்டும். என்ன இதற்கு தொகை கூடுதலாக இருக்கும்.

  ஊழல் என்பது ஒரு திட்டத்தை நிறைவேற்றும் போது ஒப்பந்தத்தைப் பெறுவதற்காகவோ அல்லது ஒருசாராருக்கு சலுகை காட்டுவதற்காகவோ அல்லது திட்டத்தை அறைகுறையாக நிவேற்றியோ அல்லது முழுமையாக நிறைவேற்றாமலேயோ ஒதுக்கப்பட்ட நிதியை ஒரு சிலர் கபளீகரம் செய்து கொள்வது.

  சுருக்கமாகச் சொன்னால் இலஞ்சம் என்பது பெரும்பாலும் சாமான்யர்கள் சம்பந்தப்பட்டது. ஊழல் என்பது மேன்மக்கள் சம்பந்தப்பட்டது. ஆக இரண்டிலும் மக்கள் பணம்தான் கொள்ளை போகிறது. இலஞ்சம் நேரடியாக நாமே கொடுப்பதால் கோபம் கொப்பளிக்கிறது. ஊழல் மக்கள் வரிப்பணமாக இருந்தாலும் அரசாங்கப் பணமாக இருப்பதால் மக்களுக்கு கோபம் இருந்தாலும் அது அவ்வளவாக கொள்பளிப்பதில்லை.

  லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.

  மொத்தமாக ஒழியாது என்றாலும் ஊழலை ஒழிப்பதற்கான ஒரு நல்ல முயற்சியாக இதை ஏன் பார்க்கக்கூடாது என சிலர் வாதிடுகிறார்கள்.

  ”நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்கிற வள்ளுவனின் வாக்கை எல்லாவற்றிருக்கும் பொருத்த வேண்டும் என்று சொல்கிகிறவர்கள் இதற்கு அவ்வாறு செய்யவில்லை என்பதிலிருந்தே அன்னா அசாரே செய்வது ஒரு ஸ்டண்ட் என்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதும் தற்போது புரியத் தொடங்கியுள்ளது.

  ReplyDelete
 27. ஸலாம் சகோ.விக்கி...

  மிக்க நன்றி.

  என் கைகளும் இனி உங்கள் சரியான திசையில் செல்லும் தேரின் வடத்தை உங்களுடன் இணைந்து பற்றியது..!

  காரணம்:

  //எப்பொருள் யார் யார் வாய் கேற்ப்பினும்....அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!//

  +1 voted in all..!

  ReplyDelete
 28. இதுக்கு தான் நான் ஊழல் மட்டுமே பண்றது....யாருக்கும் அருகதை கிடையாதுல்ல...தட்டிக்கேட்க...

  ReplyDelete
 29. என்ன செய்யலாம் மாப்பிள்ள
  காந்திதாத்தாவிண்ட ஆக்கள் வராமல் சந்திர போஸ் ஆக்கள் வந்திருந்தா கொஞ்சம் குறைஞ்சிருக்குமோ என்னவோ.. அதுதான் பார்த்தாங்க பர்மா வரை வந்தவரை அங்கிருந்தே அடிச்சு விரட்டீட்டாங்க காங்கிரசுக்காரங்க...

  காட்டன் குழ போட்டான்..

  ReplyDelete
 30. உண்மை தான் நண்பரே

  ReplyDelete
 31. கட்டுரைக்கு பூரண ஆதரவு.!!
  சி பி யின் முதல் கமெண்டுக்கும் ஆதரவு....

  ReplyDelete
 32. //லோக்பால் கொண்டுவந்தால் இவை எல்லாம் ஒட்டு மொத்தமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றுதான் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் என்பதை இதுவரை ஒருவரும் விளக்கவில்லை.//

  ஊரான்!நீங்கள் அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத தகவல்களை நேரடி தொலைக்காட்சியாக காண்பதில்லையென நினைக்கின்றேன்.மேலும் லோக் பால் மற்றும் ஜன் லோக் பால் போன்றவைகள் என்ன?எதனால் அரசு தரப்புக்கும்,அன்னா ஹசாரே குழுவுக்கும் கயிறு இழுக்கும் போட்டி என்ற ஷரத்துக்களையெல்லாம் தேடி கண்டு பிடிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 33. மெய்ப்பொருள் காண்பதறிவு!//

  ReplyDelete
 34. ithuvum oru arasiyal vilaiyadudu pargalam ithu enge mudiyum enru

  ReplyDelete
 35. //அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு!//

  'மொய்'ப்பொருள் காண்பதுதான் அறிவு மாம்ஸ்..இந்த காலத்துக்கு!!

  ReplyDelete
 36. @FOOD

  உங்க வருகைக்கு நன்றி அண்ணே!

  ReplyDelete
 37. @"என் ராஜபாட்டை"- ராஜா

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 38. @ஜ.ரா.ரமேஷ் பாபு

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 39. @சசிகுமார்

  விடு மாப்ள எல்லாம் உன் அளவுக்கு நேர்த்தியா எழுத முடியுமா ஹிஹி!

  ReplyDelete
 40. @நிரூபன்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 41. @ராஜ நடராஜன்

  "ராஜ நடராஜன்
  August 24, 2011 2:33 PM
  விக்கி!திடிர்ன்னு ஒரு ஃபளாஷ்!ஏர்போர்ட்ல வலுக்கட்டாயமா ஒரு கஸ்டம் ஆபிசர் என்கிட்ட 20 டாலரைப் புடிங்கிட்டான்.அப்ப நானும் ஊழலில் பங்குள்ளவனா?"

  >>>>>>>>>

  இதுக்கு விளக்கப்படுத்தனும்னா இன்னொரு பதிவு போடணும் நண்பா

  ReplyDelete
 42. @செங்கோவி

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 43. @பட்டாபட்டி....

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 44. @முனைவர்.இரா.குணசீலன்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 45. @கோவி

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 46. @ஊரான்


  தங்கள் நீண்ட விளக்கமான பின்னூட்டதிற்கு நன்றி நண்பரே ...!

  ReplyDelete
 47. @~முஹம்மத் ஆஷிக்_citizen of world~

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 48. @ரெவெரி

  உங்க வருகைக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 49. @காட்டான்

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 50. @M.R

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 51. @மைந்தன் சிவா

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 52. @Nesan

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 53. @! சிவகுமார் !

  வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி