எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும்!

வணக்கம் நண்பர்களே....


முடிந்தவரை நான் சர்ச்சை பதிவுகள் இட்டதில்லை....இருந்தாலும் எனக்கு ஏற்படும் சில சங்கடங்களை தெளிவு படுத்திக்கொள்வதை நான் என்றும் மறப்பதில்லை...

சமீப சங்கடம்...சில பெரிய அப்பாடக்கர்கள் தவறான தங்கள் பார்வையால் இந்த பதிவுலத்தில் ஒரு வித பிளவு வரும் என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறார்கள்....நான் யாரை சொல்கிறேன் என்பதை படிப்பவர் பார்வைக்கே விட்டு விடுகிறேன்....
சமீபத்தில் ஒரு நண்பர் பதிவு பற்றி கூறிக்கொண்டு இருந்தார்....அதில் ஒரு கவலை தெரிந்தது. என்ன சொல்ல வருகிறார் என்று கவனித்தேன்....அவர் சொல்வது என்னவெனில்......தான் பல விஷயங்களை ஆராய்ந்து எழுதிய பதிவுக்கு யாரும் வரவில்லை என்றும்....தன்னுடைய மொக்கை பதிவுக்கு(அவரே சொன்னது!) இப்படி அலை கடலென கூட்டம் வருவது தனக்கு வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்....


இதை போய் என்னிடம் சொல்கிறீர்களே....உங்களை போல பதிவர் அல்ல நான்(!)...எதோ தோன்றுவதை டைப்பிக்கும் ஒரு மாக்கான்(!) என்றேன்....என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்....எதோ போடும் உங்களுக்கு எப்படி வாசகர்கள் கிடைத்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.....

நானும் சளைக்காமல்(!)...உண்மையில் அவர்கள் என் நலம் விரும்பிகள்....நான் தனியே புலம்புவதை சகிக்காமல்..."தோழா நாங்களும் இருக்கிறோம் கவலைப்படாதே" என்று என்னை தேற்ற வரும் நண்பர்களே அவர்கள் என்றேன்...


இது வரை ஒரு பதிவாவது சமுதாயத்துக்காக போட்டு இருக்கிறாயா என்றார் அவர்...நானும் எனக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது என்றேன்...இந்த நிலைமையில் நீங்க எதுக்கு பதிவுங்கர உன்னதமான விஷயத்தை இப்படி வெட்டித்தனமா பயன் படுத்துறீங்க என்றார்....

இல்லீங்க....எனக்கு தெரிஞ்ச மற்றும் நான் சந்திச்ச விஷயங்களை இங்கு பகிர்கிறேன் அவ்வளவே....சில பதிவுகள் கொஞ்சம் கோககு மாக்காவும் இருக்கும்...அந்த அளவுக்கு தான் எனக்கு தெரியும் என்றேன்....

அடுத்து அவர் ஒரு குண்டை வீசினார்....

அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்.....

என்னத்த சொல்ல....இது வரை அவரை மரியாதையுடன் அழைத்து வந்த நான்...சற்று தடுமாற்றத்துடன்...

"அய்யா...என்ன விட்ருங்க...இனி உங்க மானங்கெட்ட பொழப்புக்கு நான் வரல" என்று அந்த  சாட்டிலிருந்து வெளியேறினேன்...


இனி...அடுத்தவரை குறை சொல்லி பழகும் பழக்கத்தை சாமானியர்கள் மட்டும் அல்ல அறிவாளிகள் என்று தம்மை சொல்லிகொள்பர்களே(கொல்பவர்களே!) அதிகம் பிரயோகிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன்....

கொசுறு: தாங்கள் எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும் என்று யாரும் யாரிடமும் கேட்க்க வேண்டியதில்லை என்ற "அரிய" கருத்தை அறிந்து கொள்ளவே இந்த மொக்கை பதிவு ஹிஹி!

சொச்சம்: நண்பர்கள் கோவிக்க வேண்டாம்...இதில் சம்பந்தப்பட்டவர் என் நட்பு வட்டாரத்தில் இல்லாதவர் ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

35 comments :

 1. பதிவுலக சீர்திருத்த பதிவுங்கோ.

  ReplyDelete
 2. விக்கி கிட்ட விக்கிலீஸ் கேட்டிருக்குமா?

  ReplyDelete
 3. சகோ ஏதோ மனத்திருப்திக்குத் தான் எழுதுகிறோம்... உண்மையில் சமூகப் பதிவுகளுக்கு பதிவுலகத்தில் சரியான அங்கீகாரம் இருக்காது... இது சகல பதிவர்களுக்கும் தெரியும்.. அதனால் தான் பல சமூக ஆர்வலர்கள் கூட அந்தப் பக்கத்தை நாடாமல் இருக்கிறார்கள்..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).

  ReplyDelete
 4. நல்ல பதிவா அப்படின்னா என்ன தெரியாதா அதான் நம்ம சி.பி அண்ணே பதிவு போடுராருல அதான் ,

  இன்னும் கொஞ்சம் நாள்ல ஒரு நல்ல பதிவு போடுவாரு பாருங்க ,அது என்னன்னா ரீமா சென் நடித்த ' இளவரசி ' விமர்சனம்

  ReplyDelete
 5. யார் என்று எனக்கு புரியவில்லையே ;-)

  ReplyDelete
 6. ரொம்ப மூச்சு வாங்குகிறதோ?

  //இல்லீங்க....எனக்கு தெரிஞ்ச மற்றும் நான் சந்திச்ச விஷயங்களை இங்கு பகிர்கிறேன் அவ்வளவே....சில பதிவுகள் கொஞ்சம் கோககு மாக்காவும் இருக்கும்...அந்த அளவுக்கு தான் எனக்கு தெரியும் என்றேன்....//

  அதானே படம் எடுக்கரவங்கமட்டும் நமக்கு புடிக்கற படமாவோ கருத்துள்ள படமாவோவா எடுக்குறாங்க?

  ReplyDelete
 7. யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதட்டும்.நமக்குத் தெரிந்த தைத்தானே நாம் எழுத முடியும்?!

  ReplyDelete
 8. மாமா, வியட்நாமுக்கு வந்தா எனக்கு தெரிந்த ரெண்டே பேரு - ஹோசிமின், இவரு இப்ப இல்லே., அடுத்து நீங்க., இப்படியெல்லாம் யாரும் எதுவும் சொன்னாங்கன்னு கோவிச்சிக்கிட்டு போய்டாதீங்க, நாங்க இருக்கோம்! ( வாசன் ஐ கேர் விளம்பரம் போல் படிக்கவும்)

  ReplyDelete
 9. அரசர் அக்பர் எவ்வளவு பிஸியான நேரத்திலும் சாதாரண மக்களிடம் சென்று பொழுதுபோக்காக உரையாடுவாராம் அப்பொழுது முக்கிய அமைச்சர் ஒருவர் : "அரசே நீங்கள் எவ்வளவு பெரிய அரசர் உங்களுக்கு மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறது அதைவிட்டு விட்டு வீணாக பொழுதை கழிக்கிறீர்களே " என புலம்பினாராம்.. அதற்கு அக்பர் : அமைச்சரே... நான் மிகப்பெரிய பொருப்பகளை திறம்பட செய்ய இது போன்ற ரிலாக்ஸ் செய்யும் பேச்சுகள் தான் எனக்கு ஊக்கமே "என்றாராம்....

  ReplyDelete
 10. சிலரால் எல்லாவற்றையுமே தவறான கண்ணோட்டத்தில்தான் பார்க்க முடிகிறது...

  சிலரால் எல்லாவற்றையுமே சரியான கண்ணோட்டத்தில்தான் பார்க்க முடிகிறது..

  அது அவரவர் பார்வைக் கோளாறு!

  ReplyDelete
 11. பதிவு போட்ட மாதிரியும் ஆச்சு , மொக்க போட்ட மாதிரியும் ஆச்சு, அந்த சாட்டிங் பாட்டிய பழி வாங்கின மாதிரியும் ஆச்சு, ஒரே கல்லுல மூணு மாங்காய்
  வாழ்த்துக்கள்.
  http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
  நம்ம கடை பக்கமும் கொஞ்சம் வந்து போகலாமே!!!!!

  ReplyDelete
 12. பதிவுலகம் இரண்டு பெரும் பாதிகளா பிரிஞ்சா நா எந்த பாதில போய் சேர்ரது
  ?
  டவுட்டு.. ;)

  ReplyDelete
 13. மாப்ள யாருய்யா இப்படியெல்லாம் பண்றது? அநியாயமா இருக்கே?

  ReplyDelete
 14. மாப்ள, யாரோ புரட்சிவாதிகிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கே...

  ReplyDelete
 15. அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்.....

  .....என்னது? பதிவு "உலகம்" 2012 ல அழிஞ்சுடுமா? ஹி,ஹி,ஹி,ஹி....

  ReplyDelete
 16. எப்படிப்பட்ட பதிவுகள் இட வேண்டும்!//

  இது அவருக்குத் தானே....
  நல்லாப் போட்டுத் தாக்குங்க பாஸ்...

  ReplyDelete
 17. தங்களைத் தாங்களே அறிவாளிகளாகவும், தாம் நினைப்பது போலப் பதிவுலகம் மாற வேண்டும் என நினைக்கும் நபர்களுக்குச் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

  ReplyDelete
 18. அவசியம் சொல்ல வேண்டிய விஷயமுங்கோ.

  ReplyDelete
 19. ஏன் எப்போது பார்த்தாலும் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்கள்... இதுபோன்ற வரிகளை கடக்கும்போது கடுப்பாக இருக்கிறது... ஒருவேளை தன்னடக்கமா...? இருந்தாலும் இவ்வளவு கூடாது...

  ReplyDelete
 20. பதிவுலகம் இரண்டாக பிரியும் என்று அந்த அறிவாளி சொன்னாரே அது என்னென்ன மாதிரியான பிரிவுகள் என்று சொன்னாரா...???

  ReplyDelete
 21. நான் பல முறை சொன்னது போல் பதிவுகள் எழுதுவது நமது திருப்திக்காக. யாரையும் உள்ளே வைத்து அடைத்து வைப்பதில்லை கண்டிப்பாக படித்து விட்டு தான் போக வேண்டும் என்று விரும்புபவர்கள் வரலாம் விரும்பாதவர்கள் அந்த வழி தவிர்த்து மாற்று வழி செல்லலாம். மொக்கை பதிவுகளும் சிலருக்கு மருந்தாக இருப்பது தான் உண்மை

  ReplyDelete
 22. யோவ், என்னை தாக்கனும்னா நெரடியா சொல்லுய்யா, எதுக்கு சுத்தி வளைக்கறே? நீ பேசுனா ஆள் யார்னு கண்டு பிடிச்சுட்டேன். நல்ல நேரம் சதீஷ்தானே?

  ReplyDelete
 23. ??>>>முடிந்தவரை நான் சர்ச்சை பதிவுகள் இட்டதில்லை.

  haa haa ஹா ஹா இதான்யா செம காமெடி, நீ போடற பதிவுல 30 பதிவுக்கு ஒரு பதிவு பிரச்சனையான பதிவு தான் ராஸ்கல்

  ReplyDelete
 24. ?>>>அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்...

  ஆல்ரெடி 4 பிரிவுகளா பிரிஞ்சிருக்காங்க.

  1. சீனியர்ஸ்

  2. 2010 க்குப்பிறகு எழுத வந்த ஜூனியர்ஸ்

  3. அடுத்தவனை குறை சொல்லியே பதிவு போடறவங்க..

  4. பெண்களின் காவலர்களா தங்களை காட்டிக்கறவங்க

  ReplyDelete
 25. இது வரை ஒரு பதிவாவது சமுதாயத்துக்காக போட்டு இருக்கிறாயா என்றார் அவர்...நானும் எனக்கு அந்த அளவுக்கு அறிவு பத்தாது என்றேன்..//

  டேய் சிபி, எதுக்குடா அண்ணனை சீன்டிகிட்டே இருக்கே ராஸ்கல் வந்தேம்னா பிச்சிபுடுவேன் மூதேவி....

  ReplyDelete
 26. Chitra said...
  அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்.....

  .....என்னது? பதிவு "உலகம்" 2012 ல அழிஞ்சுடுமா? ஹி,ஹி,ஹி,ஹி....//

  ஹா ஹா ஹா ஹா ஹய்யோ ஹய்யோ முடியல ஓடியாங்க ஓடியாங்க......

  ReplyDelete
 27. சி.பி.செந்தில்குமார் said...
  ?>>>அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்...

  ஆல்ரெடி 4 பிரிவுகளா பிரிஞ்சிருக்காங்க.

  1. சீனியர்ஸ்

  2. 2010 க்குப்பிறகு எழுத வந்த ஜூனியர்ஸ்

  3. அடுத்தவனை குறை சொல்லியே பதிவு போடறவங்க..

  4. பெண்களின் காவலர்களா தங்களை காட்டிக்கறவங்க//


  இல்லை இல்லை இதை நான் ஒத்துக்கவே மாட்டேன், என்னை பொருத்தவரை ஒத்த கருத்தும், ஒத்த சிந்தனையும் ரசனையும் உள்ளவர்கள்தான் ஒரு குரூப்பாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்...

  ReplyDelete
 28. //பதிவுலத்தில் ஒரு வித பிளவு வரும் என்று எதிர் பார்த்து காத்து இருக்கிறார்கள்//

  பதிவுலகில் துவக்கம் முதலே பிளவு இருந்தது; இருக்கிறது; இனியும் இருக்கும். உலகெங்கிலுமிருந்து எழுதுபவர்கள் ஒரே சிந்தனையைக் கொண்டிருத்தல் சாத்தியமல்ல நண்பரே!

  //தான் பல விஷயங்களை ஆராய்ந்து எழுதிய பதிவுக்கு யாரும் வரவில்லை என்றும்....தன்னுடைய மொக்கை பதிவுக்கு(அவரே சொன்னது!) இப்படி அலை கடலென கூட்டம் வருவது தனக்கு வேதனை அளிக்கிறது என்றும் கூறினார்....//

  தவறு அந்தப் பதிவர் மீதுதான் என்பது என் கருத்து!

  //அதாவது சீக்கிரத்தில் இரு பெரும் பாதிகளாக பதிவுலகம் பிரிய வேண்டி வரும்...அதனால் முன்னமே பாதுகாப்பாக ஒரு பக்கம் சென்று விடுமாறும் கூறி அறிவுரை(!) அளித்தார்.....//

  வெறும் இரண்டு தானா? :-)))))))))))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
 29. யார் அந்த அப்பாடக்கர் .. எனக்கு மட்டும் சொல்லு மாப்ள..

  ReplyDelete
 30. மாப்பிள இந்த கருத்த நீ வாசிப்பாயோ தெரியாது நான் கட்டாயம் கருத்து போட வேண்டும் சிபி சொல்வதில் எவ்வளவு உண்மை பார்தீங்களா.. இருக்கிறதே கொஞ்சப்பேர் இதில நாட்டுக்கு நாடு இப்பிடி பிரிச்சு பார்தா எங்க போய் நிக்கப்போறம்.. இன்று வரை நான் படிச்ச பண்ணாடைகள் இப்படி இருப்பாங்கண்ணு எதிர் பாக்கல.. என்னையே எடுத்துக்கொள்க பதிவுலகத்துக்கு வர முன்ன ஒரு பதிவ கூட நான் வாசித்ததில்லை... அதற்காக நீங்கள் எல்லாம் என்ர பதிவிற்கு வரவில்லையா.. இப்ப லீவில நிக்கிறன் வோட்டு போட முயற்சிக்கிறன் பின்ன எப்படியோ தெரியாது..

  ReplyDelete
 31. இதற்கு பழி வாங்கும் விதமா நீங்க தொடர்ந்து பத்து மொக்கை பதிவாவது போடணும் மாம்ஸ் ...அப்பத்தான் திருந்துவாங்க

  ReplyDelete
 32. //ஆல்ரெடி 4 பிரிவுகளா பிரிஞ்சிருக்காங்க.

  1. சீனியர்ஸ்

  2. 2010 க்குப்பிறகு எழுத வந்த ஜூனியர்ஸ்//


  உணமைதான்,, யாரேனும் விருப்பபட்டால் சொல்லுங்கள், அதனை டீட்டைலாக எழுதுகிறேன்., சீனியர் மற்றும் ஜூனியர் என்ற இரண்டு க்ரௌப்களிடமும் ஊரால்வுக்கு தொடர்ப்பில் இருக்கிறேன் என்பதுதான் அதனை எழுதும் தகுதியாக நினைக்கிறேன்! எழுதவா?

  ReplyDelete
 33. சீனியர் பதிவர்கள் Vs ஜூனியர் பதிவர்கள் - ஓர் ஆய்வு http://rasekan.blogspot.com/2011/08/vs.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி