பெண் ஓட்டுனர்கள்(Drivers!) - (வியட்நாம்) 300 - வது பதிவு

வணக்கம் நண்பர்களே.....


என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.


என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 219 பேருக்கும் நன்றி.பதிவுலகம் - நான் தனியாளாக (Forced Bachelor!) மறுபடியும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்ட போது என்னை பல சொந்தங்களுடன் இணைத்த பெரிய பாலம்...ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்ற இறக்கங்களும், பலம் மற்றும் பலவீனங்களும் இருக்கும்(!).....அதனை தாண்டி அவன் மன அமைதியுடன் வாழ ஒரு துணை கண்டிப்பாக தேவை...தனிமையில் இருக்கும் வாழ்கை இருட்டில் வாழ்வது போன்றது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.....

இந்த 300 வது தடத்தை பாதிக்கும் போது நான் உணர்வது...என்ன காரணத்துக்காக இங்கு வந்தேன் இன்று வரை புரியவில்லை....ஆனால், இன்று என் மக்கள் என் சொந்தம் என்ற மிகப்பெரிய ஆலமரம் உருவாகி வருவதை எண்ணி வியக்கிறேன்...

இன்று வரை தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன்...எனக்கு தோன்றியவைகளையே பதிவிட்டு இருக்கிறேன்....அன்றி நான் விரும்புவது அன்னியோன்யமான நட்புகளின் கூடல் இடமாக பதிவுலகம் இருக்க வேண்டும் என்பதே...

"உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்....நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்"

இந்த கூற்றை எல்லோரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் ...முடிந்தவரை அடுத்தவர் மனத்தை காயப்படுத்தாமல் பதிவிட்டு வருவதாக நம்புகிறேன்...இனியும் இது தொடரும்....இதற்கிடையில் இது வரை என்னை ஓர் பொருட்டாக மதித்து தொடர்ந்து வரும் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த சிறியோனின் அன்பு கலந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!...நன்றி!

300 வது பதிவில் இந்த விஷயத்தை பகிர்வதில் பெருமையடைகிறேன்.....ஓட்டுனர்கள் என்றாலே கொஞ்சம் சிரமமான மற்றும் துணிச்சலான வேலை என்பது என் பார்வை...இந்த விஷயத்தில் நிரம்ப விழிப்பு தேவை, கொஞ்சம் தவறினாலும் நம்மை நம்பி வருவோரும் சேர்ந்து கஷ்டப்படக்கூடும்.....சரி உன் பார்வைய நிறுத்திபுட்டு சொல்ல வந்தத சொல்லு ராசான்னு(நொந்த ராசா அல்ல!) நீங்க கேக்குறது புரியுது.....


வியட்நாம் - பெண்கள் அதிகமான வேலையில் ஈடுபடும் நாடுகளில் ஒன்று. அதுவும் ஆண்களை பற்றி கவலைப்படாமல்(!)...தங்கள் சொந்த உழைப்பில் தங்கள் முழு(!) குடும்பத்தையும் காப்பாற்றி வரும் பெண்கள் ஏராளம்....அதிலும் இந்த ஓட்டுனர் வேலை பார்க்கும் பெண்களை எண்ணி வியக்கிறேன்....


இவர்கள் கார் ஒட்டுனர்களாகவும், பைக் ஒட்டுனர்களாகவும் இருப்பது சிறப்பு....அதுவும் குறிப்பிட்டு சொல்லுவது என்றால்...இங்கு பைக்கில் பயணம் செய்பவர்கள் ஏராளம்....வாடகை பைக்கில் நாம் எங்கே போக வேண்டுமோ அங்கு பத்திரமாக நம்மை கொண்டு சேர்ப்பார்கள்...இங்கு பைக் ஓட்டுவது சற்று சிரமம்...ஏனெனில் அதிக சிரத்தையுடன் சிக்னலை கவனிப்பவர் குறைவு(!)....


சில நேரங்களில் எனக்கு பெரிய அதிர்ச்சியாகவும் இருக்கும்....அதாவது நேரே பச்சை விளக்கு எரிந்து கொண்டு இருக்கும் போதே எதிரிலிருந்து நமக்கு இடப்பக்கமாக நேரெதிராக திரும்புவார்கள்....ஒரு நிமிஷம் எப்படி போவது என்று புரியாது(!)....அந்த நேரங்களின் நான் நம்மூர் மக்களே மேல் என்று நினைத்து கொள்வேன்....


இப்படிப்பட்ட இடர்பாடுகளை கடந்து நம்மை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் இந்த பைக் வாலாக்கள் ஓட்டும் லாவகமே தனி....அட்டகாசமாக இந்த பெண்கள் பைக்கை ஓட்டுவார்கள்...நமக்கு தான் கொஞ்சம் வவுறு கலங்கும்...


ஆத்தா கொஞ்சம் ஸ்லோவா போங்கன்னு(வியட்நாமிய மொழியில்!) சொல்லணும்....இல்லன்னா சும்மா ராக்கெட் கணக்கா ஓட்டுவாங்க(பைக்கத்தான்!)....இப்படி பட்ட வண்டி ஓட்டிகளின் வாழ்கை எளிதானதல்ல...மழை நேரங்களில் இவர்களுக்கு சரியான வாடிக்கையாளர்கள் கிடைக்காமல் மிகவும் வருந்த வேண்டி இருக்கும்.....அப்போது முடிந்தவரை வாடகை கார்களில் சென்று விடுவார்கள் அந்த வாடிக்கையாளர்கள்(!).....

பெண் இங்கு எல்லா வித கடுமையான வேலையும் செய்வதை எண்ணி வியக்கும் ஒரு மாக்கானின் பார்வையில் இந்த பதிவு....

கொசுறு: என்னதான் தமிழ்ல ஒழுங்கா டைப்பி வந்தாலும் இடையில கொஞ்சம் மெர்சலா மாறிடுது(ஹிஹி!)...நண்பர்கள் சகிச்சுகோங்கோ(வேற வழி!) 


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

52 comments :

 1. aaha vadai for me
  முன்னுரை அற்புதம்
  முன்னூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்து.
  நம்ம ஊரிலும் பெண்கள் ராக்கெட் வேகம் தான். ஆண்கள் கொஞ்சம் நகர்வலம் போனாற் போல தான் ஹி !ஹி !

  ReplyDelete
 2. தமிழ்மணம் இணைப்பு கொடுக்க முடியல.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்..
  முன்னூறாவது பதிவிற்கும், லேட்டாக
  நண்பர்கள் தினத்திற்கும்..

  தமிழ்மணம் என்னாலயும் இணைக்க முடியல..

  ReplyDelete
 4. Your Blog is Aggregated under FREE Aggregation Category

  புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

  இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

  - இதெல்லாம் எப்படி இருக்கு!
  - உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா அது முடியுமா! - Vietnam
  - ரெடியாயிட்டாரு வாராரு!
  - இப்படிக்கு ப்ளாக் ஸ்பேனர்! -
  - எங்கே அவள்!?

  சன்னலை மூடு

  ReplyDelete
 5. அருமை நண்பரே, முன்னூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். முத்தான பதிவுகள் அத்தனையும்.

  ReplyDelete
 6. வியட்நாமிய பெண்களின் உழைப்பு குறித்து உங்கள் பதிவுகள் மூலம் அதிகம் அறிந்துகொண்டோம். நன்றி.

  ReplyDelete
 7. தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் சகோ.

  ReplyDelete
 8. >>என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

  தம்பி. சீக்கிரம் அரசியல்வாதி ஆகிடுவேன்னு தோணுது

  ReplyDelete
 9. பொண்ணுங்க பசங்களை நல்லா ஓட்டறாங்க, வாகனங்களை ஓட்டமாடாங்களா?

  ReplyDelete
 10. @நாய்க்குட்டி மனசு

  " நாய்க்குட்டி மனசு said...
  aaha vadai for me
  முன்னுரை அற்புதம்
  முன்னூறாவது பதிவுக்கு சிறப்பு வாழ்த்து.
  நம்ம ஊரிலும் பெண்கள் ராக்கெட் வேகம் தான். ஆண்கள் கொஞ்சம் நகர்வலம் போனாற் போல தான் ஹி !ஹி !"

  >>>>>>>>>>

  சகோ ஆண்கள் ஏன் அப்படி போறாங்கன்னு தெரியும்ல ஹிஹி!

  ReplyDelete
 11. @FOOD

  " FOOD said...
  தமிழ்மணம் இணைப்பு கொடுக்க முடியல"

  >>>>>>>>>>

  "விடுங்கண்ணே.... நீங்க வருகை புரிஞ்சதுக்கு நன்றி"

  ReplyDelete
 12. @நண்டு @நொரண்டு -ஈரோடு

  "நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  300 க்கு வாழ்த்துக்கள்"

  " நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன் சகோ"

  >>>>>>>>>>>

  வருகைக்கும், இணைத்ததட்க்கும், வாழ்த்துரைக்கும் நன்றி நண்பா!

  ReplyDelete
 13. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  " !* வேடந்தாங்கல் - கருன் *! said...
  வாழ்த்துக்கள்..
  முன்னூறாவது பதிவிற்கும், லேட்டாக
  நண்பர்கள் தினத்திற்கும்..

  தமிழ்மணம் என்னாலயும் இணைக்க முடியல.."

  >>>>>>>>

  மாப்ள வாழ்த்துரைக்கும், முயற்சிகளுக்கும்
  நன்றி ஹிஹி!

  ReplyDelete
 14. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  >>என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

  தம்பி. சீக்கிரம் அரசியல்வாதி ஆகிடுவேன்னு தோணுது"

  >>>>>>>>>>>>

  உங்க மனமுவந்த வாழ்த்துக்களுக்கு நன்றிண்ணே ஹிஹி!
  ............................

  "சி.பி.செந்தில்குமார் said...
  பொண்ணுங்க பசங்களை நல்லா ஓட்டறாங்க, வாகனங்களை ஓட்டமாடாங்களா?"

  >>>>>>>>>

  இது வேறயா ஹிஹி!

  ReplyDelete
 15. வாழ்த்துகள் மாப்ள..தொடர்ந்து கலக்குங்க.

  ReplyDelete
 16. @செங்கோவி

  "செங்கோவி said...
  வாழ்த்துகள் மாப்ள..தொடர்ந்து கலக்குங்க"

  >>>>>>>>>>

  வருகைக்கும், வாழ்த்துரைக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 17. 300th post..... Congratulations!!!

  nice post. :-)

  ReplyDelete
 18. @Chitra

  வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி சகோ

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. பெண் ஓட்டுனர்கள்(Drivers!) - (வியட்நாம்) 300 - வது பதிவு
  விக்கியுலகம்//

  அவ்...தலைப்பே ஒரு ஹிக்கா இருக்கு,.
  ஹி...ஹி...

  ReplyDelete
 21. பைக் சவாரி வாடகைக்கு... அதுவும் பெண்கள்... புதுமை (பெண்) பதிவு...

  300 வது பதிவிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 22. பதிவுலகில் பாமரனின் எழுத்துக்களுக்கு வரிவடிவம் கொடுத்து, அவ் எழுத்துக்கள் மூலமாகவும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நம்ம அண்ணாச்சிக்கு இந் நேரத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 23. @நிரூபன்

  " நிரூபன் said...
  பதிவுலகில் பாமரனின் எழுத்துக்களுக்கு வரிவடிவம் கொடுத்து, அவ் எழுத்துக்கள் மூலமாகவும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய நம்ம அண்ணாச்சிக்கு இந் நேரத்தில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

  >>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள வாழ்த்துரைக்கும்!

  ReplyDelete
 24. @ஷீ-நிசி

  " ஷீ-நிசி said...
  பைக் சவாரி வாடகைக்கு... அதுவும் பெண்கள்... புதுமை (பெண்) பதிவு..."

  300 வது பதிவிற்கும் வாழ்த்துக்கள் நண்பரே


  >>>>>>>>>>

  வருகைக்கு நன்றி சகோ வாழ்த்துரைக்கும்!

  ReplyDelete
 25. என்னை வாழவைத்துகொண்டு இருக்கும் என் தமிழ் மொழிக்கு என் முதல் வணக்கம். என் பதிவுலக நண்பர்களுக்கும், என்னை ஒரு பொருட்டாக மதித்து ஓட்டும், கருத்துரைகளையும் அள்ளிக்கொடுத்து என்னை ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு என் உளமார்ந்த நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.//

  என்ன பாஸ், நன்றி மட்டும் தானா. ரீட், சுவிட் எதுவும் கிடைக்காதா;-))

  ReplyDelete
 26. என் பதிவுகளை மதித்து, எவ்வளவு மொக்கைபதிவாக இருப்பினும் அதைத்தாங்கிக்கொண்டு என்னைப்பின்தொடரும் கலியுக கடவுள்கள்(அவர்தான நாம என்னா சொன்னாலும் அமைதியா போவாரு) 219 பேருக்கும் நன்றி.//

  அவ்...இதெல்லாம் மொக்கையென்று எவன் சொன்னான்?
  நமக்கு வியட்னாம் போக வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுவது உங்கள் பதிவு,
  உங்க பதிவு இல்லேன்னா ரங்கநாதன் தெரு மாதிரி ஒன்று வியட்னாமிலிருக்கு என்று நமக்குத் தெரிஞ்சிருக்குமா?
  அவ்...அவ்...

  ஏன் வியட்னாம் பாம்பு வைன் பற்றி அறிஞ்சிருப்போமா?

  போடுறதெல்லாம் விஞ்ஞானப் பதிவுகள். அதிலை மொக்கை என்று ஒரு தன்னடக்கம். இது எனக்கும் ரொம்பம் புடிச்சிருக்கு,

  ReplyDelete
 27. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .பெண்கள் வாடகை பைக் ஓட்டுகிறார்கள் என்பதன் மூலம் வியட்நாம் பெண்களுக்கு பாதுகாப்பான நாடு என்பது தெரிகிறது .பிற நாடுகளிலிருந்து செல்பவர்கள் இந்த பாதுகாப்பை குலைக்காமல் இருந்தால் சரி ....

  ReplyDelete
 28. இன்று வரை தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன்...எனக்கு தோன்றியவைகளையே பதிவிட்டு இருக்கிறேன்....அன்றி நான் விரும்புவது அன்னியோன்யமான நட்புகளின் கூடல் இடமாக பதிவுலகம் இருக்க வேண்டும் என்பதே...//

  எங்கள் ஆசையும் இது தான்,.
  இதனைக் கட்டிக் காக்கும் வகையில் அனைவரும் ஒருமித்துச் செயற்படுவார்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 29. நம்மூர் மக்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய விய்ட்னாமியப் பெண்களின் டாக்சி ஓட்டும் தொழில் பற்றிய சிறப்புப் பதிவினைத் தங்களின் முந்நூறாவது பதிவு தாங்கி வந்திருப்பது மேலும் சிறப்பினைத் தருகிறது.

  மீண்டும் வாழ்த்துக்கள் பாஸ்.

  ReplyDelete
 30. தொடர்ந்தும் அருமையான பதிவுகளைத் தந்து...வெற்றி நடை போட வாழ்த்துக்கள் பாஸ்,

  ReplyDelete
 31. நல்ல பதிவு ...வாழ்த்துகள்

  ReplyDelete
 32. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ

  இன்னும் பல பதிவுகள் படைத்திட வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. ரசிக்கிரீகளா... இருங்க இருங்க வீட்டோல் சொல்லுறேன் மாம்s!

  ReplyDelete
 34. வாழ்த்துக்கள் மாப்ள

  ReplyDelete
 35. 300-க்கு வாழ்த்துக்கள் மாப்ள, நீயும் ராக்கெட் ஸ்பீடுதான்யா.....!

  ReplyDelete
 36. மாப்பிள 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நிரூபன் சொல்வதுபோல் எங்களை எல்லாம் வியட்னாமுக்கு அடிக்கடி அழைத்துத் செல்வதற்கு நன்றி.. 

  வியட்னாமிய ஆண்கள் கொடுத்து வைத்தவர்கள்...ஹி..ஹி...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 37. 300 பதிவுகள்..
  என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 38. நம்மூர்ல எப்ப இந்த சிஸ்டம் வரும்...?

  ReplyDelete
 39. முந்நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
  பெண் ஓட்டுநர்கள் பற்றிப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
  பகிர்விற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 40. "ஆங்! 3000,3000,3000
  யோவ்!300 தான்யா."

  எப்படியும் சீக்கிரம் 3000 வரப்போகுது.
  அதான் இப்பவே சொன்னேன்."

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. //கொசுறு: என்னதான் தமிழ்ல ஒழுங்கா டைப்பி வந்தாலும் இடையில கொஞ்சம் மெர்சலா மாறிடுது(ஹிஹி!)//

  மாறுதா?மாத்திடறிங்களா?

  ReplyDelete
 42. மாப்ள, 300, 500 ஆக வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. பெண் இங்கு எல்லா வித கடுமையான வேலையும் செய்வதை எண்ணி வியக்கும் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்,

  300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 44. வாடகை பைக்கா அட நான் இப்ப தான் கேள்வி பட்றேன்..அதுவும் பெண் ஓட்டுனர்கள்... அவர்களது தைரியத்துக்கும்.... உங்களது பதிவுக்கும் பாராட்டுக்கள் மச்சி

  ReplyDelete
 45. சேவாக் மாதிரி 300 அடிச்சதுக்கு கங்க்ராட்ஸ் மாம்ஸ்!

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் மாம்ஸ்! தொடர்ந்து கலக்குங்க! :-)

  ReplyDelete
 47. 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
  நன்றி,
  பிரியா
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி