M.A - நீங்க படிச்சி வாங்குன பட்டமா!

வணக்கம் நண்பர்களே.....இரண்டு நாட்கள் முன்பு என் மெயிலுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்திருந்தது....அந்த அழைப்பிதழுக்கு சொந்தக்காரர் என்னுடன் சென்னையில் வேலை பார்த்தவர்....மிகவும் பெருமையாக இருந்தது என்னையும் ஞாபகம் வைத்து அழைப்பை அனுப்பி இருந்தது...

அந்த அழைப்பிதழை காணும் போது எனக்கு ஒரு வித நெருடல் ஏற்ப்பட்டது(!?)....அந்த மணமகனை எனக்கு நன்றாக தெரியும்....அவர் 10 வது வரை படித்து அதனை முடிக்காமல் விட்டவர்(!)....இருந்தாலும் அவர் என்னிடம் வேலை தேடி வரும்போது உண்மையை சொல்லி விட்டதால்....அவருக்கு என் நிறுவனத்திலேயே ஒரு பொறுப்பான அலுவல் அளித்தேன்....


அப்படி இருக்கையில்...அவருடைய திருமண அழைப்பிதழில்...அவரின் பேருக்கு பின்னே M.A என்று போட்டு இருந்தது எனக்கு வியப்பை தந்தது....ஒரு வேளை தொலைதூரக்கல்வியில் முடித்திருப்பாரோ என்று எண்ணி(!)....வாழ்த்து சொல்ல அழைத்தேன்....

தம்பி என்னப்பா கல்யாணம் முடிவாயிருச்சா....வாழ்த்துக்கள்...

ஆமாங்க...நன்றி...நீங்க எப்படியாவது வரணும்....

முயற்சி பண்றேன்....எல்லோரையும் கேட்டதாக சொல்லுங்க....

கண்டிப்பா சொல்றேன்....

எனக்கு ஒரு சின்ன விஷயம் உன்கிட்ட கேக்கணும்...தப்பா எடுத்துக்க மாட்டியே....

என்னங்க....இப்படி சொல்லிட்டீங்க....கேளுங்க....

நீ M.A முடிச்சதை சொல்லவே இல்ல....

அண்ணே என்னனே கலாய்கிறீங்க....நான் எப்போ முடிச்சேன்...உங்களுக்கு தெரியாதா....

பின்ன உன் அழைப்பிதழ்ல போட்டு இருக்கே....

அது ஒரு பந்தாக்கு அண்ணே(!)....

அடப்பாவி....அவன் அவன் இந்த ரெண்டு எழுத்து பேருக்கு பின்னாடி போட்டுக்க சொத்து பத்து எல்லாம் வித்துட்டு நிக்குரானுங்க....நீ என்னடான்னா!.....

விடுங்கண்ணே...இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா....


யோவ் ஏன்யா உனக்கு இந்த வேளை...சரி பொண்ணு பேருக்கு பின்னாடி போட்டு இருக்க பட்டமாவது நெசமா......!

ஆமாம்னே....அவங்க B.Com படிச்சி இருக்காங்க....அதனாலதான் நான் இப்படி போட்டு வச்சேன்....

இது உன்னோட எதிர்காலத்துல தெரிய வந்தா பெரிய மனஸ்தாபம் ஏற்ப்படுமேய்யா....

அடப்போங்கண்ணே.....இப்பல்லாம் எல்லோரும் இப்படித்தான் போட்டுக்கறாங்க.....உங்க நண்பர்கள் இப்போ மேனேஜரா இருக்காங்களே....

யாரு அப்படி போட்டு இருந்தாலும்...தப்பு தப்புத்தான்யா.....அவனுங்க ஒரு நாளைக்கு மாட்டி அசிங்கப்படுவாங்க(!)...நான் பல முறை சொல்லிட்டேன்....சரி விடு....ஏதாவது தவறா சொல்லி இருந்தா மறந்துடுய்யா......

அப்படியெல்லாம் இல்லன்னே.....நன்றி வணக்கம்...


இந்த விஷயத்த பாக்கும்போது...பலர் இப்படி பல நிறுவனங்களில் உண்மையான சான்றிதழ்கள் இல்லாமல்(!)....போலியாக கொடுத்து வேலை பார்க்கிறார்கள்.....பொதுவாக மார்கெடிங் துறையில் யாரும் இந்த சான்றிதழ்களை செக் செய்வது கிடையாது(!)....பெரிய கம்பனிகள் தவிர்த்து.....இது வரை நான் என் நண்பர்களுக்கு சொல்லிப்பார்த்து அலுத்து விட்டேன்....இதில் சிலர் பெரிய நிறுவனங்களில் கெளரவமான பொறுப்பில் வேறு இருக்கிறார்கள்.....என்னத்த சொல்வதுன்னு தெரியல...

கொசுறு: இப்படி ஏதாவது பேசப்போய் தற்கால நடைமுறைக்கு ஒத்து வராதப்பயன்னு(!) எனக்கு பேரு கெடச்சதுதான் மிச்சம்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

31 comments :

 1. பலர் இப்படி பல நிறுவனங்களில் உண்மையான சான்றிதழ்கள் இல்லாமல்(!)....போலியாக கொடுத்து வேலை பார்க்கிறார்கள்..


  ..... இங்கே அமெரிக்க பல்கலைகழகங்களில் மேற்படிப்புக்காக கொடுக்கப்படும் சில சான்றிதழ்கள் கூட போலி என்று அவ்வப்போது கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். கண்டுபிக்கப்படாமல் இருக்கப்படுவது, இன்னும் எத்தனையோ? :-(

  ReplyDelete
 2. சொன்ன கேக்காதவங்களுக்கு பட்டா தான் புரியும்.... 4 ,5 நாள் கழிச்சு வந்திருக்கிங்க ஸ்பெஷல் பதிவெல்லாம் ஒன்னும் இல்லையா????

  ReplyDelete
 3. வெட்டி பந்தா பண்ணுறவங்க இன்னும் நிறைய பேரு சுத்திக்கிட்டு தானே இருக்காங்க...

  ReplyDelete
 4. மலையாளிங்க இதுல கில்லாடிங்க...!!!

  ReplyDelete
 5. விடுங்க மாம்ஸ்! அதை அவவ்ங்கவங்கதான் யோசிக்கணும்! நீங்க ஏதும் சொல்லப்போய்...எதுக்கு இதெல்லாம்?

  ReplyDelete
 6. எங்கள் நாட்டிலிருந்தும் ஒருதரப்பு இப்படித்தான் மத்திய கிழக்கிற்கு போலிச் சான்றிதழ்களுடன் செல்கிறது! இதை அவர்களே சொல்கிறார்கள்!

  ReplyDelete
 7. B.E போன்று டெக்னிக்கலா போடாமா இப்படி போட்டு கொள்கிறார்கள் என்று சந்தோஷ படவேண்டியது தான் போலும்.

  ReplyDelete
 8. நாங்க படிச்சு வாங்கனும்னு தான் நினைக்கிறோம் ஆனா எங்க மண்டையில ஏற மாட்டேங்குதே என்ன செய்ய

  ReplyDelete
 9. இப்போதல்லாம் அரசுத்துறைகளில், ஊழியர் கொடுத்த சான்றிதழ்கள் முழுமையும் சரிபார்க்கப்பட்டபின் தான் பணிநிரந்தரம் செய்கிறார்கள். இப்படி போலி சான்றிதழ்களின் நடமாட்டம் இருந்தால் தனியார் நிறுவனங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்த பின் தான் வேலை கொடுப்பார்கள் போல..

  ReplyDelete
 10. அது ஒரு பந்தாக்கு அண்ணே(!)....
  hahahaaa..  இப்பிடியுமா செய்யிறாங்க...
  பாவம் அந்தப்பொண்ணு..
  அளவான கருத்தான..
  நல்ல பகிர்வு சார்..
  பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 11. ஒருவேளை மன்னார்குடி அய்யாசாமி
  பையனாக இருந்து அப்படிப் போட்டுக் கொள்கிறாரோ
  என்னவோ

  ReplyDelete
 12. இதுக்கே இப்படி டென்சன் ஆகரீங்களே மாம்ஸ்! ஒண்ணாவது கூட படிக்காம டாக்டர் பட்டம் வாங்குறவ நம்ம ஊர் அரசில்யாவதி, நடிகர்களை விடவா இது மோசம்?

  ReplyDelete
 13. இதெல்லாம் திருமணத்தில சாதாரணமப்பா

  ReplyDelete
 14. உண்மை செய்தி.
  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 15. //அடப்பாவி....அவன் அவன் இந்த ரெண்டு எழுத்து பேருக்கு பின்னாடி போட்டுக்க சொத்து பத்து எல்லாம் வித்துட்டு நிக்குரானுங்க....நீ என்னடான்னா!.....//

  haa...haa....haa....

  ஆயிரம் பொய்ய சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம்னு பழமொழியே இருக்கே... நீங்க என்னான்னா.... ஒரு பொய் சொன்னதுக்கே உலகரிய வச்சுட்டீங்க!!!

  ReplyDelete
 16. படிச்சு வாங்குன பட்டமா?பட்டமா?பட்டமா?
  எக்கோ !

  ReplyDelete
 17. better to add double MA..........

  LOL

  ReplyDelete
 18. இவர்கள் என்றோ ஒருநாள் பிடிபடத்தான் போகிறார்கள்

  ReplyDelete
 19. //MANO நாஞ்சில் மனோAugust 22, 2011 11:38 AMமலையாளிங்க இதுல கில்லாடிங்க...!!!//பத்தாம் க்ளாஸ் படிச்சிட்டு M A போடற அளவு கேவலமானவங்க இல்ல

  ReplyDelete
 20. உண்மை தான் நண்பரே .மாட்டுனா தெரியும் சேதி.

  ReplyDelete
 21. என்றாவது ஒரு நாள் மாட்டுவாய்ங்கிய

  ReplyDelete
 22. மாமா... உண்மையிலேயே படித்து பட்டம் பெறுபவர்கள் அதை பெயருக்கு பின்னால் போடுவதை விரும்புவதில்லை...

  ReplyDelete
 23. இப்படியே போகப்போக உண்மை சான்றித்ழ்கள் மீதும் சந்தேகப் பார்வை விழும்.

  ReplyDelete
 24. வந்தே மாதரம் .....உண்மைச் செய்தி .நன்றி ஐயா பகிர்வுக்கு ....

  ஓட்டுப் போட்டாச்சு ....

  ReplyDelete
 25. நீங்க சொல்வது சரிதான்,என் மச்சான் கூட 10th முடிகாம BCA சான்றிதல் வங்கி வச்சிருக்கன்.. ஓட்டும் போட்டாச்சு

  ReplyDelete
 26. போலிச் சான்றிதழ் மூலம் சமூகத்தினை ஏமாற்றுவோர் பற்றிய பதிவினைத் தந்திருக்கிறீங்க..


  நோகாமல் நோம்பிக் கும்பிடுவோர் பற்றிய சவுக்கடிப் பதிவு பாஸ்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி