Vegetarian கட்டிக்கிட்டவங்க என்ன பண்றது....!

வணக்கம் நண்பர்களே....


இந்தப்பதிவுக்கு வந்தவங்க பொதுவா கருத்துக்களை சொல்லவும்....அதை விடுத்து தனிப்பட்ட(ஹிஹி!) விமர்சங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...(அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்...அப்புறம் உங்க இஷ்டம் மீ பாவம்!)....

திருமணம் என்பதே இருமனங்களின் சங்கமம்(மனசாட்சி - அடடே! ஸ் அபா!)...அப்பேர்ப்பட்ட வைபவத்திற்கு முன் மணமக்கள் பிடித்தது, பிடிக்காதது(ஆமாண்டா வெந்தது வேகாதது!) பற்றி தெளிவாக பேசிக்கொள்வதில்லை(!)...அல்லது திருமணம் முடிந்த பின் இந்த சின்ன விஷயத்தை பெரிது படுத்தலாமா(எது!) என்று நினைத்து....விட்டு விடுவதில்லை....(பயபுள்ள அந்த நடிகனே பரவாயில்ல போல ஒன்னும் புரியல!)


அதாவது உணவு விஷயம் - திருமணத்துக்கு முன் சைவ உணவு உண்போர், மற்றும் அசைவ உணவு உண்போர் தங்களை மாற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்(!)....சாதாரண விஷயம் என்று எண்ணினாலும் அந்த விஷயம் தான் பூத(!) கரமாக வெளிக்கிளம்புகிறது....அதுவும் இந்த மாமிச பட்சினிகள்(சரியாதான் பேசுரனா!) தங்கள் நாவை அடக்க முடியாமல் திணறுகிறார்கள்(!)....


இதற்க்கு சைவ ஆட்கள் கொடுக்கும் கமன்ட் இருக்கிறதே யப்பா முடியல....

மூக்கை மூடிக்கொள்ளுதல்....

முகத்தை அஷ்ட கோணத்தில் காட்டுதல்....


போன ஜென்மத்துல சூரனா பொறந்திருப்பியோ(நோ நோ நோ பேடு வேர்ட்ஸ்!)

இறந்த ஜந்துக்களை(!) தின்றது எவ்வளவு பாவம் தெரியுமா....

ஒரு உசுர கொல்றது பாவம்.....

இதற்க்கு அசைவ ஆட்களின் எதிர் கருத்துக்கள்.....(ஹிஹி!)

பால்(Milk!) கூடத்தான் மாட்டின் ரத்தம்....

தாவரங்களை சாபிடுறது கூடத்தான் உசுர கொல்றது(!)....அதுக்கும் வாயிருந்தா கத்தத்தான் செய்யும்....

நாங்களே சமச்சி நாங்களே சாப்டுக்குவோம்(வேறவழி!)...அந்தப்பக்கமா வந்துராதீங்க..


இப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எப்படி மட்டுபடுத்தறது.....(பதிவர்களே கமன்ட் மட்டுறுத்த வழி வச்சிருக்கீங்கல்ல!) முடிஞ்சா உங்க கருத்துக்கள சொல்லிட்டு போங்க....

கொசுறு: வீட்ல வாங்குனத என்னமா சமாளிக்கரான்னு கமன்ட் போடுதல் வீரர்களுக்கு அழகல்ல(ஹிஹி!) 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

43 comments :

 1. தமிழ்மணம் இணைப்பு கொடுத்து ஓட்டும் போட்டாச்சு.

  ReplyDelete
 2. பால்(அமாலா பால் அல்ல Milk!) கூடத்தான் மாட்டின் ரத்தம்....///

  கண்டுபிடிச்சிடார்....

  ReplyDelete
 3. நீங்க சொல்றது உண்மைதானுங்கோ... கல்யாணத்துக்கு சீர், நகை, உடைகள்னு பேசுற நாம மணமக்களுக்கு எது பிடிக்கும், பிடிக்கதையும் கேட்டு சொல்லிரலாம்.

  ReplyDelete
 4. @FOOD

  வாங்கன்னே வாங்க...நன்றி!

  ReplyDelete
 5. தம்பி, பாவம் பண்ணவேணாம்னு சொல்லலை, வாராவாரம் சண்டே மட்டும் பண்ணூன்னு சொல்றோம்

  ReplyDelete
 6. @தமிழ்வாசி - Prakash

  " தமிழ்வாசி - Prakash said...
  நீங்க சொல்றது உண்மைதானுங்கோ... கல்யாணத்துக்கு சீர், நகை, உடைகள்னு பேசுற நாம மணமக்களுக்கு எது பிடிக்கும், பிடிக்கதையும் கேட்டு சொல்லிரலாம்"

  >>>>>>>>>>>

  மாப்ள உங்க கருத்துக்களுக்கு நன்றி...என்ன இன்னிக்கி உணவு ஹிஹி!

  ReplyDelete
 7. //பால்(அமாலா பால் அல்ல Milk!) கூடத்தான் மாட்டின் ரத்தம்....//
  விக்கி கூடவா?

  ReplyDelete
 8. //நாங்களே சமச்சி நாங்களே சாப்டுக்குவோம்(வேறவழி!)//
  வீட்ல சமையல் பண்றதுக்கு இப்படி ஓர் சமாளிப்பா? ஹோ ஹோ.

  ReplyDelete
 9. @சி.பி.செந்தில்குமார்

  " சி.பி.செந்தில்குமார் said...
  தம்பி, பாவம் பண்ணவேணாம்னு சொல்லலை, வாராவாரம் சண்டே மட்டும் பண்ணூன்னு சொல்றோம்"

  >>>>>>>>>

  சரிங்கண்ணே....அப்படியே!

  ReplyDelete
 10. @FOOD

  அண்ணே கொசுறை கவனிக்கவும்!

  ReplyDelete
 11. சாட்டில் வந்து மிரட்டி(!)யதால், நேற்றைய பதிவையும் படிச்சு, ஓட்டும் போட்டு,கமெண்டிட்டேனுங்கோ. ஹே ஹே.

  ReplyDelete
 12. @FOOD

  hehe என்னனே இதெல்லாம் பப்ளிக்குட்டி பண்ணிக்கிட்டு!

  ReplyDelete
 13. மாப்ள இதே டாபிக் நேத்து நீயா நானாவிலும் ஓடியது என்று நினைக்கிறேன். இந்த மாதிரி கமெண்ட் அடிக்கிற ஆட்களுக்கு அவங்களுக்கு தெரியாமலேயே நான் வெஜ் டெஸ்ட பழக்கி விட்டுட்டா அப்புறம் இதே கேள்விய திருப்பி கேக்கலாம்.

  ReplyDelete
 14. Pall pall.....engappa antha amala pall?

  ReplyDelete
 15. வியட்நாம்ல எல்லாருமே இப்படித்தானா......

  ReplyDelete
 16. ஒண்ணு நாக்கை அடக்கவேண்டும்., இல்லையென்றால் நீங்கள் சாப்பிடுவதை கிண்டல் அடிக்காதவாறு அவர்களை அடக்க வேண்டும். இரண்டும் உங்கள் சாமார்த்தியத்தை சார்ந்தது

  ReplyDelete
 17. சைவம்-னு சொல்ற இட்லி மாவு நொதிக்கும் போது, அதில் பாக்டீரியாக்கள் உருவாகிறது என்று அறிவியல் சொல்கிறது.
  பன் வகைகளிலும் அப்படியே. அதை சைவப்பிரியர்கள் சாப்பிடத்தானே செய்கிறார்கள்..

  ReplyDelete
 18. @NAAI-NAKKS

  " NAAI-NAKKS said...
  Pall pall.....engappa antha amala pall?"

  >>>>>>>>>

  மாப்ள ஏன்யா ஏன்!

  ReplyDelete
 19. @பாரத்... பாரதி...

  "பாரத்... பாரதி... said...
  ஒண்ணு நாக்கை அடக்கவேண்டும்., இல்லையென்றால் நீங்கள் சாப்பிடுவதை கிண்டல் அடிக்காதவாறு அவர்களை அடக்க வேண்டும். இரண்டும் உங்கள் சாமார்த்தியத்தை சார்ந்தது"

  >>>>>>>>

  மாப்ள இப்படியெல்லாம் நடந்துட்டா அப்புறம் என்ன இருக்கு.... ஹிஹி!
  ................

  "பாரத்... பாரதி... said...
  சைவம்-னு சொல்ற இட்லி மாவு நொதிக்கும் போது, அதில் பாக்டீரியாக்கள் உருவாகிறது என்று அறிவியல் சொல்கிறது.
  பன் வகைகளிலும் அப்படியே. அதை சைவப்பிரியர்கள் சாப்பிடத்தானே செய்கிறார்கள்.."

  >>>>>>>>>

  பார்ரா இது வேறயா....

  ReplyDelete
 20. கொசுறு: வீட்ல வாங்குனத என்னமா சமாளிக்கரான்னு கமன்ட் போடுதல் வீரர்களுக்கு அழகல்ல(ஹிஹி!) //

  இத காப்பி பேஸ்ட் பன்னுனதால நான் மாவீரன்!

  ReplyDelete
 21. ஒவ்வோருவரின் விருப்பங்களைப் புரிந்து கொண்டவர்களாய் Adjust பண்ணி, விரும்பிய உணவுகளைச் சமைப்பதில் விட்டுக் கொடுத்தல் சாலச் சிறந்தது என்பது என் கருத்துப் பாஸ்,

  ReplyDelete
 22. சைவமோ அசைவமோ - அதையும் பேசி முதலிலேயே முடிவெடுப்பது நல்லதுதானே.... அப்படி இல்லாமல் இருக்கிறவங்க பாட்டை...உங்கள் பதிவில தெரிஞ்சிக்கிட்டோமுங்க. ஹி,ஹி,ஹி,ஹி,, ....

  ReplyDelete
 23. யாருக்கு எது பிடிக்குதோ அதச்சாப்பிட்டு போகட்டுமே. என்ன இப்போ?

  ReplyDelete
 24. தக்காளி..சைவத்துக்கு ஒன்னு அசைவத்துக்கு ஒண்ணுன்னு வச்சுக்கையா :))

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. அப்புடீன்னா,கலியாணம் பண்ணிக்குறதே............!யோசிக்கணும் ஐயா யோசிக்கணும்!

  ReplyDelete
 27. போன ஜென்மத்துல சூரனா பொறந்திருப்பியோ(நோ நோ நோ பேடு வேர்ட்ஸ்!)////யாரது,சூரன்?பக்கத்து வீட்டு மாமாவோ?

  ReplyDelete
 28. முகத்தை அஷ்ட கோணத்தில் காட்டுதல்....////இதை மட்டும் ஒரு தடவ,ஒரேயொரு தடவ செஞ்சு காட்டுங்க!அப்புறம், நான் ஒங்க அடிமை!

  ReplyDelete
 29. அருமையான நகைச்சுவை கலந்த
  பயனுள்ள பகிர்வுதான்
  (நானும் எங்கயாவது இந்தாளு முன்னால உளறி இருக்கேனா!....)
  வாழ்த்துக்கள்
  தமிழ்மணம் 11

  ReplyDelete
 30. இறைச்சி உண்பது உலக மக்களால் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

  ஆனால் அதை உண்ணாதவர்கள் என்னவே வாத்திலிருந்து குதித்தவர்கள் போல் செய்யும் சேஷ்டைகள் மிகவும் அபத்தமானது..

  வரலாற்று பதிவுகள் படி பிராமினர்களே இறைச்சி உண்டவர்கள்..

  யாகத்துக்கு பயன்படுத்திய எருது எருமை குதிரை அவர்களே உண்டதாக வராலாறு இருக்கிறது..

  ReplyDelete
 31. உயிர்ன சுயற்ச்சிக்கு உயிர் இனங்களை கொள்வது என்பது உலகத்தின் நியதி..

  உதா. கோழி இனத்தை நாம் கொள்ள வில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்... இந்த உலகம் முழுவதும் கோழிகலால் நிறைந்திருக்கும்... மானை மனிதனோ அல்லது விலங்குகளோ கொல்ல வில்லையென்றால் காடுகள் முழுவதும் மான் தான் இருக்கும்..

  உயிரினங்கள் அழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆனால் அதை அடியோடு அழித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

  ReplyDelete
 32. இருவரும் சைவத்தை பின்பற்றலாமே!

  ReplyDelete
 33. அடப்பாவிங்க இந்த பதிவுக்கு போய் மைனஸ் ஒட்டு குத்திருக்காங்களே ?

  ReplyDelete
 34. யோவ், நேத்துத் தின்ன சிக்கன் செரிக்கலையா?

  ReplyDelete
 35. kamal style:
  neenga veg-ah? nonveg-ah?

  ReplyDelete
 36. ஹா ஹா ஹா கலக்குற மாப்ள

  ReplyDelete
 37. விக்கி சும்மா கலக்குறீங்க. சைவத்துக்கு ஒன்னு அசைவத்துக்கு ஒன்னு வச்சிக்கிறது நல்ல ஐடியா ஆக இருக்கே, ஐயோ வடை போச்சே!!!!!!!!!!!!.

  ReplyDelete
 38. நேக்கும் அதே வாழ்க்கை தான்...நல்லாயிருந்திச்சு....

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி